WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 9 பிப்ரவரி, 2013

புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்


புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
aqsa
- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.
01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.
“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71)
இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது.
“எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள். அவ்வாறெனில், நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் மூஸா கூறினார்.)” (5:21)
இந்த வசனமும் பலஸ்தீன பூமி புனித பூமியென்று கூறுகின்றது.
02. மிஃராஜின் பூமி:
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வே இஸ்ராவும் மிஃராஜுமாகும். நபி(ச) அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது “இஸ்ராஃ” என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது “மிஃராஜ்” என்று கூறப்படும். அவர்களது இஸ்ராஃ, மிஃராஜுக்குரிய புனித பூமியாக பலஸ்தீனும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அமைந்துள்ளது.
“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்ளூ பார்ப்பவன்.” (17:1)
இந்த வசனத்திலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைச் சூழவுள்ள பகுதி அருள்வளம் பொழியப்பட்ட பூமியென்று கூறப்பட்டுள்ளது. சூழவுள்ள பகுதி பரகத் செய்யப்பட்டது என்றால் மஸ்ஜிதுல் அக்ஸா அதைவிட அதிகம் அருள் வளம் பொழியப்;பட்டது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
03. இரண்டாவது மஸ்ஜித்:
அபூதர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்; பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)
இந்த ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது புனித மஸ்ஜிதாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜித் குறிப்பிடப் படுகின்றது.

புதன், 16 ஜனவரி, 2013

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

நல்ல மனைவி அமைய…



SLM. நஷ்மல் (பலாஹி)
nashmalslm@yahoo.com
‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த)விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ (ஸஹீஹுல் புஹாரி: 5186)

சொற்பொழிவற்றுபவர்: மௌலவி: பீர் முகம்மது (காசிமி)


ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா 22.05.2011
சொற்பொழிவற்றுபவர்: மௌலவி: பீர் முகம்மது (காசிமி)
( click the link to play audio or right click and “save target as” to save the file )
Download: sahabip-penmanihal-seytha-thiyaham.mp3

Download 9 MB
<< BACK TO INDEX

மணவாழ்வில் மகிழ்வுற‌..



இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்
____________________________________________________________________________________________________
சில சமயங்களில் கணவன் மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள். எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபியவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே
‘பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)
அந்த வகையில் மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்…
____________________________________________________________________________________________________
“இப்லீஸ் தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கின்றான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (க்கவில்லை’ என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்த்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து ‘நான் இன்னின்னவாறு செய்தேன்’ என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், ‘(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை’ என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, ‘நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைது, ‘நீதான் சரி(யான ஆள்)’ என்று (பாராட்டிக்) கூறுவான் என்று அழ்ழாஹ்வின் தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5419)
நாம் எதிர்பார்த்தது என்ன? ஆனால் திருமணம் என்பது இவ்வளவு இன்னல்கள் நிறைந்ததா? என தலையில் கைவைக்கும் நமது இளசுகளுக்கு இக்கட்டுரையில் சில ஆலோசனைகளை முன் வைக்கலாம் என விரும்புகின்றோம்.
____________________________________________________________________________________________________
‘இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை.’ (அல்குர்ஆன் 02:229)
மனிதன் என்கின்ற வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தனது மனைவிமார்களுடன் சில பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளார்கள் என்கின்ற விடயத்தையும், எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதனையும் நபிமொழிகளின் ஒளியில் உங்களோடு பகிர்ந்து கொண்டோம். அதன் தொடரில் இவ்விதழில் சில நபித்தோழர்கள் தமது மனைவிமார்கள் விடயத்தில் அவசரப்பட்ட போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பதை இவ்விதழில் நோக்குவோம்…

dharulathar thanks

வியாழன், 27 டிசம்பர், 2012

வரலாறும், முக்கியத்துவமும் – பைத்துல் மால்



முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும்.
‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித் தார்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

எல்லாப்புகழும் இறைவனுக்கே





அல்ஹம்துலில்லாஹ்!பிறவிப்பயனை அடைந்த பெரும் சந்தோஷத்துடன் இவ்விடுகையை தட்டச்சு செய்யும் வாய்ப்பினை அருளிய வல்ல இறைவனுக்கு நன்றி கூறியவளாக தொடர்கிறேன்.