தற்கால உலகில் அதி வேகமாகப் பரவி மக்கள்
மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றது இணையம். இணையம் மக்களுக்கு நல்ல
விடயங்களை எடுத்துச் சென்றாலும் கூட இளைய தலைமுறைகளை சின்னாபின்னமாகச் சீரழித்து
அவர்களின் வாழ்க்கையை குழிதோண்டிப் புதைக்கின்றது.
இதற்குக்
காரணம் பெற்றோர்கள். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்து கல்வி பயில்கின்றார்கள் என்ற
நினைப்புடன் நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றோர்களின் பிள்ளைகள் இணையம் மூலம்
தங்களது கன்னித் தன்மைகளையிழந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு
சமூகத்தைச் சீரழிக்கும் சில இணையத்தளங்களை உலாவ விடுவது, அவர்களின் கலாசாரத்திற்கு
அது ஒத்துழைக்குமே தவிர எமது கலாசாரத்திற்கும் அதற்கும் வெகுதூரம்.
இருந்தும் எமது இளம் சமுதாயம் அதனை நோக்கித்தான்
தற்போது முன்னேறி வருகின்றது. இதனால் எம் கலாசாரம் காலாவதியாகி விடும் அபாயம்
அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க சட் றூம் என்று சில கேடிகளால்
உதயம் பெற்றிருக்கும் இவ்வாறான வலைதளங்கள், பல குடும்பங்களுக்கிடையில் பிளவுகளை
ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பாவனைகள் அதிகரித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக