தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5
என்ன 
சகோதரர்களே நண்பர்களே உடல் வலி எப்படி இருக்கிறது?
என்னது வீடியோவை வேடிக்கை 
மட்டும் தான் பாத்தீங்களா? ஹலோ நான் விசாரித்தது வீடியோவைப் பார்த்து அதன்படி 
செய்து பார்த்தவர்களை.யாருங்க இந்த வீடியோ பயிற்சியை பார்த்தது இப்ப தாங்க முதன்முறையாக இந்த பிளாக்கை பார்க்கிறேன் ஆமா என்ன பயிற்சி? என்ன வீடியோ? என்று கேட்பவர்களுக்கு.
தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -4
     
                             இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்
இது 
நான்காம் பாகத்திலுள்ள வீடியோவின் தொடர்ச்சி அந்த பயிற்யோடு இதனை தொடர்ச்சியாக 
செய்ய வேண்டும்.
செய்முறை விளக்கம்
இப்பயிற்சியை சில இடங்களில் சரியாக செய்யவிட்டால் எந்த 
பலனும் கிடைக்காது அது போன்ற இடங்களை மட்டும் நான் உங்களுக்கு சுட்டி 
காட்டுகிறேன்.
இப்படி 
திரும்பும் போது கால்களை திருப்பக் கூடாது. முதுகை எந்த அளவுக்கு திருப்ப முடியுமோ 
அந்த அளவுக்கு திருப்பவும். இப்படி பத்து முறை செய்யலாம்.
பக்கவாட்டில் 
கால்களை குனிந்து தொடும்போது பக்கவாட்டில் முழங்கால்களை மடக்காமல் தொட 
வேண்டும்.
கைகளால் 
கால்களைப் பிடித்து தலையால் முழங்காலை தொடும்போது  தொடுகின்ற முழங்காலை மடக்கக் 
கூடாது நேராக இருக்க வேண்டும்.
பின் 
கால்களை நேராக ஊன்றி முன் முழங்கால்களை மடக்கி தலையை கொண்டு தொடும் போது கைகளை 
இப்படி நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
(கொஞ்சம் 
கஷ்டம் முயற்சி செய்யுங்கள்)
 பாதத்தின் 
கீழேயுள்ள அடிப்பாகத்தை கைகளால் பிடித்துக் கொண்டு முழங்காலகளை மடக்காமல் நேராக 
வைக்கவும்.
(முழங்கால்கள் 
முன்னே வந்தால் பலன் இல்லை)
இப்படி 
பக்கவாட்டில் உடம்பை வளைக்கும் போது நேராக நிற்க வேண்டும்.
இந்த பயிற்சியில் உங்களுக்கு எதாவது 
சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக