புதன், 11 ஏப்ரல், 2012
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
முஹம்மது நபியின் வருகையை ஆராய துடிக்கும் கிறிஸ்த்தவம்
நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஹீப்ரு, அராபிக், மற்றும் பழமைவாய்ந்த போனிசியன்-அக்காடியன் மொழியின் கலப்பினமான 'அரமைக்' மொழியில் மிருக தோலினால் தங்க எழுத்துக்களில் கையினால் எழுப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதனுடைய அருமை 2012 ஆண்டு ஆரம்ப முதலில் யாருக்கும் தெரியாது.
அந்த நூலினை சமீபத்தில் தலை நகர் அங்காராவின் பழமை பொருள் பாதுகாக்கும் அருங்காட்ச்யகத்திற்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்ததினை தற்போதைய ‘போப் பெனெடிக்ட்’ அவர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள் என்றதும் அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அதில் தான் வானவர்களும் போற்றக்கூடிய வள்ளல் பெருமான் முகமது ஸல்லல்லாகு அவர்கள் அகிலத்தில் உதிக்கப் போகிறார்கள் என்ற முன்னறிப்பாகும். அந்த அறிவிப்பின் நகல் மட்டும் ரூ 10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈமான் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அது விலை மதிக்க முடியா பொக்கிஷம் என்றால் மிகையாகுமா?.
புனித குர்ஆனில் மாந்தரை நல்வழிப்படுத்த அகிலத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான நபிமார்கள் வல்ல அல்லா அனுப்பியதாகவும் அதில் 25 பெயர்கள் சொல்லப் பட்டதும் அனைவரும் அறிவர். அப்படி நபிகளாக வந்த மூசா அலைகிவஸல்லம் மற்றும் ஈசா அலைகிவஸல்லம் ஆகியோரை இன்று கடவுளாக யூதர்களும், கிறித்துவர்களும் சித்தரிகிறார்கள். மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தௌராத் வேதத்தினையும், நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஞ்சில் வேதத்தினையும் ஏக வல்லோன் அல்லா வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது அல் குரானிலே! அதனை அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறோம்.
அதற்கு உதாரணமாக திருக்குர்ஆனில் அல் அஹ்ராப்- சிகரம் என்ற தலைப்பில் அத்தியாயம் எழில், பாகம் ஒன்பதில்,
''அன்றி, (இறைவனே) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையைக் கற்பனை செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும்(செய்வாயாக). நிச்சயமாக நாங்கள் உன்பாலே முன்னோக்கினோம்".......எவர்கள் நம்முடைய வசனங்களை(மெய்யாகவே) விசுவசிக்கிரார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளாகிய) அதனை நான் கற்பனை செய்வேன்" என்றும், (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுத்தாற்றல் அற்ற(நம்) தூதராகிய இந்த நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்பற்றுகிறார்களோ அவர்கள், தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இஞ்சிளிலும், இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதினைக் காண்பீர்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாபமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்!
அத்தியாயம் 61 பாகம் 28 அணிவகுப்பு என்று வருகின்ற இடத்தில், 'மர்யமுடைய மகன் ஈசா அலைஹிஸ்ஸலாம் "இஸ்ரயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் 'அஹ்மத்' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூறுகின்றேன் என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதித்ததினையோ, அவர்கள் சந்ததியினர் நமது சகோதரர்கள் என்பதினையோ ஏன் யூதர்களோ அல்லது கிருத்துவர்களோ ஒத்துக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளையும், ஓட, ஓட விரட்டி, குனிய, குனிய குத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வசிப்பவர்களில் யார் பெயரினை தங்கள் பெயருடன் சேர்த்துள்ளார்கள் ஜீசுஸ் கிரிஷ்ட்டா அல்லது முஹம்மதா என்று ஆராயும் போது முஹம்மது பெயரே அதிகம் என்று அறிந்தார்கள்.
கிருத்துவர்கள் வாழும் நகரில் முஹம்மது பெயர் முக்கியத்துவம் வாய்ந்து, மக்களை தன் பெயர் தாங்கச் சொல்லும் அளவிற்கு செய்த ஈர்ப்பு என்ன என்று கீழே காணலாம்:
2) எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று ஏக இறைவனைப் புகழ்ந்தவர்கள். தன்னுடைய தனிப்பட்ட புகழ் என்றும் தலை தூக்கக்கூடாது என்று கவனமாக செயல் பட்டவர்கள். ஆனால் யூதர்களும், கிருத்துவர்களும் மூசாவினையும், ஜீசசினையும் கடவுளாக வழிபட வழி வகுத்தனர்.
3) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க விளக்கங்களைத் தந்ததோடு திருமண வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தார்கள். ஆனால் மற்ற மதங்களில் குருமார்கள் திருமண மாகாது இருந்ததால் பிற்காலத்தில் சிறுவர்களுடன் கூடா உறவு மேற்கொள்ள வழி வகுத்து விட்டார்கள் .
4) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிநபர் ஒழுக்கத்தினை வலியுறித்தினார்கள். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இஸ்ரேயில் ஜனாதிபதி தன் பணிப் பெண்ணுடன் அலுவலகத்தில் கள்ள உறவு கொண்டதும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தன் பணிபெண்ணுடன் வாய்வழி உறவு கொண்டதும் உலக நாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தது.
5) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனநாயக முறை ஆட்சி நடத்தியதால் தனக்குப் பிறகு வாரிசினை நியமிக்கவில்லை. ஆனால் இன்னும் கூட சில கிருத்துவ நாடுகளில் முடியரசு இருந்து கொண்டுதான் உள்ளது.
6) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது எளிமையினைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் இஸ்ராயில், கிருத்துவ மன்னர்கள் ஆடம்பர வாழ்கை நடத்தியும், கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாலும் அந்த நாடுகளில் தற்போது இஸ்லாமியர் நாடுகளில் நடந்ததுபோன்ற பிரான்ஸ் புரட்சி, ரஷ்யன் புரட்சிகள் ஏற்பட்டன.
7) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது யூதர்கள், கிருத்துவர்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அமைதி ஆட்சியினை தந்தார்கள். ஆனால் இஸ்ரயிலர்களும், கிருத்துவர்களும் ஆளும் நாடுகளில் இன்றும் இஸ்லாமியர் வேட்டையாடப் படுகின்றனர்.
8) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் படையினருக்கு போர்களங்களில் பயிர்கள், மரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கவும், வளர்ப்பு பிராணிகள்,பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு உடல் சேதம் கொடுக்ககூடாது என்ற கட்டளைப் பிறப்பித்தார்கள். ஆனால் 1090 ஆம் ஆண்டு ஜெருசலத்தினைப் பிடிக்க நடந்த சிலுவைப் போரில் கிருத்துவர்கள், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆக மொத்தம் 60000 பேர்கள் கொன்று குவித்தனர்.
9) பெண் சிசு கொலை தடுத்தும், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கியும், திருமணம் ஒரு ஒப்பந்தம், அது ஒரு சடங்கு இல்லை என்றும், சீதன முறை ஒழித்தும், திருமண வைபவங்களில் ஆடம்பரம் ஒழித்தும் ஆணை இட்டார்கள். ஆனால் கிருத்துவ அமெரிக்காவில் சமீபத்தில் தான் முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஜனாதிபதி ஒபாமா பெண் ஊழியருக்கு வேளையில் சம உரிமை வழங்கினார்.
10) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமையினை விடுதலை செய்தார்கள்.ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பே தென் ஆப்பிரிகா போன்ற நாடுகளில் கறுப்பின மக்களுக்கும் சம உரிமை கிடைத்தது.
11) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது, விபச்சாரம், வட்டி போன்றவைகளை அறவே ஒழித்தார்கள். ஆனால் கிருத்துவ, இஸ்ரேயில் நாடுகளில் அவைகளை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.
12) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு முறையில் ஹலால், ஹராம் எது என்று பிரித்துக் காட்டினார்கள். ஆகவேதான் புழுப் பூச்சிகளை சாப்பிட்டு வந்த சீன, ஆப்பரிக்க முஸ்லிம்கள் ஹலால் உணவுப் புரட்சியினை கடைப் பிடித்தார்கள்.
ஏக இறைவன் ரசூலல்லாஹ் மூலம் வித்திட்ட இஸ்லாமிய மார்க்கம் இன்று 150 கோடி மக்களை கொண்டுள்ளது ஆச்சரியமே! அது எல்லாம் வல்ல நாயனின் கட்டளை. ரசூலல்லாவின் படைப்பிற்கும், புகழுக்கும் துருக்கியில் படைத்த சான்று ஒன்று தான் உள்ளது என்று எண்ண வேண்டாம். இன்னும் மனிதனுக்கு கிடைக்காத பொக்கிஷம் புதைந்துள்ளது. அவைகளை சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வெளிக் கொண்டு வருவதின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்போமா..??
சனி, 31 மார்ச், 2012
அபூபக்கர்-உமர்[ரலி-அன்ஹும்] (6)
லேபிள்கள்
- அனஸ் இப்னு நள்ர்[ரலி] (3)
- அனஸ்[ரலி] (1)
- அன்சாரிகளின் சிறப்பு (3)
- அன்னை ஃபாத்திமா[ரலி] (1)
- அன்னைஆயிஷா[ரலி] (7)
- அன்னையர்கள் (3)
- அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] (1)
- அபூ ஜந்தல்[ரலி]-அபூ பஷீர்[ரலி] (1)
- அபூஅய்யூப்[ரலி] (1)
- அபூதர்[ரலி] (1)
- அபூதல்ஹா[ரலி] (2)
- அபூபக்கர்-உமர்[ரலி-அன்ஹும்] (6)
- அபூபக்கர்[ரலி] (6)
- அபூமூஸா[ரலி] (1)
- அபூஹுரைரா[ரலி] (3)
- அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம்[ரலி] (1)
- அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (1)
- அப்பாஸ்[ரலி] (1)
- அம்மார்[ரலி] (1)
- அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] (2)
- அலீ[ரலி] (4)
- அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] (2)
- இப்னு உமர்[ரலி] (1)
- இப்னு மஸ்வூத்[ரலி] (1)
- உக்பா இப்னு ஹாரிஸ்[ரலி] (1)
- உசைத் இப்னு ஹுளைர்[ரலி] (1)
- உபை இப்னு கஅப்[ரலி] (1)
- உமர்[ரலி] (15)
- உம்மு அய்மன்[ரலி] (1)
- உம்மு ஸுலைம்[ரலி] (2)
- உஸ்மான்[ரலி] (5)
- குபைப்[ரலி] (1)
- சஹாபாக்கள் (21)
- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (1)
- திஹ்யா[ரலி] (1)
- நபித் தோழியர்கள் (1)
- பத்ரியீன் (2)
- மாயிஸ்[ரலி] (1)
- முஆத்-முஆத் [ரலி அன்ஹும்] (1)
- முஸ்அப்[ரலி] (1)
- வஹ்ஷீ அவர்கள் (1)
- விமர்சனம் (1)
- ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) (1)
- ஸவ்தாஇப்னு கஸிய்யா[ரலி] (1)
- ஸாபித்இப்னுஹைஸ்[ரலி] (1)
- ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (1)
- ஸுபைர்[ரலி] (1)
- ஸைத் இப்னு அர்கம்[ரலி] (1)
- ஹகீம் இப்னு ஹிஸாம்[ரலி] (1)
- ஹசன்[ரலி]-முஆவியா[ரலி] (1)
- ஹன்ழலா[ரலி] (1)
- ஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] (1)
- ஹாதிப்[ரலி] (1)
- ஹாரிஸா[ரலி] (1)
- ஹுதைஃபா இப்னு அல்யமான்[ரலி] (1)
புதன், 28 மார்ச், 2012
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது? மூஸா நபியின் சமுதாயம். (2:56)
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
6. யாருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம் என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்? ஏக இறைவனை மறுப்போருக்கு எச்சரிப்பதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமம். (2:6)
7. (கெட்ட) மனிதர்களும், கற்களும் எதன் எரிபொருள்? நரகத்தின் எரிபொருள். (2:24)
8. எதை உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான்? கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (2:26)
9. எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்? இரத்த பந்த உறவினர்களை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான். (2:27), (13:21)
10. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்" என அல்லாஹ் வானவர்களிடம் கூறியதும் அவர்கள் என்ன கூறினார்கள்? "அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தோவோரையா படைக்க்போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே! குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறோமே!" என்று வானவர்கள் கூறினார்கள். (2:30)
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்! தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 11 ஜூலை, 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)
புதன், 21 மார்ச், 2012
குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.
குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.
>> Tuesday, January 24, 2012
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது.
யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.
சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த 18 விடியோக்களையும் பாருங்கள்.
இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.
சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.
கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.
முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம்.
Dr. சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 3
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 4
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 5
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 6
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 7
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 8
அசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்
இதிலுள்ள அபத்தங்களை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிடமிருந்து வந்தது என கூறலாமா?
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது
யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
பைபிளில் விஞ்ஞான பிழைகள்.
பூமி அழியுமா? அழியாதா?
இவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.
ஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.
அப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.
அப்படித்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
கிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன
என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்
நவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.
மேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.
வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.
இதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 9
தொழுநோயிலிருந்து தன் வீட்டை பாதுகாக்க ஒரு நூதன்மான வழியை பைபிள் சொல்லுகிறது இரண்டு குருவிகளை எடுங்கள் ஒன்றை கொன்று மரத்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு பறவையை ஓடும் நீரில் நனைத்து அதன் பிறகு அந்த ரத்தத்தை வீடு முழுவதும் ஏழு முறை தெளிக்க வேண்டும்.
தொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா?
மருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.
ஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.
ஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.
பெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி?
விபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி ?
எண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31
என்ன அருமையான வழி?
சந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது?
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 10
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 11
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 12
நிறைவேறாத தீர்ககதரிசனம்.
பைபிள் இறைவனின் வார்த்தைகள் அல்ல
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 13
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 14
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 15
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 16
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 17
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 18
இதை ஆங்கிலத்தில் காண
சுட்டி http://thegrandverbalizer19.blogspot.com/2009/11/debate-quran-and-bible-in-light-of.html
----------------
இந்த ஆக்கத்தை தயவு செய்து தங்களுடைய இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
சனி, 17 மார்ச், 2012
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு:
(1) அமைதி, சமாதானம்
(2) ஓரே இறைவனுக்கு முழுமையாக அடிபணிதல்
அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவன் இட்ட கட்டளைகளுக்கு முழுமையாக அடிப்பணிந்து ஒருவன் வாழும்பொழுது அவன் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னுள்ள நிரந்தரமான வாழ்க்கையிலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறான்.
மேலும் இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதமல்ல. இறைவனால் வகுத்து தரப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். ஏன் என்றால் மற்ற மதங்களை போல் இஸ்லாம் வெறுமனே வெறும் வணக்கத்தை மட்டும் மக்களுக்கு போதிக்கவில்லை. இறைவணக்கம், குடும்பவாழ்க்கை, பொருளீட்டல், அரசியல், சமூகவாழ்க்கை, தனிமனித ஒழுக்கங்கள் என்று ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவையெல்லாம் அவன் வாழ்க்கையில் சம்பந்தப்படுமோ அவை எல்லாவற்றையும் பற்றி இஸ்லாம் கற்று தந்துள்ளது.
முஸ்லிம்கள் என்றால் யார்?
உலக சனத்தொகையில் ஏறக்குறைய 150 கோடி மக்களாக அதாவது 23% ஆக வாழும் முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். அதாவது அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டும் வணங்கக்கூடியவர்கள். நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லாம் அவர்களை இறைவனின் தூதராக ஏற்று அவர்களை தன் வாழ்க்கையின் முன் மாதிரியாக கொண்டு அவர்களை பின்பற்றி வாழ்பவர்கள்.
முஸ்லிம் சனத்தொகை புள்ளிவிபரம்
மொத்த முஸ்லிம் சனத்தொகை - ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை (estimated)
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு - இந்தோனேசியா - ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம்கள்
மேலதிக முஸ்லிம் புள்ளிவிபரங்களுக்கு
இஸ்லாத்தின் அடிப்படை
"லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"
வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள் என்பது இந்த இஸ்லாமிய மூல மந்திரத்தின் பொருளாகும்.
இதன் படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டுமே வணங்க வேண்டும். முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களை அல்லாஹ்வின் திருதூதராக ஏற்று அவர்களின் வாழ்வை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும். உலகிலுள்ள சர்வ உறவுகளை விடவும் பொருட்களை விடவும் எல்லாவற்றை விடவும் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களையும் தம் உயிரை விடவும் நேசிக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்.
இதை விட ஒரு முஸ்லிம் உலகம் படைக்கப்பட்டதில் இருந்து இறுதி இறைதூதராக வந்த நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களது காலம் வரை இவ்வுலகிற்கு வந்த அத்தனை இறைதூதர்களையும் ஏற்று நம்பிக்கை கொள்ளவேண்டும். எனவே தான் இறைதூதர்கள் ஆதம், நோவா, ஆப்ரஹாம், மோசஸ், தாவீது, இயேசு (அல்லாஹ்வினது சாந்தியும் சமாதானமும் இவர்கள் அனைவர் பேரிலும் ஏற்படுமாக) போன்ற அனைத்து இறைத்தூதர்களையும் முஸ்லிம்கள் இறைத்தூதர்களாக விசுவாசம் கொண்டு அவர்களை கண்ணியப்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களால் இறைவன் என்றும் இறைவனின் குமாரன் என்றும் சொல்லப்படும் இயேசு கிறிஸ்து (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் பேரில் ஏற்படுமாக) உண்மையில் இஸ்லாத்தின் ஒரு இறைதூதரே அன்றி வேறில்லை.
ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?
ஒவ்வொரு முஸ்லிமும் கீழே சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் உள்ளத்தால் பரிபூரணமாக ஏற்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒரு விடயத்தையாவது ஒருவன் நம்பவில்லை என்றால் அவன் முஸ்லிமாக கருதப்படமாட்டான்.
(1) அல்லாஹ்வை நம்ப வேண்டும்
(2) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மலக்குமார்களை (வானவர்களை ) நம்பவேண்டும்
(3) அல்லாஹ் அருளிய வேதங்களை நம்ப வேண்டும்
(4) அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பிய திருத்தூதர்களை நம்பவேண்டும்
(5) இறுதி நாளை நம்ப வேண்டும் - அதாவது ஒரு நாள் இவ்வுலகம் அழிந்து மனிதர்கள் யாவரும் மரணித்து மீண்டும் அல்லாஹ்வினால் மறுமை நாளில் எழுப்பப்பட்டு அவர்கள் செய்த நன்மை தீமைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு சுவர்க்கம் நரகம் செல்வர் என்பதை நம்ப வேண்டும்
(6) நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது என்பதை நம்பவேண்டும்.
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் என்ன?
ஒருவன் முஸ்லிமாக இருந்தால் அவன் மீது பின்வருவன கடமையாகிறது.
(1) கலிமா/ஈமான் (இறை நம்பிக்கை)
(2) தொழுகை (தினமும் ஐவேளை இறைவனை தொழ வேண்டும்)
(3) நோன்பு (வருடத்தில் ஒரு மாதம் (ரமழான்) நோன்பு நோற்க வேண்டும்)
(4) ஸக்காத் (ஒவ்வொரு வருடமும் செல்வந்தர்கள் தம் செல்வத்தில் குறிப்பிட்ட வீதத்தை இறை வரி கொடுக்க வேண்டும்))
(5) ஹஜ் (உடல், பொருள் வசதி உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது புனித மக்காவிற்கு சென்று இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்)
ஒருவர் முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் முஸ்லிமாக மாற நாட்டம் கொண்டால் அவர் இஸ்லாமிய மூல மந்திரமான கலிமாவாகிய
"லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"
"வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள். "
என்பதை உள்ளத்தால் உறுதிப்பூண்டு நாவினால் சொல்லவேண்டும். பின்னர் குளித்து சுத்தமாகி அன்றைய நேரத்திலுள்ள தொழுகையை தொழ வேண்டும். பின்னர் இஸ்லாமிய மார்க்க சட்டத்திட்டங்களை மார்க்க ஆலிம்களிடம் கற்றுகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்பவர்கள் யார்?
அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களை நேரான வழியில் நடாத்த காலத்துக்கு காலம் திருத்தூதர்களை (நபிமார்களை) அனுப்பி வைத்தான். இந்த திருத்தூதர்களை மனித இனத்தில் இருந்தே உருவாக்கி அவர்களை அச்சமுதாய மக்களிடம் அனுப்பி அவர்களுக்கு எது சரி, எது பிழை என்பதை கற்றுக்கொடுத்தான். அவ்வாறு அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆவார்கள்.
ஆனால் அண்ட சராசரங்களையும் படைக்கும் முன்னர் முதன் முதலாக அல்லாஹ் படைத்தது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியையாகும் (நூரே முஹம்மதியா). அவர்களின் ஒளியை கொண்டே அல்லாஹ் சர்வ வஸ்துக்களையும் படைத்தான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் ஒளியினாலானவன். அனைத்தும் என் ஒளியினாலானவைகளே"
(நூல்: தாரமி)
இவ்வாறு சர்வ வஸ்துக்களையும் படைத்த பின் முதல் மனிதராக அல்லாஹ் படைத்தது இறைத்தூதர் ஆதம் அலைஹிவசல்லம் அவர்களையாகும். அவர்களின் உடலுக்குள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியான நூரே முஹம்மதியாவை செலுத்தினான். பின்னர் அந்த ஒளி ஆதம் அலைஹிவசல்லம் அவர்களின் முதுகந்தண்டில் இருந்து பரிசுத்தமான முதுகந்தண்டுகளுக்கு மாறி கொண்டே வந்து இறுதியாக புனித மக்கமா நகரில் வாழ்ந்து வந்த அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு என்பவரின் முதுகந்தண்டில் இருந்து அவரது மனைவி அன்னை ஆமினாவின் வயிற்றுக்கு மாறி பின்னர் இப்பூவுலகத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாக பிறந்தது.
பிறப்பதற்கு முன் தந்தையையும் ஆறாவது வயதில் தாயையும் இழந்த நாயகமவர்கள் பாட்டனாரின் வளர்ப்பிலும் பின்னர் சிறிய தந்தையாரின் வளர்ப்பிலும் வளர்ந்து வந்தார்கள். சிறு வயதில் இருந்து அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் மிக ஒழுக்கத்தோடும் நட்குணத்தோடும் வாழ்ந்த நாயகமவர்கள் எல்லோராலும் நம்பிக்கையாளர் என்றும் உண்மையாளார் என்றும் போற்றப்பட்டார்கள். தங்களது நாற்பதாவது வயதில் அல்லாஹ்விடமிருந்து வானவர் ஜிப்ரீல் மூலமாக வஹி என்னும் இறைத்தூது வந்தது. உலக மக்களுக்கு தாம் இறுதி இறைத்தூதராக வந்திருப்பதை அறிவிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். 23 வருடங்கள் இறைசெய்தியை மக்களுக்கு எத்தி வைத்து இலட்சக்கணக்கான மக்களை இஸ்லாத்தில் இணைத்து ஒரே நாயனான அல்லாஹ்வை வணங்கவும் ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுகொடுத்து பரிசுத்தவான்களாக மாற்றினர். தமது 63வது வயதில் மதீனாவில் வைத்து இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் முழு சரிதையை வாசிக்க.....
முஸ்லிம்கள் எதனை பின்பற்ற வேண்டும்?
முஸ்லிம்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதமான அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் பின்பற்றுகின்றனர். மேலும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களையும், தோழர்களான ஸஹாபாக்களையும் பின்பற்றுகின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் திட்டமாக வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது வழிமுறை." (நூல் - முஅத்தா)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது குடும்பத்தார்கள்" (நூல் - முஸ்லிம், திர்மிதி, மிஷ்காத், முஸ்னத் அஹ்மத்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். அவர்களில் எவரை பின்பற்றினாலும் நீங்கள் நேர் வழி பெறுவீர்கள்" (நூல் - மிஷ்காத்)
அல் குர்ஆன் என்றால் என்ன?
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வினால் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறை வசனங்களாகும். இதில் இறைவனின் வல்லமைகள், மனிதகளுக்கான ஏவல்கள், விலக்கல்கள், முந்தைய சமூகங்களின் வரலாறு, இன்னும் பல விசயங்கள் காணப்படுகின்றன. இதுவே முஸ்லிம்களின் புனித நூலாகும். ஏனெனில் இது அல்லாஹ்வின் சொல்லாகும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முஸ்லிமல்லாதோருக்கும் நேர் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த இறை வசனங்கள் இறங்கியபோது அவை ஒவ்வொன்றும் அவ்வப்போது குறித்து வைத்து கொள்ளப்பட்டது. மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்களால் மனனம் செய்துகொள்ளப்பட்டது. பின்னர் இது நூல் வடிவில் உருவாக்கப்பட்டது. எனவே இதில் ஏனைய மதங்களின் புனித நூற்களை போல் எந்த ஒரு மனிதனின் சொற்களோ எண்ணங்களோ உட்புகுத்தப்படவில்லை. நூற்றுக்கு நூறு வீதம் பரிசுத்த இறை வசனங்கள் மட்டுமே உள்ளது. மேலும் சில மதத்தினரின் புனித நூற்களை போல காலத்துக்கு காலம் இது மாறுவதும் இல்லை. ஏறக்குறைய 1400 வருடங்களாக ஒரே அல் குர்ஆனையே முழு இஸ்லாமிய உலகும் பயன்படுத்துகிறது. அல்லாஹ் அதனை இறுதி நாள் வரையில் பாதுகாத்து வருகிறான்.
அல் ஹதீஸ் என்றால் என்ன?
அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சொன்னவை, செய்தவை, மற்றவர்கள் செய்யும்போது அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.
இவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களாலும், தோழர்களான சஹாபாக்களாலும் குறித்து வைக்கப்பட்டும் மனனம் செய்யப்பட்டும் பாதுக்காக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த இமாம்களால் இவை நூல் வடிவில் தொகுக்கப்பட்டது. இந்த நூல்களில் மிக ஆதாரப்பூர்வமானவை புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி என்பவையாகும்.
அஹ்லுல் பைத் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தினர்) என்றால் யார்?
அஹ்லுல் பைத் என்னும் குடும்பத்தார்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மகள் ஸைய்யதா பாத்திமா, மருகர் ஸைய்யதுனா அலி, பேரப்பிள்ளைகளான ஸைய்யதுனா ஹசன், ஸைய்யதுனா ஹுசைன் (இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக) ஆகியோரையும் இவர்களின் பரம்பரையில் வந்துதித்தவர்களையும் குறிக்கும்.
ஸஹாபாக்கள் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்கள்) என்றால் யார்?
ஸஹாபாக்கள் என்னும் தோழர்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்களை நேரடியான கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்கும்.
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் எவை?
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் என்பது முஸ்லிம்கள் மார்க்கம் சம்பந்தமான சட்டத்திட்டங்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை ஆதாரங்களை குறிக்கும். இவையாவன:
(1) அல் குர்ஆன் - அல்லாஹ்வின் இறைவசனங்கள்.
(2) அல் ஹதீஸ் - நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.
(3) இஜ்மாஹ் - இஸ்லாமிய மார்க்க பேரறிஞர்களின் பத்வா என்னும் மார்க்கதீர்ப்பு.
(4) கியாஸ் -
உண்மையில் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. அல் குர்ஆனில் பல விடயங்கள் சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது. எனவே அவற்றிற்கான முழு விளக்கமும் அல் ஹதீஸில் இருக்கிறது. இந்த ஹதீஸ்கள் பிற்கால சமுதாய மக்களிடம் வந்து சேரும்போது சிலவேளை ஒரே விடயம் பல்வேறு விதமாக கூறப்பட்டு இருந்தது. எனவே பாமர மக்கள் குழம்பி போகக்கூடாது என்பதற்காக அக்காலத்தில் வாழ்ந்த மாபெரும் இமாம்கள் அவற்றை விளக்கி சட்டங்கள் எழுதினர். அவை மத்ஹபுகள் என்று குறிப்பிடப்படுகிறது.
மத்ஹபுகள் என்றால் என்ன?
மத்ஹபுகள் என்பது அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் கொண்டு மாபெரும் இமாம்களால் எழுதப்பட்ட மார்க்க சட்டங்கள் ஆகும். சில நுணுக்கமான விடயங்களுக்கும் புதிதான விடயங்களுக்கும் ஒவ்வொரு பாமர மனிதனாலும் அதற்கான சட்டத்தை நேரடியாக அல் குர்ஆனில் இருந்தும் அல் ஹதீஸில் இருந்தும் தேடி பெற முடியாது. அதற்கான அறிவு அவனிடம் காணப்படுவதில்லை. எனவே அவ்வாறான மார்க்க வினாக்களுக்கு இந்த இமாம்கள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றின் உதவியோடு கொடுத்த விளக்கங்களே மத்ஹபுகள் என்று பெயர் பெறுகின்றன.
இந்த மத்ஹபுகளாவன:
பெயர் உருவாக்கிய இமாம்
(1) ஹனபி இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு
(2) மாலிக்கி இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
(3) ஷாபி இமாம் ஷாபி ரலியல்லாஹு அன்ஹு
(4)





