WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

திங்கள், 6 பிப்ரவரி, 2012

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?


முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
ஞாயிறு, 15 ஜனவரி 2012 13:59
ஐயம்:
assalamu alaikkum

பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள்.

இப்படி, "முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பது ஹராம்" என பல மவ்லவிகள் (முக்கியமாக தப்லீக், thawheed, salafi மவ்லவிகள்) கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பெண்களுக்கு நல்வாழ்வுக்குரிய மாற்று வழி தீர்வு எதுவும் சொல்கிறாரில்லை. கேட்டால், "கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் இறைவன் சுவர்க்கம் தருவான்" என்று கூறுகிறார்கள். எனவே, பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது பற்றி, இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எழுதுங்கள்.

- சகோ. easternAHI மின்னஞ்சல் வழியாக

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இறைவழியில் பொறுமையை மேற்கொண்டால் இறைவன் சுவர்க்கத்தைத் தருவான் என்பது உண்மையே. அதேபோல், ஜீவாதாரத் தேவைக்காக வாழ்க்கையில் எதிர் நீச்சலை மேற்கொண்டு கஷ்டப்பட்டு "உழைத்து நேர்மையுடன் பொருளீட்டினாலும் சுவர்க்கத்தைத் தருவேன்" என்பதும் இறைவனின் வாக்குறுதி!

ஆணாயினும் பெண்ணாயினும் ''உழைப்பது ஹராம்'' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

ஆனால், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வளைகுடாவில் பிழைக்கப்போய், அவர்களுள் பலர் அனுபவிக்கும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, "பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வது ஹராம்" எனச் சிலர் கருத்துக் கூறியிருக்கலாம். தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகின்ற, அவளுடைய குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் தம் தேவைகளாக ஏற்றுச் செயல்படுகின்ற இறையச்சம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

முஸ்லிம் பெண்கள், பிழைப்புத் தேடி வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத் தேவையையும் சூழலையும் பற்றி இங்குத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

"ஆண்கள் பெண்களிடம் ஆளுமையுடையவர்கள்" எனும் கருத்தில் அமைந்த 4:34ஆவது இறைமறை வசனத்தில், ஒரு குடும்பத்திற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கு அந்தக் குடும்பத்தின் தலவனே பொறுப்பேற்கத் தகுதியுடையவனாவான் எனும் அடிப்படை பொதிந்துள்ளது.

ஆனால், ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஊதாரியான, குடும்பப் பொறுப்பற்ற கணவன் அமைந்துவிட்டாலோ, மணமாகி குழந்தைகளைப் பெற்றபின் கணவன் இறந்துவிட்டாலோ அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்க எவரும் இல்லாமல் அல்லது இருந்தும் முன்வராமல் போய்விட்டாலோ பெண்கள் சம்பாதித்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. அதனால், ஆதரவற்ற பெண்கள் குறுகிய காலத்தில் பொருளீட்ட ஆசைப்பட்டுத் தேர்ந்து கொள்வது 'வெளிநாட்டு வேலை'.

''பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்!'' (அல்குர்ஆன் 62:10) இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அனுமதியாகும். அயல்நாடு சென்று ஆண்கள் உழைப்பதுபோல், பெண்களும் அயல்நாடு சென்று ஹலாலாக உழைத்துச் சம்பாதிப்பதும் ஆகுமானதே!

பெண்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைக் குடும்பத்து ஆண்கள் பூர்த்தி செய்திடல் வேண்டும் என்பதுபோல், ஆதரவற்றப்  பெண்கள், சிறுவர், பலவீனமான முதியோர் ஆகியோருக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும்!

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு(ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள்
(புகாரி 5371).

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2298, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் (மரணமடைந்து) விட்டுச் சென்ற செல்வம் அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (ஆதரவற்ற) மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 2398).

கணவன் மரணித்து, குடும்பத்தில் ஆண் ஆதரவற்று மனைவி, மக்கள் நிர்க்கதியான நிலையில் விடப்படும்போது அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது, ஆதரவற்ற பலவீனமானவர்களைப் பராமரிப்பது இஸ்லாமிய ஆட்சியின் பொறுப்பாகும்!

சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெண்களுக்கு, "வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கக்கூடாது" என்று தடைவிதித்தல் பொருந்தாது. ஏனெனில், எல்லா அடிப்படை வசதிகளையும் பெண்களுக்கு அளித்துவிட்டு, அதன்பிறகு, "வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போகாதே!" என்று தடுக்கும் உரிமை
இஸ்லாமிய அரசுக்குத்தான் உண்டு
! வறுமையால் வாடும் பெண்களுக்கு, அவர்களுக்கான எந்த உதவியும் செய்யாமல், உள்ளூரில் பிழைத்துக்கொள்ள வழிவகை தேடாமல், வெறுமனே ஃபத்வா கொடுப்பது நியாயமில்லை.

"முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போவது ஹராம்" என ஃபத்வா கொடுப்பவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே உள்நாட்டிலேயே பாதுகாப்பான வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வந்தால் பாராட்டலாம். ஆனால், அது ஆகப்போவதில்லை என்று உங்கள் கேள்வியிலிருந்து விளங்குகிறது.

எனவே, ஆதரவற்ற பெண்கள் அரசு அல்லது ஜமாஅத்தாரின் உதவியற்ற நிலையில், தன் கையே தனக்கு உதவி என உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். உள்ளூர், வெளிநாடு என இவர்கள் உல்லாசப் பயணமாகச் செல்லவில்லை. உழைத்துப் பொருளீட்டுவதற்காக செல்கின்றனர். அதுவும் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த, தம் நிலையை ஒத்தவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டே
பெரும்பாலும் செல்கின்றனர். எனவே, வெளிநாட்டுக்குப் பிழைப்பைத் தேடிப் போவதா வேண்டாமா என்பது அவரவரின் தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம், பயன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அப்பெண்கள் தீர்மானிப்பதாகும்.

மற்றபடி, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹலாலான முறையில் உழைத்துப் பொருளீட்டிக் கொள்வதற்கு இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கட்டுரைகள்

கேள்வி பதில்


தமிழில் : அபு இஸாரா
ஒரு கிருஸ்தவரின் சவாலுக்கு பதில்
நாத்திகர் இஸ்லாத்தில் இணையும் காட்சி



Loading...
Download this video

எண்
கேள்விகள்
1 குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.
2 இஸ்லாம் காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டச்சொல்கிறதா? இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் -மூர்க்கத்தனத்தையும் தூண்டுகிறதா?
3 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் 'நாம்' அல்லது 'நாங்கள்' என்ற பன்மையான சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.
4 இறைவன் திருக்குர்ஆனில் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொண்டானா?
5 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? அல்லது அமைதியை போதிக்கும் மார்க்கமா?
6 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
7 கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
8 இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.
9 மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?
10 குர்ஆனின்; அலிஃப் - லாம் - மீம் -, ஹாமீம், யாஸீன் என்ற பதங்களின் முக்கியத்துவம் என்ன?.
11 குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?.
12 அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.
13 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் 'ஹுர்' என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்?.
14 இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
15 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
16 இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.
17 மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.
18 குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?.
19 குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா?.
20 பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
21 ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்?
22 மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
23 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.
24 இறைவன், 'காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்.' என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு - விசுவாசம் கொள்வதற்கு காரணமாக அமைவது - மனிதனின் மூளையேத் தவிர - மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.
25 உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!
26 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
27 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.
28 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.
29  'காஃபீர்' என்று அழைத்து மாற்று மதத்தவர்களை, முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?.
30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
31 இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு - ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் - இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
32 வானங்களும் - பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் 'பெரும் வெடிப்பு விதிக்கு' (Big Bang Theory) மாற்றமாக குர்ஆன் வசனம் அமைந்துள்ளதா இல்லையா?
33 பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் - பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.

  [முதல் பதிவேற்றம் : 17-05-2010] 
  [இரண்டாம் பதிவேற்றம் : 09-08-2010] 




www.ottrumai.net

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்


தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர்)
நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை
இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம்

Download mp4 video
Audio Play:



ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


TNTJ-யின் ஏகத்துவ மாத இதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழுவிற்கு பகிரங்க மறுப்பு



எழுதியவர்/பதிந்தவர்/உரை
- ஏகத்துவ மாத இதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழு-விற்க்கு வேர்கிளம்பி J. யாசின் இம்தாதி அவர்கள் வெளியிடும் பகிரங்க மறுப்பு அறிக்கை
அவதூறு பரப்பிய TNTJ-யின் ஏகத்துவ இதழுக்கு மறுப்பு
கடந்த ஜனவரி 2012 வருடம். TNTJ இயக்கத்தவர்களால் நடத்தப்படும் ஏகத்துவ இதழில் 16-ம் பக்கத்தில் கேக் வெட்டிய JAQH மௌலவி எனும் தலைப்பில் குமரி மாவட்டம் வேர்கிளம்பி JAQH மர்கஸில் இமாமாக பணியாற்றும் J. யாசீன் இம்தாதி எனும் நான் கிருஸ்துமஸ் விழாவில் பங்கு பெற்று ஏசு பிறந்த நாள் கொண்டாடியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒன்று பரப்பப்பட்டுள்ளது.
அவர்கள் பரப்பியதைப் போல நாம் நடந்திருந்தால், மார்க்க ரீதியில் நம்மை நாம் திருத்திக் கொள்வது அவசியம். எனினும் நடந்த உண்மை என்ன என்பதை கீழே தருகிறோம்.
1) பிணந்தோடு என்ற இடத்தில், கிருஸ்துமஸ் விழாவில் பங்கு பெற்று ஏசுபிறந்த நாள் வாழ்த்துரை வழங்க நாம் அழைக்கப்படவில்லை. காரணம் ஏசு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அவர்கள் தேர்வு செய்திருந்த நாள் கடந்த 25-12-2011 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். நாம் அழைக்கப்பட்டதும் பங்கு பெற்றதும் கிறிஸ்துவ அன்பர்களால் கடந்த 22-12-2011 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்க நிகழ்ச்சியில் தான்.
அந்த நிகழ்ச்சியில். மனித நேயத்திற்கு எதிராக வரதட்தணையை அரங்கேற்றுவதே பெரும்பாலான பாதிரிமார்களும், இமாம்களும், சாமியார்களும் தான் என்று அவர்களை சபையில் வைத்துக் கொண்டே மாக்கத்தை பேசினோம். மாறாக ஏசு பிறந்த நாளை புகழ்ந்தோ அவர்கள் செய்யும் மூட நம்பிக்கைகளை ஆதாரித்தோ. நாம் பேசவில்லை, அதனால் தான் ஏகத்துவ இதழுக்கு அவைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்க முடியவில்லை.
2) நமது பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கிய போது அவர்கள் நமக்கு தந்த அன்பளிப்பை ஏற்க மறுத்தோம், அப்படியானால் தேனீராவது அருந்திச் செல்லுங்கள் என்று வற்புறுத்தியதால் மீண்டும் மேடை ஏற வேண்டிய அவசியம் ஏற்பட்டது, அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களில் ஒருவர் தீடீரென மைக்கைப் பிடித்து. மத நல்லிணக்க ஒற்றுமையின் முக்கிய நிகழ்வாக என்று மத குருமார்களும் சேர்ந்து கேக்கை வெட்டுவாகள் என நமது அனுமதி பெறாமலே அறிவிப்புச் செய்தார்.
சாமியார் என் கையை பிடித்து இழுத்துச் சென்ற போது (அவரது கையை உதறிவிட்டோம்), அவர் கையில் வைத்திருந்த கத்தியை என் கையில் வைத்திருந்ததாக நினைத்தோ என்னவோ TNTJ பக்தியாளார் ஒருவர் (கடையாலுமூடு அப்துரஹ்மான்) உலகம் முழுவதும் SMS மூலம் அழகிய முறையில் தஃவா பணிச் செய்து TNTJ- யின் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றியுள்ளார்.
இந்நிகழ்வை தவறாகச் சித்தரித்த அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே என்னை சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம், அதை விட்டு விட்டு JAQH ன் கொள்கையை பறை சாற்றி விட்டார்கள் என்று ஏகத்துவ இதழில் அவதூறு பரப்பியது நிச்சயமாக கெட்ட எண்ணமேயன்றி வேறு இல்லை, JAQH ன் மீதுள்ள காழ்ப்புணர்வே இதற்கு காரணம்.
3) குர்ஆன் ஹதீஸை அப்படியே நம்ப வேண்டும் என்று வீர வசனம் பேசுபவர்கள், TNTJ உறுப்பினர்கள் அனுப்புகின்ற வதந்திகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்களோ என்னவோ?
தமிழகம், சவுதி, இலங்கை போன்ற இடங்களுக்கும் இந்த அவதூறு SMSஐ ஒரே இரவில் நூற்றுக்கணக்கில் அனுப்பி சாதனை புரிந்துள்ளனர் TNTJ பக்தர்கள்.
4) ஏகத்துவ இதழின் துணை ஆசிரியர், செய்யது இப்ராஹிம் என்பவரை 7-12-2012 மதியம் 12:15 மணியளவில் தொடர்பு கொண்டு, பல பாகங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு பத்திக்கையில் இப்படி ஒரு செய்தியை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போட்டீர்கள்? அதை ஊர்ஜிதம் செய்தீர்களா? என்று கேட்டதற்கு, அவர் KK Dist. TNTJ நிர்வாகிகள் நம்பகமானவர்கள். பொய் சொல்லமாட்டார்கள். எனவே அவர்கள் கூறியதை அப்படியே போட்டோம் என்று என்று சர்டிபிகேட் கொடுத்து கூறினாரே தவிர. நாம் செய்தது மாக்க ரீதியாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தவறு என்பதற்கு நம்மிடம் கடைசி வரை பதில் பேசவே இல்லை, கிருஸ்துமஸ் விழாவில் எப்படி போகலாம். எப்படி போகலாம்? என்பதைத்தான் வாய்ப்பாடாக சொல்லிக் கொண்டிருந்தார்.
தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்ட நபர்களிடம், “கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள தடை ஏதும் இருக்கிறதா”, என்று நான் கேட்டதாக செய்தி போட்டுள்ளீகளே, கேட்ட அந்த நபர்கள் யார்? சொல்லுங்கள் என்று நான் கேட்டதற்கு விசாரித்து சொல்கின்றேன் என்று பொறுப்பற்ற முறையில் அவர் சொன்ன பதிலில் இருந்து அதை அவர் உறுதிப்படுத்திய பின் ஏகத்துவத்தில் போடவில்லை என்பது தெளிவாகிறது, (இவர்கள் கூறுவது போன்று ஒருவரும் நம்மிடம் அதைப்பற்றி விசாரிக்கவில்லை).
இந்த SMS, பித்னாவை கன்னியாகுமரியை சோந்த TNTJ, பக்தர் ஒருவரும் பரப்புகின்றார் என்பதை அறிந்து நாம் அவரை 9994725782 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தோம், அவரும் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாம்? என்று அப்பாவித்தனமாக பேசினாரே தவிர ஆதாரப்பூர்வமாக நிரூபனம் செய்யவில்லை (இருவரும் பேசிய ஆடியோ பதிவு நம்மிடம் உள்ளது,)
5) யார் பிறர் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சாந்தவரே என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று உண்மையானதே, எனினும் அதற்கும் நமது நிலைக்கும் என்ன சம்பந்தம்? பிற மேடைகளில் ஏறும் போது நாமும் அது போன்று ஆகிவிடுவோம் என்பது TNTJ யினர் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட சட்டமேயாகும், அதைத் தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அது குஆன் ஹதீஸ் சொன்ன சட்டமல்லவே, எங்கு சென்றாலும் நாம் நமது கொள்கையில் பிசகாமல் சத்தியத்தை முழக்கமிடுவதே இஸ்லாமியச் சட்டம், அத்தகைய துணிச்சல் TNTJ யினர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
இது போன்று தீர விசாரிக்காமல் முன் பின் யோசிக்காமல் அவதூறை பரப்புபவர்கள் KK Dist TNTJ நிர்வாகத்தினர்கள். அதிலும் குறிப்பாக இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்து செயல்படும் TNTJ மாநில பொறுப்பாளர்களில் ஒருவரும். முன்னாள் KK Dist TNTJ செயலாளருமான தேங்காயப் பட்டணம் காஜா நூஹ் என்பவரேயாகும்.
ஏகத்துவ இதழில் வெளிவந்துள்ள நம்மைப் பற்றிய செய்திகளில் கீழ்த்தரமான அநாகரிகமான வாத்தைகளை வடித்து JAQH என்ற இயக்கத்தை இழிவுபடுத்தி எழுதியவரும் இவர் தான். மார்க்க மேடைகள் மற்றும் ஜும்ஆ மேடைகளில் பிற இயக்கங்களை வசைபாடுவதையே பயானின் கருவாக வைத்திருப்பவர். இது நாமறிந்த செய்தி மட்டுமல்ல KK Dist TNTJ உறுப்பினர்களில் பலர் அறிந்த செய்தியே. அதனால் தான் இவர் ஜும்ஆ உரையாற்றுகிறார் என்று கேள்விப்பட்டாலே அவர்களில் பலர் வேறு இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம். இவர் மீதுள்ள அதிருப்தியால் பல KK Dist TNTJ உறுப்பினர்கள் இதிலிருந்து வெளியேறி விட்டதும் குமரிமாவட்ட மக்கள் அறிந்த உண்மை.
மாக்கத்தின் பெயரால் இது போன்று அநாகரிகமாக செயல்படுகின்ற ஒரு சிலருக்கு TNTJ, தலைமையகம், பொறுப்புகளை கொடுத்து அழகு பார்ப்பது வேடிக்கையாகும், அல்லது மற்றவர்களை வசைபாடுவதுதான் சிறந்த தஃவா என்று இந்த அப்பாவிகளுக்கு போதிக்கப்பட்டுள்ளதா?
எனவே தான் பரப்பிய அவதூறு செய்திக்கு உடனடியாக அல்லாஹ்வை பயந்து வருத்தம் தெரிவிப்பதுடன் மேற்கொண்டு இது மாதிரியான கீழ்த்தரமான வேலைகளிலிருந்து ஏகத்துவ மாத இதழ் விலகிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் சட்டப்படி விளைவுகளை சந்திக்க நேரிடும்,
(துல்ஹஜ்) இந்த மாதம் எப்படி புனிதம் வாய்ந்ததோ. இந்த (மக்கா) நகரம் எப்படி புனிதமானதோ. அது போலவே உங்கள் பொருளும். உயிரும். மானமும் புனிதமானது, (நபிமொழி கருத்து. புகாரி)
இப்படிக்கு
J. யாசீன் இம்தாதி
இமாம், வேர்கிளம்பி JAQH மர்கஸ்
Mobile: +91 9994533265
10-01-2012
நாகர்கோவில்


ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி


ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்


ம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன்
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு
  • ஸஹாபாக்கள் என்றால் யார்?
  • ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்?
  • ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா?
  • வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா?
  • ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன?
  • அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்?
  • மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?
  • நரகம் செல்லமாட்டாகள் என்று நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த கூட்டம் எது?
  • அன்சாரி ஸஹாபாக்கள் பதவி வெறி பிடித்தவர்களா?
மேற்கண்ட அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்வையிடவும்.

Download mp4 video
Audio Play:

ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி




செவ்வாய், 31 ஜனவரி, 2012

சபித்தல்


சபித்தல்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.
‘….ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்’ என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.
பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்




.ந்த ப திவு  இஸ்லாம்கல்வி.காம்l    நன்றி