ஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த 
மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
 
 
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ராணி 
(பெயர் மாற்றப்பட்டுள்ளது), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக 
வேலை செய்து வருகிறார். 
சம்பவத்தன்று ஆசிரியை ராணியின் வீட்டில் உள்ள 
குளியலறையில் அவரது கணவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளிச்சத்துக்காக 
வைக்கப்பட்டு இருந்த `வெண்டிலேட்டர்' ஜன்னலில் ஒரு கேமரா செல்போன் இருப்பதை 
பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
அந்த செல்போனில் பொருத்தப்பட்டு இருந்த `மெமரி 
கார்டில்' பதிவான காட்சிகளை கம்ப்ïட்டரில் போட்டு பார்த்தனர். அப்போது, ஆசிரியை 
ராணி உள்பட அவருடைய குடும்பத்தினர் குளித்த காட்சிகள் அதில் பதிவாகி 
இருந்தன. 
குளியலறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட கேமரா 
செல்போன், அந்த பகுதியைச் சேர்ந்த முத்துவிஜய் (18) என்பவருக்கு சொந்தமானது. இவர் 
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 
விசாரணை நடத்தினார். 
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முத்து விஜயும், 
அவருடைய நண்பர்களான திசையன்விளையை சேர்ந்த சுதாகர் (18), அமுதன் (22) ஆகியோரும் 
சேர்ந்து, ஆசிரியையின் வீட்டு குளியலறையில், ரகசியமாக கேமரா செல்போனை வைத்து படம் 
பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
உடனடியாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது 
செய்யப்பட்ட அமுதனும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக