WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 16 ஜூன், 2012

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



சோமாலியாவில் இஸ்லாத்தை தவறாக விளங்கி தர்ஹாக்களை கட்டிய ஒரு இடத்தில் அதனை இடித்து தரை மட்டமாக்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தர்ஹாவை இடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு இடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

ஒருவன் இஸ்லாத்தை தவறாக விளங்கி தவறான வணக்கத்தை செய்தால் அவனுக்கு குர்ஆனின் சட்டங்களையும் நபி அவர்களின் உண்மையான போதனைகளையும் தொடர்ந்து எடுத்துக் கூறி வர வேண்டும். காலப் போக்கில் அவன் உண்மையை உணர்ந்து கொண்டு தர்ஹா வணக்கத்தை தூரமாக்குவான். ஐந்து வேளை பள்ளிக்கும் தொழுக வந்து விடுவான். அவனை கிண்டலடிப்பது, வேறு தகாத வார்த்தைகளால் அவனை கண்டிப்பது: போன்ற செயல்களை பலர் செய்வதால் அவன் வீம்புக்காகவாவது தர்ஹா வணக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான். இது மனித இயல்பு. எனவே தவறான கொள்கையில் நமது சகோதரன் இருந்தால் அவனை அன்போடும் பரிவோடும் நெருங்கி அவன் செய்து வரும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்.

15 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நாகூரில் தர்ஹாவுக்கு சிறிது தொலைவிலேயே தர்ஹா வணக்கத்தை கண்டித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்ஹா வருமானத்தில் வயிறு வளர்த்து வரும் ஃபக்கீர்கள் விடுவார்களா? சிறப்பு பேச்சாளராக பி.ஜெய்னுல்லாபுதீன். பெரும் கூட்டம். ஜெய்னுல்லாபுதீன் பேசிக் கொண்டிருக்கும் போது கற்கள் வந்து மேடையில் விழ ஆரம்பித்தது. கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்கள் வரிசையாக அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் ஜெய்னுல்லாபுதீன் தனது பேச்சை அப்படியும் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இது போல் தமிழகம் முழுவதும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்த பிரசாரம். தற்போது அதற்கான பலன் தமிழகத்தில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நாகூர் தர்ஹா டிரஸ்டுகளின் முக்கியஸ்தர்கள் வீட்டு இளைஞர்கள் பலர் இன்று தர்ஹா வணக்கத்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் முழவதும் இந்த நிலைதான். கொடி ஊர்வலம்: சந்தனக் கூடு வைபவம்: சமாதி வழிபாடு அனைத்தும் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிக் கண்ணனே தனது ஒரு பதிவில் 'எங்கள் ஊர் நாகையில் முன்பு நாகூர் சந்தனக் கூடு பல ஊர்களுக்கும் வரும்: ஹந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெறும்: பல நாட்கள் நடைபெறும்: பெரும் கூட்டமும் வரும்: இந்த வஹாபிகளின் பிரசாரத்தால் நாகூர் ஹந்தூரி வழமைபோல் அவ்வளவு சிறப்பாக இல்லை. கூட்டமும் குறைந்து விட்டது' என்று வருத்தப்படும் நிலையில்தான் உள்ளது. கோவிக் கண்ணனுக்கு வருத்தமாக தெரியும் ஒரு நிகழ்வு எனக்கு சந்தோஷமாக தெரிகிறது. இஸ்லாத்தை விளங்க வேண்டிய முறையில் விளங்கியதால் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தவறாக விளங்கியதால் அவருக்கு வருத்தத்தைத் தருகிறது.

'கதவைத் திற காற்று வரட்டும்' என்ற தொடர் தனது பக்தர்களுக்கு ஒருவர் எழுதியதை நாம் அறிவோம். பக்தர்களுக்கு காற்றை வரவழைத்து விட்டு தனக்கு அதாவது ஒரு சந்நியாசி எதை எல்லாம் தூரமாக்க வேண்டுமோ அதை எல்லாம் தனது அறைக்கு வரவழைத்தார். தனது மதம் சொன்ன கட்டளைகளை மீறினார். தற்போது 'கதவை திறந்தேன் போலீஸ் வந்தது' என்ற தொடரை வேறொரு பத்திரிக்கையில் தொடராக எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எந்த மதமாகவும் மார்க்கமாகவும் இருந்தாலும் புதிதாக புகுத்தப்பட்ட வணக்கங்கள் தூரமாக்கப்பட வேண்டும். இறை வேத நூல்கள் என்ன கட்டளை இட்டுள்ளதோ அதற்கு மாற்றமாக ஒரு வழக்கம் இருந்தால் அது எத்தனை வருடமாக நாம் பின் பற்றி வந்தாலும் தூரமாக்க தயங்கக் கூடாது.

இந்த புரிதலுக்கு நாம் வந்து விட்டால் பல குழப்பங்கள் தீர வழியுண்டு.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்த ஏகத்துவ பிரசாரத்தின் காரணமாக பல மூடப்பழக்கங்கள் ஒழிந்துள்ளன. இஸ்லாமியர்களிடையே படிப்பதில் அதிக ஆர்வம் உண்டாயிருக்கிறது. பெண்களும் இன்று கல்லூரியை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தப்பட்டு இஸ்லாத்தின் மேல் முஸ்லிம்களின் மேல் மாற்று மத சகோதரர்களுக்கு இருந்த தவறான கண்ணோட்டம் களையப்பட்டுள்ளது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் சுத்தமாக குறைந்துள்ளன. இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்க நினைத்து வைத்த குண்டுகளும் காவல் துறையால் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் எந்த சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைதி தொடர வேண்டும். அனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும் உள்ள தவறான கொள்கைகள் களையப்பட வேண்டும் என்பதே நம் அவா!

-------------------------------

அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது:

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
--------------------------------

கப்ர்களை கட்டக்கூடாது:

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610

--------------------------------

நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க கூடாது:

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

--------------------------------

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்:

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

--------------------------------

நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக