சனி, 7 ஜூலை, 2012
செவ்வாய், 3 ஜூலை, 2012
உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)
Posted by பஸ்மின் கபீர்
இறை திருப்தியைப் பெற வேண்டி, நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய புனித றமழான் மாதத்திலே.... நாம் அனைவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு, அதன்படி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 'உங்கள் வீட்டுப் பெண்களுக்காக' என்ற றமழான் சிறப்பு பதிவு உங்களுக்காக....
புதன், 27 ஜூன், 2012
நபித்தோழர்களை பின்பற்றுவது என்பதன் விளக்கம்
எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற
ஆசிரியர்கள்
KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண
நிகழ்ச்சி..”
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள்
வழங்குபவர்: மௌலவி ஹாஜி அலி பிர்தவ்ஸி (KIDC இமாம்)
நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி)
இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால்
Download mp4 video
islamkalvi. THANKS
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள்
வழங்குபவர்: மௌலவி ஹாஜி அலி பிர்தவ்ஸி (KIDC இமாம்)
நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி)
இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால்
Download mp4 video
islamkalvi. THANKS
சனி, 23 ஜூன், 2012
குர்ஆனில் துஆக்கள்
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا
الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ
الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள்
உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு
அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர்
வழியுமல்ல. 1:5-7
வெள்ளி, 22 ஜூன், 2012
இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!
Posted by இஸ்லாமிய பெண்மணி
நாம்
தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக
சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய
சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி
நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை
ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.
திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:
ஞாயிறு, 17 ஜூன், 2012
நினைத்துப் பார்!

கட்டை கட்டையாய்
ஒட்டுத்துணியுடன்
ஓயாது உலாவருகின்ற
இளைஞர் சமுதாயமே! – ஒரு கணம்
மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!
ஒட்டுத்துணியுடன்
ஓயாது உலாவருகின்ற
இளைஞர் சமுதாயமே! – ஒரு கணம்
மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!
பாசமெனும் பள்ளியறைக்குள்
நேசம் எனும் நெருக்கத்தினால்
மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற
மாந்தர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
நேசம் எனும் நெருக்கத்தினால்
மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற
மாந்தர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
நித்திரையின்றி நித்தம் நித்தம்
நெருங்க முடியா சத்தம் சத்தம்
வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அது
மண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.
நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அது
மண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.
நாகரீகம் எனும் நாசத்தினால்
நாள் தோறும் வரும் வேசத்தினால்
காதல் என்று கைகோர்த்து – இது
மண்ணறையை மறந்தவர்களின் காத்திருப்பு.
நாள் தோறும் வரும் வேசத்தினால்
காதல் என்று கைகோர்த்து – இது
மண்ணறையை மறந்தவர்களின் காத்திருப்பு.
மார்க்கத்தில் மந்தைகளாக
உலகத்தில் உத்தமராக
உலா வருகின்ற இளைஞர்களே!
மண்ணறை எனும் படுகுழியை நினைத்துப்பார்!
உலகத்தில் உத்தமராக
உலா வருகின்ற இளைஞர்களே!
மண்ணறை எனும் படுகுழியை நினைத்துப்பார்!
மதுவுக்குள் மாட்டி
தினந்தோறும் அதில் மூழ்கி
முதுமை எனும் முதுகு உணர்த்தினால் மார்க்கத்தை மறந்த
மடையர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
தினந்தோறும் அதில் மூழ்கி
முதுமை எனும் முதுகு உணர்த்தினால் மார்க்கத்தை மறந்த
மடையர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!
ஆடையில் ஆரறை குறைப்பு
அதில் ஓரிரை மறைவு
பாரினில் பாழடைந்தவர்களின் நடிப்பு – இது
மண்ணறை எனும் படுகுழியை மறந்தவர்களின் நினைப்பு!
அதில் ஓரிரை மறைவு
பாரினில் பாழடைந்தவர்களின் நடிப்பு – இது
மண்ணறை எனும் படுகுழியை மறந்தவர்களின் நினைப்பு!
இளைஞர் கூட்டமே!
இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்
இருப்பைக் காவுகொள்ளும் கொடூரம் நிறைந்த
மரணத்தை மறந்து வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடாதே!
மரணத்தை நினைத்துப்பார்!
இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்
இருப்பைக் காவுகொள்ளும் கொடூரம் நிறைந்த
மரணத்தை மறந்து வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடாதே!
மரணத்தை நினைத்துப்பார்!
அன்புடன்
எம்.எச்.பஸ்மிய்யா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உழைக்கும்
உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது).
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால்
அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்துண்ண ஊக்கப்படுத்துவார்கள். ஆக்க வழியையும்
காட்டுவார்கள். சம்பாதித்து உண்ணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித்
தருவார்கள்.
மேலும்
“தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருளைப் பெற்றிருப்பவன் பிறரிடம்
யாசித்தால் மறுமையில் முகத்தில் சதையின்றி வருவான்” என்று எம்பெருமானார்
இயம்பியதை இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பது திர்மிதீ, நஸஈ கிதாபுகளில்
காணப்படுகிறது.
தற்காலத்தில்
குடும்பத்தினர் பெயரில் அல்லது குடும்பப் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்து வணிக
நோக்கில் தொண்டு நிறுவனங்களைத் துவக்கி துலாக்கோலில் நிறுக்க முடியாத அளவிற்கு
ஆதாயம் அடைவோர் மக்களிடம், மாணவர்களிடம் நிதிகேட்பது நீதிக்குப் புறம்பானது என்பது
இக்கூற்றிலிருந்து பெறப்படும் உண்மை. ஈயென இரத்தல் தீயினும் தீய தீமை என்று
தெரிந்து, தெளிந்து ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்று இலவசங்களில் இன்பம் காணாது
உழைத்துப் பிழைப்போம். உயர்வாய் வாழ்வோம்.
