WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

மின்சார மீன் (Electric Eel) E. Usman Ali


மின்சார மீன் (Electric Eel)
E. Usman Ali
 
நாம் கண்டு வரும் இந்த தொடரிலே இறைவனின் படைக்கும் ஆற்றலையும் அவன் நாடியதை செய்யக்கூடிய வல்லமையுடையவன் என்பதனையும் தெளிவுபடுத்தும் சில உயிரினங்களைப் பற்றிப் பார்த்து வந்தோம். அந்த வரிசையிலே தற்போது நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.
 
தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.

N
நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V  மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு  எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.
 
மேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.
 
இவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.
 
இவற்றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.
 
இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

இவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.
 
 
எலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.

எலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (
Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம்
(main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ் (R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தார்கள்.

இறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.
இவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.

ஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம்  (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.
 
 
எலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம்.
 

எலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.
 

மின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.

மிக அதிசய பயணம்எலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(
saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.

இவை பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சரியாக தங்கள் பூர்வீக இடத்தை தங்கள் பெற்றோர் வாழும் இடத்தை அடைவதென்பதான இத்தகைய ஆற்றல் பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம் இல்லை என்ற நிலை இருக்கும் போது இந்த அற்புத அதிய உயிரினத்தின் செயலின் வெளிப்பாடு இறைவனின் வல்லமையின் சான்றைப் பறைச்சாற்றும் நிகழ்சிதான் என்பதில் அறிவுடைய மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் இயற்கையின் தேர்வான (
Natural Selection) டார்வினின் கோட்பாட்டை தகர்த்தெறியக் கூடிய ஆதாரங்களாகும். இத்தகைய இறைவனின் சான்றுகளைக் கொண்டு நேர்வழிப் பெற்று, இறைவனின் அழைப்பையும் அவரது தூதரின் அழைப்பையும் ஏற்று பதிலளிக்கூடியவர்களுக்கு அழகிய தங்குமிடம் இறைவனால் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர்த்து மற்ற எந்த வழியில் சென்றாலும் வெற்றிக் கனியை அடைய முடியாது என்பதை விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அதில் 'ஸலாம்' என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். (அல்குர்ஆன் 14:23)

ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி

தேனீக்கள் (Honey Bee) E. Usman Ali


தேனீக்கள் (Honey Bee)
E. Usman Ali

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில்  தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம்.

பொதுவான வேறுபாடுகள்


இராணித் தேனீ ஒரு கூட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும் வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக் கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களைக் காட்டிலும் அளவில் பெரியதாகும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாய் ஆகும். இவற்றால் மட்டுமே முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்க இயலும். ஆண் தேனீக்கள் இராணித்  தேனீக்களை விடச் சற்று சிறியதாகவும், வேலைக்கார தேனீக்கள் மற்ற இரு வகையை காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இருக்கும். அது இறப்பெய்தும் காலம் வரை மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் உண்டு. ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.

இராணித் தேனீ சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றது. ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழக்கின்றன. இவை சராசரியாக 90 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் சராசரியாக 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் குளிர் காலங்களில் 140 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியன. இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. ஆனால் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆகின்றது. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை
(Polan Basket) என்ற உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களுக்கு இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை. கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மாத்திரமே அமைந்துள்ளது. மற்ற இரு வகை ஈக்களுக்கும் இல்லை. இது மட்டுமல்லாது மற்ற சில அம்சங்களும் உண்டு. இப்போது நாம் தேனீக்களை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

இராணித்  தேனீ (Queen)ஒரு உறையில் ஒரு வாள். இதுதான் இராணித் தேனீயின் சித்தாந்தம். ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீதான் இருக்க முடியும். இது அளவில் மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது. அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகளை இட்டு விரைவில் பொறித்து வெளிவர ஆவணச் செய்யப்படுகின்றது.

முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு தொடர்ந்து ராயல் ஜெல்லி
(Royal Jelly) என்னும் உயர் தர ஊட்டச்சத்து திரவம் தரப்படுகின்றது. இந்த திரவம் தொடர்ந்து ஊட்டப்படும் லார்வா இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகின்றது. இந்த ராயல் ஜெல்லிதான் ஒரு முட்டை வேலைக்காரத் தேனீக்களின் பிறப்பையும் இராணித் தேனீயின் பிறப்பையும் தீர்மானிக்கும் அம்சமாக விளங்குகின்றது. இந்த திரவம் வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடியதாகும். இந்த திரவம் வேலைக்கார தேனீக்களின் லார்வாக்களுக்கு முதல் இரண்டு நாட்கள் மாத்திரமே தரப்படுகின்றது. ஆனால் இந்த ராயல் ஜெல்லி மட்டுமே இராணித் தேனீயின் வாழ்நாள் முழுவதுமான உணவாகும். அரசர்கள் உண்ணும் அறுசுவை உணவைப் போன்றே இவற்றிற்கும் அரசு மரியாதையுடன் முக்கியத்துவம் தரப்பட்டு இந்த உணவு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து இந்த திரவம் கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. மற்ற தேனீக்களைக் காட்டிலும் 5 முதல் 8 நாட்கள் முன்பாகவே பொறித்து வெளிவருகின்றன. முதலாவதாக வெளிவரும் இராணித் தேனீ போட்டி மனப்பான்மையால் பொறித்து வெளிவரக்கூடிய நிலையில் இருக்கும் மற்ற இராணித்தேனீக்களின் லார்வா அறைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றது. இவற்றின் பிறப்பே வாழ்வா! சாவா! என்ற போராட்டத்தின் துவக்கமாகவே அமைந்து விடுகின்றது. வெளிவந்துவிட்ட தன் சகோதரி தேனீக்களுடன் தலைமைத் தனத்திற்காக சண்டையிட்டு ஒன்று இறக்கின்றன அல்லது மற்றவற்றை வெற்றிப்பெற்று இராஜ வாழ்க்கையை எதிர் நோக்கி கூடு திரும்புகின்றன. கடமைக்கு முன்பாக பாசத்திற்கு வேலை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பழைய தாய் கிழ இராணித் தேனீயும் புதிய இராணித் தேனீயால் கொல்லப்படுகின்றது. இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று வரும் இராணிக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாகச் செய்திட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருப்பதனால் அங்கே புதிய இராஜ்ஜியத்தில் தேனாறு பாயத் துவங்குகின்றது.

ஆண் தேனீ (Drone)அடுத்து ஆண் தேனீக்களைப் பற்றிப் பார்ப்போம். இவற்றை ஆண் ஈக்கள் என்பதை விடச் சோம்பேறி ஈக்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவை பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதியதாக பொறித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. மற்றவரை அண்டி வாழ்பவரின் நிலை அதோ கதிதான் என்பது மனித இனத்திற்கும் பொதுவானதுதானே.

வேலைக்காரத் தேனீக்கள்
(Workers Bee)
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித்  தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. இதைத்தான் வல்ல நாயன் தன் தூய வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். விளக்கம் தேவையே இல்லாத வார்த்தைகளினால் திருமறையின் பரிசுத்தத்திற்கு சான்று பகரும் வார்த்தைகள் இதோ!

அதன் (தேனீக்களின்) வயிற்றிலிருந்து ஒரு பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 16:69)

மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடை பெருகின்றன. கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதுனுடைய விஷப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விஷப் பையின் வாய் சிதைந்து விஷம் அவற்றின் உடலில் பரவி உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. கூட இருந்தே கொல்லும் நோய் என்றுச் சொல்வார்கள். இங்கோ கூட இருந்தே கொல்லும் விஷம்! இதுதான் தேனீக்களின் நிலை.

தேன் கூட்டின் அமைப்பு
"ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்", என்று தமிழில் சொல்லப்படும் உவமைக்கு உரியவை தேனீக்கள் கட்டும் கூடாகும். தேனின் கூடு வேலைக்காரத் தேனின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அருகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்தியாகக் பார்க்க ரசனையை அளிக்கக் கூடிய முறையிலே கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அருகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்புடன் விளங்குகின்றன. பொறியியல் அறிந்த ஈக்கள் போலும்!

இராணித் தேனீயின் லார்வா அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாயிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேனின் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறை சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ஈக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. மனிதர்களோ ஒரு தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய தேனீக்களிடம் பாடம் படிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். என் கடமை பணி செய்து கிடப்பதே! என்பதே இவற்றின் தாரக மந்திரம் ஆகும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான ஈக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்களால் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில என்ஸைம்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இனப்பெருக்கம்
லார்வாக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது.

இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித்  தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன. லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது. இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன.


இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

புதிய வரவுகள்

தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.

வெளி வந்தவுடன் புதிய  தேனீக்கள் மூன்று வாரங்கள் வரை கூட்டிற்குள்ளேயே வேலையில் அமர்த்தப்படுகின்றன. கூடுகளைப் பராமரிக்கவும், பழைய லார்வா அறைகளைத் தூய்மைப்படுத்தி அடுத்து முட்டையிட ஏதுவாக்கி வைக்கவும், லார்வாக்களுக்கு உணவளித்து பராமரிக்கவும், வேலைக்காரத் தேனீக்களினால் கொண்டுவரப்படும் தேனை இவை தங்கள் வாயில் பெற்று அதை அதற்கென்று இருக்கும் பிரத்யேகமான அறையில் நிரம்பியதன் பின்னர் அதில் காற்று புகா வண்ணம் இறுக்கமாக (airtight) சீல் வைக்கின்றன. மேலும் இவை கூட்டின் வெப்பம் மிகைத்து விடும் போது நீரை விட்டு சிறகை தொடர்ந்து அசைப்பதன் மூலம் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்ப நிலையை குறைக்கின்றன. கடுமையான குளிர் காலங்களில் இவை ஒன்றுடன் இறுக்கமாக இணைந்து கூட்டில் இருக்கும் லார்வாக்கள் முறையாக வளர்சியடைய வகை செய்கின்றன. இறுதியாக மூன்று வாரங்ககளுக்குப் பிறகு இவை வெளியே சென்று தேனைச் சேகரிக்க அனுப்பப்படுகின்றன.

தேன் சேகரிப்பு
தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரைப் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்கு கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது.

சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஏன் என்று சொன்னால் தேனீக்கள் சற்றேறக் குறைய ஒரு லட்சம் கி.மீ வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுகோஸை எடுத்துப் பிறகு சரியாக தங்கள் கூடு திரும்புகின்றன என்று சொன்னால்

இறைவா! உன்னுடைய அற்புதம் தான் என்ன அற்புதம். இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எங்ஙனம் இவற்றிற்கு சாத்தியம் ஆயிற்று? இதோ நம் இறைமறை பதில் அளிக்கின்றது..

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி கூட்டிற்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதை மறுக்கக் கூடியவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு பதில் சொல்லட்டும். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.

இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். நம் இறைவன் மகா தூய்மையானவன். நம் இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை மிகைப்படுத்தக் கூடியவன் என்பது மீண்டும் இங்கே நிரூபனமாகின்றது. இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.

நடன அசைவில் அசாதாரண மொழி


தேனீக்கள் ஆடும் கூத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு.

தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக
(round dance)  சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன. பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன. தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance)  மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள்.

இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள்
(KILLER BEE)
1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது. இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.

தேன்
தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன்.

உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.

இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.

தேனின் இதர பயன்கள்
இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம்  தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.

இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.

(நபியே)கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் அவனுக்கு பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்) நம்பிக்கைக் கொண்டோருக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 22:54)

அற்புதத்தையே இறக்கியிருக்கின்றது வல்லவனின் வான்மறை திருகுர்ஆன். அல்லாஹ் கா தூய்மையானவன். உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ
இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள்.
(அல்குர்ஆன் 25:04)
ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


கீரிப்பிள்ளை (Mangoose) E. Usman Ali, Jeddah


கீரிப்பிள்ளை (Mangoose)
E. Usman Ali, Jeddah

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பல ஏற்பாடுகளை வைத்துத்தான் இறைவன் படைத்துள்ளான். ஒன்றின் பாதுகாப்பு அரணை மற்றது (இறைவனின் ஏற்பாட்டின் படி) மிகைத்து விடும் போது அதற்கு முடிவு ஏற்பட்டு விடுகின்றது. விலங்குகள், பறவைகள், ஊர்வன தவரங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுன்னுயிர்கள் உட்பட அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பிரத்யேகமாக அமையப்பெற்ற ஒன்றை பயன்படுத்தி தங்களை அழிவிலிருந்துக் காத்துக் கொள்ளுகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் இந்த கட்டுரையின் சில அவசியத்தை முன்னிட்டு பார்ப்போம்.

விலங்குகளைப் பொருத்தவரை பலவிதமான பாதுகாப்பு அரணை பெற்று விளங்குகின்றன. சிலவற்றிற்கு கொம்பு அமைப்பும், சிலவற்றிற்கு கூர்மையான நகங்களும், சிலவற்றிற்கு உடலைக் கிழித்து மாமிசத்தை உண்ணக்கூடிய ஆற்றல் மிக்க தாடையுடன் கூடிய பற்களும், சிலவற்றிற்கு உடலின் மேற்பரப்பில் வளரும் ஊசியைப் போன்ற முடிக்கற்றைகளும், சிலவற்றிற்கு வேகமாக ஓடக்கூடிய ஆற்றல் மிக்க கால்களும் பாதுகாப்பு சாதனமாய் விளங்குகின்றன.

தாவரங்களைப் பொறுத்தவரை முக்கியமாக முட்கள் அமைப்பையும் சில விஷத்தன்மையையும் பெற்று விளங்குகின்றன. ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் ஒரு வகை செடியின் பிரத்யேகமான தன்மை என்னவென்றால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அச்செடியின் இலையைக் கடித்து உண்ண ஆரமபித்தவுடன் அதன் இலைகளில் விஷத்தன்மை பரவ ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மற்ற செடிகளும் தங்கள் இலைகளில் விஷத்தை பாய்ச்சுகின்றன. ஒரு செடிக்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் அது தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மற்ற செடிகளுக்கும் செய்தியை அனுப்பும் அதியத்தை கண்டு பிடித்துள்ளார்கள். இதிலிருந்து தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று தொலைத் தொடப்பு கொள்வது அறிய வந்துள்ளது.

மலேசியாவின் இரப்பர் தோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. இரப்பர் தோட்டத்தில் வேலைச் செய்யக் கூடிய சிறுவன் ஒரு குரங்கின் குட்டியை அடித்துக் கொன்று விடுகின்றான். அச்சமயம் அந்த சிறுவன் அணிந்திருந்தது மஞ்சல் நிற சட்டையாகும். இதன் பின் விளைவாக நடந்த நிகழ்ச்சி, இறந்த குட்டியின் தாய்க் குரங்கு சத்தம் போட்டு கத்தியவுடன் நாலாப் புறங்களிலிருந்தும் நிறையக் குரங்குகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு மற்ற நிறங்களில் ஆடை அணிந்தவர்களை விட்டு விட்டு குறிப்பாக மஞ்சல் சட்டைப் போட்டவர்களை மாத்திரமே கடிக்க ஆரம்பித்தன. இதிலிருந்து ஆபத்தை விளக்கி செய்தியைப் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் மஞ்சல் நிற சட்டைகாரன் தான் நம் எதிரி என்பனப் போன்றத் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கக் கூடிய இது போன்ற சம்பவங்கள் இத்தகைய விலங்கினங்களின் சமூக ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளாகும். இந்த நிகழ்ச்சி விலங்குகள் ஒன்றுடன் ஒன்று செய்திகளை தங்களுக்குள் பறிமாறிக் கொள்வது நிரூபனமாயிருக்கின்றது. பின் வரும் திருமறை வசனம் இதைதானே நமக்கு எடுத்தியம்புகின்றது.

பூமியில் வாழும் உயிரினங்கள் தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்த ஏட்டில் எந்த ஒன்றையும் நாம் விட்டு விடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.(06:38)

1950-ம் ஆண்டு வாக்கில் பூச்சி மருந்துக்கு கட்டுப்படாத பூச்சி வகைகள் 8 மாத்திரமே இருந்ததாகவும் தற்காலத்தில் 50-க்கும் மேற்ப்பட்ட பூச்சி இனங்கள் பூச்சிகொல்லி மருந்தின் வீரியத்தை தாங்கக் கூடிய எதிப்பாற்றலைப் பெற்று விளங்குவதாகவும் இந்தியாவின் விவசாயத் துறையின் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. இதிலிருந்து பூச்சி இனங்களும் தங்கள் உடலில் எதிப்ப்பாற்றலைப் பெறுவதன் மூலம் ஏதோ வகையில் தங்களைக் காத்துக் கொள்ளக் கூடிய அம்சங்களைக் காலப்போக்கில் பெற்றுவிடுகின்றன.

பறவைகளை எடுத்துக் கொண்டால் அதன் அலகு, சிறகு மற்றும் கூரிய நகங்கள் பாதுகாப்பாய் விளங்குகின்றது. இன்றைய காலக்கட்டத்திலே மின் கம்பங்களில் செல்லும் கம்பிகளில் உயர் மின் அழுத்தம் (12,000 வோல்டேஜ்) உறையிடப்படாமலே (without insulation) கொண்டு செல்லப் படுகின்றது. இதில் உட்காரும் பறவைகள் இதனால் பாதிப்படையாமல் இருக்கின்றதை அனைவருமே கண்டு இருக்கின்றோம். இதற்கு காரணம் அவற்றின் கால்களின் வெளிப்பரப்பில் அமைந்துள்ள மின்கடத்தா தோல் அமைப்பாகும்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் போன்றே தோல் அமைப்பை கொண்டு இறைவன் இவைகளைப் படைத்திருப்பானேயானால் இன்று நம்மால் ஒரு பறவையினத்தினைக் கூட காண இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். பறவைகளுக்கு இந்த அமைப்பை வைத்து படைக்கப்பட்டுள்ளதே இறைவனின் தீர்க்க தரிசனத்திற்கு சான்று பகர்கின்றது. இதில் நிச்சயமாக சிந்திக்க்க கூடிய மக்களுக்கு அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.

சில சிறிய வகை உயிரினங்கள் தங்கள் வாழும் சூழ்நிலையை ஒத்த, நிறங்களை பெற்று விளங்குவதனால் தங்கள் எதிரியின் கண்களிலிருந்து தப்பிப் பிழைக்கின்றன. சிலவகை மீன்கள் தங்கள் உடலில் பெற்றுள்ள உயர் அழுத்த மின்சார தன்மையினால் பட்ட மாத்திரத்தில் தங்கள் எதிரியின் உயிரைக் குடிக்கும் அபரிதமான மின் ஆற்றலை தங்கள் பாதுகாப்பு அரணாக பெற்று விளங்குகின்றன. பாம்பு, தேள், வண்டு மற்றும் சிலந்திகள் போன்றவற்றிற்கு தங்கள் எதிரிகளுக்கு சிறிய பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய விஷத்தன்மையே அதன் பாதுகாப்பு அரணாய் விளங்குகின்றது. நம் கட்டுரையில் பார்க்க இருக்கும் கீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும். இப்போது நாம் நம்முடைய தலைப்பின் எல்லைக்குள் நுழைவோம்;.
 
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய எத்தனையோ இடர்பாடுகள் நம்முடன் நீக்கமற நிறைந்து நம்மை பின்னிப் பிணைந்து சூழ்ந்துள்ளதை எவராலும் மறுக்க இயலாது. இவைகளில் சற்று கவனக்குறைவு ஏற்பட்டுவிட்டால் ஏற்படும் இழப்புக்களும் துன்பங்களும் நம்மை மீளா துயருக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது. மனிதர்களின் உயிருக்கு சவால் விடும் இரசாயணப் பாதிப்பு, சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள், உணவுப் பொருட்களின் நச்சுத்தன்மை,ரையே அழித்து சவக்குழிக்கு அனுப்பும் கதிரியக்க அபாயங்கள், அணு உலை விபத்துக்கள், மற்றும் இயற்கை சீரழிவுகள் போன்ற எண்ணற்ற அபாயங்கள் நம்மை நாலாப்புறங்களிலும் அரவணைத்து நிற்கின்றன.

வெள்ளப் பெருக்கிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அணைகள் கட்டப்பட்டது. உதாரணமாக சீனாவின் துயரம் என்று சொல்லப்படும் மஞ்சல் ஆற்றின் வெள்ளப் பெருக்கை முற்றிலுமாக கட்டுப்படுத்திய சம்பவமாகும். 1979-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேணியாவில் உள்ள மூன்று மைல் தீவில் (three mile island) நிகழ்ந்த அணு உலை விபத்தாகிலும் சரி 1986-ம் ஆண்டு (முந்தைய) ரஷ்யாவின் உக்ரைனில் உள்ள செர்னோபிலில் ஏற்ப்பட்ட நியூக்ளியர் கதிரியக்க கசிவினாலும் சரி 1984-ம் ஆண்டு இந்தியாவின் போபால் நகரில் நிகழ்ந்த ஐசோ சயனைடு வாயுவின் கசிவினால் ஏற்பட்ட கோர விபத்தாகிலும் சரி, மனிதர்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றதை நம்மால் எளிதாக மறக்கக் கூடிய சம்பவங்களா அவை. அதன் மூலம் படிப்பினை பெற்று மனிதன் இறைவன் அவனுக்கு கொடுத்த பகுத்தறிவைக் கொண்டு நிலையை செம்மைப் படுத்திக் கொள்கின்றானே இந்த பகுத்தறிவுதான் இவனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகும்.

இது போன்றது மற்றுமல்லாது தனக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்சனையாகிலும் சரி இந்த பகுத்தறிவின் துணைக் கொண்டு எதிர் நீச்சல் போட்டு இலக்கை எட்டுகின்றான். இத்தகைய உயர்தினை படைப்பாகிய மனிதனின் உயிருக்கு சவால் விட்டு, ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கில் உயிர்ப் பலியை வாங்கக்கூடிய உலகிலேயே மிக அதிக விஷமுள்ள ராஜநாகம் பற்றி நாம் தெரிந்துக் கொள்வதன் மூலம் இதற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கக் கூடிய நம் கட்டுரையின் நாயகர் திருவாளர் கீரிப்பிள்ளை அவர்களின் எதிப்பாற்றலைப் பற்றி அறிந்துக்கொள்வதில் கூடுதல் பொருத்தமாயிருக்கும் என்பதனால் நாஜநாகம் என்று அழைக்கப்படும் (king cobra) நல்லப் பாம்பைப் பற்றிப் முதலில் பார்ப்போம்.

பாம்பு என்றுச் சொன்னால் படையே நடுங்கும் என்று சொல்லப்படும் பழமொழி சற்றும் மிகைப்படுத்தி சொல்லப் பட்டதல்ல. அந்த அளவிற்க்கு பாம்பைப் பற்றிய அச்சம் நம்மிடையே விசாலமாகவே காலங்காலமாக இருந்து வருகிறது. உலகில் அதிக மக்கள் பாம்பு கடித்து இறக்கக் கூடிய எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். சிலர் இந்த விஷ ஜந்துவை வணங்குவதால் இவற்றை கொல்ல தயங்கி, விட்டு விடுகின்றனர். இருப்பினும் இதற்கு சந்தர்ப்பம் வாய்ப்பின் மனிதர்களை கொட்டி உயிரை குடித்து விடுகின்றன.

முஸ்லிம்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்கள், தொழுகுமிடத்தில் கூட நீங்கள் இதுபோன்ற விஷ ஜந்துக்களைக் கண்டால் முதலில் அவற்றை கொன்று விட்டு பிறகு தொழுவுங்கள் என்று தெள்ளத் தெளிவாக சொல்லி நமக்கு வழிக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

நாஜ நாகம் (king cobra) என்று அழைக்கப்படும் இந்த "பொல்லாத" பாம்பை இந்த கட்டுரையிலே நம் சொல் வழக்குப்படி நல்லப் பாம்பு என்றே குறிப்பிடுவோம். பொதுவாக எல்லா விஷப் பிராணி மற்றும் ஜந்துக்களுக்கும் விஷத்தை உற்பத்தி செய்யும் பிரத்யேகச் சுரப்பி அமைந்துள்ளதைப் போன்றே நல்லப் பாம்பிற்க்கும் அதன் தலைப்பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இதன் வாயின் மேற்பரப்பில் இதன் விஷ-பை (venom sac) அமைந்துள்ளது. இந்த விஷ-பையுடன் இணைந்த குழாய்(venom duct) உட்புறம் முற்றிலும் துளையுடைய முன்புற பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முன்புறப் பற்களின் முனை மிகக் கூர்மையாகவும் துளையுடையதாகவும் அமைந்துள்ளது.

இவை தங்களின் எதிரிக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவே தீண்டுகிறது. அதன் பிறகு வாயின் உட்புறம் அமைந்த கடைவாய் பற்களைக் கொண்டு அதன் மேற்ப்புறத்தில் அமைந்த விஷ-பையை அழுத்துவதன் மூலம் வெளியேறும் விஷம் அதனுடன் இணைக்கப் பட்ட குழாய் மூலம் வெளியேறி துளையுடைய முன்பற்களை அடைகின்றது. அப்பொழுது தீண்டியதால் ஏற்ப்பட்காயத்தின் மூலம் விஷம் இரத்த ஓட்டத்தில் கலந்தவுடன் முதலில் மத்திய நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுக் தீண்டியவுடன் பொதுவாக மரண பயம் ஏற்பட்டு விடுவதனால் இதயம் மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலமும் இரத்தம் விரைவுப் படுத்தப்பட்டு விரைவாக விஷம் உடல் முழுதும் பரவி ஆபத்தையும் விரைவுப் படுத்துகின்றது.

பாம்பின் விஷம் செரிந்த புரோட்டீன்களினால் (highly protin) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன. இருப்பினும் நம் உடல் அமைப்பை பொருத்தவரை புரதமோ, வைட்டமின்களோ, அல்லது தாதுப் பெருள்களோ நம் வாயின் மூலம் உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு நம் உடலுக்குத் தேவையான மற்றொருப் பொருளாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்றவை அகற்றப்பட்டு அதன் பிறகுதான் இரத்தில் கலக்க இயலும்.

ஆனால் பாம்பு கடிப்பதனால் விஷம் (highly protin) இரத்தத்தில் நேரடியாக கலப்பதனாலும் நம் உடலின் இயல்பிற்கு மாற்றமாக இருப்பதனாலும் நம் உடலின் திசுக்களும் கல்லீரலும் நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து மரணத்திற்கு வழி வகுக்கின்றது. பாம்பின் விஷம் பல விதமான மருத்துவத்திற்கு பயனாகின்றது. பாம்பு கடிக்கான மருந்து தயாரிப்பிலும் (anti venom) வலி நிவாரணம், மூட்டுதசை மற்றும் கேன்சர் நோய்க்கான மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று சொல்லும் நம் இறைவன் தன் வார்த்தைக்கு மாறு செய்யாதவன்.

ஒரு கிராம் நல்ல பாம்புடைய விஷம் 50-க்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்ல போதுமானதாகும். ஒரு முறை இவை கொட்டுவதனால் பிரயோகம் செய்யப்படும் விஷம் (ஏழு டன் எடைக் கொண்ட ) மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்க செய்ய போதுமானதாகும். மற்றுமொரு அம்சம் முட்டையிலிருந்து வெளிவந்த சிறிய பாம்புடைய விஷம் வீரியம் மிக்கப் பெரிய பாம்பின் விஷத்தை போன்றே எந்த விதத்திலும் குறையாத வீரியம் மிக்கதாகும். இதிலிருந்து முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப் பாம்பு கூட மரணத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் தான் பிறக்கின்றது. இந்த அம்சம் கூட எல்லா உயிரினங்களிலும் வித்தியசமான விதிவிலக்கான அம்சமாகத் திகழ்கின்றது. தற்போது இதன் விஷத்தினுடைய வீரியத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றதல்லவா? மற்றுமொரு அதிய செய்தி ஆப்பிரிக்காவில் வசிக்கும் கருப்பு கழுத்துடைய (black necked cobra) நல்ல பாம்பு தன் எதிரியின் கண்களை நோக்கி விஷத்தை 2.5 மீட்டர் தொலைவு வரை பீய்ச்சி அடிக்கின்றது. இதனால் எதிரியின் கண்களில் தற்காலிகக் குருடும் கடுமையான வலியையும் ஏற்படுத்தி தப்பி விடுகின்றது. இவ்வாறு விஷத்தை துப்பாக்கியின் அமைப்பில் பீய்ச்சி அடிக்கும் இந்த விதிவிலக்கான அம்சம் கூட அல்லாஹ்வின் அத்தாட்சியே ஆகும்.

இவ்வளவு வீரியம் மிக்க இந்த பாம்பின் விஷத்தைத் தாங்கி இதனையே தோற்கடித்து உண்ணக்கூடிய சிறிய பாலூட்டியான கீரிப்பிள்ளையின் ஆற்றலை இப்போது விளங்கிக் கொள்ள வார்த்தை விரயம் தேவையில்லை.

நல்லப் பாம்புடைய வீரியம் மிக்க விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய இந்த அம்சம்தான் மற்றவற்றிலிருந்து கீரிப்பிள்ளை வேறுபட்டு விளங்க காரணமாக அமைந்துவிடுகிறது.

அல்லாஹ் தான் நாடியவற்றிற்கு நம்மால் நம்ப முடியாத, நம் பகுத்தறிவால் விடைப் பகர முடியாத அளவிற்கு ஆற்றலை அதிகப் படுத்தக் கூடியவன். இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

பொதுவாக கீரிப்பிள்ளையும் நல்லப் பாம்பும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கெண்டால் நீ உன் வழியில் செல் நான் என் வழியில் செல்லுகின்றேன் நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்ற ரீதியிலே ஒன்றை ஒன்று தவிர்த்துக் கொண்டு செல்கின்றன. சில சந்தர்ப்பங்களில் எதிரிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையில் மோதும் நிலை வந்துவிட்டாலோ அந்த போட்டியின் முடிவு, இறந்த பாம்பை கீரிப்பிள்ளை தின்னுவதாகத்தான் முடிவடையும்.

ஒரு எதிரியுடைய தன்மைகளையும் ஆற்றலையும் அறிந்துக் கொண்டால் அதைத் தோற்கடிக்கக் கூடிய ஒன்றின் ஆற்றலை அறிந்துக் கொள்ள நமக்கு அதிக சொற்றொடர்கள் தேவைப்படாது என்ற அடிப்படையில் நல்லப் பாம்பை பற்றியும் அதன் விஷத்தின் வீரியத்தை பற்றியும் முதலில் பார்த்தோம்.

கீரிப்பிள்ளையின் உடலை காயப்படுத்தி விஷத்தை பிரயோகம் செய்ய கூடிய அளவிற்கான கூறியப் பற்கள் நல்லப் பாம்பிற்கு நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது. இருப்பினும் அந்த விஷத்தை தாங்கக் கூடிய உடலமைப்புத்தான் அல்லாஹ்வின் அத்தாட்சியை பறைச்சாற்றி நிற்கும் அம்சமாகும். கீரிப்பிள்ளை மனிதர்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடிய எலி மற்றும் பாம்பை முக்கிய உணவாக உட்கொள்ளுவதால் மனிதர்களுக்கு ஒரு விதத்தில் நன்மைப் பயப்பினும் கூட மனிதர்களுக்கு பயன் தரத்தக்க உயிரினங்களை சில வேளைகளில் இவைத் தாக்குவதனால் இதனால் பாதிப்பு ஏற்படவும் செய்கின்றது.

இத்தகைய மேற்கண்ட எல்லா அம்சங்களையும் நம் இறைவன் தக்க காரண காரியங்களுடன் திட்டமிட்டுதான் படைத்துள்ளான் என்பதை சிந்திக்கும் போது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் அவனுடைய தீனில் நம்முடைய நிலைப் பாட்டை உறுதிப் படுத்துகின்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

வானங்களையும் மற்றும் பூமியையும் அவ்விரண்டிற்க்கும் இடைப் பட்டதையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. (நம்மை)மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர். (26:03)


ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி

யானை (Elephant) E. Usman Ali, Jeddah


யானை (Elephant)
E. Usman Ali, Jeddah
 
தரையில் வாழக்கூடிய விளங்கினங்களில் மிகப் பெரியதும் புத்திக் கூர்மையில் மற்றவற்றை மிகைத்த ஆற்றலும் பெற்று விளங்கும் இந்த உயிரினத்தைப் பற்றி அறியாத பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருமே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவருக்கும் அறிமுகம் ஆனது யானைதான்.
 
யானை என்று சொன்னவுடனே நமக்கு விரைவாக நினைவிற்கு வருவது அதன் தும்பிக்கை அமைப்பாகும். இந்த அமைப்புத்தான் பிரத்யேகமாக இறைவனால் இவற்றிற்குக் கொடுக்கப் பட்ட அருட்கொடையாகும். மனிதனின் கைகள் எந்த அளவிற்கு பயன்பாட்டிற்கு அவனுக்கு உதவியாக இருக்கின்றதோ அதுப் போன்று யானையின் தும்பிக்கை அதற்கு பல வழிகளிலும் உறுதுணையாக விளங்கி வருகின்றது. யானையின் மூக்குத் துவாரங்கள் நீண்ட வளைந்துக் கொடுக்கக் கூடிய தசைப் பிணைப்புக்களினால் இணைந்த இந்த அமைப்பையே தும்பிக்கை என்று அழைக்கின்றோம். இந்த தும்பிக்கை அமைப்பை நினைவூட்டக்கூடிய வகையிலோ அல்லது அதை ஒத்த உடல் அமைப்பையோ பெற்ற விலங்கினங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லுமளவிற்கு இந்த அமைப்பு இவற்றிற்கு மாத்திரமே இறைவனால் பிரத்யேகமான அம்சமாக அருளப்பட்டுள்ளது. இத்தகைய அற்புத உயிரினத்தைப் பற்றி விரிவான முறையில் பார்ப்பதே நம் கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டையக் காலம் முதல் இன்று வரை யானை மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களின் அந்தஸ்திற்கும் மதிப்பிற்குறிய விலங்காக இருந்து வருகின்றது. பழங்காலங்களில் யானை போர்க் கலங்களில் சிறப்பான இடத்தை வகித்து வந்தன. குதிரைப் படையைப் போன்றே யானைப்படையும் ஒரு அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அம்சமாக இருந்துள்ளதை வலாறுகளில் காணமுடிகின்றது. இப்போது யானையின் பொதுவான சில அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

பல்வேறு புதைப்பொருள் ஆராய்சியின் விளைவாக கண்டெடுக்கப் பட்ட எலும்புக்கூடுகளிலிருந்து முந்தையக் காலங்களில் 600க்கும் மேற்பட்ட யானை வகைகள் ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிகாவைத் தவிர்த்து பூமியின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்ததாக புதைப் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது இரண்டே இரண்டு வகைகள் மாத்திரமே இவ்வுலகில் காணப்படுகின்றன. ஓன்று ஆப்பிரிக்க யானை மற்றது ஆசிய யானை ஆகும். இவ்விரண்டிற்கும் மத்தியில் கண்டவுடன் அறிந்துக் கொள்ளக் கூடிய வகையில் பல வித்தியாசமான அம்சங்கள் உள்ளன.
 

ஆப்பிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குலம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், சிகப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது.

முழு உடலும் தண்ணீரில் மூழ்கியதன் பின்னரும் தும்பிக்கையை தண்ணீரின் மேலே தூக்கி சுவாசத்தை பெறுவதன் மூலம் களைப்பின்றி நீண்ட தூரம் பயணிக்கும் ஆற்றல் ஒரு சுவாரஸ்யமான அம்சமாகும்.

சாதாரணமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இவைகள் அவசியம் ஏற்படும் போது 40 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லும் ஆற்றல் பெற்றவை. பிரம்மாண்டமான உடல் அளவை பெற்றுள்ள யானைகள் புற் தரையில் மாத்திரமல்லாது கடினமானத் தரையிலும் கூட சப்தமின்றி நடந்து செல்லக் கூடியவை. யானையின் கால்களின் அடிப்புறத்தில் வளரும் மென்னையான சதைப்பகுதி யானை நடக்கும் போது சத்தமின்றி நடக்கவும், அதன் உடலின் எடையை தாங்கி நடப்பதன் மூலம் ஏற்படும் அதிகபடியான அதிர்சியை குறைத்து அதன் உடலைப் பாதுகாக்கும் அம்சமாகவும் விளங்கி வருகின்றது. யானைகள் இவ்வளவு வேகமாக செல்லக் கூடியதாக இருப்பினும் இவைகளினால் வழியில் குறுக்கிடும் சிறிய பள்ளங்களைக் கூட தாவிப் பாய்ந்துச் செல்ல முடிவதில்லை. இருப்பினும் வழியில் குறுக்கிடும் ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகளை எந்த விதமான களைப்புமின்றி எளிதாக கடந்து செல்லும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகளின் முழு உடலும் தண்ணீரில் மூழ்கியப் பின்னரும் கூட அவற்றின் தும்பிக்கையை தண்ணீருக்கு மேலே உயர்த்தி சுவாசத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் மிக நீண்ட தூரம் இவைகளினால் களைப்பின்றி தண்ணீரில் நீந்திச் செல்ல இயலுகின்றது.

உலகில் வாழக்கூடிய உயிரினங்களிலேயே மிக உறுதியான நீண்ட பற்கள் யானையின் தந்தம் ஆகும். யானையின் தந்தம் மிக நீளமான அதன் மேற்புற முன் வரிசைப் பற்களாகும். வருடத்திற்கு 17 செ.மீ வரை வளரக்கூடிய இவைகள் யானை மரணிக்கும் காலம் வரை தொடந்து வளர்ச்சியடைகின்றது. அதிகபட்சமாக இரண்டரை மீட்டர் நீளமும் 45 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது. இதைக் கொண்டு பூமியைத் தோண்டி கிழங்கு வகைகளை உண்பதற்கும், தண்ணீரை பெற்றக் கொள்வதற்கும், மற்ற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இனப் பெருக்கத்தின் போது ஏற்படும் போட்டியில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன. இந்த தந்தம் தான் யானையை வேட்டையாடி அழிக்க முக்கியக் காரணமாக இருப்பவை. இவற்றின் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதனால் இதற்காகவே இவை சட்ட விரோதமாக வேட்டையாடப் படுகின்றன. இவற்றைத் தவிர்த்து யானைக்கு நான்கு பற்கள் அமைந்துள்ளன. நான்கு பற்களும் கடைவாய்ப் பற்களாகும். இவற்றின் முதல் வரி பற்கள் விழுந்தவுடம் பின்புற பற்கள் இரண்டும் முன் வரிசைக்கு இடம் பெயருகின்றன. பின் புறம் புதிய பற்கள் இரண்டு முளைக்கின்றன. இது போல் யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. 40 முதல் 60 வயதிற்க்குள் கடைசிக் கட்ட பற்கள் விழுந்து விடுவதனால் உணவை சரிவர மென்று உண்ண முடியாத நிலை ஏற்படுவதால் செரிமானக் கோளாருகளினால் இறக்கும் நிலையும் சிலவற்றிற்கு ஏற்படுகின்றது.

மேலும் முக்கியமாக அதன் சிறப்பு உடல் உறுப்பான தும்பிக்கை குறிப்பிடத் தக்க அம்சமாகும். சுவாசக் குழாயான மூக்குத் துவாரங்கள் நீண்ட தசைப் பிணைப்புக்களினால் இணையப் பெற்ற இந்த தும்பிக்கை அமைப்பு அதன் பல பயன் பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றன. யானையின் தும்பிக்கை ஏறக்குறைய 1,50,000 தசைப் பிணைப்புக்களினால் இணைக்கப் பட்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக மனிதனின் கைகள் அவனுக்கு எந்த அளவிற்கு உயோகப் படுகின்றனவோ அது போல அவற்றின் தும்பிக்கை அமைப்பு அவற்றிற்கு பல வகையிலும் உதவியாக இருக்கின்றன. சுவாசிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி அவற்றை வாயில் பீய்ச்சிக் குடிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி உடல் முழவதும் செலுத்தி உடல் வெப்ப நிலையை தணித்துக் கொள்வதற்கும், சிறிய புற் பூண்டு வகைகள் முதல் பெரிய மரக் கிளைகள் வரை உடைத்து உண்பதற்கும், தண்ணீருக்கடியில் பயணிக்கும் போது சுவாசத்திற்கும் இதுப் போன்று பல உபயோகங்கள் இவற்றினால் யானைகளுக்கு உண்டு. இந்த தும்பிக்கை அமைப்புத்தான் மனிதர்களினால் பாரம் தூக்கும் வேலைக்கு இவைகளைப் பயன்படுத்தக் காரணமாகும். மிக லாவகமாக தும்பிக்கையைக் கொண்டு பலுவானவற்றை இவைகளினால் தூக்க முடிகின்றது.

அடுத்து அதன் தோல் அமைப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுவோம். இதன் தோல் இரண்டிலிருந்து நான்கு செ.மீ வரை தடிமன் கொண்டதாகும். இவ்வளவு தடிமனாக இருப்பினும் கூட இவைகளின் தோல் அதிக உணரும் திறன் கொண்டதாகும். இவற்றின் தோலில் மிகக் குறைந்த அளவே வியர்வைச் சுரப்பி இருப்பதனால் இவை தங்கள் உடலின் மேற்புறத்தில் கும் மற்றும் குட்டைகளில் புரண்டு உடலில் சேற்றை பூசிக்கொள்கின்றன. அல்லது தங்கள் தலையிலே தாங்களே மண்ணைப் அள்ளிப் போட்டுக் கொள்கின்றன. இதன் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுகின்றன. மேலும் உடலின் மிக முக்கிய இரத்த நாளங்கள் அனைத்தும் அதன் இரு அகன்ற காது மடல்களை கடந்து செல்லுவதால் அதனை அசைப்பதன் மூலம் இரத்தத்தை குளிரச் செய்து உடலின் வெப்பத்தை பெருமளவிற்கு வெளியேற்றுகின்றன. இதுவே இவை தங்கள் காதுகளை அதிகமாக அசைத்துக் கொண்டிருப்பதன் காரணமாகும்.

அடுத்து அதன் புத்திக் கூர்மையைப் பற்றிப் பார்ப்போம். புத்திக் கூர்மையை அளவிட்டு கணக்கிடுவதில் திட்டவட்டமான வரையறையை அறிவியலார்கள் இதுவரை அடையாததால் இவற்றின் புத்திக் கூர்மையை அளவிடும் வியத்திலும் திட்டவட்டமான முடிவுக்கு இதுவரை வர முடியவில்லை. இருப்பினும் இவை புத்திசாலி விலங்கினம் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. மனிதர்களின் மூளையைக் காட்டிலும் மிகப் பெரிய மூளை யானையுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. அதிகப்படியாக இவற்றின் மூளையில் காணப்படும் செரிப்ரல் கார்டக்ஸ் என்னும் இரசாயணப் பொருள் அறிவுத்திறனை அளவிடும் பொருளாக கணித்திருக்கின்றார்கள். மேலும் இவற்றின் புத்திக் கூர்மையான செயல் பாடுகளினாலும் இதன் புரிந்துக் கொள்ளும் திறனின் அடிப்படையினல்தான் சர்க்கஸ் போன்ற கேளிக்கைகளில் இவற்றைக் கொண்டு வியக்கத் தக்க செயல்பாடுகளை செய்ய இயலுகின்றது.
 
யானையின் மற்றுமொரு முக்கிய வித்தியாசமான அம்சம் தொலைத்தொடர்பு கொள்ளும் முறையாகும். இவைகள் தங்கள் தும்பிக்கையைக் கொண்டு ஒன்றை ஒன்று தொடுவதன் மூலமும் சத்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்கின்றன. 1980 ம் ஆண்டுதான் முதன் முதலாக யானையின் தும்பிக்கையினால் மனிதர்களின் செவிப்புலனினால் கேட்க முடியாத குறைந்த அலை வரிசையைக் கொண்ட சப்தத்தை எழுப்புவதைக் கண்டறிந்தார்கள். இதைக் கொண்டு தொலைத்தொடர்பு கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

யானைகள் காட்டின் சுற்றுப் புற சூழலில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன. அதிகமான அளவிற்கு மரங்களிலிருந்து இலைத் தழைகளை பறித்து உண்பதனால் சூரிய வெளிச்சம் கீழே ஊடுருவிச் சென்று பூமியை அடைய வகை ஏற்பட்டு சிறிய புற்பூண்டு வகைகள் வளர உதவி புரிகின்றன. மிக வெப்பமான காலங்களில் இவற்றால் தோண்டப்படும் தண்ணீர் பள்ளங்கள் மற்ற வனவாழ் விலங்கினங்கள் குடிப்பதற்கும் பயன் படுத்திக் கொள்கின்றன. மேலும் அடர்த்தியான காடுகளில் இவற்றின் குழுக்கள் பயணம் செய்வதனால் ஏற்படும் வழித் தடத்தினை சிறிய விலங்கினங்கள் உட்பட மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. பூமியில் வளரும் புற்பூண்டுகளை அடியோடு பிடுங்கி உண்பதனால் பூமியில் காற்றோட்டம் அதிகரித்து மீண்டும் புதிய புற்பூண்டுகள் வளர வகை ஏற்படுகின்றன.

யானைகள் சராசரியாக 60 வருடம் வாழக்கூடியது. பூமியில் வாழும் உயிரினங்களிலேயே அதிக கர்ப்ப காலம் யானையுடையதாகும். 20 முதல் 22 மாத கர்ப் காலத்தில் ஒருக் குட்டியை ஈன்றெடுக்கின்றன. 4 ஆண்டு இடைவெளியில் தனது 60 ஆண்டுகள் வரை குட்டிகளை போடும் தன்மையைப் பெற்றுள்ளன. குட்டிப் பிறக்கும் போது 120 கிலோ எடையும் ஒரு மீட்டர் உயரமும் உடையதாக இருக்கும். பிறந்த ஓரிரு மணி நேரத்தில் எழுந்து தன் தாயின் முன் கால்களுக்கு இடையே அமைந்த பால் சுரப்பிகளில் பால் குடிக்க ஆரம்பிக்கின்றது. யானையின் பால் சுரப்பி இரண்டு காம்புகளை உடையதாகும்.

தங்கள் உணவிற்காக நீண்ட தூரம் பயணிக்கும் தரைவாழ் உயிரினம் யானை ஆகும்.
தரையில் வாழக்கூடிய விலங்கினங்களில் மிகப் பெரியதும் நன்கு வளர்ந்த ஒரு யானைக்கு இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை என்ற சொல்லுமவிற்கு பலம் வாய்ந்ததும். 60 வருட கால நீண்ட வாழ்நாளைக் கொண்டதும், நல்ல புத்திக் கூர்மையும் உடைய இந்த பிரம்மாண்டமான உயிரினம் ஒரு தாவர உண்ணியாகும். இந்த உயிரினம் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உண்டு ழிப்பதிலேயே செலவழிக்கின்றன. 80 வகையான வித்தியாசமான தாவரங்களிலிருந்து இலை, பட்டை, வேர்கள், கிழங்கு வகைகள், காய், கனி, மொட்டு, போன்றவற்றை தங்களின் உணவாக உட்கொள்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 100 முதல் 300 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. எனவே இவைகளுக்கு குடிக்க தண்ணீரும் அதிகம் தேவைப்படுகின்றது. ஓரு நானைக்கு 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கின்றன.
 
யானைகள் குழுக்களாக இணைந்து வாழக்கூடியன. ஒரு பகுதியில் காணப்படும் தண்ணீர் மற்றும் தாவரங்களை விரைவில் உண்டு கபளீகரம் செய்வதனால் விரைவில் இடம் மாறிச் செல்லக் கூடிய நிலை இவைகளுக்கு ஏற்படுகின்றன. இவற்றின் ஒரு குழு தங்கள் உணவை பெற ஒரு பருவத்தில் 1000 சதுர கிலோ மீட்டர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு வருடத்தில் இவை தங்கள் உணவிற்காக 5,000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை பயணிக்கின்றன. இது தரையில் வாழும் மற்ற பாலூட்டிகள் செல்லும் தொலைவைக் காட்டிலும் கூடுதலாகும்.
 
யானைகள் புதியதாக பிறந்த குட்டிகளுக்காக மகிழ்ச்சி அடைகின்றன. மேலும் இறந்த தங்கள் குழுவை சேர்ந்த யானைகளுக்காக கண்ணீர் விட்டும் அழுகின்றன.
 
யானையின் உணர்ச்சி மயமான வாழ்க்கையைப் பற்றி எழுத சில பக்கங்கள் அவசியமாகும். யானைகள் குழுக்களாக இணைந்து வாழக்கூடியது என்று முன்பு கண்டோம். இவற்றில் உறவு முறைகளுடன் அமைந்த 2 முதல் 29 வயது வரை பலத்தரப்பட்ட வயதுடைய யானைகள் வரை இருக்கும். இவை இறுதி வரை கட்டுக் கோப்புடன் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகமாகி விட்டாலோ அதிலிருந்து சில பிறிந்துச் சென்றுப் புதியக் குழுக்களை அமைத்துக் கொள்கின்றன. ஒருக் குழுக்களைச் சேர்ந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் விதமாக 50 மீட்டர் இடைவெளியிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகின்றன. ருக் குழுவிற்கு அந்த குழுவில் வயது முதிர்ந்த பெண் யானை வழிக்காட்டியாகவும் தலைவியாகவும் செயல்படுகின்றது. அது இறந்த பின்னர் அடுத்த வயதில் முதிர்ந்த பெண் யானை தலைமையை அடைகின்றது.
 
ஆராய்சியாளர்கள் சமீப காலங்களில் யானையின் நடவடிக்கைகளை ஆராய்ந்து சில அதியமான விசயங்களைக் கண்டறிந்தர். யானைகள் புதிதாக பிறந்த குட்டிகளுக்காக தங்கள் சந்தோசத்தையும், இறந்த தங்கள் குடும்பத்தை சேர்ந்தவற்றிற்காக கண்ணீர் விட்டு அழுவதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிரிந்து திரும்பிய தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யானையின் வருகைக்காக விரிவான முறையிலே வவேற்பை அளிக்கின்றன. வரவேற்கும் விதமாக வித்தியாசமான சத்தத்துடனும் ஒன்றை ஒன்று உரசியும், தலையோடு தலையை இடித்தும், முன் பின்னுமாக நடந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
 
யானைகளை றக்குறைய 4000 ஆண்டுகளாக மனிதன் தன் உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றான். ஆசியாவில் 13 முதல் 16 ஆயிரம் யானைகள் வரை தொழிலில் பயன்படுத்துகின்றார்கள். இந்த எண்ணிக்கை உலக யானை எண்ணிக்கையில் 25 சதவிகிதமாகும். இரண்டாம் உலகப் போரின் போது பளுவான இராணுவத் தடவாளங்களைத் தூக்கிச் செல்லப் யானையைப் பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகின்றது. இவை வனப்பகுதியிலிருந்து பெரிய மரக் துண்டுகளை வெளியில் எடுத்து வரவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும், பாரத்தை சுமந்துச் செல்லவும், மர அறுப்பு பட்டரைகளிலும் பலவாறாக பயன்படுத்தப்படுகின்றன. யானை 14-ஆம் வயதில் முதன் முதலில் தொழில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு 25 வயதை அடைந்தவுடன் பலுவான மரக்கட்டைகளை சுமந்து கொண்டு வரவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெற்றுள்ள புத்திக் கூர்மையின் காரணமாக இவை விரைவில் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்கின்றன.
 
25-ஆம் வயதில் இவற்றைக் கொண்டு தொழிலில் பயன்படுத்தி பொருளாதாரத்தை ஈட்டும் யானையின் மேய்பாளனாகிய பாகன் தன் வாழ்நாள் முழுதும் அதனுடனே கழிக்கின்றான். யானையின் வயது ஏற ஏற பாகனுடைய வயதும் ஏறிக் கொண்டுச் செல்வதனால் தனது 50 வது வயதில் ஓய்வு பெறும் வயதை அடையும் போது யானையும் தன் வலுவை இழந்து ஓய்வு பெரும் நிலையை எட்டிவிடுகின்றது. இந்நிலையில் இவ்விருவருக்குமிடையே ஏற்படும் அன்யோன்யமான உறவு பிரிக்க முடியாத வார்த்தைகளினால் விளக்க இயலாத ஒரு உறவாக மாறிவிடுகின்றது. இருவருக்குள் ஆழமான அன்பு ஏற்பட்டு விடுகின்றது. பாகனின் சொல்லுக்கு யானை உடன் கட்டுப்பட்டு நடப்பதையும் மற்றவர்களின் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கருதாமல் இருப்பதையும் கொண்டு நாம் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
 
1900 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது 10 மில்லியன் வரை இருந்த யானையின் எண்ணிக்கை 1979ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 1.3 மில்லியன் எண்ணிக்கை மாத்திரமே இருந்ததாக கணக்கிட்டு உள்ளார்கள். மிக மிக வேகமாக குறைந்து வரும் இந்த சதவிகிதத்தினால் விரைவில் இந்த இனம் முற்றிலும் அழிந்து விடுமோ என்று அஞ்சப்படுகின்றது. பல நாடுகளில் மிருக காட்சி சாலைகளில் மாத்திரமே யானையை காணக் கூடிய நிலை இருக்கின்றது. இதை காக்கும் விதமாக இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக விளங்கி வரும் யானைத் தந்தத்தினால் செய்யப்படும் பொருட்களை முற்றிலுமாக இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை செய்து 120 நாடுகள் சட்டமேற்றியுள்ளன. இதன் மூலம் ஓரளவிற்கு சட்ட விரோதமாக வேட்டையாடப்படும் எண்ணிக்கை குறைந்திருப்பினும் கூட அழிவுனுடைய எல்லையில் இந்த இனம் இருப்பதை மறுக்க இயலாது.
 
இயற்கையான வன சூழ்நிலையில் இவைகளின் இனப்பெருக்கத்தினால் ஏற்படும் எண்ணிக்கை பெருக்கம் அவற்றை தொழிலில் ஈடுபடுத்தும் போது சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் முன் கண்டவாறு யானைகள் ஒரு குழுக்ளாக இணைந்து கட்டுப்பாட்டுடன் ஒரு தலைமையின் கீழ் வாழ்ந்து வருவதனால் சில சமயங்களில் சட்ட விரோதமாக வேட்டையாடக் கூடியவர்களின் இலக்கிற்கு தலைமையை வகிக்கும் யானை பலியாகிவிடுவதனால் அந்த கூட்டத்திற்கு சரியான வழிக்காட்டுதலும் பாதுகாப்பும் இல்லாமல் சிறியத் தலைமுறை யானைகள் கூட்டு சிதைந்து விரைவில் பலியாகும் அபாயமும் நிகழுகின்றது. இதே நிலையில் சென்றால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளுக்கு பின்னர் இந்த உயிரினம் அறவே இல்லாத நிலையை எட்டி யானையின் படங்களை மட்டும் பிள்ளைகளுக்கு காட்டுக் கூடிய நிலை ஏற்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
 
எல்லா உயிரினங்களையும் மனிதர்களின் பயன்பாட்டிற்கு படைத்ததாக சொல்லும் இறைவனின் இத்தகைய அற்புதமான படைப்பினங்களை, மனிதன் சட்ட விரோதமாக தன் சுயநலத்திற்காக வேட்டையாடி வருவதால் இப்பிரச்சினையை தவிர்க்க இயலவில்லை.
 
வானங்களில் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்கு பயன்படச் செய்தான். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:13)


 
 ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி