வல்லோனின் பெயரால்
ஆரம்பிக்கின்றேன்...
இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுலக வாழ்க்கையை, உண்மையான இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு மரணத்திற்கு பின் நிரந்தர சொர்க்க வாழ்வை அடைய விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அதே ஆதமுடைய பிள்ளைகளான ஒரு இறைவனை
பற்றிய செய்தி அறியாத மக்களை பற்றி நாம் நினைத்ததுண்டா???
இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டது.... குர்ஆன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருளப்பட்டது.... அழைப்பு பணி செய்வது அனைவர் மீதும் உள்ள கடமை....
கடந்த சில நாட்களாக மீடியாக்களிலும்,சமூக வலை தளங்களிலும்,
நபிகளாரின் படத்தை தவறாக சித்தரித்த அமெரிக்கர்களுக்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது.... ஆம்....எங்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை அசிங்கமாக சித்தரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதே நேரம், நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பபட்டார்களோ
எதை செய்ய சொல்லி அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும்
கட்டளை இட்டார்களோ அதனை நாம் செய்ய வசதியாக மறந்து விட்டோம்.
மார்க்கத்தை எத்தி வைப்பது நபிமார்களின் வேலை மட்டும் அல்ல. அவர்களுக்கு பிறகு நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்ய வேண்டிய வேலை......
இந்த பணியை பற்றி அல்லாஹ் குர்ஆனில்
ஐந்து வசனம் கிடைத்த அபூபக்கர்(ரலி) அவர்களின் ஈமான் எவ்வாறு ஜொலித்தது??? ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குர் ஆன் வசனங்களை
வைத்துள்ள நம் ஈமான் பலவீனமாக உள்ளது!
எதெற்கெடுத்தாலும் குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் இந்த விசயத்தில் பின்தங்கி விடுகிறோம்......
நபி ஸல் அவர்கள் காலத்தில் பிறநாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு ஐநூறு கடிதங்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டது....
தகவல் தொடர்பு மிக எளிதாக உள்ள இக்காலத்தில் சமூக வலை தளங்களில்
மற்றும் தினமும் இருநூறு,முன்னூறு மெசேஜ்கள் நமக்கு செல்பேசியில் உள்ளது.... அதை எல்லாம் இறை அழைப்பு பணிக்காக செலவிடலாமே.....
உலக மக்கள் அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைக்கும் கடமை பெண்களுக்கும் உண்டு..... ஏன் எனில் குர்ஆன் வசனங்கள் ஆண்,பெண்
இருபாலருக்கும்தான் இறக்கபட்டது....
மகளாகவோ,சகோதரியாகவோ,சிறிய தாயாகவோ ஜொலிக்க வேண்டியவள்..... வீட்டிற்கு வெளியில் அண்டை வீட்டுக்காரியாகவும்,
நல்ல தோழியாக இருக்க கடமைப் பட்டவள்..... பெண்ணுக்குறிய அத்தனை தொடர்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவாள்... எனவே,எல்லா நிலையையும் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.
இஸ்லாத்தின் தனித் தன்மைகளை எடுத்துரைக்கும் முஸ்லிம் பெண்கள்
அவற்றை தங்களால் முடிந்த அளவு வாழ்வில் அமல்படுத்த வேண்டும்.
வாய் சொல்லை விட செயல்படுத்தும்போதுதான் மிகுந்த பலன் உண்டு.
வீட்டில் இருக்கும் பெண்கள் கவனத்திற்கு.......
1.அண்டை வீட்டினருடன் இஸ்லாம் சொல்லும் முறைப்படி நடக்க வேண்டும்...
நாம் சமைக்கின்ற உணவை சிறிது அவர்களுக்கு கொடுக்கலாம். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய வேண்டும்.அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக் கூடாது.
2.வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் மென்மையான முறையில் நடக்க வேண்டும். அண்ணலார் வீட்டு வேலை செய்பவர்களிடம் எவ்வாறெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்? வேர்வை உலர்வதற்க்கு முன் கூலியை கொடுக்க சொன்னார்கள். கடுமையான வேலையில் உதவி செய்ய ஏவி உள்ளார்கள் என்பதை சரியாக முறையில் பேணுவதும் அழைப்பு பணியே ஆகும்.
3.அண்டை வீட்டில் நோயுற்றால் நலம் விசாரியுங்கள்...
4.கஸ்டமான துக்க வேளைகளில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
5.நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்.
6.தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்.
7.நம் வீட்டு நிகழ்ச்சிகளில்,விருந்தில் கண்டிப்பாக அவர்களை அழையுங்கள்.
8.மார்க்கம் அனுமதித்த அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்..
9. அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு பரிசுப் பொருளுடன் புத்தகங்கள், சிடிக்கள், நோட்டிஸ் போன்றவற்றை கொடுங்கள்....
10.பஸ்,ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுப்பதும்,
அவர்களுடைய சுமையை அல்லது லக்கேஜை வாங்கி உதவுவதும் அழைப்பு பணியே ஆகும்.
11.வீட்டிலும் வெளியிலும் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடியுங்கள்.
12. நம் குழந்தைகளுக்கு போதிக்கும் நற்பண்புகள் அடுத்தவர்களை கவரும்.
13. நம் வீட்டுக்கு வெளியே சின்னதாக ஒரு சிலேட் அல்லது போர்டில்
தினம் ஒரு ஹதீஸ் எழுதி வைக்கலாம்....
உதாரணமாக
போன்ற பிறர் நலம் பேண சொல்லும் பொன்மொழிகளை அவர்கள் கண்ணில்
படும்படி எழுதி வைத்து இறுதி தூதரை அவர்களுக்கு அறிமுகபடுத்துவது
ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் கடமையாகும். இவையெல்லாம் மற்றவர்கள் நம் மீது மதிப்பு ஏற்படுத்துவதோடு நம் இஸ்லாத்தை சார்ந்த மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். நற்பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள செய்யும்!
உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

- இந்த இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் ஆனதா???
- குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதா???
- நாம் உண்டு, நம் வேலை உண்டு என ஒரு முஸ்லிம் இருக்கலாமா???
- இறுதி தூதரை மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினோமா???
இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டது.... குர்ஆன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருளப்பட்டது.... அழைப்பு பணி செய்வது அனைவர் மீதும் உள்ள கடமை....
கடந்த சில நாட்களாக மீடியாக்களிலும்,சமூக வலை தளங்களிலும்,
நபிகளாரின் படத்தை தவறாக சித்தரித்த அமெரிக்கர்களுக்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது.... ஆம்....எங்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை அசிங்கமாக சித்தரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதே நேரம், நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பபட்டார்களோ
எதை செய்ய சொல்லி அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும்
கட்டளை இட்டார்களோ அதனை நாம் செய்ய வசதியாக மறந்து விட்டோம்.
மார்க்கத்தை எத்தி வைப்பது நபிமார்களின் வேலை மட்டும் அல்ல. அவர்களுக்கு பிறகு நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்ய வேண்டிய வேலை......
இந்த பணியை பற்றி அல்லாஹ் குர்ஆனில்
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.இன்னும் நபி ஸல் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் பற்றி வலியுறித்தி உள்ளார்கள்....
''இன்று நீங்கள் என்னுடைய மார்க்கத்தின் பேச்சுகளை கேட்கிறீகள். நாளை உங்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் மார்க்கத்தின் பேச்சுகளை கேட்டார்களோ, அவர்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுகள் கேட்கப்படும். எனவே, நன்கு கவனமாக கேளுங்கள். உங்களுக்கு பின்னால் வருவோருக்கு அதை ஏத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருக்கு எத்தி வைக்கட்டும். இந்த காரியம் தொடர்ந்து இவ்வாறு நடைபெறட்டும்.தன்னை இறைவன் என்று சொன்ன கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னிடம் சென்று அழைப்பு பணி செய்ய மூசா (அலை) அவர்களை கட்டளையிடும் இறைவன் எப்படி செய்ய வேண்டும் எனவும் கட்டளை இடுகிறான்....
-அபு தாவூத்
20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.கொடுங்கோல் மன்னனிடம் அழைப்பு பணி செய்ய வேண்டும்..... அதுவும் மென்மையான முறையில்.....
20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.
ஐந்து வசனம் கிடைத்த அபூபக்கர்(ரலி) அவர்களின் ஈமான் எவ்வாறு ஜொலித்தது??? ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குர் ஆன் வசனங்களை
வைத்துள்ள நம் ஈமான் பலவீனமாக உள்ளது!
எதெற்கெடுத்தாலும் குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் இந்த விசயத்தில் பின்தங்கி விடுகிறோம்......
நபி ஸல் அவர்கள் காலத்தில் பிறநாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு ஐநூறு கடிதங்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டது....
தகவல் தொடர்பு மிக எளிதாக உள்ள இக்காலத்தில் சமூக வலை தளங்களில்
மற்றும் தினமும் இருநூறு,முன்னூறு மெசேஜ்கள் நமக்கு செல்பேசியில் உள்ளது.... அதை எல்லாம் இறை அழைப்பு பணிக்காக செலவிடலாமே.....
உலக மக்கள் அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைக்கும் கடமை பெண்களுக்கும் உண்டு..... ஏன் எனில் குர்ஆன் வசனங்கள் ஆண்,பெண்
இருபாலருக்கும்தான் இறக்கபட்டது....
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;பெண் எனப்படுபவள் தாயாகவோ,மனைவியாகவோ,
அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்;
மகளாகவோ,சகோதரியாகவோ,சிறிய தாயாகவோ ஜொலிக்க வேண்டியவள்..... வீட்டிற்கு வெளியில் அண்டை வீட்டுக்காரியாகவும்,
நல்ல தோழியாக இருக்க கடமைப் பட்டவள்..... பெண்ணுக்குறிய அத்தனை தொடர்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவாள்... எனவே,எல்லா நிலையையும் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.
இஸ்லாத்தின் தனித் தன்மைகளை எடுத்துரைக்கும் முஸ்லிம் பெண்கள்
அவற்றை தங்களால் முடிந்த அளவு வாழ்வில் அமல்படுத்த வேண்டும்.
வாய் சொல்லை விட செயல்படுத்தும்போதுதான் மிகுந்த பலன் உண்டு.
வீட்டில் இருக்கும் பெண்கள் கவனத்திற்கு.......
1.அண்டை வீட்டினருடன் இஸ்லாம் சொல்லும் முறைப்படி நடக்க வேண்டும்...
நாம் சமைக்கின்ற உணவை சிறிது அவர்களுக்கு கொடுக்கலாம். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய வேண்டும்.அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக் கூடாது.
2.வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் மென்மையான முறையில் நடக்க வேண்டும். அண்ணலார் வீட்டு வேலை செய்பவர்களிடம் எவ்வாறெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்? வேர்வை உலர்வதற்க்கு முன் கூலியை கொடுக்க சொன்னார்கள். கடுமையான வேலையில் உதவி செய்ய ஏவி உள்ளார்கள் என்பதை சரியாக முறையில் பேணுவதும் அழைப்பு பணியே ஆகும்.
3.அண்டை வீட்டில் நோயுற்றால் நலம் விசாரியுங்கள்...
4.கஸ்டமான துக்க வேளைகளில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
5.நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்.
6.தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்.
7.நம் வீட்டு நிகழ்ச்சிகளில்,விருந்தில் கண்டிப்பாக அவர்களை அழையுங்கள்.
8.மார்க்கம் அனுமதித்த அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்..
9. அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு பரிசுப் பொருளுடன் புத்தகங்கள், சிடிக்கள், நோட்டிஸ் போன்றவற்றை கொடுங்கள்....
10.பஸ்,ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுப்பதும்,
அவர்களுடைய சுமையை அல்லது லக்கேஜை வாங்கி உதவுவதும் அழைப்பு பணியே ஆகும்.
11.வீட்டிலும் வெளியிலும் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடியுங்கள்.
12. நம் குழந்தைகளுக்கு போதிக்கும் நற்பண்புகள் அடுத்தவர்களை கவரும்.
13. நம் வீட்டுக்கு வெளியே சின்னதாக ஒரு சிலேட் அல்லது போர்டில்
தினம் ஒரு ஹதீஸ் எழுதி வைக்கலாம்....
உதாரணமாக
மனிதர்களுக்கு உதவி செய்பவனுக்கு இறைவன் உதவி
செய்வான்....
மனிதர்களுக்கு இரக்கம் காட்டுபவனுக்கு இறைவன்
இரக்கம் காட்டுவான்.....
ஏழைகளுக்கு உணவு
அளியுங்கள்.....
போன்ற பிறர் நலம் பேண சொல்லும் பொன்மொழிகளை அவர்கள் கண்ணில்
படும்படி எழுதி வைத்து இறுதி தூதரை அவர்களுக்கு அறிமுகபடுத்துவது
ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் கடமையாகும். இவையெல்லாம் மற்றவர்கள் நம் மீது மதிப்பு ஏற்படுத்துவதோடு நம் இஸ்லாத்தை சார்ந்த மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். நற்பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள செய்யும்!
உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்
.islamiyapenmani. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக