திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது? மூஸா நபியின் சமுதாயம். (2:56)
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
6. யாருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம் என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்? ஏக இறைவனை மறுப்போருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம். (2:6)
7. (கெட்ட) மனிதர்களும், கற்களும் எதன் எரிபொருள்? நரகத்தின் எரிபொருள். (2:24)
8. எதை உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான்? கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (2:26)
9. எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்? இரத்த பந்த உறவினர்களை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான். (2:27), (13:21)
10. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்" என அல்லாஹ் வானவர்களிடம் கூறியதும் அவர்கள் என்ன கூறினார்கள்? "அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தோவோரையா படைக்க்போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே! குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறோமே!" என்று வானவர்கள் கூறினார்கள். (2:30)
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்! தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)