WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!



நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.  திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:



"ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது." (திருக் குர்'ஆன் 64:14-15)


இறைவன்  நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை  என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..


அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை  வலியுறுத்தியிருகிறது . என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.
இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.

 என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 14:40


எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக 14:41


என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் 21:89


எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் 59:10


இந்த வசனங்களை கவனிச்சீங்களா? முதலில் தனக்கு கேட்ட பின் தான் மற்றவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கு இல்லையா?  பொதுவாக சுயனலமற்றவர்களாக, எப்போதும் பிறர் நலம் கருதியே வாழ வேண்டும் எனும் கோட்பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.

அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் தனக்காக முதலில் கேட்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவ்வாறு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இது பற்றி சற்று சிந்தித்தால், இதில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் எளிதில் புரிந்து கொள்ளலாம்.


நாம் இறைவனிடம்  ஒரு விஷயம் வேண்டுவது,  மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின்  அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம் .


இதனை  பலர் புரிந்து கொள்ளாமல்  "சுயநலமற்ற மேதாவிகளாக" இருப்பதாகக் கருதிக் கொண்டு " நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும்,  என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்" என்று சொல்கிறார்கள். இது உண்மையா??  நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.


இறைவன்  ஏற்படுத்தியிருக்கின்ற சுயநலம் நமக்கு அவசியமானது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது .மாறாக ,நம்மை இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் இரண்டிலுமே வெற்றி பெறச் செய்யும், மற்றவர்களையும் நம்மோடு சுவனத்துக்கு இழுத்துச் செல்லும் சுயநலம்.


சுயநலமா இருங்கன்னு சொல்லியாச்சு. அப்ப பிறர் நலம் பத்தி யோசிக்காமல் இருந்தால் அது தப்பு இல்லையா? அது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்கப்போவதில்லை.

ஒருபுறம் நாம் சுயநலத்தை இஸ்லாமிய ரீதியாக நோக்கும் அதேவேளையில், இதன் மறுபுறமான "பிறர்நலம் கருதுவோம்" என்று கூறும் மனிதன்  தாமும் பாவத்தில் விழுந்து அடுத்தவரையும் பாவம் செய்ய தூண்டுகிறான்.  மனிதன் எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டு தனக்காகவும் ,மற்றவர்களுக்காகவும்  பாடுபடுகிறான்  என்பதை அன்றாடம் நாம் காண்கிறோம். மற்றவர்களுக்காக அதிகமாய் சம்பாதிக்க வேண்டி அவன் எத்தகைய குறுக்கு வழிகளில் செல்கிறான்?  இதில் எத்தனையோ பேர் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பொய், களவு, மோசடி, வட்டி, இவை எல்லாம் எதற்காக?  நாம் எந்தளவு சம்பாதித்தாலும் ஒருவேளை  வயிற்றுக்குதான். ஒருசில  ஆடைகளைத்தான் அணியப் போகிறோம்.

நாம் யாராக இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனிதனாகிய நமக்கு அடிப்படை தேவைகள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் வாழப்போவதும் கொஞ்ச காலம் தான்.. நாம் சேர்க்கும் செல்வத்தை வேற யாரோ அனுபவிக்க போறாங்க.. அதற்காக நாம் தப்பான வழியில் அதை சேர்த்து வைத்து  பாவம் செய்ய வேணுமா?  நிச்சயம் தேவை இல்லை.

நாம் ஹலாலான(நேர்மையான) முறையில் சம்பாதித்து அன்றாட தேவைகள் போக மீதமானதை நமக்காக சேர்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவுக்கு நேர்மையாக, உண்மையாக, நீதியுடன் நடந்து செல்வம் ஈட்ட வேண்டும் .இப்படி செய்வது மற்றவர்களுக்கும் நன்மை செய்தது போல் அமையும். நம்மையும் சொர்க்கத்துக்கு இழுத்துச்செல்லும் இல்லையா?.

நாம் இவ்விடத்தில் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம் .மற்றவர்களின் தேவை இல்லாத விடயங்களில் தலையிட்டு அவர்களின் குற்றம் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து,,.... புறம் சொல்லி நம் நேரத்தை செலவு செய்கிறோம். கேட்டால் சமுதாய நன்மை என சொல்கிறோம். இதில் என்ன  இலாபம் நமக்கு? மற்றவர்கள்களின் குறைகளை பற்றியே புறம்பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறது என, கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தால் புறம் பேசாமல் இருப்பது நமக்கு நன்மை என்பது எளிதில் புரியும். மாறாக அதை தொடர்ந்தால் மறுமையில் மற்றவர்களுடைய தீமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு  நம்மீது சுமத்தப்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோமா? அநீதி இளைக்கப்பட்டவன் அல்லாஹ்விடம் முறையிட்டால், நம்மை நோக்கி குற்றம் சாட்டினால், படைத்தவனிடம் நீதி கேட்டால்??!! என்ன செய்வோம் நாம்?

அதற்கு அல்லாஹ் குற்றப்பரிகாரம் கொடுக்குமாறு நம்மை பணித்தால்... சொத்தோ, பொருளோ உதவிடாத அந்நாளில் நமது நன்மைகள் அவர்கள் மீது சாட்டப்பட்டு அவர்களின் தீமைகள் நம்மீது திணிக்கப்படும். (இந்த நிலைமையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்)அதற்கு நாம் சுயநலத்தையும், பிறர் நலத்தையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


சில உதாரணம் பார்க்கலாம்:

எந்த மனிதரும் தாம் உயிரோடு இருக்கும் போது தன்சொத்து முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தான் இறுதிகாலம் வரை அனுபவித்து பின்னர் தான் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற கூறுகிறது. இதில்  சுயநலம் இருப்பது போல் தெரியும்... ஆனால் இது ஒரு அற்புதமான சட்டம்.. பாருங்கள்....

இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின் போது தன்னிடம்  உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.( பாகப் பிரிவினை இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது வேறு விடயம் ) பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து சொத்துடன் போய்விடுகிறார்கள்.... அதன் பிறகு இவர்களின் நிலை என்ன? மாற்றானிடம் கை நீட்டி பிச்சை கேட்கிற நிலை ஏற்படும் .தம் பிள்ளையிடமே கை நீட்டி கேக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் ,இதன் காரணமாக பெற்றோரை மதிக்காத பிள்ளைகளால் பெற்றோர்க்கு நிகழும் சங்கடங்கள் எத்தனை எத்தனை? ஒருவேளை கணவன் மரணித்தால் மனைவி எந்த வசதியும் இன்றி தவிர்க்க நேரிடும். இதற்குத்தான்  இஸ்லாம் யாராலும் இயற்ற முடியாத சட்டங்களை கொண்டிருகின்றது. இந்த விஷயத்தில் சுயநலம் மிகுந்த நன்மையை தருகிறது...  இல்லையா?


அதேநேரம் மரணத் தருவாயில் செய்யும் மரண சாசனத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தானம் செய்ய தடை செய்துள்ளது இஸ்லாம். காரணம் குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டுச்செல்லாமல் இருக்கவும், அவர்களிடம் மேலதிகமாக சொத்துக்கள் இருந்தால் இலகுவாக இருக்கும் என்பதற்க்குமே! சட்டமியற்றுவதில் அல்லாஹ்வை விட சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

அடுத்ததாக:

ஒரு தாய் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்க வழிசெய்கிறாள் என்றால், அது அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மட்டுமல்ல. ‘தாய்’ என்ற தனது கடமையைச் சரியாகச் செய்வதன்மூலம் இரண்டு பலன்கள் அவளுக்கு: ஒன்று, ஒருவருக்கு நற்கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம், அவளது அக்கவுண்டில் நன்மை கூடுகிறது. இரண்டாவது, இறைவனிடம் மறுமைநாளில் தன் கடமையைச் சரியாகச் செய்துவிட்டாயா என்ற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லி, நரகத்திலிருந்து தப்பிக்கவும் முடிகிறது. ஆக சுயநலமுடன் பிறர் நலமும் பேணப்பட்டு சமுதாயத்தில் சமமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதாவது இப்படி ஒரே கல்லிலே ரெண்டு, இல்லையில்லை மூணு மாங்காய் அடிக்க முடியுது...


நமது பிராத்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படவேண்டும்.. அதற்கு நம்மை நாமே தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். நம் துவாக்களில் உடல் நலத்தை மட்டுமன்றி வறுமை, கடன், சோம்பல் இவை அனைத்தையும் விட்டும் பாதுகாப்பு கேட்க வேண்டும்.. அப்போதுதான் நம்மை படைத்தவனை வணங்கவும் ,பிறருக்கு உதவவும் இலகுவாக இருக்கும்.இதன் மூலம் சொர்க்கம் செல்ல பாக்கியம் கிடைத்தால்.. எமது சகோதர்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்றாட சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லவா? நாம் சிந்திப்போம் ,செயல்படுவோம் .


உண்மையில் இஸ்லாம் விதித்துள்ள பல கோட்பாடுகள் பற்றி சற்று அழுத்தமாக சிந்திக்கும் போது ,எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும். அல்லாஹ் அக்பர் ;அவன் மிகப் பெரியவன்.


இஸ்லாம் சொல்லி கொடுக்கும் சுயநலத்தில் பிறர் நலமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலமும் காண முடிகிறது இல்லையா? ஆகவே  இஸ்லாம் கூறியபடி சுயநலனோடு சிந்தித்து பிறர் நலனையும், சமுதாய நலனையும் பேணுவோம்.    



உங்கள் சகோதரி
Fathimah Muslimah Muslimah


islamiyapenmani. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக