வரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்காதவரை இத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் முஸ்லிம் இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்; ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால் வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.