WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பாவூர் சத்திரம் சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல்- காய்கறி விலை உயர்வு


பாவூர் சத்திரம் சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல்- காய்கறி விலை உயர்வு

Vegetables
பாவூர்சத்திரம்: கேரள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பாவூர் சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாயாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம், புனலூர், தென்மலை உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் நேரடியாக புளியரை, செங்கோட்டை வழியாக வேன்களில் வந்து பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக இரு மாநிலங்களிடையே பதற்றம் நிலவுவதால் நேரடி கொள்முதலை கேரள வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். மேலும் கடந்த 10 நாட்களாக கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியவில்லை. காய்கறிகள் கிடைக்காததால் கேரளாவில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது.

வியாபாரிகள் கொள்முதல்

இந்த நிலையில் தற்போது பதற்றம் தணிந்து சகஜ நிலை திரும்பி வருவதால் கேரள எல்லை பகுதியான புளியரையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 3 நாட்களாக காய்கறி லாரிகள் செல்கின்றன. இதனையடுத்து கேரள வியாபாரிகள் வாகனத்துடன் பாவூர்சத்திரம் சந்தைக்கு வந்து காய்கறிகளை தற்போது நேரடி கொள்முதல் செய்கின்றனர்.

கேரள வியாபாரிகள் வருகை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்டர்நெட்டில் கொலை மிரட்டல் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்


இன்டர்நெட்டில் கொலை மிரட்டல் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்



சென்னை : வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுப்பதாக, நடிகை சங்கீதாவும், அவரது கணவர் பாடகர் கிரிஷும் பரபரப்பு பேட்டி அளித்தனர். நடிகை சங்கீதாவும், அவரது கணவரும் பாடகருமான கிரிஷும், ஜனவரி 1ம் தேதி சுவிட்சர்லாந்தில் தனியார் அமைப்பு நடத்தும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு விழா நடத்தும் இன்னொரு தமிழ் அமைப்பு, சங்கீதா கலந்து கொள்ளும் விழாவின் அமைப்பாளர், இலங்கை அரசின் ஆதரவாளர் என்றும் அவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இணைய தளத்தில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சங்கீதாவும், கிரிஷும் இலங்கை அரசின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து, இருவரும் நேற்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு இதே அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு திடீரென பல புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். விழா நடத்தும் அமைப்பினர், தாங்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இல்லை. தமிழ் உணர்வாளர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் எங்களுக்கு விளக்கி கூறிய பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தோம்.

இப்போது, எதிர் அமைப்பினர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதை உண்மை என்று நம்பி பலரும் எங்களை போனிலும், இணைய தளத்திலும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதனால், கடந்த பத்து நாட்களாக, நிம்மதி இழந்து விட்டோம். நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு அரசியல் தெரியாது. இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டோம். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லியிருக்கிறோம்.  இவ்வாறு இருவரும் கூறினர்.
www.dinakaran.com   நன்றி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களின் சோதனை வெற்றி


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களின் சோதனை வெற்றி !



மும்பை : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி வேக ரயில்களின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த சோதனை விரார்&தகானு மற்றும் சூரத்  ரயில் நிலையங்கள் இடையே நடந்தது. உலகில் உள்ள பல நாடுகளில் மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  சீனாவில் மணிக்கு கிட்டத்தட்ட 400 கி.மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதாக அந்நாடு அரசு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில்  மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்தான் அதி வேக ரயிலாகும். அதுவும் இந்த ரயில் வெளிநாட்டு  தயாரிப்பாகும். இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி பிரிவான ஆர்.டி.எஸ்.ஓ. மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயிலை  தயாரித்துள்ளது. இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் விரார்& தகானு மற்றும்  சூரத் ரயில் நிலையங்கள் இடையே வெற்றிகரமாக நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

www.dinakaran.com   நன்றி

ஊழலால் மக்கள் கோபத்தில் உள்ளனர் : பிரதமர் மன்மோகன் சிங் !


ஊழலால் மக்கள் கோபத்தில் உள்ளனர் : பிரதமர் மன்மோகன் சிங் !



புதுடெல்லி : லோக்பால் மசோதாவை தற்போதைய வடிவிலேயே நிறைவேற்ற ஆதரவு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு தருமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவையில் பேசிய பிரதமர் எதிர்கட்சிகளுக்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு முடிந்து விடாது என்று கூறிய பிரதமர், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். மேலும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பது அவசியம் என்றும் ஊழலால் மக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுத்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் சேவைகளை பெறும்போது ஊழலை சந்திக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊழலுக்கு அரசு என்றும் அடிபணியாது என்றும் மக்கள் விரக்தியை களைய லோக் ஆயுக்தா அவசியம் என்றும் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். 


www.dinakaran.com   நன்றி

 

பிரதமருக்கு கருப்புக்கொடி; மனிதநேய மக்கள் கட்சி, தமுமுகவினர் கைது!


பிரதமருக்கு கருப்புக்கொடி; மனிதநேய மக்கள் கட்சி, தமுமுகவினர் கைது!

E-mail Print PDF
முஸ்லிம்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடியில்  தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக திருச்சி மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ் அகமது தலைமையில் நவல்பட்டு வழியாக காரைக்குடிக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கறுப்புக்கொடிகளை கைப்பற்றி வேனில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்.


பிரதமருக்கு கருப்புக்கொடி; மனிதநேய மக்கள் கட்சி, தமுமுகவினர் கைது!




பிரதமருக்கு கருப்புக்கொடி; மனிதநேய மக்கள் கட்சி, தமுமுகவினர் கைது!

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் (புதிய படங்களுடன்)


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் (புதிய படங்களுடன்)

E-mail Print PDF


இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு துரோகம்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம்
மீன்பிடித்தலில் தமிழக மீனவரகளுக்கு வஞ்சகம்
தமிழகம் வந்த பிரதமர மன்மோகன் சிங்கிற்கு தமுமுக கறுப்புக் கொடி


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வித்தையாகும். இதனால் முஸ்லிம்கள் உட்பட எந்தவொரு சிறுபான்மையினத்தினரும் பயனடைய போவதில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று தொடரந்து வாக்குறுதி அளித்து வந்த காங்கிரஸ் கட்சி இந்த 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் முஸ்லிம்களின் முதுகில் குத்தியுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்ததைப் போல் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத வழி சிறுபான்மையினருக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடும் அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு வழங்க உடனே உத்தரவிடக் கோரியும்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் வகையில் மன்மோகன் சிங் நடந்து வருகின்றது. உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்னை நிலுவையில் இருக்கும் போது முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றும் இதனால் கேரள மக்கள் அழிந்து விடுவாரகள் என்று பீதி கிளப்பியதுடன் உச்சநீதிமன்றத்தின் பாரவையில் நிலுவையில் உள்ள வழக்கில் அதனை மதிக்காமல் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி கேரள அரசு செயல்படுகின்றது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வாரப்பதுப் போல் கேரளா அரசுக்கு ஆதரவாக பிரதமர தலைமையிலான தேசிய பேரிடர மேலான்மை குழுவில் கேரளா அரசின் செயல்பாட்டிற்கு ஆதரவாக செயல்படுவரகளை நியமனம் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த பாரபட்சப் போக்கை கண்டித்தும் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக செயல்படும் கேரளா அரசை பதவி நீக்கச் செய்யக் கோரியும்
தமிழக மீனவரகள் தொடரந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்காததைக் கண்டித்தும் பொய் வழக்குப் போட்டு கைதுச் செய்யப்பட்டுள்ள 5 ராமேஸ்வர மீனவரகளை உடனடியாக விடுதலைச் செய்யக் கோரியும்
தமிழகம் வந்த பிரதமர மன்மோகன் சிங் அவரகளுக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக் கொடி காட்டும் பேராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான பேராசிரியர ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார. சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர எஸ். ஹைதர அலி தலைமை தாங்கினார. ஏராளமான தமிழ்நாடு நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர இந்த போராட்டத்தில் பங்குக் கொண்டு கைதாகினர. காரைக்குடியில் பிரதமரின் ஹெலிகொப்டர் தரையிரங்கும் போது அவர் தமுமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தை பார்வையிடும் நிலை ஏற்பட்டது.



சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்



சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் ..........


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்




சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமுமுக ஆர்ப்பாட்டத்தின் போது மேலே பறந்த பிரதமருடைய ஹெலிகாப்டர்
தமுமுக ஆர்ப்பாட்டத்தின் போது மேலே பறந்த பிரதமருடைய ஹெலிகாப்டர்

நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்


நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்

Article Index
நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்
புகைப்பட தொகுப்பு
All Pages
நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
alt

நிடாகத் முகாம் பற்றிய ஒரு தொகுப்பு:

சவூதியில் பரிதவிக்கும் பல லட்சம் இந்தியர்கள்
மத்திய மாநில அரசுகளின் உதவியை எதிர்பாத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள்.

சவூதியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்க மத்திய அரசு முன்வருமா?
சவூதியில் "நிடாகத்" திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 5 நாள் விழிப்புணர்வு முகாம் ரியாத் மாநகர் பத்தாஹ் மர்க்கப்பில் உள்ள நெஸ்ட்டோ ஹைப்பர்மார்கெட்டில் நடைபெற்றது. எங்களெல்லாம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும் என்பதை ரியாத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம் மூலம் தேசம் கடந்து மொழி கடந்து தனது மனிதநேயப்பணிகளில் மீண்டும் முத்திரை பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

சவூதியில் அந்நாட்டு மக்களின் வேலை இல்லா தின்டாட்டத்தை ஒழிக்கும் முகமாக சவூதி அரசு நிடாகத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கடந்த பல மாதங்களாக அதன் கடுமையை விளக்கி பல வகையிலும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்தத் திட்டதால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் அரசு அறிவித்துள்ள அந்தந்த வகைகளில் உங்களின் வழிகளை தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று பல வகையிலும் விளம்பரப்படுத்தி வந்துள்ளது. துரதிஸ்டவசமாக வெளிநாட்டவர் குறிப்பாக இந்தியர்கள் இதை ‍பெரிதும் காதில் போட்டுக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. அரசு கடந்த மாதம் இறுதி அறிவிப்பு வெளியிட்டு இந்த மாதம் (சஃபர் 1433) இறுதியோடு சலுகை காலம் முடியும் என்று அறிவித்துவிட்டதால் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தியத்தூதரகத்தில் அனுமதி பெற்று தூதரக பிரதிகள், வழக்கறிஞர்கள் குழுவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், Pleaceindia, மற்றும் Sauditimes வுடன் இணைந்து நெஸ்ட்டோ ஹைப்பர்மாக்கெட்டில் மாபெரும் விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது 3 அல்லது 4 நாட்கள் திட்டமிட்டிருந்தோம் மக்களின் வருகை பெரும் திரளாக இருந்ததால் 5 நாட்கள் முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் நமது நாட்டினருடன் எமன், எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ்  என்று பலதரப்பட்டநாட்டினரும்  பயன்பெற்றனர். விரிவாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.
நிடாகத்திட்டம் என்பது (சுருக்கமாக) அனைத்து துறைகளிலும் உள்ள வேலை வாய்புகளில் சதவிகிதத்தின் அடிப்படையில் சவுதி மைந்தர்களை வேலையில் அமர்த்த ‍வேண்டும் என்ற கட்டாயம், பணியில் அமர்த்தப்பட்டவரின் முழுவிபரம் அரசின் தொழிளாலர் நலத்துறையிடம் பதிவு செய்யப்படுவதோடு அவரின் ஊதியவிகிதத்தில் 5 சதவிகிதம் அரசின் சமூகநல காப்பீடு திட்டத்தில் அந்நிறுவனம் செலுத்தவேண்டும். இந்தக்காப்பீடு பணியில் இருப்பவர் விபத்து மற்றும் மரணம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் இந்த காப்பீடு அவருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சமூலநல காப்பீடு திட்டமும் காட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகையான வெளிநாட்டு தொழிலாளர்களின் குடியுரிமை மீண்டும் புதுப்பிக்கப்படாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் அரசு அறிவித்துள்ள கால கெடுக்குள் உரிய வழிகளை தேர்வு செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டாயம்.

நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் சிகப்பு வண்ணத்தில் வரும் நிறுவனத்திற்கான கால கெடு இந்த மாதம் (சபர் 1433) இறுதிஆகும். சிகப்பு வண்ணத்தில் வரும் நிறுவனம் அரசின் அனைத்து சட்டதிட்டங்களையும் பின்பற்றாவிட்டால் இந்த மாதம் இறுதிக்குப் பின் அந்த நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனை உட்பட அனைத்து வழிகளும் முடக்கப்படும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கும் இது பொருந்தும். இந்த மாதம் (சபர் 1433) இறுதிக்குப்பின்னும் அந்த சிகப்பு வண்ண நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களின் நிலை அதோ கதிதான் அவர்களுக்கு 2 வழிகள் காட்டப்பட்டுள்ளன ஒன்று பச்சை மற்றும் சில்வர் (பிளாட்டினம்) நிற வண்ணத்திற்குள் வரும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஸ்பான்சர் மாற்றிக் கொள்ள முடியும் அல்லது தனது கணக்கை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விடவேண்டும். இவைகளை செய்யாமல் என்னதான் நடக்கிறதென்று பார்போமே என்று சொல்பவர்களை முகாமில் அதிகம் காண முடிந்தது இவர்களின் நிலையை அரசு தெளிவாக விளக்கி உள்ளது இறுதி காலக்கெடுவுக்குப்பின் எந்த வழியும் இல்லை சிறைச்சாலையைத் தவிர என்று.

மஞ்சல் வண்ணத்திற்கு 6 மாத காலக் கெடு கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் சில்வர் (பிளாட்டினம்) சிறந்த மற்றும் மிகச் சிறந்த நிறுவனம் என்ற வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1432 உரிய அனுமதியில்லாமல் சவுதியில் பணியாற்றுபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி குறிப்பிட்ட காலகெடுக்குள் வெளிநாட்டவர்கள் அவரவர் நாட்டிற்குச் செல்லலாம் என்று அரசு அறிவித்திருந்தது நமது நாட்டினரும் இந்த சலுகையை பயன்படுத்தி ஏராளமானோர் தாயகம் திரும்பினர். இந்த சலுகையையும் பயன்படுத்தாமல் பிறகு பார்ப்போமே என்று இருந்தவர்கள் இப்போது கையை பிசைந்து கொண்டு முகாமுக்கு வந்திருந்த ஏராளமானோரை காணமுடிந்தது.

அரேபியாவிற்கு சம்பாதிக்கச் செல்கிறோம் அங்கே ரியால்களும் தங்கங்களும் கொட்டிக்கிடக்கிறதாம் அள்ளிக்கொண்டு வருவோம் என்ற கனவுகளோடு சவுதி வருபர்கள் அவர்களின் வேலை ஊதியம் மற்றும் நிறுவனம் பற்றி விசாரிக்காமல் வண்ணவண்ண கனவுகளோடு விமானத்தில் பறந்து வந்து விடுகின்றனர் இங்கே வந்து பார்த்தபின் சுத்தம் செய்யும் வேலையா? தெருக்கூட்டும் வேலையா? தோட்ட வேலையா? ஆடு ஒட்டகம் மேய்க்கும் வேலையா? 400 ரியால் சம்பளமா? அதலேயே சாப்பிடவும் வேண்டுமா?? கனவுக்கோட்டைகள் தகர்ந்து கண்கணில் தாரைதரையாக கண்ணீர்... நாம் கண்ட க ன வை ‍எப்படியும் நினைவாக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த ஸ்பான்சரை விட்டு ‍வெளியே ஓடிவந்து வெளியில் சம்பாதித்து ஒருவழியாக பணத்தாசை மனதை நிரப்பியவுடன் தாயகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.அப்போது தான் அதன் விபரீதம் புரிகிறது நாம் எப்படி தாயகம் செல்ல முடியும் என்று? ஆம் முடியவே முடியாது. உங்களின் பணத்தைசை சொந்தங்களையும் உறவினர்களை பார்க்க முடியாமல் செய்து விடுகிறது. எந்த ஆவணமும் அவரிடம் இருப்பதில்லை தாயகம் செல்வதற்கான எந்த வழியும் கிடைப்பதில்லை. நடைபெற்ற இந்த முகாமில் 5 ஆண்டு முதல் 10, 15 ஆண்டுகள் வரை தாயகம் செல்ல முடியாமலும் எந்த ஒரு ஆவணமும் இல்லாமலும் இருப்பதாக நமக்கு கிடைத்த தகவல் இதயத்தை உளுக்கிவிட்டது.

இதில் ஆந்திராவைச் சேர்ந்த பாவப்பட்ட அப்பாவிகள் 40 ஆயிரம் இருப்பதாக நமது முகாமில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது போல் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்து 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தவிக்கிறார்கள் இது போல் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு சவுதி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்துமா?

வெளிநாட்டிற்கு பணிக்குச் செல்லும் சகோதரர்களே! உங்களின் மேலான கவனத்திற்கு. நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறீர்களா? அதற்கான அரசு ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் தொழில் உத்திரவாதம் மற்றும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டு அரசுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்றும், நீங்கள் பணிக்குச் செல்லும் அந்த நிறுவனம் அந்த நாட்டில் இயங்கும் நமது தூதரகத்தின் இணையதளம் மூலம் பிளாக்லிஸ்ட்டில் உள்ளதா என்றும், முடிந்தால் நண்பர்கள் மூலம் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அறிந்து ஒப்பந்தம் செய்து செல்வது உங்களுக்கு நல்லது. நீங்கள் பணிக்குச் செல்லும் நாட்டின் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்றுங்கள் முடியாவிட்டால் தாயகம் திரும்பி விடுங்கள் உங்களுக்காக உங்கள் அன்புச் சொந்தங்கள் உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள். நீங்கள் ஒப்பந்தம் செய்து சென்ற பணி மற்றும் ஊதியம் வேறு உங்களுக்கு வழங்கி இருக்கும் பணி ஊதியம் வேறு என்று கொடுக்கப்பட்டுள்ளதா? அந்த நாட்டில் இருக்கும் நமது இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள் முடியாவிட்டால் தாயகம் திரும்பி விடுங்கள் அந்த ஸ்பான்சரை விட்டு வெளியேறி சம்பாதிக்க நினைக்காதீர்கள் அது சவுதி அரேபியாவில்  தண்டிக்கப்படும் கடுமையான சட்டம்.

நீங்கள் பயணம் புறப்படும் போது உங்கள் பயணப் பொருள் தவிர அறிமுகம் அல்லது அறிமுகமில்லாத யார் என்ன கொடுத்தாலும் கொண்டு வராதீர்கள். குறிப்பாக மருந்துப் பொருள்கள். உயிர்காக்கும் சில மருந்துகள் தவிர (அதுவும் ஒரு சில மட்டுமே) மற்ற அனைத்து மருந்துகளும் வெளிநாட்டுப் பயணிகள் சவுதிக்குள் கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து உயர்தர மருந்துகளும் சவுதியில் கிடைக்கின்றன.

இது போன்ற அனைத்து வகையிலும் நமது இந்தியச் சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் விளக்கம் அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது எல்லாப்புகழும் இறைவனுக்கே.