அண்ணே பயப்படாதீங்க அண்ணே, துணைக்கு ராசா உள்ளேதானே
இருக்கார், கேன்டீன்ல சப்பாத்தி பாஜி எல்லாம் சூப்பரா இருக்காம். கனிமொழி அக்கா
சொன்னாங்க...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கம்
விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு//
இனி கண்ணாடி வளையல், பிளாஸ்டிக் மாலைகளுக்கு டிமாண்ட்
குறையுமே...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரதமர்
அறிவிப்பு கூடங்குளம்: முதல் அணுஉலை ஓரிரு வாரத்தில் செயல்படத்
தொடங்கும்//
ஆஹா முல்லைப்பெரியார் பிரச்சினையை கண்டுக்காமல்
இருந்துட்டு, ரஷ்யா போயி உங்க சிங்கிடி வேலையை சிரமமா செய்த உங்க நேர்மை
பிடிச்சிருக்கு...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தேனி
மக்களுக்கு தலை வணங்குகிறேன்,
அகதிகளாக
தமிழகம் நோக்கி வருபவர்களை " தேவாரம் " பகுதி மக்கள் அவர்களுக்கு அடைக்கலம்
கொடுத்து , வறுமையின் பிடியில் தாங்கள் உள்ள போதும் ,
வீட்டிற்கு
ஒருவர் தங்களால் முடிந்த ஒரு பொருளை தந்து,
அவர்களுக்கு
உணவு தயாரித்து,
அவர்களுக்கான மருத்துவ உதவிகள் செய்து ,
அவர்களுக்கு
ஆறுதல் கூறுவதை
செய்தியில் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றது
!!!!!
--செல்வகுமார்.
---------------------------------------------------------------------------------------------------------------
கம்பத்தில்
அரசியல்வாதிகள் நடத்துற போராட்டத்தைப்! பாத்தா ஒரே காமெடியா இருக்கு.
------புலவர்
தங்கமணி-----
---------------------------------------------------------------------------------------------------------------
பிரதமர்
ஆனவன் கூட இவ்வளவு சந்தோச பட்ருக்க மாட்டான்..
#ஜன்னல்
சீட் பிடிச்சுட்டேனுங்க பஸ்ல..
------சாரதி
சாரதி------
சரியான உள்குத்தா இருக்கே....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
கேரளாவில்
தாக்குதல் எதிரொலி: சென்னை கோவிலில் விரதத்தை முடிக்கும் அய்யப்ப
பக்தர்கள்//
சிபி அப்பமே சொன்னான் போகாதீங்கன்னு
கேட்டாதானே...!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
நமக்கு
இங்கிலீஷ் ல டவுட் இருந்த டீச்சர் கிட்ட கேட்கலாம்............ டீச்சருக்கே டவுட்டா
இருந்தா...............????
-------கே
ஆர் விஜயன்-------
எந்த டீச்சர் வந்து டவுட்டு கேட்டாங்க, இதான் நான்
அப்பமே சொன்னேன் லேடீஸ் காலேஜ் பக்கம் ஆபீஸ் வேண்டாமுன்னு
ம்ம்ம்ம்...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
சிதம்பரம்
அண்ணாச்சியின் டவுசர் ஸாரி பதவி டமால் டிமால் ஆகப்போகுது....!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு
ஒரு இத்தாலி, நாளைக்கு ஒரு கொலாம்பியா'காரி, ம்ம்ம் இவங்க டேஸ்ட் கொஞ்சம்
டிஃப்றேன்டாதான் இருக்கு....!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
3
வது நாளாக அகதிகளாக வருகை: கேரளாவில் இருந்து 170 தமிழ் குடும்பங்கள்
விரட்டியடிப்பு: தப்பி வந்தவர்கள் கண்ணீர் பேட்டி...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ்
கட்சியில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரிடமும் உள்ள சொத்து கணக்கை
கண்டுபிடித்து, கள்ளப்பணத்தை பறிமுதல் செய்ய மக்களிடையே ஒரு குழு அமைத்தால்
என்ன...???
------------------------------------------------------------------------------------------------------------------
சட்டசபை
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்
அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, முல்லைப் பெரியாறு
பிரச்னையில், சுணக்கம் காட்டுகிறது.//
ஹா ஹா ஹா ஹா அண்ணே மெதுவா சொல்லுங்க அண்ணே, அக்காளை
மறுபடியும் பிடிச்சு உள்ளே தூக்கிப்போட்டுறப் போறாயிங்க...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை:
""கேரளாவில், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த,
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலையிட வேண்டும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி,
அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.//
ஹா
ஹா ஹா ஹா நாடகம் அரங்கேறும் உச்சகாட்சி நடக்குதைய்யா, அடப்பாவி, மத்திய அரசுகிட்டே
சொன்னா என்னவாம், இல்லைன்னா நீங்க உண்மையான தமிழனா இருந்தா காங்கிரஸ் கூட்டணியில்
இருந்து விலகி காட்டுங்க, போங்கய்யா போங்க உங்களைப்பற்றி மக்களுக்கு நல்லாவே
தெரியும்...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழனுக்கு
தண்ணி வழங்குனோம், தண்ணி வழங்குனோம்"னு நாடெல்லாம் சொல்லும் கேரள பெருமக்களே!
நாங்கதான்டா உங்களுக்கு மொழியவே வழங்குனோம்!!!//
-----------டான் அசோக்--------
எத்தனை அழகான நடிகைகளை தந்துருக்காங்க
மறந்துட்டியாய்யா...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மலையாளி நடிகைகளும்
உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.....!!!
--------நாஞ்சில்மனோ
அறிக்கை---------
சிபி : நாயே நாயே நீ உருப்படுவியா, இவிங்களை வச்சிதானேடா
நான் பிளாக் நடத்திட்டு இருக்கேன் அதுல மண்ணை அள்ளிப்போடுறே
ராஸ்கல்...!!!
------------------------------------------------------------------------------------------------------------------
மலையூர்
மம்பட்டியான் அபார வெற்றி, அதைத்தொடர்ந்து, தியாகராஜன் நடித்த "கொம்பெறிமூக்கன்"
ரீமேக் செய்யப்படுகிறது ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....!!!
------------------------------------------------------------------------------------------------------------------
சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக
உயர்த்துவதற்கு ஏதுவாக, கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில்
உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும், எந்த சூழ்நிலையிலும், தமிழகம்
தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது,'' என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த
தீர்மானம், ஒருமனதாக தமிழக சட்டசபையின் நிறைவேற்றப்பட்டது.//
உங்கள்
தீர்மானம் பேப்பர் அளவில்தானே மேடம் இருக்கு அமல்படுத்துறது
யாராம்...???
------------------------------------------------------------------------------------------------------------------
லக்னோ:
உ.பி., மாநில சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்
ராகுல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நடந்த கூட்டத்தில்
பேசிய ராகுல், மாயாவதி சாதாரண மக்களின் பிரச்னையை புரிந்து கொள்ளவில்லை என
கூறினார்.
--------மண்ணை
கவ்வ வாழ்த்துக்கள் சார்--------
------------------------------------------------------------------------------------------------------------------
தாய்த்தமிழை
இகழ்வோர் முகத்தில் உமிழ் !!!!
------வாலி------
------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை
என்றால் சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் என்று உணர வைத்தவர். தமிழ் சினிமா
மறந்த "நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன்"
-----------பிரபு
கிருஷ்ணா-------
------------------------------------------------------------------------------------------------------------------
கேரளத்தில்
பன்நெடுங்காலமாக வாழ்பவர்களையே அவர்கள் அகதிகளாக அடித்துவிரட்டும்போது. இங்கே
பஞ்சம் பிழைக்க வந்தவர்களை நாம் ஏன் இன்னும் கொஞ்சி குலவ
வேண்டும்...???
------கவிமதி-------
-----------------------------------------------------------------------------------------------------------------
கருணாநிதி,
ஜனாதிபதிக்கும், சோனியாவுக்கும், பிரதமருக்கும் தமிழர்கள் கேரளாவில் தாக்கபடுவதை
தடுக்க கோரி இவர்களுக்கு பேக்ஸ் அனுப்பி இருக்கிறாராம். - பத்திரிகை
செய்தி#
இவ்வளவு
நாளா புறா மூலமும் , போஸ்ட் மேன் மூலமும்தானே கடித போக்குவரத்தது நடந்தது. இப்போது
பேக்ஸ் முலம். கலைஞர் நல்ல முன்னேற்றமாகத்தான் இருக்காருங்கோ.. இவர் எப்போது
இமெயிலுக்கு வரப்போகிறாரோ...?
இவர்
எதை எழுதி அனுப்பினாலும் எருமாடு மேல மழை பெய்ச்சதுபோலத்தான். சுரணை இல்லமால்
இருக்குங்க...தமிழன்தான் தன உயிரை பாதுகாத்து கொள்ளவேண்டும்.
-------ஆர்
கே குரு-------