ஊழலால் மக்கள் கோபத்தில் உள்ளனர் : பிரதமர் மன்மோகன் சிங் !
பதிவு செய்த நாள் : 12/27/2011 5:20:08
PM
புதுடெல்லி : லோக்பால் மசோதாவை தற்போதைய
வடிவிலேயே நிறைவேற்ற ஆதரவு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு தருமாறு பிரதமர்
கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவையில் பேசிய பிரதமர் எதிர்கட்சிகளுக்கு இவ்வாறு
கோரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு
முடிந்து விடாது என்று கூறிய பிரதமர், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின்
நோக்கம் என்று குறிப்பிட்டார். மேலும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பது அவசியம்
என்றும் ஊழலால் மக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளதாகவும் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுத்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் சேவைகளை பெறும்போது ஊழலை சந்திக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊழலுக்கு அரசு என்றும் அடிபணியாது என்றும் மக்கள் விரக்தியை களைய லோக் ஆயுக்தா அவசியம் என்றும் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக