தென்னை தரும் தொழில்கள்
தென்னை மரங்கள் வளர்ப்பில் கேரள மாநிலம் முதல்
இடத்தை பெற்றுள்ளது. தொன்னையின் மூலமாக பல்வேறு பொருட்களை நாம் தயாரிக்கலாம்.
தேங்காய், இளநீர் ஆகியவற்றில் இருந்து பல புதிய பொருட்களை பெறமுடியும். அதன் மூலம்
புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.
நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்திரும்
வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுபிடித்து
உள்ளது.
தேங்காய் தண்ணீரின் பயன்கள்:-
கேரளாவில் தேங்காய் தொடர்பான தொழிலின்போது சுமார்
25 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.
தேங்காய் தண்ணீரில் 5.4 சதவீதம் திடப்பொருளும்,
2.0 சதவீதம் சர்க்கரையும், 0.5 சதவீதம் தாதுஉப்பும், தலா 0.1 சதவீதம் புரதம்
மற்றும் கொழுப்பும் உள்ளது. வீணாக்கப்படும் தேங்காய் தண்ணீரை சேமித்து பல்வேறு
வகையில் பதப்படுத்தி இளநீரில் இருக்கும் தன்மையை மாற்றி கண்ணாடி பாட்டில்கள்,
பாலிதீன் பைகளில் அடைந்து விற்பனை முறைபற்றியும் அதுபற்றிய தொழில் நுட்பத்தையும்
திருவனந்தபுரத்தில் இருந்து இயங்கும் தேங்காய் பொருள் ஆராய்ச்சிக்கூடம்
கண்டுபிடித்து உள்ளது.
இன்று ஊறுகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை
பதப்படுத்துவதற்கு அசிட்டிக் ஆசிட் என்ற அமிலத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட வினிகரையே
பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மாறாக தேங்காய் தண்ணீரில் இருந்து
தயாரிக்கப்படுகிற வினிகர் இயற்கை தன்மையுடன் இருப்பதால் இத்தகைய வினிகருக்கு
மேலைநாடுகளில் நல்ல வரேற்பு இருக்கிறது. உள்நாட்டிலும் வளமான எதிர்காலம்
உள்ளது.
தேங்காய் தண்ணீரில் சர்க்கரை மற்றும் அசிட்டிக்
அமிலம் ஆகியவற்றை கலந்து அன்னாசிப்பழ சக்கையையும் சேர்த்து வளர்ப்பு முறையில்
ஜெல்லி தயாரிக்கலாம்.
இதை கண்ணாடி ஜாடிகளில் 2 அல்லது 3 வாரங்கள்
வைத்திருந்து வளர்த்து அதன் பிறகு பல்வேறு முறைகளில் பக்குவப்படுத்தி துண்டுகளாக்கி
விற்பனை செய்யலாம். இந்த ஜெல்லி பனை நுங்குபோல் ஒருவித குளிர்ச்சியும், மென்மையான
சுவையையும் உடைய தின்பண்டமாகும். இதேபோல் பர்பி, அல்வா போன்றவற்றையும் தயாரிக்க
முடியும்.
தேங்காய் பால் பவுடர் :-
இன்றைய உணவு தயாரிப்பில் தேங்காயின் பங்கு
அளப்பரியது. இன்றைய வேகமான உலகில் சமையலுக்கு தேங்காய் பால் எடுப்பது என்பது நேரம்
எடுக்கும் வேலையாக இருக்கிறது.
இதுபோன்றவர்களுக்கு தேங்காய் பாலை பிழிந்து அதனை
பக்குவப்படுத்தி பவுடராக டின்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைத்து விற்பனை
செய்யப்படுகிறது.
என்ன நண்பர்களே! தேங்காயில் இருந்து இவ்வளவு
பொருட்களை தயாரிக்க முடியுமா என்று எண்ணுகிறீர்களா, இதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான
தின்பண்டங்களையும், தேங்காய் ஓட்டில் இருந்து பல்வேறு கலைப்பொருட்களையும் உற்பத்தி
செய்து லாபம் சம்பாதிக்க முடியும்.
Labels: agriculture
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக