WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

புதன், 20 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,



இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது, கொலைசெய்யபட்டவரின் மகன் பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார், 

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது அதை திருப்பிகொடுத்துவிட்டு மேலும் என் மகனை என் குடும்பத்தில் யாராவது பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன் என வேண்டுதல் வைக்கிறார்,

ஆனால் தண்டனை வழங்கவேண்டியவர் இல்லை இவர் நம்மை ஏமாற்றிவிட்டு தப்பிக்க பார்க்கிறார் என்கிறார்... இவருக்கு ஒருவர் பொறுப்பேற்றுகொண்டால் நான் இவர் போய்வர சம்மதிக்கிறேன் என்கிறார்...

உடனே அபுதர் (ரலி) அவருக்கு தான் பொறுப்பு ஏற்பதாக சொல்கிறார் அப்போது உமர் அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்கவேண்டும் நன்கு யோசித்துகொள்ளுங்கள் என அபுதரிடம் சொல்கிறார்... அபுதரும் தான் ஏற்றுகொள்வதாக சொல்கிறார்...

தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கபடுகிறது மூன்றாவது நாள் அசர் தொழுகைக்கு முன் வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்... 

இரண்டு நாட்கள் ஓடியது மூன்றாவது நாள் வந்தது அசர் தொழுகை நடைபெற்றது எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்... 

நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது... தண்டனைக்குரிய நபர் தான் வருகிறார்... வந்துவிட்டார்.... உமர் அவரிடம் நீர் ஏன் திரும்ப வந்தீர்...??? 
என கேட்கிறார் 

அதற்கு அவர் முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார் என்று நாளை வரலாறு என்னை பழிக்கும் மேலும் இங்கே தப்பிவிடலாம் நாளை அல்லாஹ்விடம் இதைவிட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சுகிறேன் என்றார்... 

அடுத்து அபு தர்ரிடம் நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..?? என்று கேட்டார் உமர்... 

உடனே அபூதர் ,முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ என அஞ்சினேன் அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன் என்றார்... 

பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்... 

வழக்குறைத்தவர்...

நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்... முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என்மீது வருவதை நான் விரும்பவில்லை என்றார்...

இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...

நன்றி : அபு ரையான்
இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது, கொலைசெய்யபட்டவரின் மகன் பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்,

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது அதை திருப்பிகொடுத்துவிட்டு மேலும் என் மகனை என் குடும்பத்தில் யாராவது பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன் என வேண்டுதல் வைக்கிறார்,