WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 10 மார்ச், 2012

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது


ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?- திருக்குர்ஆன்:88:17."

ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது . ஒட்டகம் என்ன ? மனிதனுடைய நிலையே அது தான் !மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும். அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ? அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும். எல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.

ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது. வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் .

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும் நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான். இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

"அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்." - 59:24.

இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான். அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான். இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.

பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள்.

ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் .இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது. மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம். பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். திருக்குர்ஆன்:23:14.

அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும். இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும். உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது. 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14 சுட்டெரிக்கும் வெயில் ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார்.

அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும். அதற்கு காரணம். • மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.

அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. • அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass) கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்


குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்
Ahmad Baqavi

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.விந்தையான கொசு பற்றிய விபரங்கள்
1. அது பெண்பால். 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?

இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,
www.vp.rghh.com

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்


திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

Seithi Raja
பூமியின் வடிவம்

ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு (Geoid) என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது,

"நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.)


மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 5ஐ பார்த்தால்... அவன் இரவைப் பகலின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான் இன்னும் பகலை இரவின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கவ்வர" என்ற அரபி வார்த்தையின் பொருள் சுருட்டுதல் என்பதாகும். சுருட்டுதல் எங்கு நடைபெற்றாலும் அது ஒரு கோள வடிவில் தான் நடக்க இயலும்.

தற்போது கண்டிபிடிக்கப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் 1400 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கிறது?

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் சூரியனின் சிறுவடிவம் தான் சந்திரன் என்றும், இவை இரண்டிற்கும் சொந்தமாக ஒளி வீசும் திறன் உண்டு என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் சூரியனிலிருந்து ஒளியை வாங்கி சந்திரன் பிரதிபலிக்கிறது என்று தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருமறைக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 61ஐ கவனித்தோமானால் அதில் "ஒரு விளக்கை(ப் போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் பாக்கியமுடையவன்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் சூரியனை சுயமாக ஒளி வீசும்

விளக்கு எனவும் சந்திரனை உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடியது என்றும் (சந்திரனுக்கு சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும்) விளக்குகிறது.

சூரியனின் சுழற்சி

சூரியன் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று வருகின்றது. நாம் துல்லியமான தொலைநோக்கி கொண்டு பார்ப்போமானால் சூரியனில் கரும் புள்ளிகள் தெரியும். அதனை நாம் தொடர்ந்து கவனிப்போமானால் அந்தக் கரும்புள்ளிகள் ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை அறியலாம். ஆகவே சூரியன் தன்னைத்தானே சுற்றுவதுடன் அதன் வட்டப் பாதையில் ஒரு முறை சுழன்று வருவதற்கு சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என கணக்கிடலாம்.

இதனைத் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 33-ல் இன்னும் "அவன் எத்தகையவன் என்றால் (அவன்தான்) இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (தத்தமது) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" என்றும் கூறுகிறது. இந்த வசனத்தில் சூரியன் சந்திரன் அதனுடைய வட்டப் பாதையில் சுற்றுவதுடன் விண்வெளியில் தங்களுடைய பாதையில் இயக்கம் மேற்கொள்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது தான்.

நட்சத்திரத்திற்கும் கோள்களுக்குமிடையிலுள்ள வித்தியாசம்?

நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியை வீசுகின்றது. அதே வேளையில், கோள்கள் நாம் வாழும் பூமியைப் போன்று ஒளி வீசும் தன்மையற்றது என்பதை

நாம் அறிவோம். இந்த விளக்கத்தை தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. நட்சத்திரத்தைப் பற்றி அத்தியாயம் 86 முதல் மூன்று வசனங்கள் கூறுவதை கவனியுங்கள். "வானத்தின் மீதும், இரவில் தோன்றக் கூடியதின் மீதும் சத்தியமாக! இரவில் தோன்றக்கூடியது

என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்" மேலும் கோள்களைப் பற்றி அத்தியாயம் 37, வசனம் 6ல் அருகிலுள்ள வானத்தை கோள்களின் அழகைக் கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம் என்று கோள்களை அணிகலன்களாக வர்ணிக்கின்றது திருக்குர்ஆன்.

கண்டங்கள்

கண்டிப்பாக! ஒரு காலத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பரப்பாகவே இருந்தது. ஒரு பெரு வெடிப்பிற்கு பிறகு பூமியினுடைய எல்லாப் பகுதிகளும் சிதறடிக்கப்பட்டது. ஆகவே உலகப் படத்தை நீங்கள் பாருங்கள். தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையும் ஒன்றிக்கொன்று பொருந்திக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பதைக் காணலாம்.

 திருகுர்ஆன் 79வது அத்தியாயம் 30, 31வது வசனத்தில் மேலும் பூமியை அதன்பின் அவன் தான் விரித்தமைத்தான். அதிலிருந்து தண்ணீரையும் மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்று விவரிக்கிறது.

புவியின் அடுக்குகள்

மேலும் புவியியலில் புவி அடுக்குகள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பூமியின் நிலைப்புத் தன்மைக்கு காரணம் புவியின் மேற்பரப்பு, புவி அடுக்குகளை நிலைபெறச் செய்யவே மலைகள் இருக்கின்றன.

இதனை திருக்குர்ஆன் அத்தியாயம் 78 வசனங்கள் 6, 7-ல் "பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?" என்று கூறுகிறது. முளைகள் என்று இந்த வசனத்தில் கூறப்படுவதன் பொருள் பூமியில் உள்ள அடுக்குகள் முளைகள் மூலம் ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த முதல் வசனத்தில் பூமி தட்டையானது அல்ல விரிப்பாக உள்ளது எனக் கூறுகிறது. எனவே நாம் கீழே விழுந்து விடாமல் தொடர்ந்து நடக்க இயலும். மேலே சொன்ன இந்த விஷயம் திருக்குர்ஆனில் மேலும் அத்தியாயம் 21 வசனம் 31-ல்...

"இன்னும் பூமி அவர்களைக் கொண்டு அசைந்து விடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம். அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளை நாம் ஆக்கினோம்". இதில் பூமி அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக இருக்க இந்த மலைகள் (முளைகள்) உதவி செய்கின்றன. அதன் காரணத்தால் தான் பூமி அதன் வட்டப்பாதையில் சீராக சுழன்று வருகின்றது.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. இருப்பினும் அது அத்தாட்சிகளின் தொகுப்பு (Book of Signs). உண்மையில் இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அத்தாட்சி (வசனங்)களில் ஆயிரம் மட்டுமே விஞ்ஞானத்தை விவரிக்கிறது. மெத்த படித்தவர்களுக்கும் மேலும் கடவுளை நம்பாதவர்களுக்கும் விஞ்ஞானம் தான் ஒரு அளவுகோலாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் தான் அளவுகோளாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனை புர்கான் என்றும் அழைக்கிறோம். இந்த அரபி வார்த்தையின் பொருள் என்ன என்றால் சரியென்றும், தவறென்றும் பிரித்து அறிவிக்கக் கூடியது என்பதாகும். படித்த மற்றும் நாத்திகர்களின் அளவுகோலாகிய அறிவியலை வைத்து திருக்குர்ஆனை நான் விளக்கினேன். ஆனால் அறிவியல் சமீப காலத்தில் தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் 14 நூற்றாண்களுக்கு முன்பே இறக்கியருளப்பட்டது.

இந்த மாதிரி அரிய உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆனில் எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறியிருக்க முடியுமா? இதே போல் நவீன அறிவியல் உலகத்தால் மறுக்க இயலாத பல நூற்றுக்கணக்கான விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்திருக்கிறது.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?


முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
ஞாயிறு, 15 ஜனவரி 2012 13:59
ஐயம்:
assalamu alaikkum

பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள்.

இப்படி, "முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பது ஹராம்" என பல மவ்லவிகள் (முக்கியமாக தப்லீக், thawheed, salafi மவ்லவிகள்) கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பெண்களுக்கு நல்வாழ்வுக்குரிய மாற்று வழி தீர்வு எதுவும் சொல்கிறாரில்லை. கேட்டால், "கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் இறைவன் சுவர்க்கம் தருவான்" என்று கூறுகிறார்கள். எனவே, பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது பற்றி, இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எழுதுங்கள்.

- சகோ. easternAHI மின்னஞ்சல் வழியாக

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இறைவழியில் பொறுமையை மேற்கொண்டால் இறைவன் சுவர்க்கத்தைத் தருவான் என்பது உண்மையே. அதேபோல், ஜீவாதாரத் தேவைக்காக வாழ்க்கையில் எதிர் நீச்சலை மேற்கொண்டு கஷ்டப்பட்டு "உழைத்து நேர்மையுடன் பொருளீட்டினாலும் சுவர்க்கத்தைத் தருவேன்" என்பதும் இறைவனின் வாக்குறுதி!

ஆணாயினும் பெண்ணாயினும் ''உழைப்பது ஹராம்'' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

ஆனால், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வளைகுடாவில் பிழைக்கப்போய், அவர்களுள் பலர் அனுபவிக்கும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, "பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வது ஹராம்" எனச் சிலர் கருத்துக் கூறியிருக்கலாம். தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகின்ற, அவளுடைய குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் தம் தேவைகளாக ஏற்றுச் செயல்படுகின்ற இறையச்சம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

முஸ்லிம் பெண்கள், பிழைப்புத் தேடி வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத் தேவையையும் சூழலையும் பற்றி இங்குத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

"ஆண்கள் பெண்களிடம் ஆளுமையுடையவர்கள்" எனும் கருத்தில் அமைந்த 4:34ஆவது இறைமறை வசனத்தில், ஒரு குடும்பத்திற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கு அந்தக் குடும்பத்தின் தலவனே பொறுப்பேற்கத் தகுதியுடையவனாவான் எனும் அடிப்படை பொதிந்துள்ளது.

ஆனால், ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஊதாரியான, குடும்பப் பொறுப்பற்ற கணவன் அமைந்துவிட்டாலோ, மணமாகி குழந்தைகளைப் பெற்றபின் கணவன் இறந்துவிட்டாலோ அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்க எவரும் இல்லாமல் அல்லது இருந்தும் முன்வராமல் போய்விட்டாலோ பெண்கள் சம்பாதித்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. அதனால், ஆதரவற்ற பெண்கள் குறுகிய காலத்தில் பொருளீட்ட ஆசைப்பட்டுத் தேர்ந்து கொள்வது 'வெளிநாட்டு வேலை'.

''பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்!'' (அல்குர்ஆன் 62:10) இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அனுமதியாகும். அயல்நாடு சென்று ஆண்கள் உழைப்பதுபோல், பெண்களும் அயல்நாடு சென்று ஹலாலாக உழைத்துச் சம்பாதிப்பதும் ஆகுமானதே!

பெண்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைக் குடும்பத்து ஆண்கள் பூர்த்தி செய்திடல் வேண்டும் என்பதுபோல், ஆதரவற்றப்  பெண்கள், சிறுவர், பலவீனமான முதியோர் ஆகியோருக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும்!

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு(ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள்
(புகாரி 5371).

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2298, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் (மரணமடைந்து) விட்டுச் சென்ற செல்வம் அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (ஆதரவற்ற) மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 2398).

கணவன் மரணித்து, குடும்பத்தில் ஆண் ஆதரவற்று மனைவி, மக்கள் நிர்க்கதியான நிலையில் விடப்படும்போது அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது, ஆதரவற்ற பலவீனமானவர்களைப் பராமரிப்பது இஸ்லாமிய ஆட்சியின் பொறுப்பாகும்!

சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெண்களுக்கு, "வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கக்கூடாது" என்று தடைவிதித்தல் பொருந்தாது. ஏனெனில், எல்லா அடிப்படை வசதிகளையும் பெண்களுக்கு அளித்துவிட்டு, அதன்பிறகு, "வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போகாதே!" என்று தடுக்கும் உரிமை
இஸ்லாமிய அரசுக்குத்தான் உண்டு
! வறுமையால் வாடும் பெண்களுக்கு, அவர்களுக்கான எந்த உதவியும் செய்யாமல், உள்ளூரில் பிழைத்துக்கொள்ள வழிவகை தேடாமல், வெறுமனே ஃபத்வா கொடுப்பது நியாயமில்லை.

"முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போவது ஹராம்" என ஃபத்வா கொடுப்பவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே உள்நாட்டிலேயே பாதுகாப்பான வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வந்தால் பாராட்டலாம். ஆனால், அது ஆகப்போவதில்லை என்று உங்கள் கேள்வியிலிருந்து விளங்குகிறது.

எனவே, ஆதரவற்ற பெண்கள் அரசு அல்லது ஜமாஅத்தாரின் உதவியற்ற நிலையில், தன் கையே தனக்கு உதவி என உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். உள்ளூர், வெளிநாடு என இவர்கள் உல்லாசப் பயணமாகச் செல்லவில்லை. உழைத்துப் பொருளீட்டுவதற்காக செல்கின்றனர். அதுவும் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த, தம் நிலையை ஒத்தவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டே
பெரும்பாலும் செல்கின்றனர். எனவே, வெளிநாட்டுக்குப் பிழைப்பைத் தேடிப் போவதா வேண்டாமா என்பது அவரவரின் தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம், பயன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அப்பெண்கள் தீர்மானிப்பதாகும்.

மற்றபடி, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹலாலான முறையில் உழைத்துப் பொருளீட்டிக் கொள்வதற்கு இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கட்டுரைகள்

கேள்வி பதில்


தமிழில் : அபு இஸாரா
ஒரு கிருஸ்தவரின் சவாலுக்கு பதில்
நாத்திகர் இஸ்லாத்தில் இணையும் காட்சி



Loading...
Download this video

எண்
கேள்விகள்
1 குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.
2 இஸ்லாம் காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டச்சொல்கிறதா? இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் -மூர்க்கத்தனத்தையும் தூண்டுகிறதா?
3 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் 'நாம்' அல்லது 'நாங்கள்' என்ற பன்மையான சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.
4 இறைவன் திருக்குர்ஆனில் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொண்டானா?
5 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? அல்லது அமைதியை போதிக்கும் மார்க்கமா?
6 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
7 கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
8 இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.
9 மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?
10 குர்ஆனின்; அலிஃப் - லாம் - மீம் -, ஹாமீம், யாஸீன் என்ற பதங்களின் முக்கியத்துவம் என்ன?.
11 குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?.
12 அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.
13 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் 'ஹுர்' என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்?.
14 இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
15 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
16 இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.
17 மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.
18 குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?.
19 குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா?.
20 பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
21 ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்?
22 மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
23 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.
24 இறைவன், 'காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்.' என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு - விசுவாசம் கொள்வதற்கு காரணமாக அமைவது - மனிதனின் மூளையேத் தவிர - மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.
25 உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!
26 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
27 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.
28 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.
29  'காஃபீர்' என்று அழைத்து மாற்று மதத்தவர்களை, முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?.
30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
31 இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு - ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் - இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
32 வானங்களும் - பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் 'பெரும் வெடிப்பு விதிக்கு' (Big Bang Theory) மாற்றமாக குர்ஆன் வசனம் அமைந்துள்ளதா இல்லையா?
33 பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் - பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.

  [முதல் பதிவேற்றம் : 17-05-2010] 
  [இரண்டாம் பதிவேற்றம் : 09-08-2010] 




www.ottrumai.net

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்


தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர்)
நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை
இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம்

Download mp4 video
Audio Play:



ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி