சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் (புதிய படங்களுடன்)
இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு துரோகம்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம்
மீன்பிடித்தலில் தமிழக மீனவரகளுக்கு வஞ்சகம்
தமிழகம் வந்த பிரதமர மன்மோகன் சிங்கிற்கு தமுமுக கறுப்புக் கொடி
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வித்தையாகும். இதனால் முஸ்லிம்கள் உட்பட எந்தவொரு சிறுபான்மையினத்தினரும் பயனடைய போவதில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று தொடரந்து வாக்குறுதி அளித்து வந்த காங்கிரஸ் கட்சி இந்த 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் முஸ்லிம்களின் முதுகில் குத்தியுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்ததைப் போல் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத வழி சிறுபான்மையினருக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடும் அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு வழங்க உடனே உத்தரவிடக் கோரியும்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் வகையில் மன்மோகன் சிங் நடந்து வருகின்றது. உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்னை நிலுவையில் இருக்கும் போது முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றும் இதனால் கேரள மக்கள் அழிந்து விடுவாரகள் என்று பீதி கிளப்பியதுடன் உச்சநீதிமன்றத்தின் பாரவையில் நிலுவையில் உள்ள வழக்கில் அதனை மதிக்காமல் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி கேரள அரசு செயல்படுகின்றது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வாரப்பதுப் போல் கேரளா அரசுக்கு ஆதரவாக பிரதமர தலைமையிலான தேசிய பேரிடர மேலான்மை குழுவில் கேரளா அரசின் செயல்பாட்டிற்கு ஆதரவாக செயல்படுவரகளை நியமனம் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த பாரபட்சப் போக்கை கண்டித்தும் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக செயல்படும் கேரளா அரசை பதவி நீக்கச் செய்யக் கோரியும்
தமிழக மீனவரகள் தொடரந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்காததைக் கண்டித்தும் பொய் வழக்குப் போட்டு கைதுச் செய்யப்பட்டுள்ள 5 ராமேஸ்வர மீனவரகளை உடனடியாக விடுதலைச் செய்யக் கோரியும்
தமிழகம் வந்த பிரதமர மன்மோகன் சிங் அவரகளுக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக் கொடி காட்டும் பேராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான பேராசிரியர ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார. சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர எஸ். ஹைதர அலி தலைமை தாங்கினார. ஏராளமான தமிழ்நாடு நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர இந்த போராட்டத்தில் பங்குக் கொண்டு கைதாகினர. காரைக்குடியில் பிரதமரின் ஹெலிகொப்டர் தரையிரங்கும் போது அவர் தமுமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தை பார்வையிடும் நிலை ஏற்பட்டது.
காரைக்குடியில் ..........
தமுமுக
ஆர்ப்பாட்டத்தின் போது மேலே பறந்த பிரதமருடைய ஹெலிகாப்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக