WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 10 மார்ச், 2012

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்


திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

Seithi Raja
பூமியின் வடிவம்

ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு (Geoid) என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது,

"நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.)


மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 5ஐ பார்த்தால்... அவன் இரவைப் பகலின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான் இன்னும் பகலை இரவின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கவ்வர" என்ற அரபி வார்த்தையின் பொருள் சுருட்டுதல் என்பதாகும். சுருட்டுதல் எங்கு நடைபெற்றாலும் அது ஒரு கோள வடிவில் தான் நடக்க இயலும்.

தற்போது கண்டிபிடிக்கப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் 1400 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கிறது?

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் சூரியனின் சிறுவடிவம் தான் சந்திரன் என்றும், இவை இரண்டிற்கும் சொந்தமாக ஒளி வீசும் திறன் உண்டு என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் சூரியனிலிருந்து ஒளியை வாங்கி சந்திரன் பிரதிபலிக்கிறது என்று தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருமறைக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 61ஐ கவனித்தோமானால் அதில் "ஒரு விளக்கை(ப் போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் பாக்கியமுடையவன்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் சூரியனை சுயமாக ஒளி வீசும்

விளக்கு எனவும் சந்திரனை உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடியது என்றும் (சந்திரனுக்கு சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும்) விளக்குகிறது.

சூரியனின் சுழற்சி

சூரியன் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று வருகின்றது. நாம் துல்லியமான தொலைநோக்கி கொண்டு பார்ப்போமானால் சூரியனில் கரும் புள்ளிகள் தெரியும். அதனை நாம் தொடர்ந்து கவனிப்போமானால் அந்தக் கரும்புள்ளிகள் ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை அறியலாம். ஆகவே சூரியன் தன்னைத்தானே சுற்றுவதுடன் அதன் வட்டப் பாதையில் ஒரு முறை சுழன்று வருவதற்கு சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என கணக்கிடலாம்.

இதனைத் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 33-ல் இன்னும் "அவன் எத்தகையவன் என்றால் (அவன்தான்) இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (தத்தமது) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" என்றும் கூறுகிறது. இந்த வசனத்தில் சூரியன் சந்திரன் அதனுடைய வட்டப் பாதையில் சுற்றுவதுடன் விண்வெளியில் தங்களுடைய பாதையில் இயக்கம் மேற்கொள்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது தான்.

நட்சத்திரத்திற்கும் கோள்களுக்குமிடையிலுள்ள வித்தியாசம்?

நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியை வீசுகின்றது. அதே வேளையில், கோள்கள் நாம் வாழும் பூமியைப் போன்று ஒளி வீசும் தன்மையற்றது என்பதை

நாம் அறிவோம். இந்த விளக்கத்தை தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. நட்சத்திரத்தைப் பற்றி அத்தியாயம் 86 முதல் மூன்று வசனங்கள் கூறுவதை கவனியுங்கள். "வானத்தின் மீதும், இரவில் தோன்றக் கூடியதின் மீதும் சத்தியமாக! இரவில் தோன்றக்கூடியது

என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்" மேலும் கோள்களைப் பற்றி அத்தியாயம் 37, வசனம் 6ல் அருகிலுள்ள வானத்தை கோள்களின் அழகைக் கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம் என்று கோள்களை அணிகலன்களாக வர்ணிக்கின்றது திருக்குர்ஆன்.

கண்டங்கள்

கண்டிப்பாக! ஒரு காலத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பரப்பாகவே இருந்தது. ஒரு பெரு வெடிப்பிற்கு பிறகு பூமியினுடைய எல்லாப் பகுதிகளும் சிதறடிக்கப்பட்டது. ஆகவே உலகப் படத்தை நீங்கள் பாருங்கள். தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையும் ஒன்றிக்கொன்று பொருந்திக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பதைக் காணலாம்.

 திருகுர்ஆன் 79வது அத்தியாயம் 30, 31வது வசனத்தில் மேலும் பூமியை அதன்பின் அவன் தான் விரித்தமைத்தான். அதிலிருந்து தண்ணீரையும் மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்று விவரிக்கிறது.

புவியின் அடுக்குகள்

மேலும் புவியியலில் புவி அடுக்குகள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பூமியின் நிலைப்புத் தன்மைக்கு காரணம் புவியின் மேற்பரப்பு, புவி அடுக்குகளை நிலைபெறச் செய்யவே மலைகள் இருக்கின்றன.

இதனை திருக்குர்ஆன் அத்தியாயம் 78 வசனங்கள் 6, 7-ல் "பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?" என்று கூறுகிறது. முளைகள் என்று இந்த வசனத்தில் கூறப்படுவதன் பொருள் பூமியில் உள்ள அடுக்குகள் முளைகள் மூலம் ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த முதல் வசனத்தில் பூமி தட்டையானது அல்ல விரிப்பாக உள்ளது எனக் கூறுகிறது. எனவே நாம் கீழே விழுந்து விடாமல் தொடர்ந்து நடக்க இயலும். மேலே சொன்ன இந்த விஷயம் திருக்குர்ஆனில் மேலும் அத்தியாயம் 21 வசனம் 31-ல்...

"இன்னும் பூமி அவர்களைக் கொண்டு அசைந்து விடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம். அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளை நாம் ஆக்கினோம்". இதில் பூமி அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக இருக்க இந்த மலைகள் (முளைகள்) உதவி செய்கின்றன. அதன் காரணத்தால் தான் பூமி அதன் வட்டப்பாதையில் சீராக சுழன்று வருகின்றது.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. இருப்பினும் அது அத்தாட்சிகளின் தொகுப்பு (Book of Signs). உண்மையில் இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அத்தாட்சி (வசனங்)களில் ஆயிரம் மட்டுமே விஞ்ஞானத்தை விவரிக்கிறது. மெத்த படித்தவர்களுக்கும் மேலும் கடவுளை நம்பாதவர்களுக்கும் விஞ்ஞானம் தான் ஒரு அளவுகோலாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் தான் அளவுகோளாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனை புர்கான் என்றும் அழைக்கிறோம். இந்த அரபி வார்த்தையின் பொருள் என்ன என்றால் சரியென்றும், தவறென்றும் பிரித்து அறிவிக்கக் கூடியது என்பதாகும். படித்த மற்றும் நாத்திகர்களின் அளவுகோலாகிய அறிவியலை வைத்து திருக்குர்ஆனை நான் விளக்கினேன். ஆனால் அறிவியல் சமீப காலத்தில் தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் 14 நூற்றாண்களுக்கு முன்பே இறக்கியருளப்பட்டது.

இந்த மாதிரி அரிய உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆனில் எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறியிருக்க முடியுமா? இதே போல் நவீன அறிவியல் உலகத்தால் மறுக்க இயலாத பல நூற்றுக்கணக்கான விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக