WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 29 டிசம்பர், 2011

இந்திய செய்திகள்


இந்திய செய்திகள்

கான்ஸ்டபிள் மனைவியிடம் சில்மிஷம்: மேலதிகாரிக்கு அடி, உதை.


சக அலுவலர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த சிற்றுலாவில், தன் மனைவியிடம் அசிங்கமாக நடந்துக்கொண்ட மேலதிகாரியை கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துத் துவைத்தெடுத்த சம்பவம் பெர்ஹாம்பூரில் நடந்துள்ளது.

நித்யானந்தா ஆசிரமக் கோயிலில் கொள்ளை

நடிகையுடன் பாலின்பம் துய்த்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடாதியில் அமைந்துள்ளது. மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஆசிரமத்தில் அனந்தீஸ்வரர் கோயில் உள்ளது.

அன்னாவின் போராட்டம் ப்ளாப்பான வியாபாரம் : லல்லு


புது டெல்லி : லோக்பால் மீதான விவாதத்தில் பேச வந்த ராஷ்டிரியா ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அன்னாவின் போராட்டம் ஒரு வியாபாரம் என்றும் அது படு தோல்வியடைந்து (ப்ளாப்பாகி) விட்டது என்றும் கடுமையாக அன்னாவை தாக்கினார்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பு: அமளி!

இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக முதல் அமைச்சர் சதானந்தகவுடா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்!

சுரங்க தொழில் முறைகேடு தொடர்பாக லோக் அயுக்தா அறிக்கையில் எடியூரப்பாவின் பெயர் இடம் பெற்றதால் அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சிக்மகளூர் தொகுதி எம்.பி. சதானந்த கவுடா கர்நாடக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.

வறுமைகோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் NRI மலையாளிகள் மற்றும் சினிமா நடிகர்கள்

நாட்டில் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழ்பவர்களின் நலத்திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்தந்த மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள், மேலே வசிப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு இல்லாததால் ஹசாரே உண்ணாவிரதம் பாதியில் நிறுத்தம்

வலுவான ஜன்லோக்பால் மசோதா வேண்டி 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மும்பையில் நேற்று அன்னா ஹசாரே துவங்கினார்.

அன்னா பாவம் : மும்பை 4,000 தில்லி 200 சென்னை 50 நபர்கள் திரண்டனர்


மும்பை : ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவிற்கு உடல்நிலை ஒரு புறம் படுத்துகிறது என்றால் இன்னொரு புறம் அவருக்கு வரும் மக்கள் ஆதரவு அதை விட சங்கடப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.

கொல்கத்தா போக்குவரத்தில் பயன்படும் 'ஒய்திஸ் கொலவெறி'

தனுஷ் எழுதிப் பாடி நடித்த ஒய்திஸ் கொலவெறி பாடல் பிரபலமானாலும் ஆனது, எப்படியெல்லாம் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆங்காங்கே மாத்தி யோசிக்கிறார்கள். நிறையவே ரீமிக்ஸ் செய்யப்பட்டாலும், கொல்கத்தா நகர போக்குவரத்துத் துறை இப்பாடலை பயன்படுத்தும் விதமே அலாதி.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விலையாக கொடுக்க முடியாது - அமைச்சர்!

"சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விலையாக கொடுக்க முடியாது" என மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை திணறல்!

தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் இருந்து இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் காவல்துறையினர் குழம்பிப்போய் உள்ளனர்.

லோக்பால் மசோதா நிறைவேறியது!

லோக்பால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நிறைவேறியது. அரசு கொண்டுவந்த 2 திருத்தங்களுடன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

MP, MLA க்கள் பணியாற்றுவதில் சிரமமேற்படும் - குரேஷி!

"லோக்பால் மசோதாவைத் தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டப் பேரவைப் பிரதிநிதிகளை திரும்பப் பெற வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராடுவோம்" என்று ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம்: சி.பி.ராய் நீக்கம்!

கேரள மக்களின் பாதுகாப்புக் கருதி  புதிய அணை கட்டுவதற்கு  சமரா சமிதி ஆதரவு அமைப்பு தெரிவித்து வருகிறது. அணையின் அழுத்தத்தைக் குறைக்க 50 அடி ஆழமுள்ள குகை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் சி.பி.ராய் சமீபத்தில்  கருத்துத் தெரிவித்திருந்தார்.

மக்களவைக்கு வராத காங்கிரஸ் எம்.பி.க்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை

மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும்போது காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு மதிப்பளிக்காது நேற்று லோக்சபா கூட்டத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்‌கொள்ளப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய கீதத்துக்கு நூறு வயது!


ஜன கன மன என தொடங்கும் இந்திய தேசிய கீதம், நேற்றோடு நூறு வயதை தொட்டுவிட்டது. 1911 ஆம் ஆண்டு  நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத்  தாகூர் அவர்களால் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் இந்த கீதம் பாடப் பட்டது.

குரல் வாக்கெடுப்பில் லோக்பால் மசோதா நிறைவேறியது!

மக்களவையில் லோக்பால் மசோதா மீது ஓட்டெடுப்பு இன்று இரவு தொடங்கியது. நீண்ட நேர விவாதத்துக்குப்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா நிறைவேறியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிநீக்கம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வரும் டாக்டர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கையை எடுக்கத்தொடங்கியுள்ளது.

கர்நாடகா-லோக் ஆயுக்தா: அதிகாரிகள் வீடுகளில் சோதனை!

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை லோக்ஆயுக்தா விசாரித்து வருகிறது.

அன்னா ஹசாரே கிருஷ்ணரின் அவதாரம் !


மும்பை : வலிமையான லோக்பால் கொண்டு வருவதற்காக மூன்று நாட்கள் மும்பையில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக வந்துள்ள அவரது ஆதரவாளர்கள் ஊழலை ஒழிக்க புறப்பட்டிருக்கும் அன்னாவை கிருஷ்ணரின் அவதாரமாக கருதுவதாக கூறினர்.

மும்பையில் அன்னாவுக்கு கருப்பு கொடி


மும்பை : மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்று கூறி வலுவான லோக்பாலுக்காக இன்று மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் செய்திகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக