பெண்களும் நோன்பும்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M.
இஸ்மாயில் ஸலஃபி
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர்,
உண்மை உதயம் மாதஇதழ்இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.



உழைக்கும்
உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது).
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால்
அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்துண்ண ஊக்கப்படுத்துவார்கள். ஆக்க வழியையும்
காட்டுவார்கள். சம்பாதித்து உண்ணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித்
தருவார்கள்.
மேலும்
“தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருளைப் பெற்றிருப்பவன் பிறரிடம்
யாசித்தால் மறுமையில் முகத்தில் சதையின்றி வருவான்” என்று எம்பெருமானார்
இயம்பியதை இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பது திர்மிதீ, நஸஈ கிதாபுகளில்
காணப்படுகிறது.
தற்காலத்தில்
குடும்பத்தினர் பெயரில் அல்லது குடும்பப் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்து வணிக
நோக்கில் தொண்டு நிறுவனங்களைத் துவக்கி துலாக்கோலில் நிறுக்க முடியாத அளவிற்கு
ஆதாயம் அடைவோர் மக்களிடம், மாணவர்களிடம் நிதிகேட்பது நீதிக்குப் புறம்பானது என்பது
இக்கூற்றிலிருந்து பெறப்படும் உண்மை. ஈயென இரத்தல் தீயினும் தீய தீமை என்று
தெரிந்து, தெளிந்து ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்று இலவசங்களில் இன்பம் காணாது
உழைத்துப் பிழைப்போம். உயர்வாய் வாழ்வோம்.