மனைவியின் மார்பில் கணவன் வாய் வைத்து பால் 
குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு 
ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி 
மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் 
தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக 
அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு 
இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் ‘ஆம் 
கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்’ என்று ஃபத்வா 
கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது 
வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் ‘மார்க்க 
தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது’ என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு 
சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் 
செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை 
என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.
தனக்கென்று ஒரு பெண்ணை மனைவியாக சொந்தப்படுத்திக் 
கொண்ட ஒரு ஆணுக்கு ‘அந்த பொழுதில்’ ‘அந்தக் காரியத்தை செய்யாதே’ என்று தடை 
விதிக்கப்பட்டிருந்தால் இதில் நூறு சதவிகிதமான ஆண்கள் வரம்பு மீறிவிடவே 
செய்வார்கள்.
மனைவி உங்களின் ஆருதலுக்குரியவள் என்று 
சொல்லியுள்ள இறைவன் இதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இறைவனின் தூதர் (ஸல்) 
அவர்கள் வழியாகவும் தடையொன்றும் வரவில்லை.
ஆரம்ப காலங்களில் குழந்தைகளை செவிலித் தாய் 
(மாற்றுத் தாய்) இடம் கொடுத்து பால் கொடுத்து வளர்க்கும் முறை இருந்தது. 
(இன்றைக்கும் இங்கொண்றும் அங்கொண்றுமாக இது நடக்கின்றது) இப்படி பிற பெண்ணிடம் ஒரு 
குழந்தை பால் குடிப்பதால் பால் கொடுத்த அந்த பெண்ணிற்கும் பால் குடித்த இந்தக் 
குழந்தைக்கும் உள்ள உறவை இஸ்லாம் தாய் – மகன் என்ற உறவாக்கியது. பால் குடித்த அந்த 
குழந்தை வளர்ந்தால் தனக்கு பாலூட்டிய அந்த பெண்ணையோ அல்லது அந்த பெண்ணிடம் 
பாலருந்திய பிற பெண்ணையோ இந்த ஆண் திருமணம் செய்ய முடியாது.
இதற்கெல்லாம் காலவரையறை என்ன? எப்போது பால் 
குடித்தாலும் தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடுமா..? என்பதெற்கெல்லாம் இஸ்லாம் 
பதில் சொல்லி விட்டது. தாய் மகன் என்ற உறவு ஏற்பட வேண்டுமென்றால் ஒரு குழந்தை 
இரண்டு வயதுக்குட்பட்ட காலங்களில் எத்துனை பெண்களிடம் பாலருந்தி இருந்தாலும் 
அத்துனைப் பெண்களும் அந்த குழந்தைக்கு தாய் என்ற அந்தஸ்த்தில் வந்து விடுவார்கள். 
இரண்டு வயதை கடந்த பிறகு எந்த பெண்ணிடம் அந்த குழந்தை பால் குடித்தாலும் 
அவர்களுக்கு மத்தியில் தாய் – மகன் என்ற உறவு ஏற்படாது என்பதுதான் இஸ்லாம் 
விளக்கியுள்ள பதிலாகும்.
“குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பூரணமாக பெற்றத் 
தாய் பாலூட்ட வேண்டும்.” (அல் குர்ஆன் 2:233)
பால்குடி உறவு ஏற்படுவதற்கான காலகட்டம் இந்த 
இரண்டு ஆண்டுகள் தான். இதை கீழ் வரும் நபிமொழி அறிவிக்கின்றது.
“நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். 
அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் 
முகம் மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் 
விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்” 
என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து 
பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (குழந்தைப் 
பருவத்தில் அருந்தியிருந்தால்) தான்” என்று கூறினார்கள்.” (ஆயிஷா(ரலி) அறிவிக்கும் 
இந்த செய்தி புகாரியில் 5102.ல் இடம் பெறுகிறது)
“குழந்தை பாலருந்தும் பருவத்தில் பசியின் 
காரணத்தால் வயிற்றை சென்றடையும் போதுதான் தாய் மகன் என்ற உறவு ஏற்படும் என்று 
நபி(ஸல்) கூறினார்கள்.” (உம்மு ஸலமா(ரலி) திர்மிதி)
இதே கருத்து இன்னும் சில ஹதீஸ்களிலும் 
வருகின்றது.
எனவே பால்குடி மறக்கடிக்கப்படும் 
இரண்டாண்டுகளுக்குள் ஏற்படும் இந்த உறவை கணவன் மனைவிக்கு பொருத்திக் காட்டுவது 
பெரும் அறியாமையாகும். மனைவியிடம் பால் குடித்தால் அவள் மனைவி என்ற அந்தஸ்த்தில் 
தான் இருப்பாள். இது இல்லறத்திற்கு உட்பட்ட காரியம் என்றே கருதப்படும்.
ஒரு விஷயத்தில் மட்டும் நாம் எச்சரிக்கையாக 
இருந்துக் கொள்ள வேண்டும். குழந்தையை பட்டினிப் போட்டுவிடக் கூடாது.
enayamthahir. thanks
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக