WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

திமிங்கிலம் (Whale) E. Usman Ali, Jeddah


திமிங்கிலம் (Whale)
E. Usman Ali, Jeddah

அல்லாஹ் படைத்த பாலூட்டிகள் அனைத்திலும் திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இந்த அமைப்பும் இவற்றிற்கு இறைவனால் பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட அருட் கொடையாகும்.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் அல்லாஹ்வுடைய படைப்பின் வல்லமையைப் பறைச்சாற்றும் இந்த திமிங்கிலங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.


திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நமக்கு மிகப் பெரிய அளவிளான மீனாகத்தான் நினைவுக்கு வருகின்றது. இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத பாலூட்டி ஆகும். மீன்கள் குளிர் இரத்த உயிரி ஆகும். மேலும் இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.

திமிங்கிலதில் 75-க்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. டால்பின் புரொபோசிஸ் போன்றவைகள் உட்பட திமிங்கிலம் இனத்தை சேர்ந்தவையாகும். கீழ் காணும் படம் அமேசான் ஆற்றில் வாழும் Pink டால்பின் ஆகும்.


அமேசான் ஆற்று Pink dolphin

விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பற்கள் உடையத் திமிங்கில வகைகள்
பற்கள் உள்ள வகைகளில் 1.5 மீட்டருக்கு குறைவான Horbor porpoise முதல் 18 மீட்டர் நீளமும் 55 டன் எடையுடைய Sperm whale வரை பல வகைகள் இருக்கின்றன. இதில் பல வியக்கத்தக்க சிறப்பம்சங்களுடன் விளங்கும் Sperm whale பற்றிப் பார்ப்போம்.

Sperm whale வலிமையான பற்களைக் கொண்ட திமிங்கிலங்களில் முதன்மையான இடத்தை வகிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். இவை இத்தகைய பற்கள் அமைப்பை பெற்று விளங்குவதனால் மிகப் பெரிய அளவிளான மீன்களைக் கூட ஒரே நேரத்தில் பிடித்து விழுங்க முடிகின்றது. இவை தங்களின் முக்கிய உணவாக உட்கொள்ளும் Gaint squid என்னும் மீன் இனத்தின் நீளம் 10 மீட்டர் என்றுச் சொன்னால் இவற்றின் வாயின் அளவையும் பற்களின் வல்லமையையும் நம்மால் உணர முடிகின்றது.

இவை ஒரு முறை சுவாசித்ததன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. சுபஹானல்லாஹ். இவ்வளவு ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை களீபரம் செய்யத் இவைத் தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.


Sperm Whale

மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பற்கள் அற்ற Baleen திமிங்கிலங்கள்பற்கள் உள்ள திமிங்கிலங்களுக்கும் பற்கள் அற்ற பலீன் திமிங்கலங்களுக்கும் இரையை பிடிக்கப் பயன் படுத்தும் முறையில் மிக பெரிய அளவிளான வித்தியாசங்கள் உள்ளன. Baleen திமிங்கிலங்களின் வாயின் மேற்பரப்பில் தொங்கக் கூடிய அமைப்பில் அமைந்த உறுதியான நீண்ட சீப்புக்களைப் போன்ற வளைந்துக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொண்ட இதுதான் பலீன் என்று அழைக்கப்படுகின்றது. Green land Right whale என்றழைக்கப்படும் ஆர்டிக் திமிங்கிலங்களின் பலீன் தகடுகள் அதிக பட்சமாக நான்கு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. இவைகள் பக்கத்திற்கு 270 முதல் 360 எண்ணிக்கை வரையும் வளரக்கூடியது. பலீன் திமிங்கிலங்கள் தங்கள் வாய்களில் உட் கொள்ளும் டன் கணக்கான தண்ணீரை திரும்பப் பீய்ச்சி வெளியேற்றுவதன் மூலம் இந்த பலீன் தகடுகளினால் வடிகட்டப் பட்டுச் சிக்கிக் கொள்ளும் சிறிய பிளாங்டன் மற்றும் சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த பலீன்கள் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வாயின் உட்புறத்தில் அமைந்த இவைகளின் வெளிப்புறம் நேரானதாகவும் அதன் உட்புறம் இருப்புறங்களிலும் தேய்ந்த அமைப்பில் அமைந்துள்ளதால் மிகச் சிறிய அளவிளான உயிரினங்கள் கூட இவற்றின் வாயிலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. (முதலை வாயில் மாட்டுவதை விட இதன் வாயில் மாட்டுவது ஆபத்து போலும்).

இந்த பலீன்கள் நீளமாகவும் மிக உறுதியாகவும் எலாஸ்டிக் போன்ற கெரட்டீன் என்ற மூலப் பொருளால் ஆனவை. இந்த கெரட்டீன்தான் மனிதர்களின் முடி மற்றும் விரல் நகங்களை உருவாக்க காரணமாக இருப்பவை. இத்தகைய அமைப்பை அடிப்படையாக கொண்ட பலீன் திமிங்கிலங்களில் மிகப் பெரியதும் பல சிறப்பான அம்சங்களையும் கொண்ட Blue Whale என்றழைக்கப்படும் நீல நிறம் கொண்டு திமிங்கிலத்தை பற்றிப் பார்ப்போம்.


பலீன் திமிங்கிலங்களில் Blue Whale என்றழைக்கப்படும் இந்த திமிங்கிலம்தான் இந்த பூமியில் உள்ள உயிரினங்களிலேயே மற்ற எவற்றுடனும் ஒப்பிட இயலாத அளவிற்கு மிகப் பெரியதாகும். 24 மீட்டர் வரை நீளமும் 150 மெட்ரிக் டன் வரை எடையும் கொண்டதாகும். இவற்றின் உள் உறுப்புகளில் ஒன்றான இதயத்தின் அளவு Volks wagen beetle என்றழைக்கப்படும் காருடைய அளவிற்கு ஒப்பான அளவு என்றால் எவ்வளவு பிரமாண்டமான உருவமாக இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இவைகள் 100 ஆண்டுகளுக்கு மேலான வாழ் நாளைக் கொண்டவை. பொதுவாக உலகில் உள்ள எல்லா கடல்களிலும் காணப்படும் இவைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப் பட்டு அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து செல்லுவதால் எண்ணிக்கையில் மிகக் குறைந்துக் காணப்படுகின்றன. 760 லிட்டர் வரைக் கொள்ளளவு வயிற்றைக் கொண்ட இவைகள் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் அளவு 3600 கிலோ வரையாகும்.

இவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு ஏறக்குறைய 11 -மாத கால அளவில் வழக்கமாக ஒரு குட்டியை ஈன்றெடுக்கின்றது. இதன் குட்டி பிறக்கும் போது தாயின் எடையில் 30 சதவீத எடையுடன் பிறக்கின்றது. 7.6 மீட்டர் நீளமும் மூன்று டன் எடையுடனும் பிறக்கக் கூடிய இவைகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் வாழுகின்றன. திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. விஞ்ஞானிகள் இவற்றைப் பாலூட்டிகளின் பட்டியலில் ஒன்றாகக் கருத இதுவே முழு முதற்காரணமாகும். இந்த Blue Whale தன் குட்டிக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் பாலின் அளவு 600 லிட்டர்களாகும். இதனுடையக் குட்டி ஒரு நாளைக்கு 90 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது.

Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். அல்லாஹ் நாடியதை அதிகப் படுத்தக்கூடியவன் . இதன் மூலம் இவைகள் மிகத் தொலைத் தூர பிரதேசத்தின் தங்கள் இனத்துடன் தொடர்புக் கொள்ள பயன் படுத்துவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப் படுகின்றார்கள். இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

இனி திமிங்கிலங்களின் பொதுவான சில அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலாவதாக அவற்றின் உடல் அமைப்பை பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம். திமிங்கிலங்களின் உடலின் மேற்புறம் புரதத்தை உள்டக்கிய Bubler என்னும் மிகத்தடித்த அடுக்கு அமைந்துள்ளது. இது இவற்றின் உடல் வெப்பத்தை (உறை நிலையைக் கடந்த துருவப் பகுதிகளிலும்) சீராக வைத்துக் கொள்ளவும் தங்களுக்குத் தேவையான சத்துக்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் பயனாகின்றது.

கடலின் மிக ஆழத்தில் இவை செல்லும் போது கடல் நீரின் மிக அதிக அளவான அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் இவற்றின் கண் அமைப்பு அமைந்துள்ளது. கண்களைக் சுற்றி அமைந்துள்ள தோல் போன்ற அமைப்பு தண்ணீரின் மிக அதிகமான அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும் உப்பு நீரினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் காக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றது. இதே அமைப்பு கண்ணின் லென்சின் அமைப்பை மாற்றிக் கொடுப்பதன் மூலம் தண்ணீருக்கடியிலும் தண்ணீரின் மேற்பரப்பிலும் தெளிவாக காண வகைச் செய்கின்றது. பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் அமையப் பெற்ற பித்தப்பை மற்றும் குடல் வால்வு அமைப்பு இவற்றிற்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். இவைகள் தண்ணீரின் அடியில் மணிக் கணக்காக தாக்குப் பிடிப்பதானால் இவற்றின் நுரையீரல் அமைப்பை பற்றி அறிந்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இவற்றின் நுரையீரல் மற்ற பாலூட்டிகளைப் போன்று தொண்டையின் இணைப்பின்றி காற்றுக் குழாய் (Blow hole) மூலம் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதால் இவற்றினால் ஒரே நேரத்தில் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இவற்றின் நுரையீரல் மனிதர்களின் நுரையீரலை விட அமைப்பில் சற்றுக் குறைந்திருப்பினும் கூட செயல் பாட்டில் மனிதர்களின் நுரையீரலை விட மிகைத்த ஒன்றாகும். மனிதர்களின் நுரையீரல் ஒரு சுவாசத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரைதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலுகின்றது. ஆனால் திமிங்கிலங்களின் நுரையீரலோ 80 முதல் 90 சதவிகித ஆக்ஸிஜனை கிரகித்துக் கொள்ளுகின்றது.

இவற்றின் நுரையீரல் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அதே வேளையில் கார்பன் டை ஆக்சைடை மிக வேகமாக வெளியேற்றுகின்றது. இதுவும் மனித நுரையீரலை விட வேகமான செயல்பாடாகும். எனவேதான் இவைகளினால் நீண்ட நேரம் தண்ணீரில் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இவற்றின் இரத்தம் மற்றும் திசுகளில் சேகரிக்கப் படும் அதிகப்படியான ஆக்ஸிஜன் ஹீமோ குலோபின் (hemoglobin) மற்றும் மையோ குலோபின்(Myoglobin) மூலம் 80 முதல் 90 சதவிகிதம் வரை ஆக்சிஜன் வினியோகம் செய்யப் படுவதால் தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. மேலும் இவை தண்ணீருக்கு அடியில் தங்கள் உணவுக்காக சென்றதன் பின்னர் இவற்றின் இதயம் நிமிடத்திற்கு 3 லிருந்து 5 முறை வரை மட்டுமே துடிப்பதனால் பல உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் நிறத்தப் பட்டு நீண்ட நேரத்திற்கு இவைகளினால் பிராண வாயுவை பயன்படுத்திக் கொள்ள இயலுகின்றது. இதனால் இவற்றின் மூளை மற்றும் இதயத்தின் இயக்கம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுவதனால் நீண்ட காலம் வாழ இது வகைச் செய்கின்றது.

மனிதர்களின் மூளையைக் காட்டிலும் அளவில் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது. 1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

இவைகள் பெரும் பயணத்தை மேற்கொள்ளும்போது இவைகளினால் எழுப்பப்படும் பாடல்கள் மிக மிக முக்கியமான வியமாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. ஒவ்வொரு இனத்திற்கும் பிரத்யோகமான பாடல் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள். Hump back என்ற திமிங்கிலத்தின் பாடல் வரிகள் விட்டு விட்டோ அல்லது தொடர்சியாகவோ 20 நிமிடங்கள் வரை இவைகளினால் எழுப்பப் படுகின்றது. பயணத்தின் போது ஒரு கூட்டத்தினால் எழுப்பப்படும் இந்த பாடல் வரிகள் ஏறக்குறைய ஒத்திருக்கின்றது. வருடத்திற்கு வருடம் சற்று மாறுதலுடன் ஒலிக்கப்படும் இந்த பாடல்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் முற்றிலும் புதிய பாடலாக வடிவெடுகின்றது. அலாஸ்காவில் வசிக்கக் கூடிய எக்ஸிமோக்கள் Bowhead திமிங்கிலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் ஓசை guitar என்ற இசை சத்தத்தை ஒத்து இருப்பதை அறிந்துள்ளனர். இவ்வாறு இவை எழுப்பும் பாடல்கள் இவற்றின் இனப் பெருக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். இவற்றின் பாடல் வரிகளை வரிசைப் படுத்தும் முயற்சியில் இதுவரை வெற்றி காண முடியவில்லை. இந்த முயற்ச்சியில் வெற்றி கிட்டினால் பல பயன் தரத்தக்க தகவல்கள் தெரியவரலாம். திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையை கண்டறியும் வியத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதை அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள்.

உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. வேட்டையாட அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கை அளவு இனம் போன்றவற்றை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சட்ட விரோதமாக வேட்டையாடப் படுவதனால் இந்த பிரம்மாண்டமான உயிரினம் அழிவுறும் தருவாயை எட்டியுள்ளது. பின் வரும் படம் Sperm Whale வேட்டையாடப்பட்டு கிடக்கும் காட்சி.


அல்லாஹ்வின் படைப்பாற்றலின் ஒரு அங்கமாக விளங்கி வரும் இந்த திமிங்கிலங்களை பற்றிய சிந்தனையில் இன்னும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பரிணாமத் தத்துவவாதிகள் ஊகத்தின் அடிப்படையில் பலவாறாக பிதற்றிக் கொண்டு இருப்பதை இன்றளவிலும் விட்டப்பாடில்லை. ஜீனோம் தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டு இந்த நூற்றாண்டில் உலகிற்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய உண்மைகள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் பரிணாமத்திற்கு தோள் கொடுக்கும் இவர்கள் முயற்சி நம்மை வியப்படைய வைக்கின்றது.

திமிங்கிலங்கள் முன்பு நான்கு கால்கள் உள்ள விலங்காக இருந்ததாகவும் கடற்கரையின் ஓரங்களில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்ததாகவும் காலப் போக்கில் இவைகளின் உணவுத் தேவை அதிகரிக்கவே அதை நிறைவு செய்யும் பொருட்டு கடலில் இறங்கி படிப் படியாக இன்றைய உருவ அமைப்பை எட்டியுள்ளதாகவும் சொல்கின்றார்கள். இவை ஹிப்போபொடமஸ் (Hippopotamus) என்ற விலங்கின் ஜீன்களோடு நெருக்கமான அமைப்பில் காணப்படுவதனால் இவை இந்த விலங்கிலிருந்துதான் திமிங்கிலமாக மாறி இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைக்கின்றார்கள். எந்த வியத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட வில்லையோ அதில் எதையாவது ஒரு கருத்தை சொல்லி வருவது கால காலமாக நடந்து வரும் நிகழ்ச்சிதான். முக்கியமாக இதையெல்லாம் ஒரு இறைவன்தான் திட்டமிட்டு படைத்தான் என்பதை இவர்களினால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் இவர்களினால் மறுக்க முடியாத அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் வரும் போது அதற்கு என்ன சமாதானத்தைக் கூறப்போகின்றார்கள். அல்லாஹ் நாடியவர்களை தவி நேர்வழிப் பெறக் கூடியவர்கள் யார்? அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழிக் காட்டக்கூடியவன். நம் இறைவன் மகாத் தூய்மையானவன்.

அவர்களில் அதிகமானோர் ஊகத்தை தவிர பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 10:36)
ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


வவ்வால் (Bat) E. Usman Ali, Jeddah


வவ்வால் (Bat)
E. Usman Ali, Jeddah

உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இன்றளவிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.
"பறக்கக்கூடிய" தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்
குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.

உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச்சிரியது பம்பல்பீ வவ்வால் ஆகும். தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதியத்திலும் அதிசயம்.
வவ்வால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிரிய வவ்வால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வவ்வால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் பாக்ஸ் (Flying fox) வவ்வால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வவ்வால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வவ்வால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும். இதுதான் உலகில் உள்ள பாலூட்டிகளில் மிக சிறியதாகும். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலூட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. வவ்வால்களில் மொத்தம் 951 இனங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். அவற்றில் மூன்றே மூன்று வகைகள் உயிர் பிராணிகளின் இரத்தத்தை மட்டுமே குடித்து உயிர் வாழக்கூடியது. உதாரணமாக வம்பயர் வவ்வால்கள் (Vampire) இவைகளின் கூறிய பற்களைக்கொண்டு முதலில் பிராணிகளின் உடலில் காயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து ஒரு முறைக்கு 20 மில்லி வரை இரத்தத்தை குடிக்கின்றன. இந்த அளவு அவற்றின் எடையில் 40 சதவிகிதம் ஆகும். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வோல்ட் வார்ல்ட் புரூட் வவ்வால்கள் (Old world fruit bats) ஒரு நேரத்திற்கு 500 கிராம் வரை பழங்களை உண்ணுகின்றன. இந்த அளவு இவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதுவே அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். நம்முடைய பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விசயமாக இருப்பினும் கூட அல்லாஹ்வுடைய ஆற்றலை எண்ணி வியப்படையக்கூடிய சம்பவமாகவே இது அமைந்துள்ளது.
தங்குமிடங்கள்
வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன. உலகின் அனைத்து பிரதேசங்களில் காணப்பட்டாலும் கூட மிக அதிக அளவில் வெப்பம் மிகுந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் குகைகள் பாறை இடுக்குகள் பொந்துகள் பள்ளங்கள் ஆகியவற்றில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளுகின்றன. இன்னும் சில வவ்வால்கள் நாம் காணக்கூடிய வகையிலே மரங்களின் கிளைகளிலே தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவைகள் தலைக்கீழாக தொங்கக்கூடிய இந்க செயலும் கூட மற்ற எல்லாவற்றிலும் வேறுப்பட்டுள்ள ஒரு நிலைதான். மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்ன.
உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak) வவ்வல்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்
நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக் (Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த தகவமைப்பு அல்லாஹ்வுடைய அரும்பெரும் ஆற்றலை காட்டக்கூடியதாகவும் நான் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தக் கூடிய நிகழ்ச்சியாகவே நமக்கு தோன்றுகின்றது.
தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிய ஆற்றல்
வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்ற. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். நம்மைப் பொருத்த வரை தேனீக்களுக்கு வஹீ அறிவிக்கக்கூடிய இறைவன் இந்த வவ்வால்களுக்கும் வஹீ அறிவித்துத்தருகின்றான் என்பதில் மிக எளிதாக விடை கிடைத்தவிடுகின்றது.
அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு
வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன. தூரக்கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மாத்திரமே பகல் பொழுதில் தங்கள் இறையைதேடுகின்றன. இவைகளோடு மனிதர்களுக்குள்ளத்தொடர்பு இவற்றின் திடீர் குறுக்கீடு காரணமாக மனிதர்கள் சிலசமயம் பயத்திற்கு ஆட்படும் சம்பவம் நடைப்பெறுகின்றன. சராசரியாக வருடத்திற்கு ஒரு மனிதர் வவ்வாலினால் கடிக்கப்பட்டு இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவை நாய் மற்றும் வண்டு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்குறைவு.
வம்பயர் வவ்வால் ஒரு விலங்குனுடைய இரத்தத்தை குடிக்கும் காட்சி
"'மஸ்டிப் வவ்வால்களின் ஒரு காலனி ஒரு இரவில் 250 டன் எடையுள்ள இரையை உண்டு முடிக்கக்கூடிய அபரிதமான ஆற்றல்"
"எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாக படைக்கவில்லை". (அல்குர்ஆன் 3:191)
சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன என்றுச்சொன்னால் சுபஹானல்லாஹ், இறைவன் இவற்றைக்கொண்டு மனிதர்களுக்கு ஏற்படுத்தியுள்ள(Pest control) பாதுகாப்பு அரணை வார்த்தைகளால் விளக்க முடியாது. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். இது கருணை மிக்க நம் இறைவன் அமைத்துள்ள வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடிய அமைப்பாகும். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்ச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.
மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன.
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.
அல்லாஹ்வின் படைப்பாற்றலை பறைச்சாற்றும் அதிய உடல் அமைப்பு
உறை நிலையை கடந்து -5  (Minus 5) டிகிரி வரை தாங்கக்கூடிய ஆற்றல் பெற்ற சிவப்பு வவ்வால்கள்
வவ்வால்கள் வெப்ப இரத்த பிராணியாக இருப்பினும் கூட இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்ட அம்சத்தை கொண்டுள்ளது. இவை இயங்கக்கூடிய நேரத்தில் மாத்திரமே உடல் வெப்பநிலையை ரே சீராக வைத்துள்ளன. இவை தலைக்கீழாக ஓய்வெடுக்கும் போது சுற்றுப்புற சூழலின் வெப்ப நிலைக்கு ஏற்ப இவற்றின் உடல் வெப்ப நிலை மாறிவிடுகின்றது. மனிதர்களைப் பொருத்த வரை 37 டிகிரிக்கு அதிகமாக உடல் வெப்பமானால் வியர்க்க ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு குறைந்து விட்டாலோ குளிர ஆரம்பித்து விடுகின்றது. மனிதனின் ஆற்றலில் குறிப்பிடத்தக்க அளவு கலோரி உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள செலவாகின்றது. சிவப்பு நிற வவ்வால்களின் உடல் வெப்பநிலை உறைநிலையை கடந்து -5 டிகிரிவரை தாங்கிக்கொள்ளுகின்றன என்றுச்சொன்னால் அல்லாஹ் மகா தூய்மையானவன். (0 டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாகிவிடும்) வவ்வால்களின் வேறுபட்ட வெப்ப நிலையை தாங்கக்கூடிய இந்த உடலமைப்பு இறைவன் இவற்றிற்கு அளித்த அருட்கொடையாகும். இவைகளின் உடல் அமைப்பு மற்ற பாலூட்டிகளை ஒத்திருப்பினும் இவைகளின் முன்னங்கால்களின் அமைப்பே மற்றவற்றிலிருந்து மாறுப்பட்டதாகவும் இவற்றிற்கு பறப்பதற்கு உறுதுணையாகவும் அமைந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் உள்ள விரல்களுக்கிடையே தோலினால் இடைவெளியின்றி பினைக்கப்பட்டுள்ளன. இந்த தோல் அமைப்பே இவற்றிற்கு பறவையின் சிறகினைப்போன்று அமைந்து இவைகள் பறக்க உதவுகின்றன. இவற்றின் விரல்களில் பிணைக்கப்பட்டுள்ள இந் தோல் அமைப்பு இவற்றின் உடலின் பக்கத் தசையுடன் இணைக்கப்பட்டு பின்புற கால்களில் இணைக்காப்பட்டுள்ளன.
"எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்" ECHO LOCATION
"ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு"(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது,
(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.
இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும். இந்த பண்புகளை தன்னிச்சையாக எவ்வாறு பெற்றிருக்க முடியும். இத்தகைய திட்டமிட்ட ஒரு செயல் அமைப்பு தன்னிச்சையாகவோ அல்லது வவ்வாலே சிந்தித்து இத்தகைய ஒரு ஏற்பாட்டை அமைத்துக்கொண்டதாகவும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியுமா?. ஒரு சட்டையின் பொத்தான் தானாகத் தோன்றியதாக சொன்னால் நம்ப நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை நிலைநாட்ட எத்தனிக்கக் கூடியவர்கள் இதற்கு எந் ஏற்புடைய காரணத்தை சொல்லப்போகின்றார்கள். இனி எவ்வளவு காலம்தான் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தூக்கி பிடிப்பார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஸ்பென்சர் வெல்ஸின் கண்டுபிடிப்புகளின் மூலம் புதைக்குழியை அடைந்த இவர்களுடைய இந்த தத்துவத்தை இனி எவ்வாறு இவர்கள் நியாயப்படுத்த முடியும். இனி எந்த புதிய தத்துவத்தை இறைவனை மறுக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப்பண்புகளைடையவர்களைப்பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான் அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச்செய்தான். அவர்களோ ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்கவர்கள்.(58:19)
இவர்கள் அல்லாஹ்வுடைய ஜோதியை தங்கள் வாய்களினால் ஊதி அணைக்க நாடுகின்றனர். இருப்பினும் அல்லாஹ் இந்த நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் தன் ஜேதியைப் பூர்த்தியாக்கி வைப்பான். (9:32)
பொதுவாக வவ்வால்கள் எதிரொலிமூலம் தங்கள் இரையை பிடிப்பினும் கூட விதிவிலக்காக எதிரொலியின்றி கண் பார்வையைக்கொண்டு இரையைப்பிடிக்கக்கூடிய வவ்வால்களும் இருக்கின்றன. உதாரணமாக பிளையிங் பாக்ஸ் வவ்வால்கள் இவை மிக கூர்மையான பார்வை திறன் அமையப்பெற்றுள்ளன. இந்தத்தன்மை விதிவிலக்குகளில் விதிவிலக்கான அம்சமாகும்.
"சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்"
"ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்"
வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்மடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்
வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.
இந்த சிரிய உயிரினத்தில்தான் இறைவன் எவ்வளவு அத்தாட்சிகளையும் அதியமான பண்புகளையும் வைத்து நம்மை சிந்தனை வயப்படுத்தி பிரமிக்க வைத்துவிட்டான். இதைக்காட்டிலும் பல பிரமாண்டங்களை படைத்துள்ள இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.
நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானத்தைப் படைத்தான். நீங்கள் சாய்ந்து விடாதிருக்கும் பொருட்டு முளைகளை (மலைகளை)நாட்டினான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான். வானத்திலிருந்து தண்ணீரை (நாமே) இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்தோம் (31:10)
ஆதாரங்கள்:
லைக்களஞ்சியம், என்கார்டா என்சைக்ளோபீடியா, டேஞ்சர் கிரியேச்சர்ஸ்



ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி

பிளாட்டிபஸ் (PLATIPUS) E. உஸ்மான் அலி


பிளாட்டிபஸ் (PLATIPUS)

E. உஸ்மான் அலி



'பிளாட்டிபஸ்' என்னும் இந்த உயிரினம் மிகச் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவை முட்டையிட்டு பாலூட்டுவதால் இவை விதிவிலக்கான அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஒன்றாகும். இவை மற்ற பாலூட்டிகளினின்று எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் இவைகளின் செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் இவற்றை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

'பிளாட்டிபஸ்' முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். 'வாத்து'விற்கு உள்ளது போன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி. கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம்.

இவை தாஸ்மேனியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், பல வகைகளிலும் வித்தியாசமான செயல்பாடுகளும் உடல் தகவமைப்புகளும் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பியல்புகளாகும். 30 முதல் 40 செ.மீ. வரை நீளமும் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை வளரக்கூடியவை. இவற்றின் வாய் அமைப்பு வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் அலகு போன்ற வாய் அமைப்பு 6 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் உடையது.

இவற்றின் வாயுடைய நுனிப்பகுதியில் மிருதுவான மோப்ப சக்தியை உணரக்கூடிய சதைப்பகுதியை கொண்டுள்ளது. (பன்றியின் வாய் பகுதியைப் போன்று), வாலும் உடலும் தடித்த மிருதுவான ரோமங்களை உடையதாகவும் பிதுங்கியது போன்ற தோற்றத்திலும் காணப்படுகின்றது. இவற்றின் வால் பகுதி தட்டையாகவும் சிறியதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முக்கியமான எடுப்பான தலை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவைகள் சிறிய கண்களைப் பெற்றிருப்பினும் கூர்மையான பார்வைத் திறனையும் செவிப்புலன்களையும் பெற்றுள்ளன. இவற்றின் சிறிய தலைப்பகுதியானது கழுத்துப்பகுதி எதுவுமின்றி உடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த அம்சமும் மற்ற பாலூட்டிகளினின்றும் வேறுபட்ட ஒன்றாகும்.

'பிளாட்டிபஸின்' கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் பறவையினத்தின் வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த நீச்சல் திறனையும் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸைக்காட்டிலும் ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மையைக் கொண்டுள்ளன. இவைகளின் பின்புறக்கால்களில் உள்ள குழிவுப்போன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இவற்றின் கால் பகுதியில் அமைந்துள்ள விஷச்சுரப்பியும் எந்த பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அழுத்தத்தை பிரயோகித்து தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிப்பதின் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுவே இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாகும்.

பூமியின் மிக ஆழத்தில் அமைக்கும் உல்லாச விடுதி'பிளாட்டிபஸ்' தங்கள் வலைகளில் ஏற்;படுத்தும் பாதுகாப்பு அரண் இறைவனின் சான்று. இவைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழுகின்றன. இவை ஆறுகளின் ஓரக்கரைகளில் பூமியில் மிக நீண்ட வலைத்தோண்டி அதில் வசிக்கின்றன. வலை ஏறக்குறைய 50 முதல் 60 அடி வரை ஆழம் உடையவை. இவ்வளவு ஆழத்தில் வலை தோண்டி வாழக்கூடிய பாலூட்டியும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதுவும் மற்ற பாலூட்டிகளிலிருந்து வேறுபடும் ஒரு அம்சமாகும். வலை தோண்டும் பணியில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே ஈடுபடுகின்றன. ஏனெனில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே வலையில் வசிக்கின்றன. ஆண் பிளாட்டிபஸ் தங்களின் வாழ்வை வலைக்கு வெளியே கழிக்கின்றன. மேலும் இவைகள் தங்கள் வலையில் செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகளை பகர்கின்றது.

வெள்ளப்பெருக்கு மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய தடுப்புக்களையும் வளைவுகளையும் மண்ணினால் தங்கள் வலையிலே ஏற்படுத்துகின்றன. தங்களின் வலையின் இறுதியில் மிக நேர்த்தியான இருப்புக்களை புற்களைக்கொண்டும், இலை, தழைகளைக்கொண்டும் பரப்பி சொகுசான முறையில் அமைத்துக்கொள்கின்றன. நிச்சயமாக இவைகளின் திட்டமிட்ட இந்த ஏற்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உண்டானது என்று எவ்வாறு நியாயப்படுத்த முடியும். நம்மைப்பொறுத்த வரை பின்வரும் வசனம் நமக்கு நல்லதொரு தெளிவைக் கொடுக்கின்றது.

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் நன்கு அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
(அல்குர்ஆன் 11 : 06)

இனப்பெருக்கத்தின் மூலம் கருவுறும் பெண் பிளாட்டிபஸ், ஒன்று முதல் நான்கு முட்டை வரை இடுகின்றது. பிறக்கும் போது குட்டிகள் (குஞ்சு) பற்களை உடையதாகவும் முடிகள் அறவே இல்லாத நிலையிலும் பிறக்கின்றன. இவைகளைத் தாய் பிளாட்டிபஸ் தன் வாலைக்கொண்டு அரவணைத்து பாதுகாக்கின்றது.

இவைகள் தங்களின் இரையை பிடிக்க கையாளும் யுத்தி (முறை) மிக சுவாரசியமானது. ஆறுகள் மற்றும் குளங்களின் அடிப்பரப்பிற்குச் சென்று தங்கள் அலகு மூலம் சேறு சகதிகளைக் கிளருகின்றன.
இதன் மூலம் வெளிப்படக்கூடிய கிளிஞ்சல்கள், பூச்சிக்கள் மற்றும் புழுக்களை உட்கொள்கின்றன. இரையை பிடிப்பதில் இவைகளின் அலகு பெரும் பங்கு வகிக்கின்றன.

அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு உபயோகத்திற்கும் பயனில்லாத ஒரு உயிரினமாக இது கருதப்படுகின்றது. எனினும் இவைகளின் பயன்பாடுகளைபற்றி வரும் காலங்களில் தெரிய வரலாம் இறைவன் நாடினால்..

சர்வதேச விதிகளின்படி 'பிளாட்டிபஸை' கொல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஆய்வுக்கூடத்தில் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய இவை பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. இவற்றின் பல வித்தியாசமான தன்மைகளைப் பார்க்கும் போது ஒரு விதியின் அடிப்படையில் ஒன்றை படைக்கக்கூடிய இறைவன் அதற்கு நேர் மாற்றமாக பலத்தன்மைகளைக்கொண்ட மற்றொன்றைப் படைக்க ஆற்றல் உள்ளவன் என்று உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவாகின்றது.

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
'அவன் வானங்களையும், பூமியையும், எந்த முன் மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது ஆகுக என்று கூறுவான் உடனே ஆகிவிடும்'.
(அல்குர்ஆன் 2 : 117). 


ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா


எகிட்னா (ECHIDNA)

E. உஸ்மான் அலி


பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா

எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன.

எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன.

وَكَأَيِّن مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்துத் திரிவதில்லை. அல்லாஹுவே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன் , அறிந்தவன். (29:60)

உருவ அமைப்பும் தகவமைப்பும்உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள்.

இனப்பெருக்கமும் வாழ்க்கையும்இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன.

எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும்குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.

وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ
உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பக்கூடிய சமுதாயத்திற்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:04)

பிளாட்டிபஸ்



ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள் E. உஸ்மான் அலி



bullet
அறிமுகம்
 وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரினால் படைத்தான். அவற்றில் தங்கள் வயிற்றால் நடப்பவைகளும் உள்ளன. தங்கள் இரு கால்களினாலும் நடப்பவைகளும் உள்ளன. நான்கு கால்களினால் நடப்பவையும் உள்ளன. நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 24 :45)

அல்லாஹ் இந்த உலகத்தில் உயிரினங்களை பல்வேறுவிதமாக விலங்குகளாகவும், தாவரங்களாகவும், பறவைகளாகவும், ஊர்வன மற்றும் நீர் வாழ் உயிரினங்ளாகவும் படைத்துள்ளான். இவை அனைத்தையும் ஒரு பொதுவான நியதியின் அடிப்படையில் படைத்திருப்பினும் கூட அவற்றில் சிலவற்றை முற்றிலும் வித்தியாசமான விதிவிலக்கான ஒன்றாக படைத்து இறைவன் தன் வல்லமையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றான்.

பாலூட்டிகளுக்கு (
MAMMAL) குட்டி போட்டு பால் கொடுக்கும் அமைப்பை வைத்து முட்டையிட்டு பால் கொடுக்கக்கூடிய 'எகிட்னா'(ECHIDNA), 'பிளாட்டிபஸ்' (PLATYPUS) இவைகளை படைத்த இறைவன் மிகத்தூய்மையானவன். பறவையைப் போன்று பறக்கும் தன்மையை கொண்ட பாலூட்டி 'வவ்வாலை' (BAT) படைத்தான்.

தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கையை (
DIOECISM) வைத்த இறைவன் தன் மகரந்தச் சேர்க்கையையும் (MONOECISM) வைத்தான். பல்கிப் பெருக ஆண்-பெண் அமைப்பை வைத்த இறைவன் நகரக்கூடிய உயிர்களில் ஈரின உறுப்புக்களை ஒருங்கே அமையப் பெற்ற ஒருசெல் உயிர் 'அமீபா'வையும் (AMOEBA) தாவர வகைகளில் ஒருசெல் பாசியான 'கிளாமிடோ மோனஸையும்' (CHLAMYDOMONAS) படைத்த இறைவன் அனைத்தின்மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

ஆறு மணி நேரத்தில் முட்டையிலிருந்து வெளி வந்து, பறக்கக்கூடிய சக்தியைப் பெற்று, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, முட்டையிட்டு இறப்பெய்தக்கூடிய 'மேஃபிலையை' (
MAYFLY) படைத்தானே அவன் நாடியதைச் செய்யக்கூடியவன். எந்தக் குஞ்சும் தன் தாயைக் கண்டதில்லை. எந்த தாயும் தன் குஞ்சை காண இயலாத சொற்ப நேர வாழ்க்கை. இதுவும் இறைவனின் வியப்பூட்டும் சான்றுகள்தான்.

அதே இறைவன்தான் 400 ஆண்டுகள் வரை வாழக்கூடிய 'கடல் ஆமைகளையும்' (
TURTLE), தாவரத்தில் 5000 ஆண்டுகள் வரை வாழக்கூடிய 'பிரிஸ்டிலேகோன்பைன்' (BRISTLECONE PINE) மரத்தினையும் படைத்தான். கண் கொண்டு காண முடியாத சிறிய தாவர வகைகளைப் படைத்த இறைவன் 83 மீட்டர் வரை வானளாவி வளரக்கூடிய 'ஜெய்ன்ட் சிகோயா' (GIANT SEQUOIA) மரத்தினையும் நாட்டியுள்ளான்.

அடுத்து நீர் வாழ் உயிரினங்களை பார்ப்போம். மீன்களுக்கு நுரையீரல் அமைப்பு கிடையாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை தங்கள் செவுள்களின் மூலம் சுவாசிக்கின்றன. இவைகளின் சுவாச அமைப்பு தண்ணீரில் உள்ளபோதுதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலும். கரையில் இவைகளினால் சுவாசிக்க இயலாது. உடனே இறந்துவிடும். அதே தண்ணீரில் வாழக்கூடிய திமிங்கிலத்திற்கு தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பு கிடையாது. இவை நுரையீரல் அமைப்புக் கொண்டுள்ளதால் நீர் பரப்பிற்கு மேல் வந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க இயலும். இதுவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

மிகவீரியமிக்க விஷத்தன்மை வாய்ந்தது 'ராஜநாக'த்தினுடைய (
KING COBRA) விஷமாகும். இவைகள் ஒரு முறை பிரயோகம் செய்யும் விஷம் மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்கச் செய்யப் போதுமானதாகும். இவ்வளவு வீரியமிக்க இவற்றின் விஷம் மிகச்சிறிய 'கீரிப்பிள்ளை'யை (MONGOOSE) கொல்லச் சக்தியில்லை என்றுச் சொன்னால் இந்தத்தன்மையில் சிந்திக்கக்கூடிய அம்சங்கள் ஏராளம். இதுவும் ஒரு அதிசயமிக்க விதிவிலக்கான அம்சம்தான்.

பறவைகளைப் பொறுத்த வரை வானில் பறந்து செல்லக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளன. அவை பறக்கும் தன்மையை பெற்றிருப்பதனால் தான் பறவைகள் என்று அழைக்கின்றோம். மிகமிகச் சிறிய 'மொனார்க்' வண்ணத்துப் பூச்சி (
MONARCH) கனடாவிலிருந்து மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ், 'ப்ளோரிடா', 'கலிபோர்னியா' ஆகிய பகுதிகளுக்கு கிட்டதட்ட 2900 கிலோ மீட்டர்களைக் கடந்து தங்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருகை புரிகின்றன. இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை அதிகப்படுத்துபவன். 2.4 மீட்டர் (மனிதர்களை விட உயரம்) உயரமும் 150 கிலோ எடையும் கொண்ட 'ஆஸ்ட்ரிச்' (OSTRICHES) பறக்கும் தன்மையில்லாத பறவையாகும். ஆனால், இவை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

இது போன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் சுருக்கத்தை கருத்தில் கொண்டு விதிவிலக்காக படைக்கப்பட்டுள்ள அத்தகைய உயிரினங்களைப்பற்றியும் அவற்றின் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் எந்த அம்சங்களில் மற்றவற்றுடன் வேறுபட்டுள்ளன என்பதைப் பற்றியும் தொடராக இப்பகுதியில் காண்போம்.

இந்த வரிசையிலே முதலாவதாக பாலூட்டி இனத்திலுள்ள விதிவிலக்கில் அடங்கக்கூடிய 'எகிட்னா' (
ECHIDNA) என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னியைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

-E. உஸ்மான் அலி-

புதன், 18 ஜனவரி, 2012

குர்ஆன் கூறும் கருவியல் – தொடர் 4 மனிதப் படைப்பின் அற்புதம்


குர்ஆன் கூறும் கருவியல் – தொடர் 4 மனிதப் படைப்பின் அற்புதம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 7th June 2008
நிச்சயமாக நாம் மனிதனை களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்: பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்: பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற (ஒட்டிக் கொண்டு தொங்கும்) நிலையில் ஆக்கினோம்: பின்னர் அந்த அலக்கை ஒரு (சவைக்கப்பட்ட மாமிசம் போன்ற ஒரு) தசைப் பிண்டமாக ஆக்கினோம்: பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்: பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்: பின்னர் நாம் அதை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவனும் படைப்பாளர்களுக்கெல்லாம் மிக அழகான படைப்பாளன் (அல்-குர்ஆன் 23:12-16)Sperm Production ஆணின் விதைப்பையிலிலுள்ள விதையிலிருந்து (Testis) உற்பத்தியாகும் பல கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் விதைப்பையிலிலுள்ள ‘Epididymis’ என்ற பாதுகாப்பான பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்க்கையின் போது இந்த உயிர் அணுக்கள் இங்கிருந்து புறப்படடு ‘Vas deferns’  என்ற குழாய்  வழியாக ஆம்புல்லா (Ampulla) என்ற குழாய்க்கு வந்து பின்னர் ‘Seminal Vasicle’ மற்றும் புரோஸ்டேட் கிளான்ட (Prostate gland) என்ற பகுதியிலுள்ள திரவங்களுடன் கலந்து இந்திரியமாக மாறுகிறது. பிறகு இந்திரியம் ‘Ejaculatory tube’ வழியாக ஆணுறுப்பிலிலுள்ள முத்திரக்குழாயை அடைந்து பின்னர் அங்கிருந்து பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படுகிறது.
கர்ப்பப் பையினுல் செலுத்தப்படும் இந்திரியத்திலுள்ள பல இலட்ச/கோடிக் கணக்கான உயிர் அணுக்களிலிருந்து சில நூறு உயிர் அணுக்களே ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) என்ற குழாயை அடைகிறது. சினைப் பையிலிருந்து மாதம் ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டையும் மாதவிடாயிலிருந்து 14-ம் நாள் ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube)  க்கு வந்து சேர்கிறது. இங்கு தான் கருவுறுதல் நடைபெறுகிறது. ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube)  க்கு வந்து சேர்ந்த ஆணின் சில நூறு உயிர் அணுக்களிலிருந்து ஒரே ஒரு உயிர் அணு மட்டும் பெண்ணின் சினையுடன் சேர்ந்து கருவுகிறது. பின்னர் இந்தக் கரு செல் டிவிசன் (Cell Division)    என்ற முறையில் ஒரு செல் இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி, நான்கு எடடாகி இவ்வாறு பல்கி பெறுகிறது. பின்னர் இந்த கரு ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) லிருந்து சொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கருவுற்ற நாளிலிருந்து 8 ஆம் நாள் கர்ப்பப் பையை வந்து அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு கரு கர்ப்பப்பையின் சுவற்றில் ஊடுறுவுவதை ‘Implantation’ (இம்பிலேன்டேசன்) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.Sperm's Path
இது வரை நாம் பார்த்த விளக்கங்கள் எவ்வாறு குர்ஆனோடு ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். விதைப் பையிலிலுள்ள எபிடிமிஸ் என்ற பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப் பட்டுள்ள இந்திரியம் கர்ப்பப் பையினுள் செலுத்தப்பட்டு கருவுற்று கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்கும் (அலக்) நிலைக்கு வருகிறது. இதையே மேற்கண்ட வசனத்தின் முதல் மூன்று வரிகள் கூறுகிறது. இங்கே குர்ஆன் கூறும் சில அற்புதங்களைக் காண வேண்டும்.
இந்திரத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகிறான். அலக் என்பதற்கு இன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று விதமான பொருளைத் தருகின்றார்கள்.
1. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
2. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,
3. இரத்தக் கட்டி.
அல்ஹம்துலில்லாஹ். குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து  வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.Fertilization and Implantation
நாம் இனி அடுத்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.
கரு வளர்ந்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் வாயில் போட்டு மென்று சவைக்கப்பட்ட மாமிசம் போல தோன்றுகிறது. மருத்துவர்கள் இதை ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். இதையே குர்ஆன்  ‘முத்கா’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாமிச பிண்டத்திற்குள் தான் பின்னர் எலும்புகள் உருவாகின்றன. அடுத்து அந்த எலும்புகளைச் சுற்றி சதைப் பிடிப்பு ஏற்படுகிறது. இந்த சதை பிடிப்பை குர்ஆன் ‘லஹ்ம்’ என்கிறது. இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கு தேவையான  மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைந்து மனிதபடைப்பாக மாறுகிறது. இவ்வளவு நுணுக்கமான முறையில் கருவின் வளாச்சி குறித்து குர்ஆன் விவரிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவரால் தான் இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்; விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த நவீன கண்டுபிடிப்பை குர்ஆனில் 1400 ஆணடுகளுக்கு முன்னரே மிகத்துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருப்பது இது இறைவேதம் என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

தொடர்புடைய ஆக்கங்கள்:

தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்



எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 18th March 2008
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சிறிய தொகுப்பில் ஒரு முஸ்லிம் எதற்காகத் தொழ வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் என்ன மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறுவதைப் பார்ப்போம்.
1. தொழுகையின் அவசியம்: -
மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது: -
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்
எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்:-
எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
போர்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்: -
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும். (அல்குர்ஆன் 4:102)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)
ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்: -
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்:-
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி
2. தொழுகையின் பலன்கள் : -
தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528
தொழுகை தீய காரியங்களை அகற்றிவிடும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஆதாரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 526
மானக்கேடாவைகளைத் தடுக்கிறது: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)
உரிய நேரத்தில் உள்ளச்சத்துடன் தொழுபவரை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ – இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.’ அறிவிப்பவர்: : உபாதா பின் ஸாமித் (ரலி), ஆதாரம்: அபூதாவூது
தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்: -
‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் . அறிவிப்பவர்:: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்.
தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்: -
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)
3. தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்: -
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்: -
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)
ஜமாஅத்தாக தொழ வராதோரின் வீடுகளை நபி (ஸல்) அவர்கள் தீயிலிட்டுக் கொளுத்த விரும்பினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்: -
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)
எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

தொடர்புடைய ஆக்கங்கள்: