நம் அனைவர் மீதும்
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.
நீங்கள் ஆர்வமுடன்
கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக
திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை
ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல்,
இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர
இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.


