WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏



வரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம் 
விட்டொழிக்காதவரை இத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். 
அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம்
செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் முஸ்லிம் 
இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்;
ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்  
வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு 
செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை 
இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.

திங்கள், 30 ஜூலை, 2012

உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்


உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்



  1. அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -

  2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். அறிவிப்பவர் :வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

புனித ரமலானில் நன்மை பெறுவோம்


புனித ரமலானில் நன்மை பெறுவோம்


 

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:

செவ்வாய், 24 ஜூலை, 2012

ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு


எழுதியவர்/பதிந்தவர்/உரை

- அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

குர்பானியின் சட்டங்கள்




கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே! இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் உழ்ஹியா எனும் குர்பானி கொடுப்பது வசதியுள்ளவர்கள் (கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டியதில்லை) மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அவற்றின் சட்ட திட்டங்களை அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மூலம் தெரிந்து கொள்வோம்.


குர்பானியின் வரலாறு
இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுமையின் போது இஸ்மாயீல் (அலை) எனும் குழந்தையை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததால் தன் மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களை (சோதிப்பதற்காக) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் மூலம் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்ப்டடார்கள். அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய ஊசலாட்டங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஷைத்தானுக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு பலிப்பிராணியை பலியிடுமாறு கட்டளையிட்டான். மேலும் பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை விட்டுவைத்தான். இந்த விவரங்களெல்லாம் அல்குர்ஆனின் 37வது அத்தியாயமான அஸ்ஸாஃப்பாத்தில் 100 முதல் 111 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 23 ஜூலை, 2012

நோன்பாளிகளே! நோன்பின் நோக்கம் !வெறும் பட்டினியா?




நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)





அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்


49 கேள்வி: சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் தங்களது ஃபித்ராவை வசூல் செய்து தங்களது தாயகத்திற்கு அனுப்பி அங்கேயே வினியோகம் செய்யக் கூடாது, எங்கே வசூல் செய்யப்படுகின்றதோ அங்கேயே வினியோகம் செய்ய வேண்டும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு உங்களது விளக்கம் என்ன? அஷ்ரப் அலி, ஜுபைல்