WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்


தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர்)
நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை
இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம்

Download mp4 video
Audio Play:



ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


TNTJ-யின் ஏகத்துவ மாத இதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழுவிற்கு பகிரங்க மறுப்பு



எழுதியவர்/பதிந்தவர்/உரை
- ஏகத்துவ மாத இதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழு-விற்க்கு வேர்கிளம்பி J. யாசின் இம்தாதி அவர்கள் வெளியிடும் பகிரங்க மறுப்பு அறிக்கை
அவதூறு பரப்பிய TNTJ-யின் ஏகத்துவ இதழுக்கு மறுப்பு
கடந்த ஜனவரி 2012 வருடம். TNTJ இயக்கத்தவர்களால் நடத்தப்படும் ஏகத்துவ இதழில் 16-ம் பக்கத்தில் கேக் வெட்டிய JAQH மௌலவி எனும் தலைப்பில் குமரி மாவட்டம் வேர்கிளம்பி JAQH மர்கஸில் இமாமாக பணியாற்றும் J. யாசீன் இம்தாதி எனும் நான் கிருஸ்துமஸ் விழாவில் பங்கு பெற்று ஏசு பிறந்த நாள் கொண்டாடியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒன்று பரப்பப்பட்டுள்ளது.
அவர்கள் பரப்பியதைப் போல நாம் நடந்திருந்தால், மார்க்க ரீதியில் நம்மை நாம் திருத்திக் கொள்வது அவசியம். எனினும் நடந்த உண்மை என்ன என்பதை கீழே தருகிறோம்.
1) பிணந்தோடு என்ற இடத்தில், கிருஸ்துமஸ் விழாவில் பங்கு பெற்று ஏசுபிறந்த நாள் வாழ்த்துரை வழங்க நாம் அழைக்கப்படவில்லை. காரணம் ஏசு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அவர்கள் தேர்வு செய்திருந்த நாள் கடந்த 25-12-2011 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். நாம் அழைக்கப்பட்டதும் பங்கு பெற்றதும் கிறிஸ்துவ அன்பர்களால் கடந்த 22-12-2011 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்க நிகழ்ச்சியில் தான்.
அந்த நிகழ்ச்சியில். மனித நேயத்திற்கு எதிராக வரதட்தணையை அரங்கேற்றுவதே பெரும்பாலான பாதிரிமார்களும், இமாம்களும், சாமியார்களும் தான் என்று அவர்களை சபையில் வைத்துக் கொண்டே மாக்கத்தை பேசினோம். மாறாக ஏசு பிறந்த நாளை புகழ்ந்தோ அவர்கள் செய்யும் மூட நம்பிக்கைகளை ஆதாரித்தோ. நாம் பேசவில்லை, அதனால் தான் ஏகத்துவ இதழுக்கு அவைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்க முடியவில்லை.
2) நமது பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கிய போது அவர்கள் நமக்கு தந்த அன்பளிப்பை ஏற்க மறுத்தோம், அப்படியானால் தேனீராவது அருந்திச் செல்லுங்கள் என்று வற்புறுத்தியதால் மீண்டும் மேடை ஏற வேண்டிய அவசியம் ஏற்பட்டது, அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களில் ஒருவர் தீடீரென மைக்கைப் பிடித்து. மத நல்லிணக்க ஒற்றுமையின் முக்கிய நிகழ்வாக என்று மத குருமார்களும் சேர்ந்து கேக்கை வெட்டுவாகள் என நமது அனுமதி பெறாமலே அறிவிப்புச் செய்தார்.
சாமியார் என் கையை பிடித்து இழுத்துச் சென்ற போது (அவரது கையை உதறிவிட்டோம்), அவர் கையில் வைத்திருந்த கத்தியை என் கையில் வைத்திருந்ததாக நினைத்தோ என்னவோ TNTJ பக்தியாளார் ஒருவர் (கடையாலுமூடு அப்துரஹ்மான்) உலகம் முழுவதும் SMS மூலம் அழகிய முறையில் தஃவா பணிச் செய்து TNTJ- யின் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றியுள்ளார்.
இந்நிகழ்வை தவறாகச் சித்தரித்த அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே என்னை சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம், அதை விட்டு விட்டு JAQH ன் கொள்கையை பறை சாற்றி விட்டார்கள் என்று ஏகத்துவ இதழில் அவதூறு பரப்பியது நிச்சயமாக கெட்ட எண்ணமேயன்றி வேறு இல்லை, JAQH ன் மீதுள்ள காழ்ப்புணர்வே இதற்கு காரணம்.
3) குர்ஆன் ஹதீஸை அப்படியே நம்ப வேண்டும் என்று வீர வசனம் பேசுபவர்கள், TNTJ உறுப்பினர்கள் அனுப்புகின்ற வதந்திகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்களோ என்னவோ?
தமிழகம், சவுதி, இலங்கை போன்ற இடங்களுக்கும் இந்த அவதூறு SMSஐ ஒரே இரவில் நூற்றுக்கணக்கில் அனுப்பி சாதனை புரிந்துள்ளனர் TNTJ பக்தர்கள்.
4) ஏகத்துவ இதழின் துணை ஆசிரியர், செய்யது இப்ராஹிம் என்பவரை 7-12-2012 மதியம் 12:15 மணியளவில் தொடர்பு கொண்டு, பல பாகங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு பத்திக்கையில் இப்படி ஒரு செய்தியை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போட்டீர்கள்? அதை ஊர்ஜிதம் செய்தீர்களா? என்று கேட்டதற்கு, அவர் KK Dist. TNTJ நிர்வாகிகள் நம்பகமானவர்கள். பொய் சொல்லமாட்டார்கள். எனவே அவர்கள் கூறியதை அப்படியே போட்டோம் என்று என்று சர்டிபிகேட் கொடுத்து கூறினாரே தவிர. நாம் செய்தது மாக்க ரீதியாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தவறு என்பதற்கு நம்மிடம் கடைசி வரை பதில் பேசவே இல்லை, கிருஸ்துமஸ் விழாவில் எப்படி போகலாம். எப்படி போகலாம்? என்பதைத்தான் வாய்ப்பாடாக சொல்லிக் கொண்டிருந்தார்.
தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்ட நபர்களிடம், “கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள தடை ஏதும் இருக்கிறதா”, என்று நான் கேட்டதாக செய்தி போட்டுள்ளீகளே, கேட்ட அந்த நபர்கள் யார்? சொல்லுங்கள் என்று நான் கேட்டதற்கு விசாரித்து சொல்கின்றேன் என்று பொறுப்பற்ற முறையில் அவர் சொன்ன பதிலில் இருந்து அதை அவர் உறுதிப்படுத்திய பின் ஏகத்துவத்தில் போடவில்லை என்பது தெளிவாகிறது, (இவர்கள் கூறுவது போன்று ஒருவரும் நம்மிடம் அதைப்பற்றி விசாரிக்கவில்லை).
இந்த SMS, பித்னாவை கன்னியாகுமரியை சோந்த TNTJ, பக்தர் ஒருவரும் பரப்புகின்றார் என்பதை அறிந்து நாம் அவரை 9994725782 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தோம், அவரும் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாம்? என்று அப்பாவித்தனமாக பேசினாரே தவிர ஆதாரப்பூர்வமாக நிரூபனம் செய்யவில்லை (இருவரும் பேசிய ஆடியோ பதிவு நம்மிடம் உள்ளது,)
5) யார் பிறர் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சாந்தவரே என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று உண்மையானதே, எனினும் அதற்கும் நமது நிலைக்கும் என்ன சம்பந்தம்? பிற மேடைகளில் ஏறும் போது நாமும் அது போன்று ஆகிவிடுவோம் என்பது TNTJ யினர் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட சட்டமேயாகும், அதைத் தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அது குஆன் ஹதீஸ் சொன்ன சட்டமல்லவே, எங்கு சென்றாலும் நாம் நமது கொள்கையில் பிசகாமல் சத்தியத்தை முழக்கமிடுவதே இஸ்லாமியச் சட்டம், அத்தகைய துணிச்சல் TNTJ யினர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
இது போன்று தீர விசாரிக்காமல் முன் பின் யோசிக்காமல் அவதூறை பரப்புபவர்கள் KK Dist TNTJ நிர்வாகத்தினர்கள். அதிலும் குறிப்பாக இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்து செயல்படும் TNTJ மாநில பொறுப்பாளர்களில் ஒருவரும். முன்னாள் KK Dist TNTJ செயலாளருமான தேங்காயப் பட்டணம் காஜா நூஹ் என்பவரேயாகும்.
ஏகத்துவ இதழில் வெளிவந்துள்ள நம்மைப் பற்றிய செய்திகளில் கீழ்த்தரமான அநாகரிகமான வாத்தைகளை வடித்து JAQH என்ற இயக்கத்தை இழிவுபடுத்தி எழுதியவரும் இவர் தான். மார்க்க மேடைகள் மற்றும் ஜும்ஆ மேடைகளில் பிற இயக்கங்களை வசைபாடுவதையே பயானின் கருவாக வைத்திருப்பவர். இது நாமறிந்த செய்தி மட்டுமல்ல KK Dist TNTJ உறுப்பினர்களில் பலர் அறிந்த செய்தியே. அதனால் தான் இவர் ஜும்ஆ உரையாற்றுகிறார் என்று கேள்விப்பட்டாலே அவர்களில் பலர் வேறு இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம். இவர் மீதுள்ள அதிருப்தியால் பல KK Dist TNTJ உறுப்பினர்கள் இதிலிருந்து வெளியேறி விட்டதும் குமரிமாவட்ட மக்கள் அறிந்த உண்மை.
மாக்கத்தின் பெயரால் இது போன்று அநாகரிகமாக செயல்படுகின்ற ஒரு சிலருக்கு TNTJ, தலைமையகம், பொறுப்புகளை கொடுத்து அழகு பார்ப்பது வேடிக்கையாகும், அல்லது மற்றவர்களை வசைபாடுவதுதான் சிறந்த தஃவா என்று இந்த அப்பாவிகளுக்கு போதிக்கப்பட்டுள்ளதா?
எனவே தான் பரப்பிய அவதூறு செய்திக்கு உடனடியாக அல்லாஹ்வை பயந்து வருத்தம் தெரிவிப்பதுடன் மேற்கொண்டு இது மாதிரியான கீழ்த்தரமான வேலைகளிலிருந்து ஏகத்துவ மாத இதழ் விலகிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் சட்டப்படி விளைவுகளை சந்திக்க நேரிடும்,
(துல்ஹஜ்) இந்த மாதம் எப்படி புனிதம் வாய்ந்ததோ. இந்த (மக்கா) நகரம் எப்படி புனிதமானதோ. அது போலவே உங்கள் பொருளும். உயிரும். மானமும் புனிதமானது, (நபிமொழி கருத்து. புகாரி)
இப்படிக்கு
J. யாசீன் இம்தாதி
இமாம், வேர்கிளம்பி JAQH மர்கஸ்
Mobile: +91 9994533265
10-01-2012
நாகர்கோவில்


ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்


ம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன்
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு
  • ஸஹாபாக்கள் என்றால் யார்?
  • ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்?
  • ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா?
  • வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா?
  • ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன?
  • அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்?
  • மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?
  • நரகம் செல்லமாட்டாகள் என்று நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த கூட்டம் எது?
  • அன்சாரி ஸஹாபாக்கள் பதவி வெறி பிடித்தவர்களா?
மேற்கண்ட அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்வையிடவும்.

Download mp4 video
Audio Play:

ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி