WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

கீரிப்பிள்ளை (Mangoose) E. Usman Ali, Jeddah


கீரிப்பிள்ளை (Mangoose)
E. Usman Ali, Jeddah

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பல ஏற்பாடுகளை வைத்துத்தான் இறைவன் படைத்துள்ளான். ஒன்றின் பாதுகாப்பு அரணை மற்றது (இறைவனின் ஏற்பாட்டின் படி) மிகைத்து விடும் போது அதற்கு முடிவு ஏற்பட்டு விடுகின்றது. விலங்குகள், பறவைகள், ஊர்வன தவரங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுன்னுயிர்கள் உட்பட அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பிரத்யேகமாக அமையப்பெற்ற ஒன்றை பயன்படுத்தி தங்களை அழிவிலிருந்துக் காத்துக் கொள்ளுகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் இந்த கட்டுரையின் சில அவசியத்தை முன்னிட்டு பார்ப்போம்.

விலங்குகளைப் பொருத்தவரை பலவிதமான பாதுகாப்பு அரணை பெற்று விளங்குகின்றன. சிலவற்றிற்கு கொம்பு அமைப்பும், சிலவற்றிற்கு கூர்மையான நகங்களும், சிலவற்றிற்கு உடலைக் கிழித்து மாமிசத்தை உண்ணக்கூடிய ஆற்றல் மிக்க தாடையுடன் கூடிய பற்களும், சிலவற்றிற்கு உடலின் மேற்பரப்பில் வளரும் ஊசியைப் போன்ற முடிக்கற்றைகளும், சிலவற்றிற்கு வேகமாக ஓடக்கூடிய ஆற்றல் மிக்க கால்களும் பாதுகாப்பு சாதனமாய் விளங்குகின்றன.

தாவரங்களைப் பொறுத்தவரை முக்கியமாக முட்கள் அமைப்பையும் சில விஷத்தன்மையையும் பெற்று விளங்குகின்றன. ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் ஒரு வகை செடியின் பிரத்யேகமான தன்மை என்னவென்றால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அச்செடியின் இலையைக் கடித்து உண்ண ஆரமபித்தவுடன் அதன் இலைகளில் விஷத்தன்மை பரவ ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மற்ற செடிகளும் தங்கள் இலைகளில் விஷத்தை பாய்ச்சுகின்றன. ஒரு செடிக்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் அது தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மற்ற செடிகளுக்கும் செய்தியை அனுப்பும் அதியத்தை கண்டு பிடித்துள்ளார்கள். இதிலிருந்து தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று தொலைத் தொடப்பு கொள்வது அறிய வந்துள்ளது.

மலேசியாவின் இரப்பர் தோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. இரப்பர் தோட்டத்தில் வேலைச் செய்யக் கூடிய சிறுவன் ஒரு குரங்கின் குட்டியை அடித்துக் கொன்று விடுகின்றான். அச்சமயம் அந்த சிறுவன் அணிந்திருந்தது மஞ்சல் நிற சட்டையாகும். இதன் பின் விளைவாக நடந்த நிகழ்ச்சி, இறந்த குட்டியின் தாய்க் குரங்கு சத்தம் போட்டு கத்தியவுடன் நாலாப் புறங்களிலிருந்தும் நிறையக் குரங்குகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு மற்ற நிறங்களில் ஆடை அணிந்தவர்களை விட்டு விட்டு குறிப்பாக மஞ்சல் சட்டைப் போட்டவர்களை மாத்திரமே கடிக்க ஆரம்பித்தன. இதிலிருந்து ஆபத்தை விளக்கி செய்தியைப் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் மஞ்சல் நிற சட்டைகாரன் தான் நம் எதிரி என்பனப் போன்றத் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கக் கூடிய இது போன்ற சம்பவங்கள் இத்தகைய விலங்கினங்களின் சமூக ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளாகும். இந்த நிகழ்ச்சி விலங்குகள் ஒன்றுடன் ஒன்று செய்திகளை தங்களுக்குள் பறிமாறிக் கொள்வது நிரூபனமாயிருக்கின்றது. பின் வரும் திருமறை வசனம் இதைதானே நமக்கு எடுத்தியம்புகின்றது.

பூமியில் வாழும் உயிரினங்கள் தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்த ஏட்டில் எந்த ஒன்றையும் நாம் விட்டு விடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.(06:38)

1950-ம் ஆண்டு வாக்கில் பூச்சி மருந்துக்கு கட்டுப்படாத பூச்சி வகைகள் 8 மாத்திரமே இருந்ததாகவும் தற்காலத்தில் 50-க்கும் மேற்ப்பட்ட பூச்சி இனங்கள் பூச்சிகொல்லி மருந்தின் வீரியத்தை தாங்கக் கூடிய எதிப்பாற்றலைப் பெற்று விளங்குவதாகவும் இந்தியாவின் விவசாயத் துறையின் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. இதிலிருந்து பூச்சி இனங்களும் தங்கள் உடலில் எதிப்ப்பாற்றலைப் பெறுவதன் மூலம் ஏதோ வகையில் தங்களைக் காத்துக் கொள்ளக் கூடிய அம்சங்களைக் காலப்போக்கில் பெற்றுவிடுகின்றன.

பறவைகளை எடுத்துக் கொண்டால் அதன் அலகு, சிறகு மற்றும் கூரிய நகங்கள் பாதுகாப்பாய் விளங்குகின்றது. இன்றைய காலக்கட்டத்திலே மின் கம்பங்களில் செல்லும் கம்பிகளில் உயர் மின் அழுத்தம் (12,000 வோல்டேஜ்) உறையிடப்படாமலே (without insulation) கொண்டு செல்லப் படுகின்றது. இதில் உட்காரும் பறவைகள் இதனால் பாதிப்படையாமல் இருக்கின்றதை அனைவருமே கண்டு இருக்கின்றோம். இதற்கு காரணம் அவற்றின் கால்களின் வெளிப்பரப்பில் அமைந்துள்ள மின்கடத்தா தோல் அமைப்பாகும்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் போன்றே தோல் அமைப்பை கொண்டு இறைவன் இவைகளைப் படைத்திருப்பானேயானால் இன்று நம்மால் ஒரு பறவையினத்தினைக் கூட காண இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். பறவைகளுக்கு இந்த அமைப்பை வைத்து படைக்கப்பட்டுள்ளதே இறைவனின் தீர்க்க தரிசனத்திற்கு சான்று பகர்கின்றது. இதில் நிச்சயமாக சிந்திக்க்க கூடிய மக்களுக்கு அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.

சில சிறிய வகை உயிரினங்கள் தங்கள் வாழும் சூழ்நிலையை ஒத்த, நிறங்களை பெற்று விளங்குவதனால் தங்கள் எதிரியின் கண்களிலிருந்து தப்பிப் பிழைக்கின்றன. சிலவகை மீன்கள் தங்கள் உடலில் பெற்றுள்ள உயர் அழுத்த மின்சார தன்மையினால் பட்ட மாத்திரத்தில் தங்கள் எதிரியின் உயிரைக் குடிக்கும் அபரிதமான மின் ஆற்றலை தங்கள் பாதுகாப்பு அரணாக பெற்று விளங்குகின்றன. பாம்பு, தேள், வண்டு மற்றும் சிலந்திகள் போன்றவற்றிற்கு தங்கள் எதிரிகளுக்கு சிறிய பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய விஷத்தன்மையே அதன் பாதுகாப்பு அரணாய் விளங்குகின்றது. நம் கட்டுரையில் பார்க்க இருக்கும் கீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும். இப்போது நாம் நம்முடைய தலைப்பின் எல்லைக்குள் நுழைவோம்;.
 
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய எத்தனையோ இடர்பாடுகள் நம்முடன் நீக்கமற நிறைந்து நம்மை பின்னிப் பிணைந்து சூழ்ந்துள்ளதை எவராலும் மறுக்க இயலாது. இவைகளில் சற்று கவனக்குறைவு ஏற்பட்டுவிட்டால் ஏற்படும் இழப்புக்களும் துன்பங்களும் நம்மை மீளா துயருக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது. மனிதர்களின் உயிருக்கு சவால் விடும் இரசாயணப் பாதிப்பு, சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள், உணவுப் பொருட்களின் நச்சுத்தன்மை,ரையே அழித்து சவக்குழிக்கு அனுப்பும் கதிரியக்க அபாயங்கள், அணு உலை விபத்துக்கள், மற்றும் இயற்கை சீரழிவுகள் போன்ற எண்ணற்ற அபாயங்கள் நம்மை நாலாப்புறங்களிலும் அரவணைத்து நிற்கின்றன.

வெள்ளப் பெருக்கிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அணைகள் கட்டப்பட்டது. உதாரணமாக சீனாவின் துயரம் என்று சொல்லப்படும் மஞ்சல் ஆற்றின் வெள்ளப் பெருக்கை முற்றிலுமாக கட்டுப்படுத்திய சம்பவமாகும். 1979-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேணியாவில் உள்ள மூன்று மைல் தீவில் (three mile island) நிகழ்ந்த அணு உலை விபத்தாகிலும் சரி 1986-ம் ஆண்டு (முந்தைய) ரஷ்யாவின் உக்ரைனில் உள்ள செர்னோபிலில் ஏற்ப்பட்ட நியூக்ளியர் கதிரியக்க கசிவினாலும் சரி 1984-ம் ஆண்டு இந்தியாவின் போபால் நகரில் நிகழ்ந்த ஐசோ சயனைடு வாயுவின் கசிவினால் ஏற்பட்ட கோர விபத்தாகிலும் சரி, மனிதர்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றதை நம்மால் எளிதாக மறக்கக் கூடிய சம்பவங்களா அவை. அதன் மூலம் படிப்பினை பெற்று மனிதன் இறைவன் அவனுக்கு கொடுத்த பகுத்தறிவைக் கொண்டு நிலையை செம்மைப் படுத்திக் கொள்கின்றானே இந்த பகுத்தறிவுதான் இவனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகும்.

இது போன்றது மற்றுமல்லாது தனக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்சனையாகிலும் சரி இந்த பகுத்தறிவின் துணைக் கொண்டு எதிர் நீச்சல் போட்டு இலக்கை எட்டுகின்றான். இத்தகைய உயர்தினை படைப்பாகிய மனிதனின் உயிருக்கு சவால் விட்டு, ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கில் உயிர்ப் பலியை வாங்கக்கூடிய உலகிலேயே மிக அதிக விஷமுள்ள ராஜநாகம் பற்றி நாம் தெரிந்துக் கொள்வதன் மூலம் இதற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கக் கூடிய நம் கட்டுரையின் நாயகர் திருவாளர் கீரிப்பிள்ளை அவர்களின் எதிப்பாற்றலைப் பற்றி அறிந்துக்கொள்வதில் கூடுதல் பொருத்தமாயிருக்கும் என்பதனால் நாஜநாகம் என்று அழைக்கப்படும் (king cobra) நல்லப் பாம்பைப் பற்றிப் முதலில் பார்ப்போம்.

பாம்பு என்றுச் சொன்னால் படையே நடுங்கும் என்று சொல்லப்படும் பழமொழி சற்றும் மிகைப்படுத்தி சொல்லப் பட்டதல்ல. அந்த அளவிற்க்கு பாம்பைப் பற்றிய அச்சம் நம்மிடையே விசாலமாகவே காலங்காலமாக இருந்து வருகிறது. உலகில் அதிக மக்கள் பாம்பு கடித்து இறக்கக் கூடிய எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். சிலர் இந்த விஷ ஜந்துவை வணங்குவதால் இவற்றை கொல்ல தயங்கி, விட்டு விடுகின்றனர். இருப்பினும் இதற்கு சந்தர்ப்பம் வாய்ப்பின் மனிதர்களை கொட்டி உயிரை குடித்து விடுகின்றன.

முஸ்லிம்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்கள், தொழுகுமிடத்தில் கூட நீங்கள் இதுபோன்ற விஷ ஜந்துக்களைக் கண்டால் முதலில் அவற்றை கொன்று விட்டு பிறகு தொழுவுங்கள் என்று தெள்ளத் தெளிவாக சொல்லி நமக்கு வழிக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

நாஜ நாகம் (king cobra) என்று அழைக்கப்படும் இந்த "பொல்லாத" பாம்பை இந்த கட்டுரையிலே நம் சொல் வழக்குப்படி நல்லப் பாம்பு என்றே குறிப்பிடுவோம். பொதுவாக எல்லா விஷப் பிராணி மற்றும் ஜந்துக்களுக்கும் விஷத்தை உற்பத்தி செய்யும் பிரத்யேகச் சுரப்பி அமைந்துள்ளதைப் போன்றே நல்லப் பாம்பிற்க்கும் அதன் தலைப்பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இதன் வாயின் மேற்பரப்பில் இதன் விஷ-பை (venom sac) அமைந்துள்ளது. இந்த விஷ-பையுடன் இணைந்த குழாய்(venom duct) உட்புறம் முற்றிலும் துளையுடைய முன்புற பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முன்புறப் பற்களின் முனை மிகக் கூர்மையாகவும் துளையுடையதாகவும் அமைந்துள்ளது.

இவை தங்களின் எதிரிக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவே தீண்டுகிறது. அதன் பிறகு வாயின் உட்புறம் அமைந்த கடைவாய் பற்களைக் கொண்டு அதன் மேற்ப்புறத்தில் அமைந்த விஷ-பையை அழுத்துவதன் மூலம் வெளியேறும் விஷம் அதனுடன் இணைக்கப் பட்ட குழாய் மூலம் வெளியேறி துளையுடைய முன்பற்களை அடைகின்றது. அப்பொழுது தீண்டியதால் ஏற்ப்பட்காயத்தின் மூலம் விஷம் இரத்த ஓட்டத்தில் கலந்தவுடன் முதலில் மத்திய நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுக் தீண்டியவுடன் பொதுவாக மரண பயம் ஏற்பட்டு விடுவதனால் இதயம் மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலமும் இரத்தம் விரைவுப் படுத்தப்பட்டு விரைவாக விஷம் உடல் முழுதும் பரவி ஆபத்தையும் விரைவுப் படுத்துகின்றது.

பாம்பின் விஷம் செரிந்த புரோட்டீன்களினால் (highly protin) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன. இருப்பினும் நம் உடல் அமைப்பை பொருத்தவரை புரதமோ, வைட்டமின்களோ, அல்லது தாதுப் பெருள்களோ நம் வாயின் மூலம் உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு நம் உடலுக்குத் தேவையான மற்றொருப் பொருளாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்றவை அகற்றப்பட்டு அதன் பிறகுதான் இரத்தில் கலக்க இயலும்.

ஆனால் பாம்பு கடிப்பதனால் விஷம் (highly protin) இரத்தத்தில் நேரடியாக கலப்பதனாலும் நம் உடலின் இயல்பிற்கு மாற்றமாக இருப்பதனாலும் நம் உடலின் திசுக்களும் கல்லீரலும் நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து மரணத்திற்கு வழி வகுக்கின்றது. பாம்பின் விஷம் பல விதமான மருத்துவத்திற்கு பயனாகின்றது. பாம்பு கடிக்கான மருந்து தயாரிப்பிலும் (anti venom) வலி நிவாரணம், மூட்டுதசை மற்றும் கேன்சர் நோய்க்கான மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று சொல்லும் நம் இறைவன் தன் வார்த்தைக்கு மாறு செய்யாதவன்.

ஒரு கிராம் நல்ல பாம்புடைய விஷம் 50-க்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்ல போதுமானதாகும். ஒரு முறை இவை கொட்டுவதனால் பிரயோகம் செய்யப்படும் விஷம் (ஏழு டன் எடைக் கொண்ட ) மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்க செய்ய போதுமானதாகும். மற்றுமொரு அம்சம் முட்டையிலிருந்து வெளிவந்த சிறிய பாம்புடைய விஷம் வீரியம் மிக்கப் பெரிய பாம்பின் விஷத்தை போன்றே எந்த விதத்திலும் குறையாத வீரியம் மிக்கதாகும். இதிலிருந்து முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப் பாம்பு கூட மரணத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் தான் பிறக்கின்றது. இந்த அம்சம் கூட எல்லா உயிரினங்களிலும் வித்தியசமான விதிவிலக்கான அம்சமாகத் திகழ்கின்றது. தற்போது இதன் விஷத்தினுடைய வீரியத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றதல்லவா? மற்றுமொரு அதிய செய்தி ஆப்பிரிக்காவில் வசிக்கும் கருப்பு கழுத்துடைய (black necked cobra) நல்ல பாம்பு தன் எதிரியின் கண்களை நோக்கி விஷத்தை 2.5 மீட்டர் தொலைவு வரை பீய்ச்சி அடிக்கின்றது. இதனால் எதிரியின் கண்களில் தற்காலிகக் குருடும் கடுமையான வலியையும் ஏற்படுத்தி தப்பி விடுகின்றது. இவ்வாறு விஷத்தை துப்பாக்கியின் அமைப்பில் பீய்ச்சி அடிக்கும் இந்த விதிவிலக்கான அம்சம் கூட அல்லாஹ்வின் அத்தாட்சியே ஆகும்.

இவ்வளவு வீரியம் மிக்க இந்த பாம்பின் விஷத்தைத் தாங்கி இதனையே தோற்கடித்து உண்ணக்கூடிய சிறிய பாலூட்டியான கீரிப்பிள்ளையின் ஆற்றலை இப்போது விளங்கிக் கொள்ள வார்த்தை விரயம் தேவையில்லை.

நல்லப் பாம்புடைய வீரியம் மிக்க விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய இந்த அம்சம்தான் மற்றவற்றிலிருந்து கீரிப்பிள்ளை வேறுபட்டு விளங்க காரணமாக அமைந்துவிடுகிறது.

அல்லாஹ் தான் நாடியவற்றிற்கு நம்மால் நம்ப முடியாத, நம் பகுத்தறிவால் விடைப் பகர முடியாத அளவிற்கு ஆற்றலை அதிகப் படுத்தக் கூடியவன். இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

பொதுவாக கீரிப்பிள்ளையும் நல்லப் பாம்பும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கெண்டால் நீ உன் வழியில் செல் நான் என் வழியில் செல்லுகின்றேன் நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்ற ரீதியிலே ஒன்றை ஒன்று தவிர்த்துக் கொண்டு செல்கின்றன. சில சந்தர்ப்பங்களில் எதிரிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையில் மோதும் நிலை வந்துவிட்டாலோ அந்த போட்டியின் முடிவு, இறந்த பாம்பை கீரிப்பிள்ளை தின்னுவதாகத்தான் முடிவடையும்.

ஒரு எதிரியுடைய தன்மைகளையும் ஆற்றலையும் அறிந்துக் கொண்டால் அதைத் தோற்கடிக்கக் கூடிய ஒன்றின் ஆற்றலை அறிந்துக் கொள்ள நமக்கு அதிக சொற்றொடர்கள் தேவைப்படாது என்ற அடிப்படையில் நல்லப் பாம்பை பற்றியும் அதன் விஷத்தின் வீரியத்தை பற்றியும் முதலில் பார்த்தோம்.

கீரிப்பிள்ளையின் உடலை காயப்படுத்தி விஷத்தை பிரயோகம் செய்ய கூடிய அளவிற்கான கூறியப் பற்கள் நல்லப் பாம்பிற்கு நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது. இருப்பினும் அந்த விஷத்தை தாங்கக் கூடிய உடலமைப்புத்தான் அல்லாஹ்வின் அத்தாட்சியை பறைச்சாற்றி நிற்கும் அம்சமாகும். கீரிப்பிள்ளை மனிதர்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடிய எலி மற்றும் பாம்பை முக்கிய உணவாக உட்கொள்ளுவதால் மனிதர்களுக்கு ஒரு விதத்தில் நன்மைப் பயப்பினும் கூட மனிதர்களுக்கு பயன் தரத்தக்க உயிரினங்களை சில வேளைகளில் இவைத் தாக்குவதனால் இதனால் பாதிப்பு ஏற்படவும் செய்கின்றது.

இத்தகைய மேற்கண்ட எல்லா அம்சங்களையும் நம் இறைவன் தக்க காரண காரியங்களுடன் திட்டமிட்டுதான் படைத்துள்ளான் என்பதை சிந்திக்கும் போது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் அவனுடைய தீனில் நம்முடைய நிலைப் பாட்டை உறுதிப் படுத்துகின்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

வானங்களையும் மற்றும் பூமியையும் அவ்விரண்டிற்க்கும் இடைப் பட்டதையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. (நம்மை)மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர். (26:03)


ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக