இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களின் சோதனை வெற்றி !
பதிவு செய்த நாள் : 12/27/2011 11:35:33
AM
மும்பை : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி வேக
ரயில்களின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த சோதனை விரார்&தகானு மற்றும்
சூரத் ரயில் நிலையங்கள் இடையே நடந்தது. உலகில் உள்ள பல நாடுகளில் மணிக்கு 300
கி.மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சீனாவில் மணிக்கு
கிட்டத்தட்ட 400 கி.மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதாக அந்நாடு அரசு முன்பு
அறிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில்
இயக்கப்படும் போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்தான் அதி வேக ரயிலாகும். அதுவும் இந்த
ரயில் வெளிநாட்டு தயாரிப்பாகும். இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி
பிரிவான ஆர்.டி.எஸ்.ஓ. மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயிலை
தயாரித்துள்ளது. இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். இந்த
ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் விரார்& தகானு மற்றும் சூரத் ரயில்
நிலையங்கள் இடையே வெற்றிகரமாக நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக