ஜெயலலிதாவின் பரிந்துரையுடன் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக வளர்மதி, ஆனந்தன் பதவியேற்பு.
13 December 2011 No Comment
கவர்னர் மாளிகையில் நடந்த புதிய அமைச்சர் பதவியேற்பு விழா 7 நிமிடங்களில் முடிந்தது. புதிய அமைச்சர்களான வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இருவரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்று, நேற்று மாலையே தலைமை செயலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் கடந்த மே 16ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட பிறகு நேற்று 4வது முறையாக அதிமுக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஜூன் 29ம் தேதி முதல் முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ முகமது ஜான் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
2வது முறையாக ஜூலை 3ம் தேதி சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சராக பதவியேற்றார். 3வது முறையாக நவம்பர் 4ம் தேதி 6 அமைச்சர்களை ஜெயலலிதா நீக்கினார். அவர்களுக்கு பதில் 6 பேர் நவம்பர் 6ம் தேதி புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4வது முறையாக கடந்த 9ம் தேதி 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் நேற்று புதிதாக 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக