உணர்வும் அதன் உண்மையும் !
Posted by nidurali | Labels: உணர்ச்சி. இறைவன், உணர்வு | Posted On Tuesday, April 10, 2012 at 7:38 PM
உண்ணும் உணவு உடம்போடு கலந்து உடலை உந்தச் செய்ய வழி வகுப்பதுபோல் உணர்வும் உடம்போடு கலந்துவிட வேண்டும் .அது நன்மை தரக்கூ டிய உணர்வாக இருப்பது அவசியம். இறைவன் மீது பற்று வைத்து அது இறை உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும். நம்முள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர வேண்டும். அது நல்லுணர்வை உண்டாக்கும் .அது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவைக்கு வழி வகுக்கும் . இறை உணர்வு உள்ளோர் மக்கள் மீது பற்றுக் கொண்டு தன்னிடத்து நல்லுணர்வை உண்டாக்கிக் கொள்வதுடன் மக்களைப் புரிந்துக் கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சேவை செய்ய முற்பட்டு மனமகிழ்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376
இதுவே உணர்வின் மகத்துவம்
Tweet |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக