இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை
பக்கங்கள்
முகப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
வீடியோ ஆடியோ
சகோதர தளங்கள்
புஹாரி தமிழாக்கம்
WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்
சனி, 7 ஜூலை, 2012
உழைத்துப் பிழைப்போம்!
உழைக்கும் உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது). இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால் அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்துண்ண ஊக்கப்படுத்துவார்கள். ஆக்க வழியையும் காட்டுவார்கள். சம்பாதித்து உண்ணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவார்கள்.
உடலுரமுடையோருக்கு உழைக்காமல் வாழ உதவுவது அவர்களை சோம்பேறிகளாக்கி வழிகேட்டில் வீழ்த்திவிடும். நாட்டின் மனித வளம் பயன்படுத்தப்படாமல் பாழாகி நாடும் நாசமடையும்.
“உயர்ந்த கை தாழ்ந்த கையை விட சிறந்தது. உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது. தாழ்ந்த கை என்பது யாசிப்பது”
என்று நபிகள் நாயகம்(ஸல்) புகன்றது புகாரியில் 1429ஆம் எண்ணில் எழுதப்பட்டுள்ளது.
மேலும்
“தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருளைப் பெற்றிருப்பவன் பிறரிடம் யாசித்தால் மறுமையில் முகத்தில் சதையின்றி வருவான்
” என்று எம்பெருமானார் இயம்பியதை இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பது திர்மிதீ, நஸஈ கிதாபுகளில் காணப்படுகிறது.
தன்னிடம் பொருளிருக்க அப்பொருளை மறைத்து, பதுக்கி, பாதுகாத்து யாதுமறியாதோரிடம் நோதலின்றி தோதுவாக ஆதரவு நாடி சாதாரணமாய் பொருளைக் கேட்பதால் மறுமையில் அருளைப் பெறாமல் அவதியுற நேரும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் திண்ணமாய்த் தெரிவிக்கிறார். இதை எண்ணிப் பார்த்து ஏற்பது என்னும் இகழ்ச்சியில் எவரும் ஈடுபடுதல் கூடாது.
“”பொருளைப் பெருக்க யாசிப்பவன் நரக நெருப்புத் துண்டையே யாசிக்கிறான்”
என்று நேசர் நபிகளார் நவின்றதை ஹஜ்ரத் அபூஹீரைரா(ரலி) அறிவிப்பது முஸ்லீம் நூலில் பதியப்பட்டுள்ளது.
தற்காலத்தில் குடும்பத்தினர் பெயரில் அல்லது குடும்பப் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்து வணிக நோக்கில் தொண்டு நிறுவனங்களைத் துவக்கி துலாக்கோலில் நிறுக்க முடியாத அளவிற்கு ஆதாயம் அடைவோர் மக்களிடம், மாணவர்களிடம் நிதிகேட்பது நீதிக்குப் புறம்பானது என்பது இக்கூற்றிலிருந்து பெறப்படும் உண்மை. ஈயென இரத்தல் தீயினும் தீய தீமை என்று தெரிந்து, தெளிந்து ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்று இலவசங்களில் இன்பம் காணாது உழைத்துப் பிழைப்போம். உயர்வாய் வாழ்வோம்.
நன்றி:- தினமணி
22-June-2012
வெள்ளிமணி
azeezahmed. thanks
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)