WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2012

குர்பானியின் சட்டங்கள்




கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே! இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் உழ்ஹியா எனும் குர்பானி கொடுப்பது வசதியுள்ளவர்கள் (கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டியதில்லை) மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அவற்றின் சட்ட திட்டங்களை அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மூலம் தெரிந்து கொள்வோம்.


குர்பானியின் வரலாறு
இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுமையின் போது இஸ்மாயீல் (அலை) எனும் குழந்தையை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததால் தன் மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களை (சோதிப்பதற்காக) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் மூலம் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்ப்டடார்கள். அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய ஊசலாட்டங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஷைத்தானுக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு பலிப்பிராணியை பலியிடுமாறு கட்டளையிட்டான். மேலும் பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை விட்டுவைத்தான். இந்த விவரங்களெல்லாம் அல்குர்ஆனின் 37வது அத்தியாயமான அஸ்ஸாஃப்பாத்தில் 100 முதல் 111 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
குர்பானியின் நோக்கம்:
அல்லாஹ் கூறியுள்ளான்.
'குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக!                               (அல்குர்ஆன் 22:37)

குர்பானி கொடுக்க நாடியவர் பேணவேண்டியவை
ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜுபிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடிகளை, நகங்களை வெட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: முஸ்லிம் (3655)
குடும்பத்தை நடத்திச்செல்பவர் தம் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம், முடிகளை களையாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் இவ்வாறு கடைபிடிக்க வேண்டியதில்லை.
குர்பானிப் பிராணிகள் எவை?
அல்லாஹ் கூறியுள்ளான்.
'கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.                                            (அல்குர்ஆன் 22:28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளைக் குறிக்கும். எனவே ஆடு (வெள்ளாடு, செம்மறியாடு), மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும். சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு நபிமொழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.               
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: திர்மிதி (1417)
உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.                                                                                          அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: நஸயீ (4301)
கூட்டுக் குர்பானி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்.          
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் (2325)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஓரு மாட்டில் ஏழு நபர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 நபர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.                                                                  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதி (1421)
ஒரு மாடு ஏழு நபருக்கும், ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                             
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத் (2425)

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை: எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கொலைக்குப் பகரமாக சட்டரீதியாகக்) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                              அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) நூல்: முஸ்லிம் (3955)
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்க வைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
     அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம்
நபி (ஸல்) அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைப்பதை நான் பார்த்தேன். 'பிஸ்மில்லாஹி வல்லாஹுஅக்பர்' எனக்கூறி அவற்றை தன் கையால் அறுத்தார்கள்
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி (5558)
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறுப்பதற்காக அவரது ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸியாத் பின் ஜுபைர்(ரலி) நூல்: புகாரி (1712)
பிராணியை அறுப்பதற்கு முன் குளிப்பாட்டி மஞ்சள் தடவி, பூச்சூடியும் ஊர்வலமாக கொண்டு சென்று பின்பு அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை செலுத்தி அறுப்பார்கள். இவையெல்லாம் பிற மதக் கலாச்சாரங்களாகும். அறுத்து முடித்த பின்பு ஃபாத்திஹா ஓதி நீண்ட நெடிய துஆவும் செய்வதும் நபிவழியல்ல. மேலும் அறுக்கும் போது குடும்பத்தார்கள் அனைவரும் சுற்றியிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது சம்பந்தமாக வரும் ஹதீஸ்களெல்லாம் பலஹீனமானவையாகும். மேலும் குர்பானி கொடுப்பது பற்றி வரும் ஹதீஸ்களெல்லாம் பலஹீனமானவையாகும்.
குர்பானி பிராணியை எப்போது அறுக்க வேண்டும்
குர்பானிப் பிராணியை உழ்ஹியா, குர்பானி என்று பிரித்து உழ்ஹியா என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், குர்பானி என்றால் தொழுகைக்குப் பின்பு தான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உழ்ஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்றுதான்.
ஒரு (ஹஜ்ஜுப் பெரு) நாளின்போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணிகளை அறுத்துக் குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களின் தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் 'குர்பானி' கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, 'தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுத்திருக்காதவர் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்'' என்று கூறினார்கள்.
     அறிவிப்பவர்: ஜுன்துப் பின் சுஃப்யான்(ரலி) நூல்: புகாரி (5500)

குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் தொடங்குகிறது. ஹஜ்ஹுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி அதனைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய் (உப்புக் கண்டம் தயாரிக்கும்) நாட்கள் என்று சொல்லப்படக்கூடியவையும் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும். தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.                     
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல்: தாரகுத்னீ

பெண்கள் அறுக்கலாமா?
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
   அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக்(ரலி) நூல்:புகாரி (5504)
எத்தனை பிராணிகள் கொடுக்கலாம்?
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது? என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
                                      அறிவிப்பவர்: அதா இப்னு யஸார் நூல்: திர்மிதீ (1425)
ஒருவர் ஒன்றுக்கு மேல் ஏழைகளின் தேவையைக் கருதி பெருமையை நாடாமல் எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுதது (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிடட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.                                  அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் (2137)

பங்கிடுதல்
குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை தனக்கொன்று, சொந்தக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என மூன்று பங்காக பிரிப்பதற்கு நபிவழியில் எவ்வித சான்றுமில்லை.
அல்லாஹ் கூறியுள்ளான்
'அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இருப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.        
(அல்குர்ஆன் 22:36)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.             
அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: புகாரி (1717)
குர்பானிப் பிராணியின் இரத்தம்
அல்லாஹ் கூறியுள்ளான்;. 'தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான்(உண்பதும்) உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;.                                                                                                                 (அல்குர்ஆன் 2:173)
இறுதியாக குர்பானியின் சட்டங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி நமது குர்பானி கொடுத்தலை அமைத்துக் கொள்வோமாக! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக