ஒட்டகம் எவ்வாறு
படைக்கப்பட்டுள்ளது?
ஏகஇறைவனின் சாந்தியும்
சமாதானமும் நிலவட்டுமாக !"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை
அவர்கள் பார்க்க வேண்டாமா?- திருக்குர்ஆன்:88:17."
ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது . ஒட்டகம் என்ன ? மனிதனுடைய நிலையே அது தான் !மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும். அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ? அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும். எல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.
ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில்
குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல்
குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும்
அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில்
அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு
தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது
சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக்
கொள்கிறது.
நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க்
அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன்
அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர
வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில்
உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும்
இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக்
கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின்
தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது. வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில:
இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத்
துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல
தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு
விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது,
மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை
கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் .
இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக்
காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும் நீரும் எளிதில் கிடைக்காது என்பதால்
அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக்
கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான். இறைவனின் இந்த மெகா செட்டப்
காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம்
செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம்
பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல்
பயணிக்கும்.
"அவனே இறைவன். (அவன்)
படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்,
ஞானமிக்கவன்." - 59:24.
இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக
ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து
இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட
ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.
அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின்
கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து
நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான
திமிலை இறைவன் வடிவமைதான். இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான
முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க
வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்றுக் கூறி அதை ஆய்வு
செய்யும்படி இறைவன் கூறுகிறான்.
பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக
உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள
சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள்
அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது
அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?அதேப்போன்று அதனுடைய காலும்
சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின்
சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து
விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர்
மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள்.
ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின்
நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம்
( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு
நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் .இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் அதனுடைய தட்ப
வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத
சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை
வைத்துப் படைத்தான்.குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள்
அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும்
இருக்கும். ஆனால்
ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக
பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது. மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார்
வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர்
மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக்
குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம். பாரங்களை
சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து
பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில்
அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ்
பாக்கியசாலிரியாவான். திருக்குர்ஆன்:23:14.
அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள்
காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப்
போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி
அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக்
கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற
பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம்
Snow Shoes ஆகும்).மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ
உருவாக்கப்பட்டிருக்குமோ ?மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத
அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால்
உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள்
அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல்
ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும். இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும்
அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும்
இறைவனின் படைப்புகளேயாகும். உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி
இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த
ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது. 680 kg வரை
எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில்
ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல்
ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற
உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ்
பாக்கியசாலியாவான். 23:14 சுட்டெரிக்கும் வெயில் ஒட்டகத்தின் முதுகின் மீது
பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக்
கொண்டு மறைத்துக் கொள்வார்.
அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான
தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில்
யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு
விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால்
ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி
நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும். அதற்கு
காரணம். • மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல்
மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.
அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும்
அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. •
அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன்
புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான
வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass) கண்ணிற்கு கீழே
உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும்
பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை
மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா
இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக
அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால்
தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன்
வழங்கினான்.
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17.
அவனே அல்லாஹ். (அவன்)
படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்,
ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக