அல்ஹம்துலில்லாஹ்!பிறவிப்பயனை அடைந்த பெரும் சந்தோஷத்துடன் இவ்விடுகையை தட்டச்சு செய்யும் வாய்ப்பினை அருளிய வல்ல இறைவனுக்கு நன்றி கூறியவளாக தொடர்கிறேன்.
உலகின் நடுமத்தியில் அமையப்பெற்ற,உலகின் மையப்புள்ளியான இறைவனும்,இறைத்தூதர்களும்,இறுதித்தூதரும் ,அவர்களைப்பின் பற்றிய சஹாபாக்களும்,அன்றும்,இன்றும் என்றும் பின் தொடரும் உம்மத்துக்களும் கண்ணியப்படுத்திய கண்ணியப்படுத்திக்கொண்டுள்ள,கண்ணியப்படுத்தப்போகின்ற மாபெரும் வரலாற்று சின்னத்தை,இறை இல்லத்தினை இது நாள் வரை புகைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கண்டு வநத நான் நேரில் கணட பொழுது அதன் பேரழகிலும், பிருமாண்டத்திலும்,வசீகரத்திலும்,மெய்சிலிரிக்க வைத்த அந்த தருணத்தை இந்நொடிகூட என்னால் மறக்க இயலவில்லை.
புனித கஃபாவை பார்த்த முதல் நொடி முதல்,இறுதியாக பார்த்த நொடி வரை என் கண்கள் சிந்திய கண்ணீரை அளவிட இயலாது.இது அனைத்து ஹஜ்ஜாளிகளுக்கும் பொருந்தும்.
ஹஜ் சென்று திரும்பிய நாள் முதல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மக்கா லைவ் பார்த்த்து மீண்டும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று இப்போதே தவம் இருக்க ஆரம்பித்து விட்டேன்.இது எனக்கு மட்டும் உண்டான உணர்வு அல்ல.ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருக்கும் இருக்கும் உணர்வு இது.
மட்டுமின்றி வரலாற்று சிறப்புமிகு தளங்கள்,மதினாவில் இருக்கும் மஸ்ஜிதுன்னபவி எனும் இறைத்தூதரின் தளம்,புனித நகரங்களை சுற்றி உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலைகள்,அரபா மைதானம்,நகரை சுற்றி உள்ள பாரம்பரியமான மசூதிகள் இப்படி ஒவ்வொன்றையும் கண்களால் கண்டு நெஞ்சம் முழுக்க நிரப்பிக்கொண்டு வந்த நிறைவு என் மனம் முழுக்க நிரம்பி உள்ளது.
பின்னூட்டம் வாயிலாகவும்,மின்னஞ்சல்,தொலைபேசி வாயிலாகவும் என் ஹஜ் அனுபவத்தையும், பதிவின் வாயிலாக அறிய காத்திருக்கும் நட்புக்களுக்காக இனி வெளிவரும் ஓரிரு இடுகைகள் என் ஹஜ் அனுபவங்களையும்,புனித ஹரம் ஷரீஃபில் நடந்த ஒரு மினி பதிவர் சந்திப்பை பற்றியும், எழுத்துக்கள் மூலமாகவும்,புகைப்படங்கள் மூலமாகவும் பகிர உள்ளேன்.
லட்சோபலட்ச மக்களுடன் நெருக்கியடித்து கஃபதுல்லாஹ்வை தாவப்(வலம்) செய்த நான் ,மக்கா நகரை பிரிய இருக்கும் நாளன்று வெகு சுலபமாக வலம் வந்த பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.மேலுள்ள படத்திலும் கீழுள்ள படங்களிலும் உள்ள மக்கள் வெள்ளத்தின் வித்தியாசத்தினை பாருங்கள்.
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக