WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

ஞாயிறு, 6 மே, 2012

ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது ?




ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது நம்மில் நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கிறது !!!!!!!


மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்
இறந்தவரின் பாவங்களை மன்னிக்கும்மாறும் மறுமையில் அவருக்கு சொர்க்கத்தை அளிக்கும்மாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.


ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என கேட்க்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள் அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி

இத்தொகுப்பின் நோக்கம் ஜனாஸா தொழுகையில் ஓதப்படவேண்டியவை என்ன ? என்பதைப் பற்றி தெரியாத சகோதரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதர்க்காகவே !


தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ)ஆகும் அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் அறிவிப்பவர்:- அலீ(ரலி) நூல்கள்: அபூதாவூத்,திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்

எனவே ஜனாஸா தொழுகைக்கும் உளூ அவசியம் உளூ எடுத்தப் பின் கிப்லாவை முன்னோக்கி நிற்க்க வேண்டும் மற்ற தொழுகைகளைப் போல இவற்றில் ருகூவு ஸஜ்தா போன்றவை கிடையாது நின்ற நிலையில் நான்கு தக்பீர்களைக் கொண்டு சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்

தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை

நான்கு தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவேளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது மாறாக ஒரு தக்பீருக்கும் இன்னொரு தக்பீர்க்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்

முதல் தக்பீருக்குப் பின்

முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும்

இரண்டாம் தக்பீருக்கு பின்

இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ””அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும் மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும் ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள் அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார் அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக்(ரலி) நூல்- புஹாரி

பொருள்:

இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயக ! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக ! இவர் செல்லுமிட்த்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக ! பனிகட்டி ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக ! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவறுக்கு ஏற்படுத்துவாயாக !
இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக ! கப்ரின் வேதனையை விட்டும் நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக !

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வரலாறு


வரலாறு


நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
 பல இணயங்களில் பரவி  கிடக்கும் நபிமார்கள் மற்றும் சஹாபாக்கள் வரலாறுகளையும்,ஹதிஸ் தொகுப்புகளையும் இங்கு ஒருங்கிணைத்து தந்திருக்கின்றேன் , இத்தகையே படிப்பினை தரும் வரலாறுகளை நாம் படித்து பயன் பெறுவதோடு மட்டுமில்லாது நமது வீட்டு சிறுவர்,சிறுமிகளையும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படிக்க தூண்டுங்கள்.ஏனெனில் நமது குழந்தை செல்வங்கள் நபிகள் (ஸல்) அவர்களுக்கு பின் அபூபக்கர்,உமர்,உஸ்மான் மற்றும் அலி (ரலியள்ளாஹு அன்ஹும்)அவர்களை தாண்டி ஏனைய சஹாபாக்கள் குறித்த அறியாத நிலையிலேயே இருக்கின்றனர்., அத்தோடு நபிமார்கள் வரலாறுகள் எனும் பெயரில் கற்பனையாக புனையப்பட்ட பல நிகழ்வுகள் மக்கள் இனங்கண்டு அதை புறந்தள்ளி அத்தகைய தூதர்களின் தூய வரலாற்றை அறிந்திடவுமே "வரலாறு" எனும் இந்த பகுதி!.நான் படித்த,ரசித்த அவைகளை என்னைப்போலவே ஏனையோருக்கும் குறிப்பாக வரலாற்று பக்கங்களில் வாய்மை தேடுவோருக்கும்
 பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இங்கு... இந்த வரலாற்று பார்வைகள் உங்கள் வாயிலுக்கே....

நபிகள் (ஸல்)வரலாறு வரி வடிவில்

நபிகள் (ஸல்)வரலாறு ஒலி வடிவில்

குர்-ஆனில் இடம் பெற்ற நபிமார்கள் பெயர்கள்

ஹதிஸ்கள் என்றால் என்ன- ஒரு ஆய்வு பார்வை

ஹதிஸ் நூல்களின் வகைகள்

இஸ்லாமிய (சில) கலைச்சொற்கள்

இஸ்லாமிய (சில) கலைச்சொற்கள்-2

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) PDF File

அம்மார்[ரலி]

ஸுலைம்[ரலி].

அப்துல்லாஹ் பின் மஸ்ஹீத் (ரலி PDF File


























































அன்னை ஜைனப் (ரலி)

சட்டக்கலை அறிமுகம்—01

வரலாறு-நபி மற்றும் சஹாபாக்கள் வீடியோ

காலித் பின் வலித் (ரலி)

சட்டக்கலை அறிமுகம்—02

அன்னை உம்மு ஹபீபா (ரலி)

உஸாமா பின் ஜைத் (ரலி)      

சட்டக்கலை அறிமுகம்—03

மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரலி)

அன்னை சஃபியா (ரலி)

சட்டக்கலை அறிமுகம்—04

புஹாரி முழுவதும் தமிழில் பதிவிறக்கம்

முஸ்லிம் ஷரிப் தமிழில் பதிவிறக்கம்

இட்டுக்கட்ட ஹதிஸ்கள் பதிவிறக்கம்

நவவி ஹதிஸ் தொகுப்பு பதிவிறக்கம்

ரியாளுஸ் ஸாலிஹின் பதிவிறக்கம்

ஸுனைன் அபுதாவூது பதிவிறக்கம்

ஹதிஸ் குதுஸி பதிவிறக்கம்

புலுகுல் மராம் பதிவிறக்கம்

இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி)

நபியூஸூஃப் (அலை)&நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்புகள்

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி)

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.

அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ (ரலி)

கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு

இறுதி நபியின் இறுதி பேருரை

அம்மார் பின் யாஸர் (ரலி)

ஹப்பாப் பின் அல் அரத்து (ரலி)

அன்னை உம்மு ரூமான் (ரலி)

அன்னை உம்மு உமாரா (ரலி)

அன்னை கன்ஸா பின்த் அம்ரு (ரலி)

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

அன்னை அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)

அன்னை ஸஃபியா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி)

ஹபைப் பின் அதீப் (ரலி)

அன்னை உம்மு ஐமுன் (ரலி)

அன்னை அர்ரபீ பின்த் மாஊத் (ரலி)

அன்னை உம்மு ஹரம் பின்த் மல்ஹான் (ரலி)

அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி)

அன்னை உம்மு ஸீலம் (ரலி)

பிலால் (ரலி)

அன்னை ஃபாத்திமா (ரலி) பின்த் முஹம்மது (ஸல்)

அன்னை உம்மு ஹகீம் (ரலி)

அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி)

அபுதல்ஹா மற்றும் உம்மு சுலைம் (ரலி)

ஜைத் பின் தாபித் (ரலி)

அன்னை உம்மு அம்மாரா (ரலி)

அல்காமா (ரலி)

அன்னை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)

உமைர் பின் வஹப் (ரலி)

அன்னை ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி)

அன்னை சுமையா பின்த் கபாத் (ரலி)

காப்பின் மாலிக் (ரலி)

உபைய் (ரலி)

ஹம்ஸா (ரலி)

இமாம் அல் புஹாரீ (ரஹ்) (ஹிஜ்ரி 194-259)

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) (ஹிஜ்ரி 80-150)

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)

இப்னு தைமிய்யா (ரஹ்)

இமாம் அஷ்ஷாஃபிஈ (ரஹ்) (ஹிஜ்ரி 150-204)

இமாம் மாலிக் (ரஹ்) (ஹிஜ்ரி 93-170)

ஹிஜ்ரத் சித்ரவதைகளும்,அற்பணங்களும்

அகழ்ப்போர் வரலாறு

வரலாறு கூறும் வாய்மை நபியின் பண்புகள்

"பத்ரு" தரும் பாடம்

மிஃராஜ் (அற்புத )பயண வரலாறு

உமர் (ரலி) மரணம் தரும் படிப்பினை

இஸ்ராவும்,மிஃராஜீம்

வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!


                                           ஓரிறையின் நற்பெயரால்


இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...

ஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் ஒரு வாலிபர்...


கி.பி 634  ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.
பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:
"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.
மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள். 
சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...
. . . 
ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .
உமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அவர் ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணித்த கலிபா உமர்(ரலி) அவர்கள் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் அந்த பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார்கள். ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...

                                         அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Reference :

http://ta.wikipedia.org/wiki/omar(rali)
http://azeezbaqavi.blogspot.com/
http://www.tamililquran.com
http://peacetrain1.blogspot.com/
http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
Gibbon - In The Decline and Fall of the Roman Empire
Washington Irving - In his book Mahomet and His Successors

www.naanmuslim.com thanks

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

உலக முஸ்லீம் மக்கள் தொகை.


உலக முஸ்லீம் மக்கள் தொகை.

Posted by nidurali | Labels: | Posted On Monday, April 9, 2012 at 8:36 PM


 உலக முஸ்லீம் மக்கள் தொகை
கிட்டத்தட்ட ஒரு நான்காவது உலக மக்கள் தொகையில் இன்று முஸ்லிம்கள்    உள்ளனர். முஸ்லீம் மக்கள் உலகம் முழுவதிலும் நம்பிக்கையுடைய  விசுவாசிகளாக இருக்கும் ஒரு  சமூகம்.  ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், முஸ்லீம்- மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர் .
இஸ்லாம் பெரும்பாலும் அரபு உலகம் மற்றும் மத்திய கிழக்கு தொடர்புடையதாக இருந்தாலும், முஸ்லிம்கள் அரபு நாடுகளில் 15% உள்ளனர்.
  முஸ்லீம் மக்கள் தொகை (2009) நாடுகள்:

முஸ்லிம்கள் வாழும் எண்
இந்தோனேஷியா 203 மில்லியன்
பாக்கிஸ்தான் 174 மில்லியன்
இந்தியாவில் 161 மில்லியன்
வங்காளம் 145 மில்லியன்
எகிப்து 79 மில்லியன்
நைஜீரியா 78 மில்லியன்
ஈரான் 74 மில்லியன்
துருக்கி 74 மில்லியன்
அல்ஜீரியா 34 மில்லியன்
மொராக்கோ 32 மில்லியன்
Iraq 30 மில்லியன்
சூடான் 30 மில்லியன்
ஆப்கானிஸ்தான் 28 மில்லியன்
எத்தியோப்பியா 28 மில்லியன்
உஸ்பெகிஸ்தான் 26 மில்லியன்
சவுதி அரேபியா 25 மில்லியன்
ஏமன் 23 மில்லியன்
சீனா 22 மில்லியன்
சிரியா 20 மில்லியன்
ரஷ்யா 16 மில்லியன்


உலக முஸ்லீம் மக்கள் தொகை
ContinentPopulation
(மில்லியன்) TotalPopulation
2011 ல் (inmillion) முஸ்லீம்
சதவீதம் MuslimPopulation
  2011 (inmillion) உள்ள
ஆப்ரிக்கா 1051,4
52,39%
     554,32
http://draft.blogger.com/blogger.g?blogID=4875587702814665006#editor/target=post;postID=5661238718630534359 ஆசியா 4239.1 32% 1356,28
ஐரோப்பா 740.01 7.6% 56,04
  வட அமெரிக்கா 346.2 2.2% 7,61
தென் அமெரிக்கா 595,9 0,41% 2.45
ஓசியானியா 37.14 1.5% 0,54
மொத்தம்
 7009,75
 28,73%
1977,24

முஸ்லீம் மக்கள் தொகை மொத்தம்  1.84% உயர்வு  காணப்படுகின்றது
உலகளவில்   முஸ்லீம் மக்கள்
2012 2013.62 மில்லியன் ஆகும். = 2.1 பில்லியன்

nidurseasons.blogspot.com thanks

உணர்வும் அதன் உண்மையும் !


உணர்வும் அதன் உண்மையும் !

Posted by nidurali | Labels: , | Posted On Tuesday, April 10, 2012 at 7:38 PM

காண்பதும், படிப்பதும், எழுதுவதும் உணர்வைத் தூண்டக்  கூடியதாக அமைவதனைக் காண முடிகின்றது. உணர்வு இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. அந்த உணர்வுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு வேறுபடுகின்றது. பாதகமான,தவறான உணர்வுகளை   தூண்டக்  கூடிய காட்சிகளும் எழுத்துகளும் தடுக்கப்பட வேண்டும்.அது மக்களுக்கு பல் வகையில் கேடுகளை தந்து பாதகமான் விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது.  மித மிஞ்சிய உணர்ச்சியும் , உணர்வும் உடல் நலத்தினையும் பாதிக்கும். உணர்வை முறையான வகையில் வெளிப்படுத்த வேண்டும். அது கேலிக்கு இடம் தந்ததாக அமைந்து விடக் கூடாது . மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,புரிந்துக்கொள்ளாமல் செயல்படுவது எத்தனை மடத்தனம். இறந்தவர் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் மற்றவர்களுடன் சிரித்துப்  பேசி உணர்ச்சி சிதறிப் போகும் நிலையை உருவாக்கி இருக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் நடந்துக் கொள்ளாமல் தங்களது உணர்வு சிதறிப் போக முனைபவர்களைப் பார்க்க முடியும். சூழ்நிலைகளுக்கு   பொருத்தமற்ற விதத்தில் நடந்துக் கொள்வது உணர்வுபூர்வமாக படிப்பறிவில்லாத அறிவில்லாதவராக அவர் மற்றவருக்கு காட்சி தந்து அவரை மற்றவர்கள் கேவலமாக மதிக்கின்றனர்


  உண்ணும் உணவு உடம்போடு கலந்து உடலை உந்தச் செய்ய வழி வகுப்பதுபோல் உணர்வும் உடம்போடு கலந்துவிட வேண்டும் .அது நன்மை தரக்கூ டிய  உணர்வாக இருப்பது அவசியம். இறைவன் மீது பற்று வைத்து அது  இறை  உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும். நம்முள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர வேண்டும். அது நல்லுணர்வை உண்டாக்கும் .அது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவைக்கு வழி  வகுக்கும் . இறை உணர்வு உள்ளோர் மக்கள் மீது பற்றுக் கொண்டு தன்னிடத்து நல்லுணர்வை உண்டாக்கிக் கொள்வதுடன் மக்களைப் புரிந்துக் கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சேவை  செய்ய  முற்பட்டு மனமகிழ்வார்கள்.  

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

இதுவே உணர்வின் மகத்துவம்

புதன், 11 ஏப்ரல், 2012

இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!






கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.
 
தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்து   கொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை  பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது
 
அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.


சில உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உப்புச் சப்பு இல்லாத
விஷயங்களுக்காக குடும்ப உறவைத் துண்டித்து வாழ்கிறார்கள். மேலும் கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.


அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.


ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்).


கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).


அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறை  மறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.
 
மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) - முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).


பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
 
கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) - அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) - திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.
 
சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) - அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர் (ரலி) - புகாரி).


பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) - திர்மிதீ, அஹ்மத்)


இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.


கோபம் வந்தால் நாம் என்ன பேசுகிறோம் என்று சிந்திப்பதில்லை. இப்படி கோபம் வந்து சிந்திக்காமல் பேசுவதால் எவ்வளவு பெரிய பாதிப்பு நமக்கு மறுமையில் ஏற்படும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி, மற்றவர் அலட்சியவாதி. இந்த வணக்கசாலி எப்பொழுதும் மற்றவருக்கு உபதேசம் செய்து வந்தார். ஒரு நாள் அந்த அலட்சியவாதி இவரைப் பார்த்து என்னை கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லை. நீ உன் வேலையைப்பார் என்றார். இதைக் கேட்ட அந்த வணக்கசாலி, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கமாட்டான் என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இரண்டு பேரும் நிறுத்தப்படும் போது அல்லாஹ் அந்த அலட்சியவாதியை மன்னித்து, வனக்கசாலியைப் பார்த்து, நான் மன்னிக்கமாட்டேன் என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன் அமல்களை நான் அழித்துவிட்டேன் என்று கூறி நரகுக்கு அனுப்பினான். (ஜுன்துப் (ரலி) - முஸ்லிம்). கோபத்தால் சிந்தனையில்லாமல் பேசப்படும் சிறு வார்த்தைக் கூட நம் மறுமை வாழ்வை சீரழித்துவிடும். கோபத்தால் சிந்திக்காமல் பேசப்படும் ஒரு வார்த்தையாக இருந்தாலும் அது நரகத்தின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது என்பதை உணரவேண்டும்.
சரி கோபப்படாமல் அந்தக் கோபத்தை அடக்கினால் என்ன நன்மை? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது கோபத்தை செயல்படுத்த சக்தியிருந்தும் யார் அதை மென்று விழுங்குகிறாரோ அவரை மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்புகின்ற ஹுருல் ஈன் என்னும் கன்னியரைத் தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்குவான் என்று கூறினார்கள். (முஅத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ (ரலி) - திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்).


வீரன் என்று சொன்னால் பலத்தால் மற்றவர்களை அடக்குபவன் என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீரனுக்கு இலக்கணம் கூறினார்கள்: பலத்தால் வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தின் போது கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன் என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).


கோபத்தை எப்படி அடக்கமுடியும்? என்று தோன்றலாம். நபி (ஸல்) அவர்கள் கோபம் தணிவதற்கான வழிமுறைகளை சொல்லி  யிருக்கிறார்கள். ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து விடவும், கோபம் போய்விட்டால் சரி, இல்லையென்றால் படுத்துவிடவும் என்று கூறியிருக்கிறார்கள். (அபூதர் (ரலி) - திர்மிதீ, அஹம்த்). மற்றொறு ஹதீஸில்: கோபம் ஷைத்தானால் ஏற்படுகிறது. ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு தண்ணீரால் அணைக்கப்படுகிறது. எனவே கோபம் கொள்பவர் உளூச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தியா அஸ் ஸஅதீ (ரலி) - அபூதாவூத்). மேலும் கோபம் வரும் போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம் என்று கூறினால் கோபம் போயிவிடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
அப்படியானால், கோபம் கொள்ளவே கூடாதா? கோபமில்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்று பல கேள்விகள் நமக்கும் எழும். கோபம் என்பது மனிதனின் பண்புகளில் ஒன்று. கோபம் வரவில்லை  யென்றால் அவன் மனிதன் கிடையாது. ஐந்து அறிவு உள்ள மிருகங்களுக்கே கோபம் வருகிறது என்றால், ஆறு அறிவுள்ள மனிதனுக்கு கோபம் வராமல் இருக்குமா? அத்தியாவசிய, அவசியத் தேவைகளுக்காக கோபம் ஏற்படுவது இயல்பு. அது அவ்வபோது ஏற்படுகிற ஒன்றுதான். அதை அடக்கிக் கொள்வதுதான் சரியான செயல். அதே வேளையில் கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் கோபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்தக் கோபம் நியாயமானதாக இருக்கவேண்டும். நம்முடைய கோபத்தில் நியாயம் உண்டு என்பதை யார் மீது கோபம் கொள்கின்றோமோ அவருக்குப் புரிய செய்ய வேண்டும். இதில்தான் நாம் தவறிவிடுகிறோம். அதனால் பல விளைவுகளைச் நாம் சந்திக்கின்றோம். நம்முடைய கோபத்தின் நியாயத்தை புரிய வைத்துவிட்டால், அக்கோபம் நமக்கு நன்மையில் முடியும். இல்லை  யென்றால், பெரும் இழப்புக்கள் ஏற்படும்.


அல்லாஹ் தன் திருமறையில் தீமையைக் கண்டால் கோபம் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். (20:85,86) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்துவிட்டான் என்று (இறைவன்) கூறினான். உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்ட வராகவும் திரும்பினார் - என்று குறிப்பிடுகிறான். தன் சமுதாயத்தை வழிகெடுத்தவன் மீது மூஸா (அலை) அவர்கள் கோபம் கொள்கிறார்கள். இது நன்மைக்காக.
கோபம் கொள்ளாதே என்று ஒரு நபித்தோழருக்கு உபதேசம் சொன்ன நபி (ஸல்) அவர்களே, சில சந்தர்ப்பங்களில் நன்மையான செயலுக்காக கடுமையாக கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸில் காணமுடிகிறது. ஒரு தடவை குர்ஆனில் ஒரு வசனம் தொடர்பாக சண்டையிட்டுக் கொண்ட இருவரின் சப்தத்தைக் கேட்டு தமது முகத்தில் கோபம் தென்பட நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, உங்களுக்கு முன்னிருந்தோர் வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர் என்று கோபப்பட்டுக் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) முஸ்லிம்.


உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, இன்ன மனிதர் எங்களுக்கு தொழுகையை நீட்டி (நீண்ட நேரம் ஆக்குகிறார்). இதனால் நான் சுப்ஹுத் தொழுகையில் கலந்து கொள்ள பின் தங்கி விடுகிறேன் என்று கூறினார். (உடனே நபி (ஸல்) அவர்கள் கடும் கோபம் அடைந்தார்கள்). அவர்கள் அன்று கோபம் கொண்டதைவிட வேறோரு நாளில் அதுபோல் பார்த்ததில்லை. நபியவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்களில் சிலர் வெறுக்க வைக்கக் கூடியவர்களாக உள்ளனர். மக்களுக்காக உங்களில் எவர் இமாமத் செய்தாலும் அவர் அதை சுருக்கமாக செய்யட்டும். அவரின் பின்னே (தொழும் மக்களில்) முதியவர், சிறியவர், தேவையுடையவர் என உள்ளனர் என்று கூறினார்கள்.
மார்க்க விஷயங்களிலும், அநீதிக்கு எதிராகவும் கோபம் கொள்வதில் இஸ்லாம் எப்பொழுதும் தடை விதிப்பதில்லை. ஆனால் நியாயமற்ற கோபம் எந்த இடத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் கட்டளையிடுகிறது.


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!