உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!
written by varsha on December
12th, 2011 | No Comments
இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளின் பின்னர் வியட்நாமின் மருத்துவமனை ஒன்றை அணுகிய போது அங்கும் இவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதே இன்னும் சோகமான சம்பவம். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த நோய் குறித்து தாங்களால் சரியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் இது ஒரு மரபணு குறைபாட்டினால்தான் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள். எனினும் இதனை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற முடிந்தாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து குட்டைகள் நீக்கப்பட்ட இருவருக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எது எப்படியோ அழகு என்பது அங்கத்தில் அல்ல அகத்தில்தான் என்ற ஒரே வாசகத்தை தவிர இந்தப்பெண்ணுக்கு எந்த சொல்லும் ஆறுதல் ஆகாது.
© 2011 puthiyaulakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக