 சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் 
என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள். 
சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், 
ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட 
வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச 
அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார்.
சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் 
என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள். 
சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், 
ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட 
வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச 
அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார். கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வைக்கிறார்கள். அவர்களுக்கு போதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைகளை தொட்டு டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துபவர்களே பிடுங்கி கொள்கிறார்கள்.
இந்த பெண்களிடம் மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் தடம் புரளும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம்பெண்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
ஆபாச நடன கிளப்புகளை மூடக்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக