கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!
இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை
செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.
‘ஒரு
பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம்
மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப்
பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.
இந்த
உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க
வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத்
தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள
மாட்டாள்.
தம்மை
மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம்
கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.