WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 17 டிசம்பர், 2011

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5


தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5

ன்ன சகோதரர்களே நண்பர்களே உடல் வலி எப்படி இருக்கிறது?
என்னது வீடியோவை வேடிக்கை மட்டும் தான் பாத்தீங்களா? ஹலோ நான் விசாரித்தது வீடியோவைப் பார்த்து அதன்படி செய்து பார்த்தவர்களை.

யாருங்க இந்த வீடியோ பயிற்சியை பார்த்தது இப்ப தாங்க முதன்முறையாக இந்த பிளாக்கை பார்க்கிறேன் ஆமா என்ன பயிற்சி? என்ன வீடியோ? என்று கேட்பவர்களுக்கு.


தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்


தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2



தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -4


இந்த நான்கு பாகங்களையும் பார்க்கவும் ஏற்கனவே நான்கு பாகங்களையும் பார்த்து பயிற்சி எடுத்தவர்களுக்கு இன்று ஐந்தாவது பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறேன். 

video

                                  இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்

இது நான்காம் பாகத்திலுள்ள வீடியோவின் தொடர்ச்சி அந்த பயிற்யோடு இதனை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

செய்முறை விளக்கம்
இப்பயிற்சியை சில இடங்களில் சரியாக செய்யவிட்டால் எந்த பலனும் கிடைக்காது அது போன்ற இடங்களை மட்டும் நான் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்.


இப்படி திரும்பும் போது கால்களை திருப்பக் கூடாது. முதுகை எந்த அளவுக்கு திருப்ப முடியுமோ அந்த அளவுக்கு திருப்பவும். இப்படி பத்து முறை செய்யலாம்.


பக்கவாட்டில் கால்களை குனிந்து தொடும்போது பக்கவாட்டில் முழங்கால்களை மடக்காமல் தொட வேண்டும்.


 
கைகளால் கால்களைப் பிடித்து தலையால் முழங்காலை தொடும்போது  தொடுகின்ற முழங்காலை மடக்கக் கூடாது நேராக இருக்க வேண்டும்.


பின் கால்களை நேராக ஊன்றி முன் முழங்கால்களை மடக்கி தலையை கொண்டு தொடும் போது கைகளை இப்படி நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
(கொஞ்சம் கஷ்டம் முயற்சி செய்யுங்கள்)


 பாதத்தின் கீழேயுள்ள அடிப்பாகத்தை கைகளால் பிடித்துக் கொண்டு முழங்காலகளை மடக்காமல் நேராக வைக்கவும்.
(முழங்கால்கள் முன்னே வந்தால் பலன் இல்லை)

இப்படி பக்கவாட்டில் உடம்பை வளைக்கும் போது நேராக நிற்க வேண்டும்.


இந்த பயிற்சியில் உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்

முல்லை பெரியாரும் கள்ள பயல்களும்


முல்லை பெரியாரும் கள்ள பயல்களும்


வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் அருட்கொடை. பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஒரே நாட்டிலுள்ள பல மாநிலத்தவர்கள் அவர்களிடையே மாறுபடும் பழக்கவழக்கங்கள்,கலாச்சாரம், பண்பாடு இவைகளை மிக எளிமையாக பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் செய்யாமலே அவர்களுடன் கொஞ்சம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நெருங்கி பழகும் குணமும் இருந்தால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம்.  ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு தமிழனை நீ எந்த நாட்டுக் காரன் என்று விசாரித்தால் யோசிக்காமல் நான்(இந்தி) இந்தியன் என்று சொல்வார்கள், (நானும் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்). அதற்கு பிறகு இந்தியாவில் நீ எங்கே என்று அவர் மேலும் தொடங்கும் போது மெட்ராஸி என்று சொல்லுவார்கள். ஆனால் இதே கேள்வியை மலையாளிகளிடம் கேட்டால் எடுத்தவுடனே நான் கேரளா என்பார்கள். அப்புறம் கேரளா எங்கு இருக்கிறது என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிறது என்பார்கள்.

இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரூமை உள்வாடகை விடுவதற்காக பொது இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டும் போது South Indian Only என்ற வாசகத்தை பயன்படுத்துவர்கள். அதே மலையாளிகள் கேரளா ஒன்லி என்று மலையாள மொழியில் நோட்டீஸ் அடித்து ஒட்டுவார்கள். மலையாளம் வாசிக்க தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். அப்படியொரு  குறுகிய மாநில,இன,மொழி வெறி கொண்டவர்கள்.

அதே போன்று பத்திரிக்கை வாசிப்பது செய்திகளை தெரிந்துக் கொள்வது இதில் மலையாளிகளுக்கு ஆர்வம் ஆதிகம். இரண்டுக்கும் மேற்பட்ட மலையாள நாளிதழ்கள் சவூதியில் அச்சடிக்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் முழுநேரமும் செய்தி சானல்கள் ஒடிக் கொண்டு இருக்கும். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்ற ஹோட்டல்களில் முக்கால்வாசி டிவி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் அழுகுனி டிவி சீரியல்களும், குத்து பாட்டுக்களும் ஓடிக் கொண்டு இருக்கும். இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு வகையான ஊடகத்தை வளைத்து திரித்து தங்கள் கருத்தை திணிக்கும் கள்ளத்தனம். இந்த முல்லை பெரியாறு விவாகரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க, பிழைக்க துடிக்கும் பிழைப்புவாதிகள். இரு மாநில மக்களின் நல்லுறவை குலைத்தாவது லாபமடைய நினைக்கும் மனநிலை  அரசியல், ஆன்மிக, மாநில, மொழி, இனம் என்ற போர்வையில் எத்தனை வகையான கள்ளத்தனங்கள்.

இதில் மீடியாக்களின் பொறுப்பற்ற விளம்பரத்தனமான பார்வைகள் மிக அசிங்கமானவை. காலையில் சிற்றுண்டி சாப்பிட இங்குள்ள (சவூதி - ரியாத்திலுள்ள) கேரளா ஹோட்டலுக்கு போயி சேட்டா ஒரு செட் புரோட்டா என்று ஆர்டர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் கேரளா கைராளி டிவி  நியூஸ் சானலில் முல்லை பெரியாறு ஒடிக்கிட்டு இருந்தது.

அதில் தமிழக கேரளா எல்லையில் உள்ள மலையாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கவர் ஸ்டோரி செய்தி. பேட்டி எடுப்பவர்களிடம் தமிழ் கலந்து பேசும் மலையாளிகள் எங்கள் வீட்டுக்குள் தமிழ்காரவுங்கே புகுந்து ஆடு, கோழி பணம் இவைகளை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள் பாதுகாப்பில்லை என்று அழுகிறார்கள். அதை பார்த்து விட்டு ஆபிஸ்க்கு வந்து தமிழ் செய்திகளை பார்த்தால் தமிழக மக்கள் மலையாளிகளால் பாதிக்கப்பட்ட செய்திகளை கதை கதையாக செய்தி சானல்கள் ஒப்பித்து பாதிக்கப்பட்டவர்களை செய்தியாளர் களத்தில் சந்தித்து கள செய்திகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

மலையாள செய்தி சானல்களை தொடர்ச்சியாக பார்க்கும் மலையாளி, தமிழர்கள் இன வெறியர்கள் அவர்களுக்கெதிராக எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பது போலவே தமிழ் நியூஸ்களை பார்க்கும் தமிழக மக்களும் உசுப்பேத்தப்படுகிறார்கள். இருபக்கமும் கொம்பு சீவி விடும் வேலையை மீடியாக்கள் திறம்பட செய்கின்றன.

எத்தனையோ தமிழர்கள் கேரளாவில் பல தலைமுறையாக அங்கேயே பிறந்து வளர்ந்து மாநில மொழி பேசி மலையாளிகளாக மாறி போயிருக்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மலையாளிகள் அவர்களின் மொழி மறந்து தமிழ் பேசி தமிழர்களாக மாறி இருக்கின்றனர். இப்படி இருக்கிறவர்களை இது போன்ற தருனங்களில் அங்கு தமிழர்கள்கிறுக்கர்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பக்கத்து வீட்டு தமிழனாகி போன மலையாளியை தூக்கி போட்டு மிதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நன்மொழிகளை வழங்கியவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல இது. நியாயமான முறையிலான போராட்டங்களின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரியான வழிமுறையாகும். ஆனால் இதுபோன்ற அநீதியான செயல்களை யார் இரு பக்கமும் செய்கிறார்கள்? இங்கு தான் கள்ள பயல்கள் வருகிறார்கள்.



முதல் வகையான கள்ளர்கள் சமூக விரோதிகள்.


சுனாமி, இயற்கை பேரழிவு நடந்த போது இரக்கமுள்ள அனைத்து மக்களும் உதவி செய்து கொண்டு இருக்கும் போது சில சமூக விரோதிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். பிணங்களின் கையில் இருந்த மோதிரத்திற்காக விரலை அறுத்தவர்கள், தோட்டிற்காக காதை அறுத்தவர்கள்.


மங்களுர் விமான விபத்து நடந்து பல உயிர்கள் கருகி இறந்து கிடக்க உறவினர்கள் பிணத்தை கூட அடையாளம் காண முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் போது சில திருட்டு சமூக விரோதிகள் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள், நகைகளை கருகிய உடல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள்.


எகிப்து புரட்சி நடந்தபோது இது போன்ற சமூக விரோதிகள் கடைகளில் புகுந்தும் வீடுகளில் புகுந்தும் கொள்ளையடித்தனர். ஆனால் இதனை தொடர விடாமல் போராட்டக்காரர்களே ஒரு குழு அமைத்து சமூக விரோதிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

இலண்டன் கருப்பு இனத்தவரின் போராட்டங்களின் போது ஊடுருவி சமூக விரோதிகள் கடைகளை கொள்ளையடித்தை இங்கிலாந்தின் மீடியாக்கள் கருப்பர்கள் கொள்ளையர்கள், திருடர்கள். அதற்காகத்தான் கலவரம் செய்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தியது. அதன் பிறகு சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்தவர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

முல்லை பெரியாறு போன்ற போராட்ட பிரச்சனைகளை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மலையாளிகள் வீடுகளில் புகுந்தும், கேரளாவில் தமிழர்கள் வீடுகளில் புகுந்தும் திருடுகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள் இந்த சமூக விரோதிகள் தான். இவர்களை அடையாளம் காண வேண்டும். அதை விட்டு விட்டு இதை ஒரு மாநிலத்தவரின் பன்பாக பார்க்கக் கூடாது



இரண்டாவது கள்ளர்கள் சந்தர்ப்பவாத,வகுப்புவாத அரசியல்வாதிகள்.


திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்டக்காரர்கள் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணைகட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்ட ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்.
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "டேம்-999 " என்ற இந்த படத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மத்திய அரசு தயாராக இல்லையெனில் தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் குழுக்கள் பலமுறை சோதனை நடத்தி அணை பலமாக உள்ளது என தெளிவுப்படுத்தியும் கூட மக்களிடம் பீதியை ஏற்படுத்த கேரள அரசு செயல்பட்டு வருவதாக ஊருக்கு ஊரு பேச்சு என்பது போல் அறிக்கை விடுகிறார்.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் சுத்த அரசியல் கள்ளத்தனங்கள்.

இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அதனுடைய நியாயங்களை ஆதரிப்போம்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

குமுதம் - சொல்வதெல்லாம் வக்கிரம்... செய்வதெல்லாம் அக்கிரமம்...


குமுதம் - சொல்வதெல்லாம் வக்கிரம்... செய்வதெல்லாம் அக்கிரமம்...


புலனாய்வு துறை பத்திரிகைகளுக்கு - அடுத்தவர் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து - அவர்களின் படுக்கையறை சமாசாரங்களையும் எழுதவில்லை என்றால் தூக்கம் வராது போலும் அல்லது மண்டை வெடித்து விடும் - சிந்துபைரவி ஜனகராஜ் போல. அந்த வகையில், தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் அந்த ஈனத்தனமான (அவர்களுக்கு அது சமுக சேவை) வேலையை "சொல்வதெல்லாம் உண்மை (வக்ரம்)" என்கிற தலைப்பில் பிரபலங்களின் அந்தரங்களை விஷமத்தனமாய் வெளியிட துவங்கி உள்ளது...

ரஞ்சிதா, நித்யானந்தாவை நக்கீரன் பிடித்து கொண்டது போல. இது நாள் வரை, சினிமா கலைஞர்களின் பால் மாத்திரம் - தங்கள் வக்ர புத்தி சித்திரங்களை, அந்தரங்ககளை வெளியிட்டவர்கள் - இப்போது அரசியல்வாதிகள், பகுத்தறிவாளர்கள், மதபோதகர்கள் என்று அனைவர் மீதும் கை மற்றும் கண் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து - நம் இனமான தலைவரும் தப்பவில்லை. ஆனால் அவர்கள் மட்டும் உத்தம புத்திரர்கள்.

குறைந்து விட்ட சர்க்குலேஷனை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் போலும். இனி இதே அசிங்க அயோக்யத்தனத்தை - ஏனைய புலனாய்வு பத்திரிகைகளும் செய்யக்கூடும். செய்து தானே ஆக வேண்டும். ஒருவர் வாந்தி எடுப்பதை பார்த்தால் - எல்லோரும் வாந்தி வருமே. வாந்தி எடுப்பார்களே. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே...

"சொல்வதெல்லாம் உண்மை"யில் - உண்மை இருக்கிறதோ, இல்லையோ - அதை வெளியிடுபவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டுமே. அவர்களின் அலுவலகத்தில் நடந்த "சொல்வதெல்லாம் உண்மை"யை - பதிவர் சவுக்கு வெளியிட்டு இருக்கிறார். அவை போக -குமுதம் குறித்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதுவும் "சொல்வதெல்லாம் உண்மை" டைப் தான். அங்கங்கே படித்த, பார்த்த தகவல்கள்...

ஒரு முறை குமுதத்தில் நான்கு நடிகைகளின் பின்பக்கத்தை போட்டு (இடுப்பும், இடுப்பு சார்ந்த பகுதியும்) எது எது எந்தெந்த நடிகையின் இடுப்பு என்று வக்ர புத்தியுடன் கேட்டிருந்தார்கள். இவர்கள் தான் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு - பேனா முனையை வலிமையான ஆயுதமாக பாவிக்கிறவர்களா?

மதுரை நகரில் ராம்தாஸ்க்கு எதிராக கருப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய போது - குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரும் அடி வாங்கி காயமடைந்தார். ஆனால் தாக்குதலை நடத்தியது பெரிய கை என்பதால் - தமது பத்திரிகை நிருபர் அடிவாங்கியதை கூட பெரிது படுத்தவில்லை. என்னா பத்திரிகை தர்மம். இவர்கள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

தம் பத்திரிகையில் எழுதிய ஞானிக்கே எழுத்துரிமையை பறித்தவர்கள் என்பது மேலதிக தகவல். அந்த பத்திரிகையில் ஒரு இலக்கிய எழுத்தாளர் பணிபுரிந்தார். தமிழக இலக்கியமும், வாசிப்பாளர்களும் மதிக்கின்ற மிக பெரிய மாண்பு, ஆளுமை படைத்தவர். அவர் அங்கே பணிபுரிந்த காலத்தில் - ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அங்கே அவரின் எழுத்தை நேசிக்கின்ற ஒருவர் "இந்த மாதிரியான குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார்.

நம் மரியாதைக்குரிய எழுத்தாளர் இப்படி பதில் சொன்னார். "அந்த பத்திரிகை குப்பை தான். ஆனா என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையான்னு மட்டும் பாருங்க" என்றார். என்ன ஒரு ஆணித்தரமான, நேர்மையான பதில். நேர்மைக்கு சொந்தக்காரராக இருப்பின் - அச்சப்பட வேண்டியதில்லையே. இப்படியொரு பதிலை பெற பத்திரிகை நிர்வாகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி பதில் தந்தது நிர்வாகத்திற்கும் தெரிந்தது. பிறகு மதிப்புக்குரிய அந்த எழுத்தாளர் - அங்கிருந்து விலகி விட்டார்.

 இப்படிப்பட்ட எழுத்தாளர் பணிபுரிந்த பத்திரிகையில் தான் - சரித்திர கதை என்கிற போர்வையில் சாண்டில்யனை வைத்து ஆபாசங்களை அள்ளி இறைத்தார்கள். ஹேமா ஆனந்தீர்த்தன் என்பவரை வைத்து எழுதப்பட்ட ஆபாச கதைகளை - எண்பதுகளின் மத்தியில், துக்ளகில் துர்வாசர் எனும் எழுத்தாளரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டது.


"சொல்வதெல்லாம் உண்மையை" எழுத எதற்கு ஒரு எழுத்தாளரை அமர்த்தி - சம்பளமும் தர வேண்டும். உங்களுக்குள்ளேயே இருக்கிறதே ஆயிரம் "சொல்வதெல்லாம் உண்மை" கள்.

கம்யூனிஸ்ட்கள், "நல்லா பீதிய கிளப்பி விடுறாங்கய்யா"


December 17, 2011

கம்யூனிஸ்ட்கள், "நல்லா பீதிய கிளப்பி விடுறாங்கய்யா"

சமீபத்தில் படித்த ஒரு கம்யூனிஸ்ட்டின் கட்டுரை, வழக்கம் போல ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை ஓரளவுக்கேனும் பேணும் மக்கள் ஆட்சியின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளது. (அவர்களின் வேலை அது தானே) இன்றைக்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அடையாள அட்டை தருவது தவிர்க்க இயலாததாகி விட்டது. அடையாள அட்டை என்பதை அரசு குடிமக்களை கண்காணிக்கும் அட்டை என்கிற தவறான பயத்தில் - கம்யூனிஸ்ட்கள் "பீதியை கிளப்பியதை" வாசியுங்கள்.

அரண்டவன் (கம்யூனிஸ்ட்) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். "குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள் - நாட்டு மக்களை கண்காணிப்பது என்பது தொடக்க காலம் முதல் அரசுகள் செய்து வருவது தான். மக்களின் பாதுகாப்பு, எச்சரிக்கை என பல காரணங்கள் இதற்காக கூறப்பட்டாலும், அரசு குறித்து மக்கள் என்ன கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவது தான் ஆதார நோக்கம்.

தொழில்நுட்ப அறிவும், பொருட்களும் அதிகரிக்க, அதிகரிக்க அரசுக்கு தெரியாமல் மக்கள் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தனி மனித உரிமை குறித்து மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசுகள், அவர்களின் படுக்கையறை வரை கண்களை நுழைத்து வேவு பார்க்கின்றன. அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகளை செய்து தர மறுக்கும், பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் அற்ப மானியங்களைக் கூட வெட்டும் அரசு இது போன்ற கண்காணிப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டியிறைக்கின்றன." என்கிறது கட்டுரை.

ஏற்கனவே எனது ஒரு பதிவில் - வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருப்பதை கூட - கம்யூனிஸ்ட்டை போல ஒருவர் குற்றம் சொல்லி இருந்தார். அதற்கும் பதில் சொல்லி இருந்தேன். மக்களை அரசோ, காவல்துறையோ இரண்டு விதமான காரணங்களுக்காக கண்காணிக்கிறது. உதாரணத்திற்கு சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்கிறவர் மீதெல்லாம் சந்தேகப்பட்டு கேமரா பொருத்தப்படவில்லை. அப்படி எவரேனும் சொன்னால் அது முட்டாள்தனம். அப்படி தான் இந்த கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள்.



குற்றம் செய்யாதவர்கள் - கண்காணிப்பு கேமராவை ஒரு அலங்கார விளக்காக நினைத்து கொள்ளலாம்."கூட்டத்தை பயன்படுத்தி குற்றம் செயல் புரியும் நபர்களை பிடிக்க, சாலை விபத்தினை உடனடியாக கண்டறிய, நெரிசலான போக்குவரத்தை சீர் செய்ய என்பதற்கு தான் கண்காணிப்பு கேமராவே ஒழிய - சாலையில் செல்கிறவரை எல்லாம் திருடர்கள் என்று சந்தேகித்து அல்ல"... மேலும் சாலை வசதிமே சரியில்லை. எதற்கு வீணாக கேமரா என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படி கேட்டால், அவர்களுக்கான கேள்வி. "நாட்டில் பெருவாரியான மக்கள் பட்டினியில் இருக்கும் போது உங்களுக்கு எதற்கு கணினியும், இணையமும் என்று கடாசுவிர்களா?"

இன்றைக்கு வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்துகிறார்கள். ஏன். குடும்பத்தினர் பாதுகாப்புக்கு. ஆனால் "பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு பொருத்தி இருக்கான்" என்று அரை வேக்காடுகள் சொன்னால் அதற்கென்ன செய்ய முடியும். கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள். "வாடிக்கையாளர்களை எல்லாம் திருடர்களாக பார்க்கிறார்கள்" என்றா அர்த்தம். பணியிடங்களில் கேமரா... அடையாள அட்டை. "அதற்காக நான் வேலைக்கு போகமாட்டேன்" என்றா சொல்வார்கள்.

ஒரு நிறுவனமே உங்களை கண்காணிக்கும் போது - அரசு கண்காணிப்பதில் என்ன தவறு இருந்து விட முடியும். அரசு குடிமக்களை கவனிக்கிறது என்றால் - அதில் அரசின் சுயலாபத்தோடு - மக்களின் பாதுகாப்பை பாதுகாக்கும் அம்சமும் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் "மக்களை காக்க தவறிய அரசாங்கம்" என்று "கிளம்பிட்டாய்யா கிளம்பி" என்று கிளம்பிவிடுவீர்கள். அதற்கடுத்து கட்டுரையாளர் புரட்டு, புரட்சி என்கிறார். அப்படி பேசினால் தானே கம்யூனிஸ்டு.

 "அண்மையில் துனீசியாவில் தொடங்கி லிபியா ஈறாக அரேபிய ஆப்பிரிக்க நாடுகளிலும், கிரேக்கம், இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க வால் ஸ்ட்ரீட் முற்றுகையுமாய் உலகெங்கும் அரசுக்கெதிராக வெடித்துக் கிளம்பி கலவரம் செய்து வருகிறார்கள் மக்கள். அதை முளையிலேயே கண்டுபிடித்த கிள்ளி எறிவதற்காக மக்கள் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்களின் செயல்பாடு என்ன? சிந்தனை என்ன? பொழுபோக்குகள் எப்படி? என அவர்களின் ஒவ்வொரு அசைவையும் அறிவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கின்றன" என்கிறார் கட்டுரையாளர்.

எகிப்தை ஏன் விட்டு விட்டார். வருஷா வருஷம் புரட்சி நடப்பதால் எகிப்து புரட்சிக்கு மரியாதை இல்லையோ? அரபு நாடுகளின் புரட்சியை பார்த்து இந்தியாவுக்கு எந்த பயமும் இல்லை. கம்யூனிஸ்ட்கார சர்வாதிகாரி சீனாவுக்கு தான் அச்சம் வந்தது. கம்யூனிஸ்ட்களும் - மதவாதிகளை போல தம் தவறுகளை மறைக்கக்கூடியவர்கள். முழு உண்மையை பேச முடியாதவர்கள் "மனித உரிமை" பற்றி பேசி யாரை ஏமாற்ற. சீனா தான் தம் மக்களை கண்காணிக்க துவங்கி பல்வேறு தளங்களை தடை செய்தது. கூகுள் தேடு பொறியில் மல்லிகை(புரட்சி) என்கிற வார்த்தையையே தடை செய்தது.

சர்வாதிகாரிகளின் தேசத்து புரட்சி "ஜனநாயகத்தை" கோரி என்பது இந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு புரிவதே இல்லை. ஒரு வேளை மக்களை அரசு கண்காணித்தால் - யார் அதற்காக அச்சப்பட வேண்டும். காவல்துறையை பார்த்து யார் அச்சப்படுவது. "திருடனும், தீவிரவாதியும்..." இரண்டுமாக நான் இல்லாத போது - அரசு என்னை கண்காணிப்பது என் பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்.

வெளி நாட்டில் இருந்து கொண்டே வாக்காளர் அடையாள அட்டையில் நமது பெயர், முகவரி விவரம் சரி பார்க்கலாம்


வெளி நாட்டில் இருந்து கொண்டே வாக்காளர் அடையாள அட்டையில் நமது பெயர், முகவரி விவரம் சரி பார்க்கலாம்

இந்த பதிவில் வரும் விவரங்கள் அனைத்தும் எனக்கு சகோதரர் ஒருவரின் E-MAIL ( Hkzubair Haja, Jahir Hussain ) மூலம் வந்தவை இதனால் பயன்அடைப்பவர்கள் நன்றியை நண்பருக்கு கூறுங்கள் இதை மீள் பதிவு செய்ததுமட்டும் எனது பணி.


நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலைசெய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில்இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில்உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதிலசோதித்துக்கொள்ளலாம்.துபாயில் வேலை செய்யும் ஒருவருக்குசைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள்அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காளஎன்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ளதேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம்சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. துபாயில் இருந்தே விவரங்களைசரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிகசெய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போதுஉங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில்முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம்.அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சுசெய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாகஉங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தைகிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதைகிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.




தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

கணினி அடிமைகள்


கணினி அடிமைகள்











Computer addicts never die... They just go offline

ஆபாசப்பிரியர்களுக்கான உணவு விடுதி. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா!


ஆபாசப்பிரியர்களுக்கான உணவு விடுதி. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா!


எங்கும் எதிலும் எப்போதும் ஆபாசத்தை விரும்பும் ஆபாசப்பிரியர்களுக்காக Barcelona வில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பம் பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது, இதிலுள்ள விசேஷம் ஒரு பெரிய தட்டில் சில மரக்கறிகளுடன் ஒரு முழு நிர்வாண பெண்ணும் வைக்கப்பட்டு கூடவே கரண்டியும் வைக்கப்பட்டுள்ளது, சூடான உணவு தயார்! 


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ..... ! எந்த ஒரு சிற்பத்தையும் கண்டபடி செய்துவிட்டு நடுவில் ஒரு பெண்ணை நிர்வாணமாக இருத்திவிட்டால் மட்டும் போதும் உங்க சிற்பம் சூப்பர் ஹிட் ஆகிடும்,