உத்திரபிரதேச மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் முதல்வர் மாயாவதி கட்சி எம்.பி. கைது.
12 December 2011 No Comment
உத்திரபிரதேச மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் முதல்வர்
மாயாவதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. கைது செய்யப்பட்டார். உத்திரபிரதேசம் ஜூனாபூர்
மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய்சிங், 47, இவர் அம்மாநில ஆளும்கட்சியான
பகுஜன்சமாஜ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் ஜூனாபூர்
மாவட்டத்தைச் சேர்ந்த கிராகத் நகரில் கடந்த 2010-ம் ஆண்டு பிறபிற்பட்ட பிரின்
நிஷாத் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை கொலை செய்ததாக போலீசில் புகார்
கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி பிரிஜ்லால், தனஞ்ஜெய்சிங் மீது
வழக்குப்பதிவு செய்தார். எனினும் ஆளும் கட்சி எம்.பி. என்பதால் நடவடிக்கை
எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு
மாற்றப்பட்டது. இவர் மீது குற்றவழக்குபதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் கைது
செய்தனர்.
கைது செய்யப்பட்ட தனஞ்ஜெய்சிங், மீது தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தில் ஊழல், தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது
உள்பட 12 மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மருத்து
உயரதிகாரிகள் இருவர் கொலையிலும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனது
தொகுதியான ஜூனாபூர் மாவட்டத்தின் ‘மாபியா’ என போலீசாரால்
அழைக்கப்படுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன்பு முலயாம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி 2007-ம் ஆண்டு நடந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் போது மாயாவதியின் பகுஜன் கட்சியில் சேர்ந்தார்.ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமர்சிங்கை, இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி திகார் சிறையில் நேரி்ல் சென்று பார்த்ததால் முதல்வர் மாயாவதி இவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக