WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

புதன், 11 ஏப்ரல், 2012

முஸ்லிம்களில் ஹனபி


ஹம்துல்லாஹ் ஜமாலி

   இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.
   தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
    இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.
    ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். "உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி" எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.
    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.
    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி "முஅத்தா முஹம்மது" என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் "இமாமுல் அஃலம்" எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.
    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.
    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
    ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.




  நூல்கள் ஹிஜ்ரி நூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி5ம் நூற்றாண்டு300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  9.ஜாமிஉல்ருமூஸ்8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  13.சல்பீ10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  14.பஹ்ரு ராயின்10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  15.தன்வீர் அப்ஸார்10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  16.தகீரா10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  17.துர்ருல் முக்தார்11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
  18.ஃபதாவா ஆலம்கீரி12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்



    இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள "ஃபதாவா ஆலம்கீரி" மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
    இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் "ஃபத்வா" (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.
    இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய "முஅத்தா மாலிகி" நூலுக்கு விளக்கம் தந்து "அவ்ஜஜுல் மஸாலிக்" என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் "முஹன்னஃபுல் மாலிகி" மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
    எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.
    அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.


அபூபக்கர் ஸித்திக் (ரழி) அவர்களின் தியாக வாழ்வு



எழுதியவர்/பதிந்தவர்/உரை
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அனைத்து தமிழ் அழைப்பு குழு – பஹ்ரைன்

Download mp4 video

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முஹம்மது நபியின் வருகையை ஆராய துடிக்கும் கிறிஸ்த்தவம்




 
 
டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி

துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது. அது என்ன தெரியுமா?

நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஹீப்ரு, அராபிக், மற்றும் பழமைவாய்ந்த போனிசியன்-அக்காடியன் மொழியின் கலப்பினமான 'அரமைக்' மொழியில் மிருக தோலினால் தங்க எழுத்துக்களில் கையினால் எழுப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதனுடைய அருமை 2012 ஆண்டு ஆரம்ப முதலில் யாருக்கும் தெரியாது.

அந்த நூலினை சமீபத்தில் தலை நகர் அங்காராவின் பழமை பொருள் பாதுகாக்கும் அருங்காட்ச்யகத்திற்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்ததினை தற்போதைய ‘போப் பெனெடிக்ட்’ அவர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள் என்றதும் அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அதில் தான் வானவர்களும் போற்றக்கூடிய வள்ளல் பெருமான் முகமது ஸல்லல்லாகு அவர்கள் அகிலத்தில் உதிக்கப் போகிறார்கள் என்ற முன்னறிப்பாகும். அந்த அறிவிப்பின் நகல் மட்டும் ரூ 10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈமான் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அது விலை மதிக்க முடியா பொக்கிஷம் என்றால் மிகையாகுமா?.

புனித குர்ஆனில் மாந்தரை நல்வழிப்படுத்த அகிலத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான நபிமார்கள் வல்ல அல்லா அனுப்பியதாகவும் அதில் 25 பெயர்கள் சொல்லப் பட்டதும் அனைவரும் அறிவர். அப்படி நபிகளாக வந்த மூசா அலைகிவஸல்லம் மற்றும் ஈசா அலைகிவஸல்லம் ஆகியோரை இன்று கடவுளாக யூதர்களும், கிறித்துவர்களும் சித்தரிகிறார்கள். மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தௌராத் வேதத்தினையும், நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஞ்சில் வேதத்தினையும் ஏக வல்லோன் அல்லா வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது அல் குரானிலே! அதனை அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறோம்.

அதற்கு உதாரணமாக திருக்குர்ஆனில் அல் அஹ்ராப்- சிகரம் என்ற தலைப்பில் அத்தியாயம் எழில், பாகம் ஒன்பதில்,

''அன்றி, (இறைவனே) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையைக் கற்பனை செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும்(செய்வாயாக). நிச்சயமாக நாங்கள் உன்பாலே முன்னோக்கினோம்".......எவர்கள் நம்முடைய வசனங்களை(மெய்யாகவே) விசுவசிக்கிரார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளாகிய) அதனை நான் கற்பனை செய்வேன்" என்றும், (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுத்தாற்றல் அற்ற(நம்) தூதராகிய இந்த நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்பற்றுகிறார்களோ அவர்கள், தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இஞ்சிளிலும், இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதினைக் காண்பீர்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாபமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்!

அத்தியாயம் 61 பாகம் 28 அணிவகுப்பு என்று வருகின்ற இடத்தில், 'மர்யமுடைய மகன் ஈசா அலைஹிஸ்ஸலாம் "இஸ்ரயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் 'அஹ்மத்' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூறுகின்றேன் என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதித்ததினையோ, அவர்கள் சந்ததியினர் நமது சகோதரர்கள் என்பதினையோ ஏன் யூதர்களோ அல்லது கிருத்துவர்களோ ஒத்துக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளையும், ஓட, ஓட விரட்டி, குனிய, குனிய குத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வசிப்பவர்களில் யார் பெயரினை தங்கள் பெயருடன் சேர்த்துள்ளார்கள் ஜீசுஸ் கிரிஷ்ட்டா அல்லது முஹம்மதா என்று ஆராயும் போது முஹம்மது பெயரே அதிகம் என்று அறிந்தார்கள்.

கிருத்துவர்கள் வாழும் நகரில் முஹம்மது பெயர் முக்கியத்துவம் வாய்ந்து, மக்களை தன் பெயர் தாங்கச் சொல்லும் அளவிற்கு செய்த ஈர்ப்பு என்ன என்று கீழே காணலாம்:
1) வரலாற்றில் வாழ்ந்து, ஏக அல்லாஹ்வால் அடையாளம் காணப்பட்டு, மாக்களாக இருக்கும் மக்கள் ஓரிறையின்பால் ஈர்க்கப்படவும், பண்படவும் வஹி மூலம் நபியாக மக்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டவர்கள். ஆனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈசா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் நபியாக அனுப்பப்பட்டு அறியாத மக்களால் கடவுளாக சித்தரிக்கப் பட்டவர்கள் ஆவர்.

2) எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று ஏக இறைவனைப் புகழ்ந்தவர்கள். தன்னுடைய தனிப்பட்ட புகழ் என்றும் தலை தூக்கக்கூடாது என்று கவனமாக செயல் பட்டவர்கள். ஆனால் யூதர்களும், கிருத்துவர்களும் மூசாவினையும், ஜீசசினையும் கடவுளாக வழிபட வழி வகுத்தனர்.

3) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க விளக்கங்களைத் தந்ததோடு திருமண வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தார்கள். ஆனால் மற்ற மதங்களில் குருமார்கள் திருமண மாகாது இருந்ததால் பிற்காலத்தில் சிறுவர்களுடன் கூடா உறவு மேற்கொள்ள வழி வகுத்து விட்டார்கள் .

4) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிநபர் ஒழுக்கத்தினை வலியுறித்தினார்கள். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இஸ்ரேயில் ஜனாதிபதி தன் பணிப் பெண்ணுடன் அலுவலகத்தில் கள்ள உறவு கொண்டதும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தன் பணிபெண்ணுடன் வாய்வழி உறவு கொண்டதும் உலக நாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தது.

5) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனநாயக முறை ஆட்சி நடத்தியதால் தனக்குப் பிறகு வாரிசினை நியமிக்கவில்லை. ஆனால் இன்னும் கூட சில கிருத்துவ நாடுகளில் முடியரசு இருந்து கொண்டுதான் உள்ளது.

6) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது எளிமையினைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் இஸ்ராயில், கிருத்துவ மன்னர்கள் ஆடம்பர வாழ்கை நடத்தியும், கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாலும் அந்த நாடுகளில் தற்போது இஸ்லாமியர் நாடுகளில் நடந்ததுபோன்ற பிரான்ஸ் புரட்சி, ரஷ்யன் புரட்சிகள் ஏற்பட்டன.

7) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது யூதர்கள், கிருத்துவர்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அமைதி ஆட்சியினை தந்தார்கள். ஆனால் இஸ்ரயிலர்களும், கிருத்துவர்களும் ஆளும் நாடுகளில் இன்றும் இஸ்லாமியர் வேட்டையாடப் படுகின்றனர்.

8) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் படையினருக்கு போர்களங்களில் பயிர்கள், மரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கவும், வளர்ப்பு பிராணிகள்,பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு உடல் சேதம் கொடுக்ககூடாது என்ற கட்டளைப் பிறப்பித்தார்கள். ஆனால் 1090 ஆம் ஆண்டு ஜெருசலத்தினைப் பிடிக்க நடந்த சிலுவைப் போரில் கிருத்துவர்கள், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆக மொத்தம் 60000 பேர்கள் கொன்று குவித்தனர்.

9) பெண் சிசு கொலை தடுத்தும், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கியும், திருமணம் ஒரு ஒப்பந்தம், அது ஒரு சடங்கு இல்லை என்றும், சீதன முறை ஒழித்தும், திருமண வைபவங்களில் ஆடம்பரம் ஒழித்தும் ஆணை இட்டார்கள். ஆனால் கிருத்துவ அமெரிக்காவில் சமீபத்தில் தான் முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஜனாதிபதி ஒபாமா பெண் ஊழியருக்கு வேளையில் சம உரிமை வழங்கினார்.

10) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமையினை விடுதலை செய்தார்கள்.ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பே தென் ஆப்பிரிகா போன்ற நாடுகளில் கறுப்பின மக்களுக்கும் சம உரிமை கிடைத்தது.

11) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது, விபச்சாரம், வட்டி போன்றவைகளை அறவே ஒழித்தார்கள். ஆனால் கிருத்துவ, இஸ்ரேயில் நாடுகளில் அவைகளை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.

12) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு முறையில் ஹலால், ஹராம் எது என்று பிரித்துக் காட்டினார்கள். ஆகவேதான் புழுப் பூச்சிகளை சாப்பிட்டு வந்த சீன, ஆப்பரிக்க முஸ்லிம்கள் ஹலால் உணவுப் புரட்சியினை கடைப் பிடித்தார்கள்.

ஏக இறைவன் ரசூலல்லாஹ் மூலம் வித்திட்ட இஸ்லாமிய மார்க்கம் இன்று 150 கோடி மக்களை கொண்டுள்ளது ஆச்சரியமே! அது எல்லாம் வல்ல நாயனின் கட்டளை. ரசூலல்லாவின் படைப்பிற்கும், புகழுக்கும் துருக்கியில் படைத்த சான்று ஒன்று தான் உள்ளது என்று எண்ண வேண்டாம். இன்னும் மனிதனுக்கு கிடைக்காத பொக்கிஷம் புதைந்துள்ளது. அவைகளை சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வெளிக் கொண்டு வருவதின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்போமா..??

சனி, 31 மார்ச், 2012

இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா

அபூபக்கர்-உமர்[ரலி-அன்ஹும்] (6)


லேபிள்கள்


புதன், 28 மார்ச், 2012

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)


திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)



21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)



11.எதை நெருங்க வேண்டாம் என ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்? இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என அல்லாஹ் கூறினான். (2:35)

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)

 
 
6. யாருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம் என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்?  ஏக இறைவனை மறுப்போருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம். (2:6)
 
7. (கெட்ட) மனிதர்களும், கற்களும் எதன் எரிபொருள்? நரகத்தின் எரிபொருள். (2:24)
 
8. எதை உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான்? கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (2:26)
 
9. எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்? இரத்த பந்த உறவினர்களை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான். (2:27), (13:21)
 
10. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்" என அல்லாஹ் வானவர்களிடம் கூறியதும் அவர்கள் என்ன கூறினார்கள்? "அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தோவோரையா படைக்க்போகிறாய்?  நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே! குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறோமே!" என்று வானவர்கள் கூறினார்கள். (2:30)
 
 
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன்.  கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன்.  இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,) 

திங்கள், 11 ஜூலை, 2011

புதன், 21 மார்ச், 2012

குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.


குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.

>> Tuesday, January 24, 2012

பிரமிப்பூட்டும் நேர் விவாதம்.குர்ஆனா? பைபிளா? எது உண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது.

யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.


குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.

சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள்.

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.

சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.

கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.

Quran  or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.

இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.

முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம்.

Dr. சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 3



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 4



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 5


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 6



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 7


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 8


அசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்
இதிலுள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிட‌மிருந்து வ‌ந்த‌து என‌ கூற‌லாமா?

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது

யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை

பைபிளில் விஞ்ஞான‌ பிழைக‌ள்.

பூமி அழியுமா? அழியாதா?

இவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.

ஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.

அப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.
அப்படித்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன‌
என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்
நவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.

மேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.

வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.

இதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 9


தொழுநோயிலிருந்து த‌ன் வீட்டை பாதுகாக்க‌ ஒரு நூத‌ன்மான‌ வ‌ழியை பைபிள் சொல்லுகிற‌து இர‌ண்டு குருவிக‌ளை எடுங்க‌ள் ஒன்றை கொன்று ம‌ர‌த்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு ப‌ற‌வையை ஓடும் நீரில் ந‌னைத்து அத‌ன் பிற‌கு அந்த‌ ர‌த்த‌த்தை வீடு முழுவ‌தும் ஏழு முறை தெளிக்க‌ வேண்டும்.

தொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா?

மருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.

ஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.

 ஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.

பெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி?

விபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி ?

எண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31

என்ன அருமையான வழி?

சந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது?

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 10



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 11



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 12



 நிறைவேறாத தீர்ககதரிசனம்.

பைபிள் இறைவ‌னின் வார்த்தைக‌ள் அல்ல‌

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 13


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 14

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 15



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 16



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 17


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 18



இதை ஆங்கிலத்தில் காண
சுட்டி http://thegrandverbalizer19.blogspot.com/2009/11/debate-quran-and-bible-in-light-of.html

----------------
இந்த ஆக்கத்தை தயவு செய்து தங்களுடைய இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.