ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் உள்ளுராட்சி மன்ற 
உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுதந்திரக் கட்சி 
தலைமையகம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக பிரதேச 
சபைகள், நகரசபைகள் மற்றும் மாநாகரசபைகளுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை 
தோற்கடிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என 
இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளனது.
இந்நிலையில், ஆளும் 
கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட யோசனையை எதிர்க்கும் ஆளும் கட்சி 
பிரதிநிதிகளின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 
தலைமையகம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு வாக்களிக்கும் 
பட்சத்தில் பிரதிநிதிகள் கட்சியின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் என்று 
கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த 
ராஜபக்ச தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் இது தொடர்பான கூட்டம் அண்மையில் 
நடைபெற்றபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற வரவு 
செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
www.thedipaar.com  நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக