பாவூர் சத்திரம் சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல்- காய்கறி விலை உயர்வு
பாவூர்சத்திரம்: கேரள வியாபாரிகளின் வருகை
அதிகரித்துள்ளதால் பாவூர் சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு
கிலோ தக்காளி 140 ரூபாயாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம், புனலூர், தென்மலை உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் நேரடியாக புளியரை, செங்கோட்டை வழியாக வேன்களில் வந்து பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக இரு மாநிலங்களிடையே பதற்றம் நிலவுவதால் நேரடி கொள்முதலை கேரள வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். மேலும் கடந்த 10 நாட்களாக கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியவில்லை. காய்கறிகள் கிடைக்காததால் கேரளாவில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது.
வியாபாரிகள் கொள்முதல்
இந்த நிலையில் தற்போது பதற்றம் தணிந்து சகஜ நிலை திரும்பி வருவதால் கேரள எல்லை பகுதியான புளியரையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 3 நாட்களாக காய்கறி லாரிகள் செல்கின்றன. இதனையடுத்து கேரள வியாபாரிகள் வாகனத்துடன் பாவூர்சத்திரம் சந்தைக்கு வந்து காய்கறிகளை தற்போது நேரடி கொள்முதல் செய்கின்றனர்.
கேரள வியாபாரிகள் வருகை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக