இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை
சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும்,
பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை
சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக
வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை
ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு
வருகிறோம்.
தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின்
சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை
பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும்
மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த
மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில்
விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை
புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு
நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது
தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும்
ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.
ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின்
உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில்
பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல்
மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள்.
பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால்
ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள்.
"உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி" எனவும் கூறிச் சென்றுள்ளார்கள்.
இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை
அழைக்கப்படுகிறார்கள்.
அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும்
எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு
முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ,
உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற
நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம்.
ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும்
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின்
மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின்
அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும்
போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம்
கொள்கிறோம்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர்
முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி "முஅத்தா முஹம்மது"
என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே
உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க,
பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில்
வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் "இமாமுல் அஃலம்"
எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக
அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக
மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.
ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி
வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து
பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை
வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று
நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக