பிரதமருக்கு கருப்புக்கொடி; மனிதநேய மக்கள் கட்சி, தமுமுகவினர் கைது!
முஸ்லிம்களுக்கு 
மத்திய அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். 
முல்லைப்பெரியாறு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற 
கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடியில்  தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில 
தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டி 
ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
இதற்காக திருச்சி மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ் அகமது தலைமையில் நவல்பட்டு வழியாக காரைக்குடிக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கறுப்புக்கொடிகளை கைப்பற்றி வேனில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக