முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்
"பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?" என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது.
முன்னாள் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ., முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல், முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி எனப் பல பின்புலங்களைக் கொண்டுள்ள பெண் வழக்கறிஞர் பதர் சயீத், "தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முஸ்லிம்களுக்கான தலாக் வழங்கும் அதிகாரத்தை முஸ்லிம் காஜிகளிடமிருந்து பறிக்க வேண்டும்" என்று கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுள்ளது