December 17, 2011
கம்யூனிஸ்ட்கள், "நல்லா பீதிய கிளப்பி விடுறாங்கய்யா"
சமீபத்தில்
படித்த ஒரு கம்யூனிஸ்ட்டின் கட்டுரை, வழக்கம் போல ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை
ஓரளவுக்கேனும் பேணும் மக்கள் ஆட்சியின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளது.
(அவர்களின் வேலை அது தானே) இன்றைக்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக
அடையாள அட்டை தருவது தவிர்க்க இயலாததாகி விட்டது. அடையாள அட்டை என்பதை அரசு
குடிமக்களை கண்காணிக்கும் அட்டை என்கிற தவறான பயத்தில் - கம்யூனிஸ்ட்கள் "பீதியை
கிளப்பியதை" வாசியுங்கள்.
அரண்டவன் (கம்யூனிஸ்ட்) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். "குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள் - நாட்டு மக்களை கண்காணிப்பது என்பது தொடக்க காலம் முதல் அரசுகள் செய்து வருவது தான். மக்களின் பாதுகாப்பு, எச்சரிக்கை என பல காரணங்கள் இதற்காக கூறப்பட்டாலும், அரசு குறித்து மக்கள் என்ன கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவது தான் ஆதார நோக்கம்.
தொழில்நுட்ப அறிவும், பொருட்களும் அதிகரிக்க, அதிகரிக்க அரசுக்கு தெரியாமல் மக்கள் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தனி மனித உரிமை குறித்து மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசுகள், அவர்களின் படுக்கையறை வரை கண்களை நுழைத்து வேவு பார்க்கின்றன. அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகளை செய்து தர மறுக்கும், பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் அற்ப மானியங்களைக் கூட வெட்டும் அரசு இது போன்ற கண்காணிப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டியிறைக்கின்றன." என்கிறது கட்டுரை.
ஏற்கனவே எனது ஒரு பதிவில் - வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருப்பதை கூட - கம்யூனிஸ்ட்டை போல ஒருவர் குற்றம் சொல்லி இருந்தார். அதற்கும் பதில் சொல்லி இருந்தேன். மக்களை அரசோ, காவல்துறையோ இரண்டு விதமான காரணங்களுக்காக கண்காணிக்கிறது. உதாரணத்திற்கு சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்கிறவர் மீதெல்லாம் சந்தேகப்பட்டு கேமரா பொருத்தப்படவில்லை. அப்படி எவரேனும் சொன்னால் அது முட்டாள்தனம். அப்படி தான் இந்த கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள்.
குற்றம் செய்யாதவர்கள் - கண்காணிப்பு கேமராவை ஒரு அலங்கார விளக்காக நினைத்து கொள்ளலாம்."கூட்டத்தை பயன்படுத்தி குற்றம் செயல் புரியும் நபர்களை பிடிக்க, சாலை விபத்தினை உடனடியாக கண்டறிய, நெரிசலான போக்குவரத்தை சீர் செய்ய என்பதற்கு தான் கண்காணிப்பு கேமராவே ஒழிய - சாலையில் செல்கிறவரை எல்லாம் திருடர்கள் என்று சந்தேகித்து அல்ல"... மேலும் சாலை வசதிமே சரியில்லை. எதற்கு வீணாக கேமரா என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படி கேட்டால், அவர்களுக்கான கேள்வி. "நாட்டில் பெருவாரியான மக்கள் பட்டினியில் இருக்கும் போது உங்களுக்கு எதற்கு கணினியும், இணையமும் என்று கடாசுவிர்களா?"
இன்றைக்கு வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்துகிறார்கள். ஏன். குடும்பத்தினர் பாதுகாப்புக்கு. ஆனால் "பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு பொருத்தி இருக்கான்" என்று அரை வேக்காடுகள் சொன்னால் அதற்கென்ன செய்ய முடியும். கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள். "வாடிக்கையாளர்களை எல்லாம் திருடர்களாக பார்க்கிறார்கள்" என்றா அர்த்தம். பணியிடங்களில் கேமரா... அடையாள அட்டை. "அதற்காக நான் வேலைக்கு போகமாட்டேன்" என்றா சொல்வார்கள்.
ஒரு நிறுவனமே உங்களை கண்காணிக்கும் போது - அரசு கண்காணிப்பதில் என்ன தவறு இருந்து விட முடியும். அரசு குடிமக்களை கவனிக்கிறது என்றால் - அதில் அரசின் சுயலாபத்தோடு - மக்களின் பாதுகாப்பை பாதுகாக்கும் அம்சமும் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் "மக்களை காக்க தவறிய அரசாங்கம்" என்று "கிளம்பிட்டாய்யா கிளம்பி" என்று கிளம்பிவிடுவீர்கள். அதற்கடுத்து கட்டுரையாளர் புரட்டு, புரட்சி என்கிறார். அப்படி பேசினால் தானே கம்யூனிஸ்டு.
"அண்மையில் துனீசியாவில் தொடங்கி லிபியா ஈறாக அரேபிய ஆப்பிரிக்க நாடுகளிலும், கிரேக்கம், இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க வால் ஸ்ட்ரீட் முற்றுகையுமாய் உலகெங்கும் அரசுக்கெதிராக வெடித்துக் கிளம்பி கலவரம் செய்து வருகிறார்கள் மக்கள். அதை முளையிலேயே கண்டுபிடித்த கிள்ளி எறிவதற்காக மக்கள் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்களின் செயல்பாடு என்ன? சிந்தனை என்ன? பொழுபோக்குகள் எப்படி? என அவர்களின் ஒவ்வொரு அசைவையும் அறிவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கின்றன" என்கிறார் கட்டுரையாளர்.
எகிப்தை ஏன் விட்டு விட்டார். வருஷா வருஷம் புரட்சி நடப்பதால் எகிப்து புரட்சிக்கு மரியாதை இல்லையோ? அரபு நாடுகளின் புரட்சியை பார்த்து இந்தியாவுக்கு எந்த பயமும் இல்லை. கம்யூனிஸ்ட்கார சர்வாதிகாரி சீனாவுக்கு தான் அச்சம் வந்தது. கம்யூனிஸ்ட்களும் - மதவாதிகளை போல தம் தவறுகளை மறைக்கக்கூடியவர்கள். முழு உண்மையை பேச முடியாதவர்கள் "மனித உரிமை" பற்றி பேசி யாரை ஏமாற்ற. சீனா தான் தம் மக்களை கண்காணிக்க துவங்கி பல்வேறு தளங்களை தடை செய்தது. கூகுள் தேடு பொறியில் மல்லிகை(புரட்சி) என்கிற வார்த்தையையே தடை செய்தது.
சர்வாதிகாரிகளின் தேசத்து புரட்சி "ஜனநாயகத்தை" கோரி என்பது இந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு புரிவதே இல்லை. ஒரு வேளை மக்களை அரசு கண்காணித்தால் - யார் அதற்காக அச்சப்பட வேண்டும். காவல்துறையை பார்த்து யார் அச்சப்படுவது. "திருடனும், தீவிரவாதியும்..." இரண்டுமாக நான் இல்லாத போது - அரசு என்னை கண்காணிப்பது என் பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக