WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 15 டிசம்பர், 2011

இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?


இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?


திரைப்படத் தொழில்நுட்பங்களில் நாம் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருப்பதில், எப்படி இரட்டை வேடப்படங்கள் எடுக்கப்படுகின்றன? என்பதும் ஒன்று. இந்த தலைப்பைப்பற்றி பலபேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஒரு கமலை இரண்டு கமலாக காட்டுவதிற்கும், ஒரு ரஜினியை இரண்டு ரஜினியாக காட்டுவதிற்கும், அதுவும் அந்த இரண்டு நபரையும் ஒரே ஃபிரேமில் காட்டுவதற்கும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் மிக முக்கியமான தொழில்நுட்பத்தைப்பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

இரட்டை வேடப்படங்கள் எடுப்பதிற்கு முன்பெல்லாம்(குத்துமதிப்பாக 1990 முன்புவரை என்று வைத்துக்கொள்வோம்) 'மாஸ்க்'(Mask) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. அதுவே இப்போது 'கிரின் மேட்'(Green mate/Blue mate)என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் ஏன்..கமல், ரஜினியின் காலங்களில் கூட 'மாஸ்க்' தொழில்நுட்பம் தான் பயன்பாட்டிலிருந்தது. இப்போது அதாவது இந்த கணினி கண்டுபிடித்தப்பிறகு என்று வைத்துக்கொள்வோம், இதற்கு பிறகுதான் 'Blue Mate' அல்லது 'Green Mate' என்ற இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது. இப்போது இந்த 'Green Mate' தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டாலே போதுமானதுதான், ஆனாலும் முந்தைய தொழில்நுட்பத்தையும் கொஞ்சம் விளக்கி விடுகிறேன். சும்மா தெரிந்துக்கொள்ளுங்கள். ஒன்று மோசம் போய்விடாது.

'மாஸ்க்'(Mask) தொழில்நுட்பம்:
பொதுவாக இரண்டுநபர்கள்(அப்பா,மகன் என்று கொள்வோம்) ஒரே ஃபிரேமில் இருக்கிறார்கள் என்றால், உதாரணத்திற்கு அவர்கள் எதிர் எதிரே நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றுவைத்துக்கொண்டால், என்ன செய்வோம் அவர்கள் இருவரையும் நிற்கவைத்து படம்பிடிக்கவேண்டியதுதான் அல்லவா? ஆனால் அதுவே அந்த இருவரும் ஒருவரே என்றால்? அதாவது அப்பா,மகன் இரண்டு வேடங்களில் சிவாஜியே நடிக்கிறார் என்றால்? எப்படி ஒருவரையே இரண்டு இடங்களிலும் நிற்க வைப்பது?

இங்கேதான் இந்த 'மாஸ்க்' தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது. முதலில் அப்பா சிவாஜியை அவர் நிற்கவேண்டிய இடத்தில் நிறுத்துவார்கள், அவருக்கு எதிர்புறம் மகன் சிவாஜி இருக்கவேண்டும் அல்லவா..அவருக்கு எங்கே போவது? அவர்தான் அப்பாவாக எதிர்புறம் நிற்கிறாரே. அப்பா சிவாஜிதானே தன் மேக்கப்பை கலைத்துவிட்டு மகனாக வேடம் போட்டு இங்கேயும் வந்துநிற்கவேண்டும்?. அவர் வரும் வரை அந்த இடம் காலியாகத்தானே இருக்கும்?

அதனால் அந்த பகுதியை படம் பிடிக்காமலேயே இருக்கலாம் அல்லவா? அதனால் லென்ஸில் அந்த பகுதியை படம்பிடிக்கும் பாகத்தை கருப்பு அட்டையால் மறைத்துவிடுவார்கள். அதாவது அப்பா சிவாஜி இடப்பக்கம் நிற்கிறார் என்றால் மகன் வலப்புறம் நிற்பார் அல்லவா? அந்த வலப்புறத்தை லென்ஸில் கருப்பு அட்டை கொண்டு மூடிவிடும்போது என்ன ஆகும்? வலப்புறம் முழுவதும் கருப்பாக இருக்கும் அல்லவா? ஆமாம் கருப்பாகத்தான் இருக்கும்.

இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஒளிப்பதிவு அல்லது புகைப்படம் பிடித்தல் என்பது எப்படி நடக்கிறது. லென்ஸின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒளியானது படச்சுருளில்(Film) விழுவதின் மூலம் படச்சுருளில் இருக்கும் இரசாயணம் மாற்றம் ஏற்பட்டு ஒளிவிழுந்தப்பகுதி படமாக பதிகிறது, ஒளிவிழாத பகுதி எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறது என்ற ஆதார புகைப்பட தொழில்நுட்பத்தை நினைவுக்கு கொண்டுவாருங்கள். அதன் படி பார்க்க, அந்த கருப்பு அட்டை ஒட்டப்பட்ட வலதுப்பகுதி வழியே எந்த ஒளியும் லென்ஸின் உள்ளே சென்றிருக்காது அல்லவா? ஒளி உள்ளே செல்லாதபோது அந்த பகுதி படச்சுருளும் எந்தவித மாற்றமும் நிகழாது அல்லவா. இடபுறம் படம் பதியப்பட்டும்,வலதுப்புறம் படம்பதிவுசெய்ய தேவையான தகுதியுடன் இருக்கும் அல்லவா?

இப்போது ஏற்கனவே அப்பா சிவாஜி படம் பதியப்பட்ட படச்சுருள் பகுதியை 'பின்நோக்கி'(Rewind) சுற்றி துவக்கத்திற்கு கொண்டுவருவார்கள். இப்போது அப்பா சிவாஜி தன் வேஷத்தை கலைத்துவிட்டு மகன் சிவாஜியாக வேடம்போட்டு மகன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பார். லென்ஸில் அப்பா இருந்த இடபுறத்தை இப்போது கருப்பு அட்டையால் மூடிவிட்டு வலது புறத்தை திறந்துவைப்பார்கள், அதாவது மகன் இருக்கும் பகுதி. இப்போது படம்பிடிக்கும்போது என்ன நடக்கும்?

ஏற்கனவே அப்பா பகுதி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது,அந்த பகுதி இப்போது மூடப்பட்டிருப்பதினால் அதில் எந்தவித மாற்றமும் நிகழாது. அதே படச்சுருளில் மகன் பகுதியும் படம்பிடிக்கப்படும். ஒரே படச்சுருளில் அப்பா மகன் இருவரின் பிம்பமும் பதியப்படும். அவ்வளவுதான் இப்படிதான் ஒவ்வொருதடவையும் ஒவ்வொரு ஷாட்டும் படம்பிடிக்கப்படுகிறது. மிக எளிமையான தொழில்நுட்பம். கேட்பதிற்கும் புரிந்துக்கொள்வதிற்கும் சுலபம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

இரண்டு கதாப்பாத்திரத்தின் இயக்கத்தையும், நிற்கும் இடத்தையும் முதலில் தெளிவாக வரையறுக்கவேண்டும். பின்பு கதை நிகழும் அரங்கை எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒளியமைப்பும் மாறக்கூடாது. படச்சுருளின் துவக்கமும் முடிவும் இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் ஒன்றாக சீராக இருக்கவேண்டும். இரண்டு கதாப்பாத்திரத்தின் பேச்சும் செயலும் ஒன்றிணைந்திருக்கவேண்டும். லென்ஸில் மறைக்க பயன்படும் கருப்பு அட்டை மிகச்சரியாக இரண்டுபகுதியையும் பிரிக்கவேண்டும். இடம்மாற்றி வைக்கும்போதும் சரியாக பொருத்தவேண்டும் என நிறைய கடினமான வேலைகள் உண்டு இதில்.

இரண்டு கதாபாத்திரத்தின் பேச்சை ஒன்றிணைக்க ஒலியைப் பயன்படுத்துவார்கள். அதாவது முதலில் பதிவுசெய்யப்படும் கதாப்பாத்திரத்தின் வசனங்களை பதிவுசெய்திருப்பார்கள், அதை இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்கும்போது ஓட விடுவார்கள். முதல் கதாப்பாத்திரத்தின் வசனத்திற்கேற்ப இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்கவேண்டும். அதை ஒரு அளவாக கொண்டு காலயிடைவெளி கொடுத்துக்கொள்ளவேண்டும். இது தேர்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாக செய்யமுடியும். 

பழைய இரட்டை வேடப்படங்களில் இரண்டு கதாப்பாத்திரங்களில் இடையே ஒரு மெல்லியகோடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கமுடியும். அதற்கு காரணம் இந்த கருப்பு அட்டையை மாற்றி ஒட்டுகிறார்கள் அல்லவா? அதனால் ஏற்படும் கோடுதான் அது. அதை தவிற்க, கோடு தெரியாமல் இருக்க பெரும்பாலும் அரங்கத்தில் எதாவது ஒரு செங்குத்தான பொருளை(தூண்) அந்த கோட்டுக்கு நேராக வரும்படி கேமராகோணத்தை அமைத்துக்கொள்வார்கள். அந்த கோடு அந்த தூணில் ஒன்றிவிடுவதால் நாம் அதை கவனிக்க மாட்டோம். 


'மிட்செல்'(Mitchell Camera) என்னும் கேமரா இந்த வகை 'மாஸ்க்' ஷாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. காரணம் அதில் மிகச்சரியாக படச்சுருளை 'Rewind' செய்யமுடியும். ஃபிரேம் கணக்கில் சரியாக அமைக்கமுடியும் என்பதும், லென்ஸில் கருப்பு அட்டை பொருத்த போதுமான இடமிருந்ததும் ஒரு காரணம். 




முக்கியமாக கவனிக்கவேண்டியது ஒன்று இருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி இரட்டை வேடங்கள் எடுக்கும் போது கேமரா 'Movement'ல் இருக்காது. நிலையாகத்தான் இருக்கும். ஏனெனில் 'மாஸ்க்' மூலம் இரு பகுதியையும் பிரித்து இருப்பதினால் இரண்டு பகுதியை இயக்கத்திலிருக்கும் கேமராவில் ஒன்றிணைக்கமுடியாது என்பதினால் தான். 


ஆனால் இப்போது பயன்பாட்டிலிருக்கும் 'Green Mate / Blue Mate' தொழில்நுட்பத்தில் அந்த பிரச்சனையை வேறுசில தொழில்நுட்பத்தின் உதவியோடு நிவர்த்தி செய்துவிட முடிகிறது. 


'Green Mate / Blue Mate'
முதலில் இந்த 'Green Mate / Blue Mate' என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். ஒரு நடிகனையோ பொருளையோ பச்சை அல்லது நீல வண்ண பின்புலத்தில் வைத்து படபிடிப்பதை இது குறிக்கிறது. இப்படி படம்பிடிப்பதின் மூலம் அந்த நடிகனையோ அல்லது பொருளையோ சுலபமாக அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனியாக எடுத்துவிட முடியும். கணினியில் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை மட்டும் தேர்ந்தெடுக்கும்படி செய்யமுடியும், அந்த வண்ணத்தை தேர்ந்தெடுத்து அதை தனியாக பிரித்துவிட முடியும். இதனால் நடிகனும் பின்புலமும் தனிதனியாக ஆகிவிடும். இப்போது நடிகனை நாம் எந்த பின்புலத்தோடும் பொருத்திக்கொள்ள முடியும்.


எந்த வண்ணம் வேண்டுமானாலும் பயன்படுத்துலாமே? அப்போ ஏன் பச்சை/நீல வண்ணம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில் இந்த இரண்டு வண்ணங்கள் தான் நம்முடைய தோலிலோ உடம்பிலோ இல்லை என்பதுதான் காரணம். இல்லை என்றால் வண்ணத்தை தேர்வுசெய்து பிரித்தெடுக்கும்போது நடிகனின் உடல்பகுதியும் பிரிந்துவிட சாத்தியம் இருக்கிறது. இதை தவிற்கவே நம்முடைய உடம்பில் இல்லாத வண்ணத்தை பயன்படுத்துகிறார்கள். பச்சை அல்லது நீலம் என்பது நடிகன் உடுத்தும் உடையைப் பொருத்தது. உடையில் நீல வண்ண இருந்தால் பச்சை பின்புலமும்(Green Mate), பச்சை வண்ணம் இருந்தால் 'Blue Mate' பயன்படுத்தலாம்.


இந்த பச்சை/நீல பின்புலத்தை எப்படி ஏற்படுத்துகிறார்கள்?
பச்சை/நீல துணியை தேவையான அளவிற்கு பெரிதாக தைத்து அதை சதுரமான மரசட்டத்தில் இணைத்து பயன்படுத்துவார்கள் அல்லது ஒரு உள்ளரங்கில்(Indoor Studio) சுற்று சுவர்களை பச்சை/நீல வண்ண துணிகள் கொண்டு மறைத்து அல்லது பச்சை/நீல வண்ண பூச்சு பூசி பின்புலத்தை உறுவாக்குவார்கள். இந்த அரங்கை 'Green/ Blue Mate studio' என்பார்கள்.


'Green/ Blue Mate' தொழில்நுட்பம்:


'Green/ Blue Mate'-ஐப் பயன்படுத்தி எப்படி இரட்டை வேடங்களை உருவாக்குகிறார்கள் என்பதைப் பார்போம். 


இங்கே கமல் அண்ணன் தம்பி என இரட்டைவேடத்தில் நடிக்கிறார் எனக்கொண்டால், முதலில் அண்ணன் கமலை அவர் இருக்கும் அரங்கத்தோடு(வீடு,அறை,பாலைவனம்..எதோவொன்று) படம்பிடித்துவிடுகிறார்கள். பின்பு தம்பி கமலை 'Green/ Blue Mate'-இன் பின்னனியில் வைத்து படம்பிடித்து பின்புலத்தை நீக்கி விட்டு தம்பி கமலைமட்டும் அண்ணன் கமல் இருக்கும் அந்த ஷாட்டோடு இணைத்துவிடுகிறார்கள்.


இங்கேயும் அதேதான். அண்ணன் கமலின் உரையாடலோடு, செயலோடு தம்பி கமலின் செயலும் ஒன்றிணைந்து இருக்கவேண்டும். அதற்கு அண்ணனின் வசனங்கள் பயன்படுகிறது. மேலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் கணினி உதவியுடன் அண்ணன் கமலின் காட்சிப்பகுதியை தம்பி நடிக்கும்போது இணையாக ஓடவிட்டு இரண்டையும் ஒன்றிணைக்கிறார்கள். 


தேவைப்பட்டால் இரண்டு கமலும் பங்குபெறும் அரங்கை தனியாக நடிகர்கள் இல்லாமல் படம்பிடித்து அதை பின்புலமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த முறையில் நடுவில் கோடு வரும் தொந்தரவு எல்லாம் இல்லை. காட்சியை தந்துரமாக எடுக்கமுடிகிறது. 


'Motion Control Camera' போன்ற அதிநவின கருவிகள் கொண்டு இன்று இயக்கத்திலிருக்கும்(Movement) நடிகர்களின் இரட்டை அல்லது பல வேடங்களை சிறப்பாக பதிவுசெய்யமுடிகிறது. இரண்டு கதாப்பாத்திரத்தின் ஷாட்டுகளும் ஒரேவித இயக்கத்திலிருக்க வேண்டும், அதாவது ஒரு கதாபாத்திரத்தை படம்பிடிக்கும் போது கேமரா இயக்கத்திலிருந்தால்(Trally) இரண்டாவது கதாபாத்திரத்தின் போதும் அதேவித இயக்கத்தில் கேமரா இருக்கவேண்டும். மனிதனால் ஒரே மாதிரி இரண்டு தடவை கேமராவின் இயக்கத்தை கொண்டுவருவது என்பது மிகக் கடினம், அதுவே இந்த 'Motion Control Camera'-ஐக் கொண்டு சாத்தியமாக்க முடிகிறது.


இந்த 'Motion Control Camera' என்பது கணினியியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி. இதில் இணைக்கப்படும் கேமராவையும் சேர்த்து முழுகருவியின் இயக்கத்தையும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். அதாவது Trally, Crane, Panning, Tilting என எல்லாவித இயக்கத்தையும் கணினியில் 'Program' செய்து பயன்படுத்த முடியும். இதனால் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒரேவிதமான கேமரா இயக்கத்தை கொண்டுவரமுடியும். இதைக்கொண்டு இரண்டு கதாபாத்திரங்களின் காட்சி பதிவின் போதும் ஒரேவித கேமரா இயக்கத்தைக் கொண்டுவந்து இயக்கத்திலிருக்கும் ஷாட்ஸை உருவாக்குகிறார்கள்.




சில சமயங்களில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் 'Track and Trally'-ஐக் மிகக்கவனமாக கையாண்டும் இந்தவித இயக்கத்திலிருக்கும் ஷாட்ஸ்களை உருவாக்கமுடிகிறது என்பது தகவல்.(எந்திரனில் ஒளிப்பதிவாளர் திரு.ரத்தினவேல் அவர்கள் அப்படிச்செய்ததாக அவரே என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்)


மேலும் இரட்டை வேடப்படபிடிப்புகளின் போது, நடிகர்களின் சாயலில் இருக்கும் மற்றொரு நபரை(Dupe)பயன்படுத்துவது, மற்ற நடிகரின் உடம்பை பயன்படுத்திவிட்டு முகத்தை மட்டும் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது போன்ற ஏமாற்று தொழில்நுட்பங்களும் பயன்பாட்டிலிருக்கிறது.


அது இரட்டை வேடமாகட்டும், பத்து வேடமாகட்டும் இதே தொழில்நுட்பம்தான். சண்டை காட்சிகள், பாடல்காட்சிகள் எல்லாமும் இப்படித்தான் எடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக